Monday, November 19, 2007

என்னாது? எனக்கு கூட ‘போலி’யா??? :-)

நம்ம பேர்ல வேற ஒருத்தர் எழுதினா அவர போலினு சொல்லலாம்
நாம எழுதினத, மத்தவங்க அவங்க பேர்ல எழுதினா அவங்கள என்னனு சொல்ல?

இது நான் எப்பவோ எழுதினது.

அதுல ஒரு பகுதி
இங்கே நாசர் என்பவர் பெயரில் இருக்கிறது

இதைப் போலவே என்னுடைய இன்னும் சில பதிவுகளும் அவர் பெயரில் அங்கே இருக்கின்றன.

நான் எழுதிய
காதல் கூடம் முதலான சில பதிவுகள், இந்த Forum –இல் காதலன் என்பவர் பெயரில் இருக்கின்றன. இங்கே உள்நுழைந்து பார்க்க முடியாததால் என் பக்கத்திற்கு லிங்க் எதுவும் கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. கொடுத்திருந்தால் நன்றி.

இதே போல ஆர்க்குட்டில் சில கவிதை குழுக்களில் நான் எழுதிய சில கவுஜைகளை மற்றவர்கள் பெயரில் பார்த்துவிட்டு, எழுதியவருக்கு மடலனுப்பினால் ரிப்லை இல்லை. ஸ்க்ராப் பண்ணினால் மிக வேகமாக அதனை டெலிட் செய்து விடுகிறார் :) இப்போது அலுவலகத்தில் ஆர்க்குட் தடை செய்யப்பட்டிருப்பதால் ஆர்க்குட் பக்கம் எட்டிப் பார்த்து மாதங்களாகிவிட்டது.

இப்படியெல்லாம் நடக்கிறதென்றுதான் நண்பன் ஒருவன் சொன்ன மாதிரி, கவிதைகளை எழுதி அனுப்பாமல், Paint –இல் பிக்சராக எழுதி ஒரு ஓரமாக நம்ம வலைப் பக்க முகவரியும் எழுதி
படங்களாக அனுப்பினேன். எங்கேப் போனாலும் நம்ம முகவரியும் கூடவேப் போகும் என்று ;-) ஆனால் அதையும் கில்லாடிகள், படத்தில் இருக்கும் வலைப்பக்க முகவரியை மட்டும் வெட்டிவிட முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் வலைப் பக்க முகவரியை வெட்டினால் கவிதை வரியும் கொஞ்சம் சேதாரமாகும் என்ற நிலையில் சில படங்களில் மட்டும் வெட்ட முடியாமல் போய் விட்டது என்று நினைக்கிறேன். முகவரியில்லாத கவிதைப் படங்கள் சில இங்கே



இப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை.

இன்னொருவர் என் பதிவுகளுக்காக
தனியே ஒரு வலைப்பதிவே ஆரம்பித்துவிட்டார். கடைசி வரியில் மட்டும் இவர் பெயரைப் போட்டுக் கொண்டாலும் இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)

புத்தகமாகப் போட்டால் தான் நாம் எழுதுவதற்கு எல்லாம் காப்பிரைட் கிடைக்குமோ??? மக்கா, நான் எழுதினத யாரும் எங்கேயும் எடுத்துப் போடக்கூடாதுனு எல்லாம் சொல்லல. அப்படி போடும்போது என்னோட பக்கத்துக்கும் ஒரு லின்க் கொடுத்திடுங்கனு மட்டும் தான் சொல்ல விரும்பறேன். நன்றி.


***

இன்னொரு Forum – இல் என்னுடைய கவிதையை சிறந்த காதல் கவிதையாக குறிப்பிட்டிருந்தார் வெங்கிராஜா என்பவர். அவருக்கு நன்றி. ஆனாலவருக்கு, நான் பெரிய கவிஞனாக இருப்பேனோ என்று என்னைப் பற்றி தவறான எண்ணமும் இருக்கிறது போல.
இங்கே தபூ சங்கரைப் பற்றி குறிப்பிடும்போது “இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்” என்று இருக்கிறது :-) அண்ணே, நான் தபூ சங்கர நேர்ல பாத்தது கூட கிடையாது :-) அவரோட சில புத்தகங்கள மட்டும் தான் வாசிச்சிருக்கேன்.

***

இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

54 comments:

  1. சரியான காமெடி.......திருட்டு பசங்க திருந்தவே மாட்டாங்க......

    ReplyDelete
  2. delphine said...
    அவங்களுக்கு எத்தனை கமெண்ட்ஸ் வேறு!! பாவம் அருட்... இப்படி கூட திருடுவாங்களா?

