Monday, November 05, 2007

கல்யாண வீட்ல மொய் எழுதியிருக்கீங்களா?

முன்னலாம் கல்யாண வீடுகள்ல ஒவ்வொரு வேலையையும் செய்யறதுக்குனு சொந்தக்காரங்கள்ல சில நிபுணர்கள் இருப்பாங்க.

ஸ்டோர் ரூம் பாத்துக்கிறதுக்குனு ஒருத்தர் இருப்பார். சமையல் காரங்க சொன்ன அளவவிட கொஞ்சம் அதிகமாவேதான் நாம பொருட்கள் எல்லாம் வாங்கிப் போடுவோம். அத அளவா வேணுங்கும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணி கால்வாசிப் பொருட்கள மிச்சம் பண்ணி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க இந்த ஸ்டோர் கீப்பர்ஸ்.

அப்புறம் பந்தி பரிமாறுவதும் ஒரு கலை. வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வச்சிட்டுப் போறதுதானன்னு சாதாரணமா நெனச்சுட முடியாது. பந்தியில பொதுவா யாருமே என்ன வேணும்னு கேட்கிறதுக்கு தயங்குவாங்க. அவங்க முகக்குறிய வச்சே என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறுறதுல இருந்து, எவ்வளவு பேர் சாப்பிட்டாங்க, இன்னும் எவ்வளவு பேர் வருவாங்க, என்னென்ன ஐட்டம் தீந்து போச்சு, பத்தலன்னா ரெடி மேடா என்ன செய்யலாம்? இப்படி முடிவெடுக்கிற வல்லமை படைச்ச ஆளுங்க தான் இதுக்கெல்லாம் லாயக்கு.

அடுத்தது பந்தல், மேளம், போக்குவரத்து வசதி, லைட் செட், மேடை அலங்காரம் இப்படி அததுக்குனு இருக்கிற ஆளுங்களப் பிடிச்சி சேர்க்கிறதுக்கு நல்ல வெளிவட்டார தொடர்பு இருக்கிற ஆளு வேணும். கடைசி நேரத்துல எது வேணும்னாலும் இவருகிட்ட சொன்னா போதும் எங்க இருந்தோ, எப்படினோ தெரியாது ஆனா கேட்டது கிடைச்சிடும். எப்பவும் கல்யாணம் முடிஞ்சு மண்டபத்த விட்டு கடைசியா போற ஆளு இவராத்தான் இருப்பாரு.

ஆனா இப்போ இந்த மாதிரி எல்லா வேலைகளையும் அவுட்சோர்சிங் பண்ணிடறாங்க. சமையல் + பரிமாற ஒரே காண்ட்ராக்ட். யூனிஃபார்ம போட்டுகிட்டு அவங்களும் மெசின் மாதிரி வேலைய முடிச்சிட்றாங்க. அப்புறம் மண்டபம் + மேடை + பந்தல் எல்லாம் ஒரே கணக்கில் வந்துடுது. எதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஆனா எல்லா வேலையும் இப்படி அவுட்சோர்சிங்க்ல போனாலும் இன்னமும் சொந்தக்காரங்களே பாத்துக்கிட்டு இருக்கிற வேலை இந்த மொய்யெழுதுறது மட்டும்தான். பண விசயமாச்சே... நம்மாளுங்க உசாராத்தான் இருப்பாங்க :)

