மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!
உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!
ஒரு முத்தமிடு.
பயப்படாமல்...
அல்லது
பையப் படாமல்!
ஒரு போர்வை.
உள்ளே
ஒரு போர் வை!
ஏன்
காதலித்தேன்?
என்
காதலி தேன்!
ஏய் அழுகுணி
அழுகையிலும்
அழகு நீ!
திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.
என் மரணம்
சாதாரணம்.
காதலின் மரணம்
மா ரணம்!
காதலி,
காதல் ஈ.
என்னைக் காதலி!
இதயத்தைக்
கிழித்தாள் ஒரு தையல்!
அவளேப் போடட்டும் 'தையல்'!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
காதல் முரசே, காதலும் தமிழும் சேர்ந்து ஆடிய அருமையான வார்த்தை விளையாட்டாக இருந்தன இக்க்விதைகள்.
ReplyDeleteகாதல் முரசு அவசரக் காலத்து வாழ்க்கைக்கு ஏற்ற அழகான காதல் வரிகள்... நடத்துங்க...
ReplyDeleteவார்த்தை விளையாட்டா இல்லை ப்ரேம் காதல் விளையாட்டு
ReplyDeleteஅருமை அருட்பெருங்கோ
கவிதைகளை படிக்க படிக்க பொறாமை பொங்குகிறது அருட்பொருங்கோ தொடருங்கள் காதல் மழையை சொட்டச் சொட்ட நனைந்திட காத்திருக்கிறேன்(றோம்)
அன்பு அருள்..
ReplyDelete\\திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.\\
ஒவ்வொன்றும் அழகான அருமையாக உள்ளது
வாங்க பிரேம்,
ReplyDelete/காதல் முரசே, காதலும் தமிழும் சேர்ந்து ஆடிய அருமையான வார்த்தை விளையாட்டாக இருந்தன இக்க்விதைகள். /
நன்றி பிரேம்...
வாசித்து கருத்து சொன்னதற்கு...
வாங்க தேவ்,
ReplyDelete/காதல் முரசு அவசரக் காலத்து வாழ்க்கைக்கு ஏற்ற அழகான காதல் வரிகள்... நடத்துங்க.../
ஆமாங்க வலைப்பதிவர்களோட பொன்னான நேரங்களை வீணாக்க கூடாதில்லையா? அதான் நொடியில படிச்சுட்டுப் போற மாதிரி எழுதிட்டேன்... :-)))
வாங்க ப்ரியன்,
ReplyDelete/வார்த்தை விளையாட்டா இல்லை ப்ரேம் காதல் விளையாட்டு/
ப்ரியனுக்கு காதல் மீதுதான் ப்ரியம் போல...
/அருமை அருட்பெருங்கோ
கவிதைகளை படிக்க படிக்க பொறாமை பொங்குகிறது அருட்பொருங்கோ தொடருங்கள் காதல் மழையை சொட்டச் சொட்ட நனைந்திட காத்திருக்கிறேன்(றோம்) /
நன்றி ப்ரியன்... கொஞ்சம் மிகையாகவே புகழ்ந்துவிட்டீர்களோ?
I am reading ur presentings for the first time.
ReplyDeleteFully impressed with ur writings.
I was just wondering how one can write about love this poetrically, this romatically "? "
ஒரு Hats off to ur writing....
Especially, "திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்". the ultimate one...
அழகான அருமையான வரிகள்...
I am deeply impressed....
Remember you have the huge no of fans in our office from today...
Keep write more...All the best...
கோபி,
ReplyDelete/அன்பு அருள்..
\\திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.\\
ஒவ்வொன்றும் அழகான அருமையாக உள்ளது /
அழகுக்கும் அருமைக்கும் துணை செய்தது தமிழல்லவா?
வாங்க பாஸ்கர்,
ReplyDelete/ I am reading ur presentings for the first time.
Fully impressed with ur writings./
:-))) தாங்ஸ்
/I was just wondering how one can write about love this poetrically, this romatically "? "
ஒரு Hats off to ur writing..../
எனக்கே நீங்க சொல்லிதான் தெரியுது ;-) மீண்டும் நன்றி!!!