    ரிப்பிட்டேய்...

    ReplyDelete
  3. /சரியான காமெடி.......திருட்டு பசங்க திருந்தவே மாட்டாங்க....../

    கவிதையதான் சுட்டாங்க… அந்த ‘அழியாத அன்புடன்’ கூடவா சுடனும் ;-) அதுதான் பெரிய காமெடி!!!

    ReplyDelete
  4. /அவங்களுக்கு எத்தனை கமெண்ட்ஸ் வேறு!! பாவம் அருட்... இப்படி கூட திருடுவாங்களா?/
    நானும் இப்போதானே பார்த்தேன் மேடம்… இந்த forum களில் நாம் வாசிக்க மட்டும் தான் முடிகிறது. நாம் ரிப்லை அனுப்பி கேட்க வேண்டுமானால் உறுப்பினராக வேண்டும். அந்த தலைவலி வேண்டாமென விட்டு விட்டேன்.

    ReplyDelete
  5. /delphine said...
    அவங்களுக்கு எத்தனை கமெண்ட்ஸ் வேறு!! பாவம் அருட்... இப்படி கூட திருடுவாங்களா?

    ரிப்பிட்டேய்.../

    வாப்பா பவன்…

    உன் பேர கேட்டாலே எனக்கு சும்மா அதிருது… ( என்னோட டேமேஜரு பேரும் பவன் தான் ;) )

    ReplyDelete
  6. உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதேசமயம் உங்கள் பதிவில் கண்ணியம் குறையாமல் எழுதியதற்கு என் சிறப்பு வாழ்த்துக்கள். "திருடிய கவிதைகள் பக்கம் என்று ஆரம்பிக்கச் சொல்லுவோமா" என்பதுபோல் தரங்கெட்டுக் கீழிறங்கிவிடாமல் உங்கள் தரத்துடன் நிற்கிறீர்களே அதற்காக ;-)

    ReplyDelete
  7. சேதுக்கரசி,

    எனக்கு இதில் தரம், தரம்கெடல் என்று தோன்றவில்லை.
    அவரவர் ஆதங்கம், கோபங்களுக்கேற்ப அவை வார்த்தைகளாக வெளிப்படுகின்றன அவ்வளவே.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்... இது மாதிரி உங்க கவுஜைகள சுடுறாங்கன்னா நீங்க பெரிய ஆளாயிட்டீங்கன்னு அர்த்தம் :)))

    ReplyDelete
  9. இந்தக் கொடுமை இன்னொரு வடிவிலும் இருக்கு, தாம் எழுதும் பதிவுகளில் ஏற்கனவே நாம் பதிவில் பயன்படுத்திய தகவல் பதிவுகளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி உள் நுளைத்து தாமே சிந்தித்து எழுதியதாக பீலா விடுவது. ஒன்றிரண்டு இடங்களில் கண்டு புழுங்கினேன். என்ன செய்வது :-(

    ReplyDelete
  10. //எனக்கு இதில் தரம், தரம்கெடல் என்று தோன்றவில்லை. அவரவர் ஆதங்கம், கோபங்களுக்கேற்ப அவை வார்த்தைகளாக வெளிப்படுகின்றன அவ்வளவே.//

    நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம், அந்த வார்த்தைகள், அவரவர் தரத்தைக் காட்டுவதாகத் தான் நான் காண்கிறேன். (என் பார்வை வேறாக இருக்கலாம், இருந்தாலும் உங்கள் பார்வையை மதிக்கிறேன்.)

    ReplyDelete
  11. \\இந்தப் பதிவில் எதாவது கவுஜை எழுதியிருப்பேன் என்று நம்பி வந்தவர்கள் மன்னிக்கவும். புதன் கிழமையன்று கொஞ்சம் அழுகாச்சி கவுஜைகள் போடுகிறேன் ;-)//
    அட அட ரசிகர்ளின் மனப்போக்கை நல்லா புரிஞ்சுவைச்சிருக்கப்பா நீயு... :)

    அழியாத அன்புடன் கூட வா காப்பியடிச்சிருக்காங்க... கூடவே அருட்பெருங்கோவை காப்பியடிக்கத்தெரியல.. அட்டக்காப்பின்னா முழுசா அடிக்கவேணாம்..

    ReplyDelete
  12. முதலில் நிலா ரசிகன்..இப்ப நீங்களா!!!

