Monday, June 02, 2008

கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!

21 comments:

  1. அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ?? :-)

    ReplyDelete
  2. // இமைப்பொழுதிலும்
    கவிதை எழுதுவேன்.
    இமைப்பது நீயெனில். //

    // நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி! //

    // அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்! //


    ரொம்ப அருமையா இருக்கிறது... அருள்....

    ReplyDelete
  3. anna ithukku than neenga kovilkku pooneengala..?!?
    naan yennamo maareteenganu ninaichen...!! ;-)

    ReplyDelete
  4. //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்//
    azhagaana varigal..!! :-)

    ReplyDelete
  5. //நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி!//

    //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!//

    Superuuu...
    Kovil-la Site adikka Koodathunga...

    ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்...

    ReplyDelete
  6. // உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!//

    அற்புதம் !

    ReplyDelete
  7. //உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!//

    .....கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!

    ReplyDelete
  8. /அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ??/

    நான் என்னைக்குங்க்கா கோயிலுக்கு போனேன்? வீட்டில் எல்லோரோடும் போனதுண்டு அவ்வளவுதான்.

    கவுஜையெழுத கோயிலுக்கு போய்தான் பாக்கனுமா, என்ன? ;)

    ReplyDelete
  9. /ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்/

    நன்றிங்க ரீகன்!

    ReplyDelete
  10. @Sri,

    நான் எப்போ கோவிலுக்கு போனேன்? போனவாரம் திருப்பதிக்குதான் போனோம், ஆனா அங்க யாரும் அடிப்பிரார்த்தனையெல்லாம் பண்ணலையே :)

    நன்றி.

    ReplyDelete
  11. /Superuuu
    Kovil-la Site adikka Koodathunga/

    அப்படியா செந்தில்? நீங்க கோயில் சிற்பங்களையெல்லாம் பார்த்ததில்லையா? ;)

    /ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்/

    நன்றிங்க!

    ReplyDelete
  12. /அற்புதம் !/

    நன்றிங்க சேவியர்!

    ReplyDelete
  13. /கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!/

    நன்றிங்க ஆல்பர்ட்.

    ReplyDelete
  14. நல்லாருக்கு ராசா ;)

    ReplyDelete
  15. கோபிநாத், சின்னப்பையன், இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  16. MaragathavalliJune 03, 2008 3:06 PM

    Epdi ipdi...?
    Super... unarvugal niraindha varigal..
    vaazhthukkal

    ReplyDelete
  17. உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!

    *

    இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!

    *

    உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    *
    அடடா.. என்னே ஒரு அழகு.. அற்புதம் நண்பரே...
    வாழ்த்துக்கள் ;)
    இன்னும் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  18. உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    ROmba Nallla Iruku.

    Anubavichu ezhudhareenga, hats off.......

    ReplyDelete
  19. மரகதவல்லி, சரவணக்குமார், செல்வா,

    அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  20. விக்னேஷ்April 05, 2010 5:17 AM

    நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க அருள். உங்க கவிதை தான் என் காதலிக்கு அனுப்பிடு இருககேன் நன்றி

    ReplyDelete