/Especially, "திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்". the ultimate one...
அழகான அருமையான வரிகள்...
I am deeply impressed..../
ஐயையோ எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கே...
/Remember you have the huge no of fans in our office from today...
Keep write more...All the best.../
கற்பனை தீரும் வரை எழுதுகிறேன்... உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பாஸ்கர்!!!
நல்லா இருக்கு. ஈ கவிதை முதல்ல புரியல, எல்லாரும் மண்டையில தட்டிப் புரியவச்சிட்டாங்க :-)
ReplyDeleteஓ!... காதல் மழை கொட்டோ கொட்டென்று தொடர்ந்து கொட்டுகிறதே!
ReplyDeleteம்... சிறு சிறு கவிதைகளானாலும் சிறப்பான கவிதைகள் அருள்.
/நல்லா இருக்கு. ஈ கவிதை முதல்ல புரியல, எல்லாரும் மண்டையில தட்டிப் புரியவச்சிட்டாங்க :-) /
ReplyDeleteநன்றி சேதுக்கரசி...
என்ன "ஈவது விலக்கேல்" னு படிச்ச ஆத்திச்சூடி எல்லாம் மறந்துடுச்சா? ;-)
வாங்க சத்தியா,
ReplyDelete/ஓ!... காதல் மழை கொட்டோ கொட்டென்று தொடர்ந்து கொட்டுகிறதே! /
எனக்கும் மழையிலேயே நனைந்திருக்க தான் ஆசை... அவ்வப்போது வெயிலும் வந்துவிடுகிறதே!
/ம்... சிறு சிறு கவிதைகளானாலும் சிறப்பான கவிதைகள் அருள். /
நன்றி சத்தியா...
அசத்துறியேப்பூ.. :-)
ReplyDeleteநீ கவிஞன்... நான்... இல்லை..இல்லவே இல்லை. :-(
ReplyDeleteவாங்க பாலா,
ReplyDelete/அசத்துறியேப்பூ.. :-) /
என்னளவுக்கு முயற்சி பண்றேன்...
/நீ கவிஞன்... நான்... இல்லை..இல்லவே இல்லை. :-( /
ReplyDeleteஇவ்வளவு தன்னடக்கம் உடம்புக்கு ஆகாதுங்க...
Following are some of the good ones jus clicked my mind...Jus see how iteez....
ReplyDeleteNandraga illai endral manikkavum....
"Naan irandhadharku aval mouna anjali seluthinaal... avalukku enna theriyum naan irandhathe aval mounathaalthaann endru....."
"Kaalam kadanthu vandha katre... aval sonna kadhalai vaithukondu innum ethanai muraithan sutri varuvai en KALLARAIYAI"
// Following are some of the good ones jus clicked my mind...Jus see how iteez....
ReplyDeleteNandraga illai endral manikkavum....//
என்னங்க என்னைப் போய் பெரிய ஆள் மாதிரி நெனச்சுக் கேட்டுட்டிங்க? ;)
"Naan irandhadharku aval mouna anjali seluthinaal... avalukku enna theriyum naan irandhathe aval mounathaalthaann endru....."
உன் மௌனத்தாலே
என்னைக் கொன்றுவிட்டு
என் மரணத்துக்கும்
நீ செலுத்துவது
மௌன அஞ்சலிதானா?
"Kaalam kadanthu vandha katre... aval sonna kadhalai vaithukondu innum ethanai muraithan sutri varuvai en KALLARAIYAI"
என் சுவாசம் நின்றபின் தான்
காற்றில் கலந்தாயோ
உன் காதல் வாசம்?
வாங்க கோகிலா,
ReplyDelete/ வார்த்தைகளைக் கொண்டு காதல் விளையாட்டு!/
தமிழைக் கொண்டு வார்த்தை விளையாட்டு!
/ உங்கள் காதலிக்கு ஒரு copy போய்விடுகிறதா?/
நீங்களுமா? :-(
/மிக அருமை!/
நன்றிகள்...
you are kadhal arasu not kadahl murasu.
ReplyDelete/ you are kadhal arasu not kadahl murasu./
ReplyDeleteஅதெல்லாம் சரி அத ஏன் அனானியா வந்து சொல்றீங்க?