    ReplyDelete
  13. சீக்கிரமே ஒரு புத்தகம் வெளியிடுங்க தல. எல்லாம் சரியாயிடும் :-)

    //இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்”//

    புல்லரிக்குது தல. சீக்கிரமா ட்ரீட் குடுங்க

    //இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)//

    அது அப்படி இல்லை தல. தலைப்பையும் சேர்த்து copy + paste செய்திருக்கிறார். அதான் உங்க வலைப்பூவுக்கு சுட்டியாக வந்திருக்கிறது.

    ஆனாலும் எல்லோரும் 'அழியாத அன்புடன்'ங்குறதையும் சேர்த்துப் போட்டுருக்காங்களே, அதான் நகைச்சுவையின் உச்சக்கட்டம்

    ReplyDelete
  14. அப்புறம், சில பின்னூட்டங்கள் தரங்கெட்டு இருக்கின்றனவே.... மட்டுறுத்தும்போது இதையெல்லாம் கண்டுக்க மாட்டீங்களா?

    ReplyDelete
  15. ஒன்னு சொல்லவா ? காதல் கவிதைகள் அப்படீன்னோ, அருட்பெருங்கோ அப்படீன்னோ, www.arulperugo.com அப்படீன்னோ கூகுள்ல சும்மா குந்திக்கினிருக்கும்போது டைப் பண்ணிப்பார்த்தா இப்படித்தான் டென்ஷன் பதிவு போடவேண்டியது வரும் :)))))

    ஆனாலும் நீ ரொம்ப்ப்ப்ப நல்லவந்தான்...!!!!

    ReplyDelete
  16. "இப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன். எனக்கே இது ஓவராகத்தான் தெரிகிறது :-) ஆனால் வேறு வழியில்லை..."

    ur innovative idea to avoid duplication is really funny...
    unga nilamiya ninaicha paavama irukka :-)
    vidunga paavam naalu peru unga articles ya vachu polachukattum

    ReplyDelete
  17. "காதல் கவிதை எழுதுபவர்கள்
    இன்னமும் எழுதிக்கொண்டு
    தான் இருக்கிறார்கள்
    அதைக் கொண்டு போய்
    கொடுப்பவர்களே காதலிக்கிறார்கள்"

    என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். அதுமாதிரி அல்லவா இருக்கு?

    அழியாத அன்புடனே என்றும் இருந்து சிறந்த படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ. காலம் மாறும்! இவர்கள் திருந்தவேண்டும்!

    அன்புடன்,
    நா.ஆனந்த குமார்

    ReplyDelete
  18. /வாழ்த்துக்கள்... இது மாதிரி உங்க கவுஜைகள சுடுறாங்கன்னா நீங்க பெரிய ஆளாயிட்டீங்கன்னு அர்த்தம் :)))/
    ஜி,
    பெரிய ஆளா? நானா??
    நான் அஞ்சு வருசமா 52 கிலோதான் மெயிண்டெயின் பண்ணிகிட்டு இருக்கேன் ;-)

    ReplyDelete
  19. /இந்தக் கொடுமை இன்னொரு வடிவிலும் இருக்கு, தாம் எழுதும் பதிவுகளில் ஏற்கனவே நாம் பதிவில் பயன்படுத்திய தகவல் பதிவுகளை கட் அண்ட் பேஸ்ட் பண்ணி உள் நுளைத்து தாமே சிந்தித்து எழுதியதாக பீலா விடுவது. ஒன்றிரண்டு இடங்களில் கண்டு புழுங்கினேன். என்ன செய்வது :-( /

    ஓ பலவிதங்களில் நடக்கிறதா?
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்!!!
    நீங்களும் காப்பிரைட் வச்சுக்குங்க கானாபிரபா.

    ReplyDelete
  20. /periya aalgiteengnnu solunga/

    ஹ்ம்ம்ம் இப்பதான் ஜி கலாய்ச்சுட்டு போறாரு..நீயுமா?

    ReplyDelete
  21. /
    நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம், அந்த வார்த்தைகள், அவரவர் தரத்தைக் காட்டுவதாகத் தான் நான் காண்கிறேன். (என் பார்வை வேறாக இருக்கலாம், இருந்தாலும் உங்கள் பார்வையை மதிக்கிறேன்.)/

    சேதுக்கரசி,
    என் பார்வையை மதிப்பதற்கு நன்றி.

    இது போன்ற பொது தளங்களில் உறுப்பினரிடமிருந்து ஒரு படைப்பு வரும்போது அது தன்னுடையதுதான் என்கிற உறுதிமொழியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக அனுப்புகிறவரும் படைப்பு வேறொருவருடையது என்றால் அதன் சுட்டி கொடுத்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

    ReplyDelete
  22. /அட அட ரசிகர்ளின் மனப்போக்கை நல்லா புரிஞ்சுவைச்சிருக்கப்பா நீயு... :)/

    ரசிகர்களா??? எல்லாருமே நமக்கு நண்பர்கள்தாங்க்கா!!!

    /அழியாத அன்புடன் கூட வா காப்பியடிச்சிருக்காங்க... கூடவே அருட்பெருங்கோவை காப்பியடிக்கத்தெரியல.. அட்டக்காப்பின்னா முழுசா அடிக்கவேணாம்../

    அப்படி அட்டக் காப்பியடிச்சிருந்தா இந்த பதிவே நான் எழுதியிருக்க மாட்டேனே ;-)

    ReplyDelete
  23. /முதலில் நிலா ரசிகன்..இப்ப நீங்களா!!!/
    ஆமாப்பு… அவங்க டார்கெட்டே காதல் கவுஜ மட்டும்தானோ???

    ReplyDelete
  24. /சீக்கிரமே ஒரு புத்தகம் வெளியிடுங்க தல. எல்லாம் சரியாயிடும் :-)/

    உங்ககிட்ட பணம் இருக்கா??? கொண்டு வாங்க… நான் கவுஜ கொண்டு வரேன்… ரெண்டு பேரும் சேர்ந்து புத்தகம் வெளியிடலாம் ;-)

    //இவர் அருட்பெருங்கோ என்ற துணைக்கவிஞரோடு இணைந்தும் கவி புனைவார்”//

    /புல்லரிக்குது தல. சீக்கிரமா ட்ரீட் குடுங்க./
    ஹைதராபாத் வாங்க. பாலய்யா படம் ரிலீசாகுதாம். முதல் காட்சி கூட்டிட்டுப் போறேன்.

    //இவர் கொஞ்சம் நல்லவர். எல்லாப் பதிவுகளுக்கும் இரண்டு லிங்க் கொடுத்திருக்கிறார். ஒன்று இவர் பதிவுக்குப் போகும். இரண்டாவது என்னுடைய பதிவுக்கு வரும் :-)//

    /அது அப்படி இல்லை தல. தலைப்பையும் சேர்த்து copy + paste செய்திருக்கிறார். அதான் உங்க வலைப்பூவுக்கு சுட்டியாக வந்திருக்கிறது./
    ஓ அப்படியா??? நீங்க மூளக்காரர்னு நிரூபிச்சுட்டீங்க.

    /ஆனாலும் எல்லோரும் 'அழியாத அன்புடன்'ங்குறதையும் சேர்த்துப் போட்டுருக்காங்களே, அதான் நகைச்சுவையின் உச்சக்கட்டம்/
    சரி விடுப்பா… அவங்களுக்கும் ஒருவேளை அன்பு அழியாமதான் இருக்கலாம்.

    ReplyDelete
  25. /அப்புறம், சில பின்னூட்டங்கள் தரங்கெட்டு இருக்கின்றனவே.... மட்டுறுத்தும்போது இதையெல்லாம் கண்டுக்க மாட்டீங்களா?/

    ஆரம்பிச்சுட்டீங்களா? :-)
    தல, மறைமுகமான கருத்துகளுக்கு மறைமுகமாகவே பதிலளித்தபின் இது எதற்கு? விடுங்க…

    ReplyDelete
  26. /ஒன்னு சொல்லவா ? காதல் கவிதைகள் அப்படீன்னோ, அருட்பெருங்கோ அப்படீன்னோ, www.arulperugo.com அப்படீன்னோ கூகுள்ல சும்மா குந்திக்கினிருக்கும்போது டைப் பண்ணிப்பார்த்தா இப்படித்தான் டென்ஷன் பதிவு போடவேண்டியது வரும் :)))))/

    தல, Statcounter ல keyword analysis நோண்டிகிட்டு இருக்கும்போது தட்டுப்பட்டது இதெல்லாம். ( நானே டைப் பண்ணி தேடினப்பா இதெல்லாம் கண்ணுல சிக்கல ;-) )

    /ஆனாலும் நீ ரொம்ப்ப்ப்ப நல்லவந்தான்...!!!!/

    அப்பா, இப்பவாவது தெரிஞ்சுதே….

    ReplyDelete
  27. /ur innovative idea to avoid duplication is really funny...
    unga nilamiya ninaicha paavama irukka :-)
    vidunga paavam naalu peru unga articles ya vachu polachukattum/

    ஃபன்னியா??? கோபால், எங்கள எல்லாம் பாத்தா காமடியா இருக்குதா? :-) ரைட்டு விடுங்க….
    கடைசில சொன்னீங்களே அது ஓக்கே.

    ReplyDelete
  28. /"காதல் கவிதை எழுதுபவர்கள்
    இன்னமும் எழுதிக்கொண்டு
    தான் இருக்கிறார்கள்
    அதைக் கொண்டு போய்
    கொடுப்பவர்களே காதலிக்கிறார்கள்"

    என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன். அதுமாதிரி அல்லவா இருக்கு?/

    அது யாரு எழுதினதுனு கண்டுபிடிங்க ஆனந்த். அவருக்கு ஒரு பாராட்டுவிழா எடுத்துடலாம் :-)

    /அழியாத அன்புடனே என்றும் இருந்து சிறந்த படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ. காலம் மாறும்! இவர்கள் திருந்தவேண்டும்!

    அன்புடன்,
    நா.ஆனந்த குமார்/

    நன்றிங்க!!!

    ReplyDelete
  29. இம்மாதிரி இலக்கியத்திருட்டைக் கூட 'இம்சை'யா நெனைக்காம சிரிச்சுக்கிட்டே பதில் போட உன்னாலதான்யா முடியும்
    நல்லா இருடே!!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  30. /இம்மாதிரி இலக்கியத்திருட்டைக் கூட 'இம்சை'யா நெனைக்காம சிரிச்சுக்கிட்டே பதில் போட உன்னாலதான்யா முடியும்

    நல்லா இருடே!!

    சாத்தான்குளத்தான்/

    அண்ணாச்சி, இதுல எதுவும் உள்குத்து இல்லையே ;-)
    வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க.. கேசா போட முடியும்?

    ReplyDelete
  31. கவிதையைத் திருடி தன் கவிதை போல் காட்டி பெயர் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த url embedded images எல்லாம் தடை இல்லீங்க. பொறுமையா உக்கார்ந்து திரும்ப தட்டச்சு செஞ்சு தங்கள் கவிதை போல போட்டுடுவாங்க. திருடுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்து செய்பவர்களுக்கு மடல் எழுதிக் கேட்பதெல்லாம் பயன் தராத வேலை. மன்றங்களில் உள்ளவர்கள் நிர்வாகிகள் மூலம் அணுகலாம். ஆனால், தத்தம் பதிவில் இடுபவர்களை என்ன செய்ய முடியும்?

    உங்கள் கவிதைகளுக்கு நீங்களே முழு உரிமை உடையவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் புத்தமாகப் போட்டு விட்டு அப்புறம் வலையேற்றுவது தான் வழி.

    இல்லையேல், -சரி, சுடுறவங்க சுட்டுக்கங்கய்யா - என்று மனத்தெளிவுடன் வலையேற்ற வேண்டியது தான்.

    ReplyDelete
  32. அவங்களும் என்னதாங்க பண்ணுவாங்க பாவம்?
    உங்களுக்கு திறமை இருக்கு, கவிதையோ, கவுஜயோ எது வேண்டும்னாலும் எழுதுவீங்க!
    அவங்க என்ன பண்ணுவாங்க?
    அவங்களும் நாலு பெருக்கிட்ட கவிதை எழுத தெரியும்னு காமிக்க வேண்டாமா?

    ReplyDelete
  33. /கவிதையைத் திருடி தன் கவிதை போல் காட்டி பெயர் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த url embedded images எல்லாம் தடை இல்லீங்க. பொறுமையா உக்கார்ந்து திரும்ப தட்டச்சு செஞ்சு தங்கள் கவிதை போல போட்டுடுவாங்க. திருடுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்து செய்பவர்களுக்கு மடல் எழுதிக் கேட்பதெல்லாம் பயன் தராத வேலை. மன்றங்களில் உள்ளவர்கள் நிர்வாகிகள் மூலம் அணுகலாம். ஆனால், தத்தம் பதிவில் இடுபவர்களை என்ன செய்ய முடியும்?/

    அனானி நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான். நான் இந்த பதிவ எழுத காரணம், அடுத்து எதையாவது சுடலாம் என்று பதிவுக்கு வருபவர்கள் கண்ணில் (மனசிலும் தான்) இந்தப் பதிவு படட்டும் என்பதுதான். இதனால் கிடைத்த பக்கவிளைவு, தலைப்ப பாத்துட்டு நெறைய பேர் எட்டி பார்த்ததுல இந்த இடுகை சூடாகிடுச்சாம் தமிழ்மணத்துல ;-)

    /உங்கள் கவிதைகளுக்கு நீங்களே முழு உரிமை உடையவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் புத்தமாகப் போட்டு விட்டு அப்புறம் வலையேற்றுவது தான் வழி.