தாலி கட்டின அடுத்த நொடியே மண்டப வாசல்ல ரெண்டு பக்கமும் ஆளுக்கு ஒரு டேபிள் சேர இழுத்துப் போட்டு மாப்பிள்ளை & பொண்ணு வீட்டு ஆளுங்க உக்காந்துடுவாங்க. பொண்ணு வீட்டு மொய், மாப்பிள்ள வீட்டு மொய் ரெண்டும் கலந்துடக் கூடாதுனு கொஞ்சம் உசாரா எதிர் கோஷ்டி பக்கம் போற ஆளுங்கள நோட் பண்ணிகிட்டே இருக்கனும். நாற்பது பக்க நோட்டெல்லாம் போய் இப்போ அர குயர் நோட்டு வந்துடுச்சு. ஒரு ஆள், பெயர் + தொகை எழுதிகிட்டே வர இன்னொரு ஆள் பணத்த வாங்கி ஒரு மஞ்ச பைக்குள்ள போட்டுக்குவாரு.(இந்த மஞ்ச பை எப்போதான் மறையும்?) எங்க வீட்டு விசேசங்கள்ல எப்பவும் எல்லா வேலைகள்லையும் கை வச்சிட்டாலும் இந்த மொய்யெழுதுற வேலைல இப்போ கடசியா ரெண்டு மூனு கல்யாணத்துலதான் உக்காந்தேன். எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும். அத அந்த மொய்நோட்டுல காலத்தால் அழியாச்சின்னமா வைக்கனுமாங்கறதுதான். ஆனா பழைய மொய் நோட்டுகளப் பாத்த பின்னாடி என் கையெழுத்து எனக்கே அழகா தெரிஞ்சது. அப்புறம் துணிச்சலா உக்காந்தாச்சு. இப்ப போன மாசம் தங்கச்சி (சித்தப்பா பொண்ணு) கல்யாணத்துல மொய் எழுத உக்காந்தப்ப அத ஒரு பதிவா போடுவேன்னு நெனைக்கல ;-)

மொத பேரு எழுதும்போதே கஷ்டமாப் போச்சு. பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன். மொத பக்கம் ஒரு இருபது பேர் எழுதின பின்னாடிதான் தமிழ் கொஞ்சம் தானா வர ஆரம்பிச்சுது. இனிமே அப்பப்போ தமிழ்ல பேனா எடுத்து எழுதனும்.

ஆனா கிராமத்து ஆளுங்க இன்னமும் தமிழோடதான் இருக்காங்க. பேர் சொல்லும்போது ஒருத்தர் ஆவன்னா திருஞானம் னு சொன்னார். நானும் 'ஆவன்னா திருஞானம்'னே தான் எழுதினேன். அவரு தம்பி ஆவன்னா தலையெழுத்துப்பா ன்னாரு. தலையெழுத்தா? இவருக்கு தலையெழுத்து கூட தெரிஞ்சிருக்குமோனு பாத்தா இனிசியல தான் தலையெழுத்துனு சொல்றாருனு புரிஞ்சது. அப்புறம் அவர் பேர ஆ. திருஞானம்னு ஒழுங்கா எழுதியாச்சு. தலையெழுத்த அதாங்க இனிசியல இன்னமும் தமிழ்ல சொல்ற ஆளுங்களும் இருக்காங்க.

இன்னொருத்தர் பேர சொல்லிட்டு 'முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்'னு அடுப்புக்குள்ள போடுங்கன்னாரு. எந்த அடுப்புக்குள்ள போட்றதுன்னு நான் முழிக்க, அவர் திரும்ப திரும்ப அடுப்புக்குள்ள போடுங்க அடுப்புக்குள்ள போடுங்கன்னே சொல்லிட்டு இருந்தாரு. எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது அவர் அடப்புக்குள்ள ( இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள்ள:-) ) போட சொல்றாருன்னு. நாந்தான் இன்னும் ப்ராக்கெட்டுக்குள்ள போட்டுட்டு இருக்கேன் :(