என்னோட பதிவுக்கெல்லாம் முகமூடி தேவையில்லைங்க...
எனக்கு பின்னூட்டம் போட்டுட்டீங்கன்னு உங்களுக்கு அந்த மாதிரி மெயில் எல்லாம் வராது...
தாராளமா பேரோடவே வாங்க...
\\ஏன்
ReplyDeleteகாதலித்தேன்?
என்
காதலி தேன்!\\
பின்னாற்ப்பா!!பின்னாற்ப்பா!!நோட் பண்ணுங்கப்பா!!நோட் பண்ணுங்கப்பா!! காதல் மன்னன் அருட்பெருங்கோ வாழ்க...
அய்யா அருட்பெருங்கோ!
ReplyDeleteநான் என்னத்த சொல்லுறது... எனக்கு அப்படியொரு காதல் நோய் வந்துவிட்டது உங்கள் கவிதைகளை கண்டவுடன்.
ஆமாம் எங்கய்யா படித்தீர்! தமிழ் காதலாய் விளையாடுகிறது உங்களிடம்... நானும் உருண்டு, புரண்டு எழுதுகிறேன் உருப்படியாய் ஒரு கவிதை வரமாட்டேன் என்கிறது.
எனக்கு ஒரு ஆசை ஏதேனும் தனிப்பயிற்சி வகுப்பெடுக்கிறீரா! உங்களிடம் மாணக்கணாய் வந்துவிடுகிறேன்.
eventhough ur software eng,how can u find the time to write all these things.
ReplyDeletesimply super
தெய்வமே எப்புடி இவ்வளவு காதல்?
ReplyDeleteபாவம் உங்க காதலி
அழகான அருமையான வரிகள்...
ReplyDelete/
என் மரணம்
சாதாரணம்.
காதலின் மரணம்
மா ரணம்!
/
/பின்னாற்ப்பா!!பின்னாற்ப்பா!!நோட் பண்ணுங்கப்பா!!நோட் பண்ணுங்கப்பா!! காதல் மன்னன் அருட்பெருங்கோ வாழ்க.../
ReplyDeleteசிநேகிதன்,
ஏனிந்த பாசவெறி? :)
/அய்யா அருட்பெருங்கோ!
நான் என்னத்த சொல்லுறது... எனக்கு அப்படியொரு காதல் நோய் வந்துவிட்டது உங்கள் கவிதைகளை கண்டவுடன்.
ஆமாம் எங்கய்யா படித்தீர்! தமிழ் காதலாய் விளையாடுகிறது உங்களிடம்.../
பாரி.அரசு,
காதல் நோய்க்கு மருந்து காதல் தான்னு நம்ம தாத்தா சொல்லியிருக்காரு… சீக்கிரம் மருந்து தேடுங்க :)
/நானும் உருண்டு, புரண்டு எழுதுகிறேன் உருப்படியாய் ஒரு கவிதை வரமாட்டேன் என்கிறது.
எனக்கு ஒரு ஆசை ஏதேனும் தனிப்பயிற்சி வகுப்பெடுக்கிறீரா! உங்களிடம் மாணக்கணாய் வந்துவிடுகிறேன்./
ஆகா, நெறைய பேர் கெளம்பிட்டீங்களா? உசுப்பேத்தி உசுப்பேத்தி தாங்க மனசு ரணகளமா இருக்கு :)
/eventhough ur software eng,how can u find the time to write all these things.
simply super/
என்னப் பார்க்காமலே என்ன கணினி ஆளுனு சொல்லிட்டீங்க… நன்றி. பார்த்த யாரும் நம்ப மாட்டேங்கறாங்க ;-)
/தெய்வமே எப்புடி இவ்வளவு காதல்?
கார்த்தி எதுக்கு இப்போ என்ன திட்றீங்க? :)
/பாவம் உங்க காதலி/
இவ்வளவு மொக்கைய படிக்க வேண்டியிருக்குமேன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான் ;-)
/அழகான அருமையான வரிகள்.../
நன்றிங்க திகழ்மிளிர்!!!