    இல்லையேல், -சரி, சுடுறவங்க சுட்டுக்கங்கய்யா - என்று மனத்தெளிவுடன் வலையேற்ற வேண்டியது தான்./

    நான் எழுதுவதையும் புத்தகமாக போட உங்களுக்கு தெரிந்த எந்த பதிப்பகமாவது தயாராக இருக்குமென்றால் சொல்லுங்கள் போட்டுடலாம்.

    ReplyDelete
  34. /அவங்களும் என்னதாங்க பண்ணுவாங்க பாவம்?
    உங்களுக்கு திறமை இருக்கு, கவிதையோ, கவுஜயோ எது வேண்டும்னாலும் எழுதுவீங்க!
    அவங்க என்ன பண்ணுவாங்க?
    அவங்களும் நாலு பெருக்கிட்ட கவிதை எழுத தெரியும்னு காமிக்க வேண்டாமா?/

    நரேஷ்,

    கவிதை எழுத தெரியும்னு காட்டி அப்புறமா எழுததெரியாதுங்கறது தெரிஞ்சு போச்சுனா டின்னு கட்டிடுவாங்களேப்பா!!!
    என்னமோப் போங்க… நம்மால, ஒருத்தருக்கு கவிதை எழுதத் தெரியும்னு காமிக்க நாலு(?) கிடைச்சா சந்தோசம்தான் ;-)

    ஹ்ஹ்ஹ்ம்ம்ம் (ஒன்னுமில்ல என்னோட பெருமூச்சுதான்)

    ReplyDelete
  35. //இப்பொழுதெல்லாம் எல்லாப் படத்திலும் குறுக்கும் நெடுக்குமாக வலைப்பக்க முகவரியோ, மின்னஞ்சல் முகவரியோ போட்டு விடுகிறேன்//

    சில மாதங்களுக்கு முன்பே இப்படி நீங்க செய்ய ஆரம்பிச்சதுக்குக் காரணம் இப்படிப்பட்ட தொல்லைகளால் தான்னு நினைச்சிருந்தேன். அப்பவே பெரிய ஆள் தானே நீங்க. (52 கிலோ தானா? பொறாமையா இருக்கு :-(


    //இது போன்ற பொது தளங்களில் உறுப்பினரிடமிருந்து ஒரு படைப்பு வரும்போது அது தன்னுடையதுதான் என்கிற உறுதிமொழியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.//

    ரொம்ப யோசிக்கிறீங்க :-) அப்படியே அது எந்த அளவுக்கு சாத்தியம்னும் யோசிக்கலாம். (கவிதைப் போட்டிக்கு இப்படி உறுதிமொழி வாங்கினோம்.) Easy to say.


    //எல்லாவற்றுக்கும் மேலாக அனுப்புகிறவரும் படைப்பு வேறொருவருடையது என்றால் அதன் சுட்டி கொடுத்துவிட்டால் பிரச்சினையே இல்லை.//

    ரைட்டேய்.

    ReplyDelete
  36. / சில மாதங்களுக்கு முன்பே இப்படி நீங்க செய்ய ஆரம்பிச்சதுக்குக் காரணம் இப்படிப்பட்ட தொல்லைகளால் தான்னு நினைச்சிருந்தேன். அப்பவே பெரிய ஆள் தானே நீங்க. (52 கிலோ தானா? பொறாமையா இருக்கு :-(/

    அப்போ forumகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை. மெயிலாக அனுப்புவதை அப்படியே அவர்கள் பெயரில் FWD செய்பவர்களால் தான் முன்பே ஆரம்பித்திருந்தேன்.
    எனக்கு 72 கிலோகாரர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

    / ரொம்ப யோசிக்கிறீங்க :-) அப்படியே அது எந்த அளவுக்கு சாத்தியம்னும் யோசிக்கலாம். (கவிதைப் போட்டிக்கு இப்படி உறுதிமொழி வாங்கினோம்.) Easy to say./

    ஃபோரம்/குழுமங்களில் ஒருவர் உறுப்பினராக இணையுமுன், அவரிடமிருந்து “நான் இந்த ஃபோரம்/குழுமத்தில் இடும் படைப்புகள் என்னுடையவையாக மட்டுமே இருக்கும். பிறரின் படைப்புகளாக இருப்பின் உரிய சுட்டியுடன் மட்டுமே இடப்படும். வேறொருவருடைய படைப்பு சுட்டிகள் இல்லாமல் என்னுடைய பெயரில் நான் இடுவது தெரியவந்தால் என்னை இந்த ஃபோரம்/குழுமத்திலிருந்து நீக்க நிர்வாகிக்கு உரிமையளிக்கிறேன்” இப்படியொரு உறுதிமொழி வாங்கிக் கொள்வது சாத்தியம் என்றே நினைக்கிறேன்.

    தமிழோவியம், நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்கள் படைப்பாளர்களிடமிருந்து படைப்புகளை வாங்குமுன் இப்படியொரு உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வதாக நினைவு.

    ReplyDelete
  37. இந்த மாதிரி மற்றொரு பதிவர் கவிதையையும் சுட்டுடாங்க.அதைப் பார்த்து அவரும் ரொம்ப நொந்துட்டார்.
    இது எல்லாம் நம்ப குழந்தையை மற்றவங்க குழந்தைன்னு சொல்லுற மாதிரி இருக்கு :(

    ReplyDelete
  38. அருட்பெருங்கோ said...
    /இம்மாதிரி இலக்கியத்திருட்டைக் கூட 'இம்சை'யா நெனைக்காம சிரிச்சுக்கிட்டே பதில் போட உன்னாலதான்யா முடியும்

    நல்லா இருடே!!

    சாத்தான்குளத்தான்/

    அண்ணாச்சி, இதுல எதுவும் உள்குத்து இல்லையே ;-)
    வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க.. கேசா போட முடியும்?

    அந்த இம்சை நான் இல்லய்யா...நான் உனக்கு MHSS ஸ்கோல்ல சீனியர் தான் ஆனா நான் திருடல...ஆமா நான் லவ் பண்ண காலத்துல ஏன்யா நீ காதல் கவுஜ எழுதல...எழுதிருந்தா சுட்ருப்பேன்ல

    ReplyDelete
  39. / இந்த மாதிரி மற்றொரு பதிவர் கவிதையையும் சுட்டுடாங்க.அதைப் பார்த்து அவரும் ரொம்ப நொந்துட்டார்.
    இது எல்லாம் நம்ப குழந்தையை மற்றவங்க குழந்தைன்னு சொல்லுற மாதிரி இருக்கு :(/

    ம்ம்ம் ஆமாங்க துர்கா… அந்த மாதிரிதான் ஆச்சு!!!

    ReplyDelete
  40. /அந்த இம்சை நான் இல்லய்யா.../

    இம்சையண்ணே, அண்ணாச்சி கிட்ட கேட்ட உள்குத்து உங்க பேர வச்சி இல்ல…. அது வேற…

    //நான் உனக்கு MHSS ஸ்கோல்ல சீனியர் தான் ஆனா நான் திருடல...ஆமா நான் லவ் பண்ண காலத்துல ஏன்யா நீ காதல் கவுஜ எழுதல...எழுதிருந்தா சுட்ருப்பேன்ல/

    அப்படின்னா இப்போ லவ் பண்ணலையா???? இப்படியெல்லாம் வாயக்கொடுத்து வீட்ல மாட்டிக்காதீங்க…
    (நீங்க சுடுவீங்கன்னு தான் அப்போ எழுதல ;-) )

    ReplyDelete
  41. காதல் கவிதை எழுதுபவர்கள்
    இன்னமும் எழுதிக்கொண்டு
    தான் இருக்கிறார்கள்
    அதைக் கொண்டு போய்
    கொடுப்பவர்களே காதலிக்கிறார்கள்

    இதை எழுதியவர் நா.முத்துக்குமார் :)

    ReplyDelete
  42. / காதல் கவிதை எழுதுபவர்கள்
    இன்னமும் எழுதிக்கொண்டு
    தான் இருக்கிறார்கள்
    அதைக் கொண்டு போய்
    கொடுப்பவர்களே காதலிக்கிறார்கள்

    இதை எழுதியவர் நா.முத்துக்குமார் :)/

    அவர் இத அனுபவிச்சுதான் எழுதியிருப்பாருனு நெனைக்கிறேன்.
    தகவலுக்கு நன்றி தல.

    ReplyDelete
  43. நம்மால, ஒருத்தருக்கு கவிதை எழுதத் தெரியும்னு காமிக்க நாலு(?) கிடைச்சா சந்தோசம்தான் ;-)

    மேலே என்னுடைய ஒரு பின்னூட்டம் இப்படி இருந்திருக்கிறது. அது கீழே உள்ள படி இருந்திருக்க வேண்டும். பிழைக்கு மன்னிக்கவும்.

    நம்மால, ஒருத்தருக்கு கவிதை எழுதத் தெரியும்னு காமிக்க நாலு(?) பேர் கிடைச்சா சந்தோசம்தான் ;-)

    ReplyDelete
  44. //நம்மால, ஒருத்தருக்கு கவிதை எழுதத் தெரியும்னு காமிக்க நாலு(?) கிடைச்சா சந்தோசம்தான் ;-)//

    ஓ.. அது பிழையா? நான் வேணும்னே அதை வாசகர் கற்பனைக்கு விட்டுடறீங்கன்னு நினைச்சேன் :-)) கேள்விக்குறி இருக்கிற இடத்தில் முத்தம் அல்லது அடி/உதை என்ற சொற்களை இட்டு நிரப்பிப் பாருங்க, என்ன நான் சொல்றது? :-D

    MHSS - எந்த ஊர் MHSS? நானும் MHSS தான், அதான் கேட்டேன்.

    ReplyDelete
  45. ---------------------------------------------------------------------------------------------------------------------------
    நாலந்தரமாக அடுத்தவரின் படைப்பை திருடியவனை திட்டுவதற்கு கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்து கொள்வோமாக.
    அருட்பெருங்கோ. எதைப்பற்றியும் கவலைப்படாதீர். you carry on.

    ReplyDelete
  46. /*ஹைதராபாத் வாங்க. பாலய்யா படம் ரிலீசாகுதாம். முதல் காட்சி கூட்டிட்டுப் போறேன்.*/

    பாலய்யா படமா?! நான் ஆரம்பத்தில பாலாபாய் படம்ன்னு படிச்சுட்டேன்.ஹி...ஹி...

    ReplyDelete
  47. மக்கா,

    நம்ம தொழில்ல கட்டிங் , வெட்டிங், ஒட்டிங்..இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா.......

    ReplyDelete
  48. / //நம்மால, ஒருத்தருக்கு கவிதை எழுதத் தெரியும்னு காமிக்க நாலு(?) கிடைச்சா சந்தோசம்தான் ;-)//

    ஓ.. அது பிழையா? நான் வேணும்னே அதை வாசகர் கற்பனைக்கு விட்டுடறீங்கன்னு நினைச்சேன் :-)) கேள்விக்குறி இருக்கிற இடத்தில் முத்தம் அல்லது அடி/உதை என்ற சொற்களை இட்டு நிரப்பிப் பாருங்க, என்ன நான் சொல்றது? :-D /

    அட அது மெய்யாலுமே பிழையா வந்ததுதாங்க. வன்முறைல எனக்கு நம்பிக்கையில்ல :-)

    /MHSS - எந்த ஊர் MHSS? நானும் MHSS தான், அதான் கேட்டேன்./
    எல்லா ஊர்லயும் ஒரு MHSS இருக்கும் இது கரூர் MHSS!!!

    ReplyDelete
  49. /நாலந்தரமாக அடுத்தவரின் படைப்பை திருடியவனை திட்டுவதற்கு கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்து கொள்வோமாக.
    அருட்பெருங்கோ. எதைப்பற்றியும் கவலைப்படாதீர். you carry on./

    அட திட்டனுமின்னு நான் நெனைக்கலங்க. இனிமே இத செய்யாதீங்கனு சொல்லதான் நெனச்சேன்.

    ReplyDelete
  50. //*ஹைதராபாத் வாங்க. பாலய்யா படம் ரிலீசாகுதாம். முதல் காட்சி கூட்டிட்டுப் போறேன்.*/

    பாலய்யா படமா?! நான் ஆரம்பத்தில பாலாபாய் படம்ன்னு படிச்சுட்டேன்.ஹி...ஹி.../

    ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது ப்ரியன்.
    ரெண்டுமே மொக்கதான் ;-)

    ReplyDelete
  51. /மக்கா,

    நம்ம தொழில்ல கட்டிங் , வெட்டிங், ஒட்டிங்..இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா......./

    வெட்றதுக்குன்னே சில இடங்கள் இருக்கு. அங்க இருந்துதான் வெட்றோம்னு வெளிப்படையா சொல்லிட்டு பண்றோம்.
    ஆனா நானே தான் செஞ்சேன்னு சொல்லிக்கிறதில்லையே?

    ReplyDelete
  52. //வன்முறைல எனக்கு நம்பிக்கையில்ல :-)//

    வன்முறையோட இன்னொண்ணையும் சொல்லியிருந்தேன். அதுல நம்பிக்கை இருக்குமே ;-)

    ReplyDelete
  53. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - மக்கா இங்கயும் இது பொருந்தும். அதுசரி எல்லாரும் அருட்பெருங்கோ வாகிடமுடியுமா என்ன ?

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

    ReplyDelete