இன்னொரு பாட்டி வந்தாங்க. 'யாரு சின்னபுள்ளயோட சின்ன மவனா? நல்லாருக்கியா கண்ணு'னு கேட்டுட்டு சுருக்குப் பையில இருந்து பணத்த எடுத்து கொடுத்துட்டு தாத்தா பேர்ல எழுதீருனு சொல்லிட்டாங்க. நான் காலேஜ் சேந்த பின்னாடி எங்க வீட்டுக்குப் போறதே எப்போவாதுதான். சொந்த கிராமத்துக்குப் போய் பல வருசமாச்சு. சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். இவங்களே எந்த பாட்டி, அம்மா வழி சொந்தமா, அப்பா வழி சொந்தமானு ஒன்னும் புரியல. இதுல தாத்தா பேருக்கு நான் எங்க போறது? தாத்தா பேரு என்னனு அவங்க கிட்டவே கேட்கிறதுக்கும் தயக்கமா இருந்துச்சு. எப்பவும் ஒரு மூலைல அமைதியா இருந்தாலும் அப்பப்போ என் மூளையும் வேலை செய்யும். 'தாத்தாவோட முழுப் பேரு (என்னமோ பாதிப் பேரு எனக்குத் தெரிஞ்சுட்ட மாதிரி) என்னம்மாயி?' னு கேட்டேன். (அந்த பாட்டி எனக்கு அம்மாயி முறையா அப்பாயி முறையானும் தெரியல) நல்லவேளை பாட்டிக்குத் துணையா வந்த ஒரு அக்கா தாத்தாவோட முழுப் பேர சொல்லிக் காப்பாத்திட்டாங்க. அப்புறம் ஊர்ப்பேரயும் நான் கேட்டதும் 'ஒம் பேரன் ஊர் பேரு கூட தெரியாத மாதிரி கேக்குது பாரு'னு சொல்லி சிரிச்சுட்டு அந்த அக்காவும் கைவிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. எனக்கும் ஒரு வழியும் தெரியல. தாத்தா பேருக்கு முன்னாடி அம்மா சொந்த ஊரையும், பின்னாடி அப்பா சொந்த ஊரையும் போட்டுட்டேன். ரெண்டுல ஒரு ஊராதான் கண்டிப்பா இருக்கும் :-)

அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.

அப்புறம் இப்போ புதுசா இன்னொன்னு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பணத்த ஒரு கவருக்குள்ள போட்டு வெளிய ஊரு பேரு எல்லாம் தெளிவா எழுதிக் கொடுத்துட்றாங்க. நமக்கும் அது வசதிதான். ஆனா என்ன... உள்ள பணம் இருக்குதான்னு கொஞ்சம் பாத்துக்கனும் :-) அப்படிதான் ஒருத்தரு வந்தாரு கையில ஒரு ஏழு கவரோட. தம்பி அமவுண்ட் கரெக்டா இருக்கானு பாத்துக்கப்பானு பக்கத்துலையே நின்னுட்டாரு. கவருக்கு வெளிய குறிச்சிருந்த தொகையும் உள்ள இருக்கிற பணமும் சரியா இருக்கானு ஏழு கவர்லையும் சரி பாத்துட்டு சரியா இருக்குண்ணே னு சொன்னேன். போகும்போது கேட்டாரு. இது மாப்பிள்ள வீட்டு மொய் தான னு. அத மொதல்லையே கேட்டிருக்கலாம்ல? 'இது பொண்ணு வீட்டு மொய்ணே மாப்பிள்ள வீட்டு மொய் அந்தப்பக்கம்'னு சொல்லி அனுப்பிட்டேன். அவர் கிட்ட ஆமான்னு சொல்லியிருந்தா சித்தப்புக்கு ஒரு அமவுண்ட் லாபம் தான் ;-)ஆனா விட்டுட்டேன்...

இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா அடுத்த முறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா மொய் வைக்கிறீங்களோ இல்லையோ மொய் எழுதுங்க, இந்த மாதிரி ஒரு மொக்கப் பதிவு போடறதுக்காகவாவது பயன்படும் :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

35 comments:

  1. அன்னிக்கு நானும் கூட வந்திருக்கலாமோ?...

    மிஸ் பண்ணிட்டேனு நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. எனது மாமாக்கள் மற்று சித்தி கல்யாணத்தின் பொழுது நானும் அக்காவுமாய் எழுதியிருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சொந்தக்காசு போட்டுத்தான் டாலி செய்திருக்கிறேன் ;)

    ஆனால் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் தான்.

    ReplyDelete
  3. ஹஹ்ஹஹா.. சூப்பர் போஸ்ட். ஒரு படத்துல பாண்டியராஜனும், செந்திலும் மொய் வசூலிச்சு எழுதுவாங்களே, அது ஞாபகத்துக்கு வந்திருச்சு எனக்கு. எங்க வீட்ல எல்லாம் அந்த மொய் எழுதின நோட்ட பத்திரமா வச்சிருப்பாங்க, ஒரு reference மாதிரி. அடுத்து அவங்க வீட்டு விசேஷம் வரும்போது,நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு அவங்க 500 ரூவா மொய் எழுதுனாங்க - அப்போ கஷ்டத்துல வேற இருந்தாங்க,இப்போ நாம ஒரு 750 ரூபாவாவது செய்யனும்"னு சொல்வாங்க!! ஒரு போஸ்ட போட inspiration தந்தது உங்க போஸ்ட்!

    ReplyDelete
  4. சுத்தி நடக்கிறதெல்லாம் கதையாகுது இல்லாட்டி பதிவாகுது ம்..... எங்க வீட்டுல எல்லாம் விபூதி பூசி பொண்னு மாப்பிள்ளை கையில் குடுப்பாங்க் அப்ப பக்கத்துல நாங்க வாங்கி வாங்கி பின்னாடி சித்தப்பா பெரியப்பாக்கிட்ட எழுத குடுத்துட்டு .. பரிசு டப்பாவெல்லாம் மேடைக்கு பின்னாடி அடுக்கிவைப்போம்.. விபூதி க்கிண்ணத்தை பிடிச்சிக்கிட்டு நிக்கனும்..
    அப்பப்ப ரோடு போட்ட நெத்தியை கர்ச்சீப்பால க்ளீன் செய்யனும்..
    அப்பறமா திருப்பதி உண்டியல் மாதிரி ரகசியமா ஒரு ரூமில் எண்ணிக்கை நடக்கும் அப்ப தலை காட்டுறது இல்லை..

    ReplyDelete
  5. inda maadiri oru nalla anubavatha kathu koduthuttu ida mokkai nnu sonna ungala vanmaya kanndikkiraen.

    irundaalum kaadal koodathukkaagavum, kaadal payanathukkaagavum ungala mannichu vidraen.

    pozhachu poonga.

    ReplyDelete
  6. /அன்னிக்கு நானும் கூட வந்திருக்கலாமோ?...

    மிஸ் பண்ணிட்டேனு நினைக்கிறேன்.../

    :))) வந்திருந்தா இந்தப் பதிவ நீ எழுதியிருப்ப... நான் கலாய்க்கப் பட்டிருப்பேன் ;-)

    ReplyDelete
  7. /எனது மாமாக்கள் மற்று சித்தி கல்யாணத்தின் பொழுது நானும் அக்காவுமாய் எழுதியிருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சொந்தக்காசு போட்டுத்தான் டாலி செய்திருக்கிறேன் ;)/

    என்னங்க இதெல்லாம் நாம வெளில சொல்லலாமா??? அப்புறம் கணக்குல நாம வீக்குனு வெளியில தெரிஞ்சிடாது? ;-)

    /ஆனால் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் தான்./
    அது உண்மைதான் மோகன்!!!

    ReplyDelete
  8. /ஹஹ்ஹஹா.. சூப்பர் போஸ்ட். ஒரு படத்துல பாண்டியராஜனும், செந்திலும் மொய் வசூலிச்சு எழுதுவாங்களே, அது ஞாபகத்துக்கு வந்திருச்சு எனக்கு./

    :)) நான் அப்படியெல்லாம் பண்ணலைங்க ;-)

    / எங்க வீட்ல எல்லாம் அந்த மொய் எழுதின நோட்ட பத்திரமா வச்சிருப்பாங்க, ஒரு reference மாதிரி. அடுத்து அவங்க வீட்டு விசேஷம் வரும்போது,நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு அவங்க 500 ரூவா மொய் எழுதுனாங்க - அப்போ கஷ்டத்துல வேற இருந்தாங்க,இப்போ நாம ஒரு 750 ரூபாவாவது செய்யனும்"னு சொல்வாங்க!!/

    ம்ம்ம் எங்க வீட்டுலையும் பழைய மொய் நோட்டு உண்டு...நீங்க சொல்ற அதே காரணத்துகாகதான் :)

    / ஒரு போஸ்ட போட inspiration தந்தது உங்க போஸ்ட்!/

    ஓக்கே ஓக்கே உங்க மொய்யையும் எழுதுங்க தீக்ஷண்யா!!!

    ReplyDelete
  9. /சுத்தி நடக்கிறதெல்லாம் கதையாகுது இல்லாட்டி பதிவாகுது ம்..... /

    காதலத் தவிர மத்ததும் எழுதுப்பானு ஓமப் பொடி சொல்லிட்டாரே...அதான் :)

    /எங்க வீட்டுல எல்லாம் விபூதி பூசி பொண்னு மாப்பிள்ளை கையில் குடுப்பாங்க் அப்ப பக்கத்துல நாங்க வாங்கி வாங்கி பின்னாடி சித்தப்பா பெரியப்பாக்கிட்ட எழுத குடுத்துட்டு .. பரிசு டப்பாவெல்லாம் மேடைக்கு பின்னாடி அடுக்கிவைப்போம்.. விபூதி க்கிண்ணத்தை பிடிச்சிக்கிட்டு நிக்கனும்..
    அப்பப்ப ரோடு போட்ட நெத்தியை கர்ச்சீப்பால க்ளீன் செய்யனும்.. /

    :))) அதுக்கெல்லாம் மாப்பிள்ள பக்கத்துல ஒரு குட்டிப் பையனையும் பொண்ணு பக்கத்துல ஒரு குட்டி பொண்ணையும் அசிஸ்டெண்டுங்க மாதிரி நிக்க வச்சிடுவாங்க... ஹீரோ, ஹீரோயின் களுக்கு டச் அப் பாய் மாதிரி :)

    /அப்பறமா திருப்பதி உண்டியல் மாதிரி ரகசியமா ஒரு ரூமில் எண்ணிக்கை நடக்கும் அப்ப தலை காட்டுறது இல்லை../

    அது ரகசியம்ல ;-)

    ReplyDelete
  10. /inda maadiri oru nalla anubavatha kathu koduthuttu ida mokkai nnu sonna ungala vanmaya kanndikkiraen./

    :)))

    /irundaalum kaadal koodathukkaagavum, kaadal payanathukkaagavum ungala mannichu vidraen.

    pozhachu poonga./

    காதலுக்கு நன்றி :) (உங்க பேர என்னனு எழுதறது? கான்பா ன்னா? அப்படின்னா?)

    ReplyDelete
  11. மிக முக்கியமான வேலைப்பா. இது.

    அதுவும் இத்தனை பாட்டி தாத்தாவை எழுதி வைக்கிறதுன்னா சும்மாவா:)

    பதிவு சூப்பர்.
    இப்படி அடுப்புக்குள்ள போடற விஷயமெல்லாம்:))))
    பக்கத்தில உட்கார்ந்து பார்த்த மாதிரி எழுதிட்டீங்க.
    அடுத்த கல்யாணத்தைக்கு வரோங்க இந்த டிராமா பார்க்க:))

    ReplyDelete
  12. \\எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும்\\

    ஆமாய்யா...இப்ப எல்லாம் பதிவுல மட்டும் தான் தமிழ் எழுத முடியுது..:(

    \\சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். \\

    ம்ம்....சேம் பிளேட் :)

    ReplyDelete
  13. / மிக முக்கியமான வேலைப்பா. இது.

    அதுவும் இத்தனை பாட்டி தாத்தாவை எழுதி வைக்கிறதுன்னா சும்மாவா:)/

    ஆமாங்க வல்லி தமிழ் எழுதவே கடினமாதான் இருக்கு எனக்கு :(

    /பதிவு சூப்பர்.
    இப்படி அடுப்புக்குள்ள போடற விஷயமெல்லாம்:))))
    பக்கத்தில உட்கார்ந்து பார்த்த மாதிரி எழுதிட்டீங்க./
    நன்றிங்க :)

    /அடுத்த கல்யாணத்தைக்கு வரோங்க இந்த டிராமா பார்க்க:))/
    கண்டிப்பா வாங்க… உங்களையே மொய் எழுத வச்சிடலாம் ;-)

    ReplyDelete
  14. /அருட்பெருங்கோ!
    கல்யாணத்திற்கு ரெடியாகிவிட்டீர்கள்!!/

    ஐயையோ நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா மேடம் :-)

    /சொல்லுங்க எப்ப கல்யாணம்?
    மொய் எழுதத்தான்!!!/
    கவலப்படாதீங்க மேடம்… அதெல்லாம் இப்போதைக்கு இல்லை…

    ReplyDelete
  15. \\எனக்கு இருக்கிற பயம் என்னன்னா என்னோட கையெழுத்து பதினாலு கோழி சேந்து கிறுக்கின மாதிரியே இருக்கும்\\

    ஆமாய்யா...இப்ப எல்லாம் பதிவுல மட்டும் தான் தமிழ் எழுத முடியுது..:(/

    ஆமா கோபி…. இ-கலப்பைக்கு தான் நன்றி சொல்லனும் :-)))

    \\சொந்தக்காரங்க பேரு, உறவுமுறையெல்லாம் அம்மாகிட்ட அடிக்கடி கேட்டுதான் ரெப்ரஷ் பண்ணிக்குவேன். \\

    ம்ம்....சேம் பிளேட் :)/

    ;-) அங்கேயும் அப்படித்தானா???

    ReplyDelete
  16. //அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.//

    Super:-)))

    ReplyDelete
  17. ///அப்புறம் ஒருத்தர் வந்தாரு. 'பொனாசிப்பட்டி நரசிங்கபுரம் வடக்குத் தோட்டம் சொக்காஞா பெரிய மவ வூட்டுப் பேரன், கான்னா ராமலிங்கம், தாய் மாமன் பணமாக எழுதிக்கொண்டது...' னு ஒரு தொடர்கதை எழுதற மாதிரி சொல்லிக்கிட்டே போறாரே ஒழிய நிறுத்தமாட்டேங்கறாரு. அவரு பேர எழுதுறதுக்கே தனியா மொய் வசூலிச்சிருக்கனும்.//

    Super:-)))/

    நன்றி செல்வம். இதெல்லாம் கிராமத்துல சகஜம் :-)

    ReplyDelete
  18. :)

    "கல்யாண வீட்ல மொய்" என்றதும் instant நியாபகத்துக்கு வந்தது "ஊரை தெரிஞ்சுகிட்டேன்" படம்தாங்க...

    ReplyDelete
  19. /:)

    "கல்யாண வீட்ல மொய்" என்றதும் instant நியாபகத்துக்கு வந்தது "ஊரை தெரிஞ்சுகிட்டேன்" படம்தாங்க.../

    நான் அந்த மாதிரியெல்லாம் எதுவும் பண்ணலைங்க சீனு :-)

    ReplyDelete
  20. நல்ல அனுபவம்! சுவையா சொல்லி இருக்கீங்க. ