Wednesday, December 21, 2011

மார்கழிப்பாவை 5

மார்கழி மாதத்தின்
அதிகாலையில் எழுந்து
பனியில் நீராடி
உன் வாசல் வந்து காத்திருக்கிறார்கள்...
திருப்பாவை பாடுவாயென... எம்பெருமானும்,
திருவெம்பாவை பாடுவாயென... சிவபெருமானும்.
உனது குரலில் மயங்கி விடுவார்களோவென
பயந்தபடி ஓடி வருகிறார்கள் ஆண்டாளும், மீனாட்சியும்.
வெளியே நடப்பது எதுவுமறியாமல்
போர்வைக்குள் பதுங்கியபடி
செல்பேசியில் எனது குறுஞ்செய்தி வாசித்துக்கொண்டிருக்கிறாய்...
‘ஐ லவ் யூ’

3 comments:

  1. ஹூம்ம்ம்ம்......
    அருட்பெருங்கோ -
    அருள் பெறுங்கோ!!!

    ReplyDelete
  2. அருமை.

    ReplyDelete