Monday, October 08, 2012

மல்லிகைச்சரம்

[caption id="attachment_779" align="aligncenter" width="600"]மல்லிகைச்சரம் மல்லிகைச்சரம்[/caption]

Monday, September 24, 2012

பிறந்தநாள் வாழ்த்து

எனது அக்காவின் மகள் ஜனனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

http://www.youtube.com/watch?v=MrtTYe7itjU

Tuesday, July 31, 2012

பாழாய்ப்போனச் சொற்கள்!

[caption id="attachment_767" align="aligncenter" width="600"]பாழாய்ப்போனச் சொற்கள்! பாழாய்ப்போனச் சொற்கள்![/caption]

Monday, July 30, 2012

உனக்கான இடம்

[caption id="attachment_763" align="aligncenter" width="600"]உனக்கான இடம் உனக்கான இடம்[/caption]

Monday, June 18, 2012

இமையோவியம்

[caption id="attachment_757" align="aligncenter" width="600"]இமையோவியம் இமையோவியம்[/caption]

Friday, June 15, 2012

கவிதையொப்பம்

[caption id="attachment_751" align="aligncenter" width="600"]கவிதையொப்பம் கவிதையொப்பம்[/caption]

Tuesday, June 12, 2012

ரகசியமாய்...

[caption id="attachment_739" align="aligncenter" width="600" caption="ரகசியமாய்..."]ரகசியமாய்...[/caption]

Friday, June 08, 2012

மல்லிகை

[caption id="attachment_734" align="aligncenter" width="600" caption="மல்லிகை"]மல்லிகை[/caption]

Thursday, June 07, 2012

ரோஜாவும் மல்லிகையும்

[caption id="attachment_730" align="aligncenter" width="600" caption="ரோஜாவும் மல்லிகையும்"]ரோஜாவும் மல்லிகையும்[/caption]

Friday, April 13, 2012

காதல் புத்தாண்டு

[caption id="attachment_726" align="alignleft" width="600" caption="காதல் புத்தாண்டு"]காதல் புத்தாண்டு[/caption]

Thursday, April 12, 2012

கண் மை ஓவியம்

[caption id="attachment_720" align="alignleft" width="600" caption="கண் மை ஓவியம்"]கண் மை ஓவியம்[/caption]

Friday, February 03, 2012

பூப் பூவாய் புன்னகைக்கும் இவள்

அண்ணன் மகள் மித்ராவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து காணொளி பதிவாக...
[flashvideo filename=video/mithra/Mithra2012_conv.flv /]

Wednesday, December 28, 2011

மார்கழி பாவை 12

விடியும்வரை தூங்கிப்பழகிய உன்னை
மார்கழியில் மட்டும்
விடியலுக்கு முன்னே எழுப்புகிற
உன் அம்மாவுக்குத் தெரியுமா?
மார்கழியில் மட்டும்
உனது கோலத்தில் தான்
சூரியனே கண்விழிக்கிறானென்பது?

Tuesday, December 27, 2011

மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?

மார்கழி பாவை 10

நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!

Sunday, December 25, 2011

மார்கழி பாவை 9

இத்தனை நாட்களாய்
முற்றத்திலமர்ந்து
ஓர் ஓவியனின் நேர்த்தியோடு
உள்ளங்கையில் நீ வரைந்த
மருதாணி ஓவியங்களைப்
பொறாமையுடன் பார்த்துவந்த
நிலத்தின் ஏக்கத்தையெல்லாம்
வண்ணம் கொண்டு
தீர்த்து வைக்கின்றன
உனது மார்கழி ஓவியங்கள்!

Saturday, December 24, 2011

மார்கழி பாவை 8

அழகாய்ப் பூத்தும்
காய்த்தபின்னே பூப்பதால்,
பூசணிச்செடியைக் கேலி செய்தனவாம்
நீ விரும்பும் மல்லிகையும் ரோஜாவும்!

ஆனால்
மார்கழிக் கோலத்திற்கென
நீ பூசணிப்பூக்களைப்
பறிக்கத் துவங்கியதிலிருந்து
பூச்செடிகளுக்கு மத்தியில்
பூசணிக்குத் தனி மரியாதையாம்.
அந்த மகிழ்ச்சியில்
இப்பொழுதெல்லாம்
முதலில் பூத்து
அப்புறம்தான் காய்க்கிறது தெரியுமா?

Friday, December 23, 2011

மார்கழி பாவை 7

மார்கழி விடியலில்
கோலமிடும் ஆயத்தத்துடன் வருகிறவள்
மேகம் துடைத்த தூய வானம் காட்டி
‘நீ என் வானம்’ என்றவாறு பார்க்கிறாய்.
நான் பதிலற்று நின்றிருக்க
அதிர்ச்சியுடன் முறைக்கிறாய்.

‘ஆமாம்.
நீ கோலமிடுவாயென
தன் மீது புள்ளி வைத்து
இரவெல்லாம் காத்திருக்கிறது வானம்.
நீயோ வாசலிலேயேக் கோலமிடுகிறாய்.
நான் வானமா? நிலமா?’ என்றேன்.

அச்சச்சோ!
அப்படியென்றால்
‘நீ என்னைத் தாங்கும் நிலம்’ என்று சொல்லி
வழக்கம்போல வாசலில் புள்ளி வைக்கத் துவங்குகிறாய்.
அதனை முத்தமாக ஏந்திக்கொள்கிறது இந்த நிலம்!

Thursday, December 22, 2011

மார்கழி பாவை 6

மார்கழி முழுவதும்
நம்வீதியெங்கும் தேனீக்கள் கூட்டம்.
உனக்குத் தெரிந்தது 'பூக்கோலம்' மட்டும்தானா?