பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை மறைத்துக்கொண்டே வருவதை விடவா
பெரிய சாகசம்?
:-) m nice.....!!
ReplyDelete:) ரொம்ப கஷ்டம்தான்
ReplyDeleteஅக்கா, தங்கை, இருவருக்கும் நன்றிகள் :)
ReplyDeletenandru pulavaRe.... vaazhthukkal
ReplyDeleteயதார்த்தமாக இருக்கு வரிகள்...
ReplyDeleteசில யோசனைகள்
ReplyDelete1. சேலை அணியாமல் சுடிதார் அல்லது கொஞ்சம் லூசான டி.சர்ட் அணியலாம்.
2. இரண்டு பக்கமும் கால் போட்டு அமரலாம்
3. குழந்தையை மடியில் வைக்காமல், கணவனுக்கும் தனக்கும் நடுவில் அமர வைக்கலாம் (கைக்குழந்தையா இல்லாத பட்சத்தில்)
4. டி.வி.எஸ் ஸ்கூட்டி போன்று, முன்னாலும், சீட்டுக்கு அடியிலும் பொருட்களை வைத்துக் கொள்ளும் வண்டி பயன்படுத்தலாம்.
ஆனாலும் கவிதை நல்லா இருக்கு
vice nice sir....
ReplyDeleteநல்ல சிந்தனைய்யா... :)
ReplyDeleteநல்ல கவிதை.வித்யாசமான சிந்தனை.இப்படியான கவிதைகளையும் தொடர்ந்து
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன் அருளிடமிருந்து.
வாழ்த்துகள்..!
மனைவியரின் மன உறுதி, திறமைகளை -
ReplyDeleteபெரும்பாலும்
கணவன்மார் உணர்வது இல்லை..............
க(வி)தை……..அருமை……..&………..பெண்கழுக்கு பெருமை……….
Ever
S*Subash
/nandru pulavaRe. vaazhthukkal/
ReplyDeleteபுலவரா???? அழுதுடுவேன்! வழ்த்துக்கு நன்றி மரகதவல்லி!
/யதார்த்தமாக இருக்கு வரிகள்/
நன்றி செந்தில்!
/சில யோசனைகள்
ReplyDelete1. சேலை அணியாமல் சுடிதார் அல்லது கொஞ்சம் லூசான டி.சர்ட் அணியலாம்.
2. இரண்டு பக்கமும் கால் போட்டு அமரலாம்
3. குழந்தையை மடியில் வைக்காமல், கணவனுக்கும் தனக்கும் நடுவில் அமர வைக்கலாம் (கைக்குழந்தையா இல்லாத பட்சத்தில்)
4. டி.வி.எஸ் ஸ்கூட்டி போன்று, முன்னாலும், சீட்டுக்கு அடியிலும் பொருட்களை வைத்துக் கொள்ளும் வண்டி பயன்படுத்தலாம்./
5. கல்யாணத்துக்கு முன்னாடி கார் வாங்கனும் ;)
/ஆனாலும் கவிதை நல்லா இருக்கு/
நன்றிங்க புபட்டியன்!!!
/vice nice sir./
ReplyDeleteநன்றிங்க மலர்ப்ரியன். தயவு செஞ்சு சார்னு கூப்பிடாதீங்க!
/நல்ல சிந்தனைய்யா/
ReplyDeleteநன்றி இராம்!
/நல்ல கவிதை.வித்யாசமான சிந்தனை.இப்படியான கவிதைகளையும் தொடர்ந்து
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன் அருளிடமிருந்து.
வாழ்த்துகள்..!/
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிங்க இலக்கியரே! தொடர்ந்து எழுதுறேன்!
/மனைவியரின் மன உறுதி, திறமைகளை -
ReplyDeleteபெரும்பாலும்
கணவன்மார் உணர்வது இல்லை../
ம்ம்ம்!
/க(வி)தை..அருமை..&..பெண்கழுக்கு பெருமை./
நன்றிங்க சுபாஷ்.
( அது பெண்கழுக்கு இல்லை, பெண்களுக்கு! )
நல்லா இருக்கு.. ;)
ReplyDeleteநன்றிங்க ஆல்பர்ட்
ReplyDeleteநல்லா இருக்குங்க அருள்..
ReplyDeleteநன்றிங்க குட்டி செல்வன்.
ReplyDelete:))) Nallathaan yosikireenga :)))
ReplyDeleteநன்றிங்க ஜி
ReplyDelete