Monday, June 09, 2008

என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

28 comments:

  1. நினைவிலிருந்தே ஹ்ம்.. நல்ல ஐடியாவா இருக்கே..

    தலைப்பு கேட்சியா இருக்குப்பா..

    ReplyDelete
  2. //பாதிக்கனவுடன்
    கலைந்துவிட்ட உறக்கத்தை
    மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
    விழித்தபோது கிடைத்திருந்தது
    புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.//


    Super-aa Irukku... Kavithai...

    ReplyDelete
  3. ஆனா ப்ராக்டிக்கலா வொர்க்அவுட் ஆகாத ஐடியா ;)

    ம்ம்ம் சும்மா தாங்க்கா!

    ReplyDelete
  4. MaragathavalliJune 09, 2008 4:53 PM

    work out aahadhu nu therinjae ezhudhuringale...
    vaazhthukkal...

    ReplyDelete
  5. ***நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?...... பின்னே விழிகளுக்கு வேலையிருக்காதோ???

    ***புதிதாய் இன்னொரு பாதிக்கனவு......!!!

    செம வரிகள் அருள்!!
    பின்னுறீங்க!!!

    ReplyDelete
  6. /Super-aa Irukku Kavithai/

    நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  7. /work out aahadhu nu therinjae ezhudhuringale/
    கவிதையெல்லாம் அப்படித்தான் ;)

    /vaazhthukkal/

    நன்றிங்க மரகதவல்லி!

    ReplyDelete
  8. /***நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா? பின்னே விழிகளுக்கு வேலையிருக்காதோ???/

    கண்ணால் பேசறதெல்லாம் ரெண்டு பேருக்கு நடுவுல மட்டும்தான? இது மூனாவது ஆட்களுக்கு!

    ***புதிதாய் இன்னொரு பாதிக்கனவு!!!

    செம வரிகள் அருள்!!
    பின்னுறீங்க!!!
    /

    நன்றிங்க ஆல்பர்ட்!

    ReplyDelete
  9. முதலில் கவிதைகளின் இயல்பை பற்றிய வரிகள். பிறகு கனவுகளின் தன்மையை பற்றிய பகிர்தல். ரசிக்கும்படி இருந்தது. கவிதைகளின் இயல்பை பற்றி நான் எழுதிய கவிதைகள் உட்பட பலர் இதை பற்றி வலைப்பதிவுகளில் எழுதியிருப்பதை பார்க்கிறேன். இவற்றை தொகுத்து ஓர் ஆய்வு கட்டுரையுடன் வலையில் ஏற்ற ஆர்வமிருக்கிறது. ஆனால்... :)

    ReplyDelete
  10. இப்பொழுதுதான் ட்விட்டரில் ரவியின் சுட்டியால் உங்கள் 'மனிதர்கள்' பதிவுகள் அனைத்தையும் வாசித்துவிட்டு இங்கே வந்தால் உங்கள் மறுமொழி :)

    உண்மையைச் சொன்னால் காதல்(அதிலும் பெரும்பாலும் மொக்கைதான்) தவிர பிற பொருள்களை எழுதும்போது எனக்கு மொழி சரியாக அமைவதில்லை. அதை நினைத்து எழுதினதுதான் முதலாவது. இரண்டாவது, அனுபவம் தான் :)

    கண்டிப்பாக எழுதுங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும்...

    ReplyDelete
  11. //பாதிக்கனவுடன்
    கலைந்துவிட்ட உறக்கத்தை
    மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
    விழித்தபோது கிடைத்திருந்தது
    புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.
    //

    super

    ReplyDelete
  12. எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

    ....................
    எழுத்தில் சிதைக்காமல்
    நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?//

    piramatham naNpaa.

    ReplyDelete
  13. நன்றிங்க ஆழியூரான்.

    ReplyDelete
  14. என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது...
    :)

    ReplyDelete
  15. சரவணக்குமார்,

    நன்றி + வாழ்த்துகள் ;)

    ReplyDelete
  16. //விழித்தபோது கிடைத்திருந்தது
    புதிதாய் இன்னொரு பாதிக்கனவு//

    வெகுவாக ரசித்தேன்.

    இதற்காண மறுமொழியும் நானே எழுதிவிடுகிறேன்.சும்மா காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க..

    நன்றிங்க இலக்கியன்...

    (இதானே... :) )

    "என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது" கிட்ட தட்ட இதே தலைப்பில் அடுத்த பதிவு போடுவதாக இருந்தேன்.நான் யோசித்திருந்த தலைப்பு "என்னிடம் காதல் இருக்கிறது". இங்கே வந்து பார்த்தால் எனக்கு ஆச்சர்யம்.இதே மாதிரி முன்பொருமுறை.

    ReplyDelete
  17. /வெகுவாக ரசித்தேன்.

    இதற்காண மறுமொழியும் நானே எழுதிவிடுகிறேன்.சும்மா காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க..

    நன்றிங்க இலக்கியன்/

    :( எனக்கும் என்ன மறுமொழி போடறதுன்னு தெரியல பாரி.

    நன்றிங்க, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, பாராட்டுக்கு நன்றி இந்த மாதிரி ஒரு 3, 4 டெம்ப்ளேட் தான் வச்சிருக்கேன். எல்லாரும் பாசக்காரங்க நிறைகள மட்டும் இங்க சொல்லிட்டு குறையிருந்தா தனிமடல்ல சொல்லிடறாங்க! பதில் சொல்லாம விட்டா மதிக்கலன்னு தப்பா நெனச்சுக்குவாங்களோன்னும் தோனுது. அதனால கும்மியில்லன்னா நன்றி மட்டும் சொல்லிக்கிறது ;)

    /“என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது” கிட்ட தட்ட இதே தலைப்பில் அடுத்த பதிவு போடுவதாக இருந்தேன்.நான் யோசித்திருந்த தலைப்பு “என்னிடம் காதல் இருக்கிறது”. இங்கே வந்து பார்த்தால் எனக்கு ஆச்சர்யம்.இதே மாதிரி முன்பொருமுறை./

    கி கி கி அறிவாளிங்க எல்லாம் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்களாம் :) எழுதுங்க எல்லாரிடமும் ஒரு காதலேனும் இருக்கிறது அப்படின்னு ;)

    ReplyDelete
  18. //கி கி கி அறிவாளிங்க எல்லாம் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்களாம் //

    இதற்கு ஸ்ரீ -யிடமிருந்து கண்டிப்பாக கும்மி இருக்குன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவரும் அறிவாளிதானே...!

    :)

    ReplyDelete
  19. அவரும் நம்ம நண்பர்தான? அப்புறம் அவர் மட்டும் எப்படி இருப்பார்? அவரும் அறிவாளியாத்தான் இருந்தாகனும்! ;)

    ReplyDelete
  20. அடடா மக்களே உங்க புள்ளரிப்புக்கு நன்றி ஹை. என்னத்த செய்ய தெரிஞ்சோ தெரியாமலோ என்னை அறிவாளின்னு சொல்லிட்டீங்க. வேணும்னா நானும் அதே தலைப்புல ஒரு மொக்கைய போட்டிடுறேன். :) எல்லாம் அறிவாளிக்கு அறிவாளி பண்ற விஷயம் தானே !!!

    ReplyDelete
  21. புல்லரிப்பா? புள்ளரிப்பா?

    நீயும் நானும் நம்மள அறிவாளினு சொல்லிக்கிறத விட பெரிய மொக்கையா இருக்கனும் ஓக்கேவா?

    ReplyDelete
  22. ஆனால் அது தொலைந்து போன காதல்.. நினைவுகளாய் மட்டுமே இருக்கிறது.. :(

    ReplyDelete
  23. //எழுத்தில் சிதைக்காமல்
    நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?//

    :))))

    ReplyDelete
  24. சரவணக்குமார் ஃபீல் பண்ணாதீங்க!!!

    ஜி, நன்றி!!!

    ReplyDelete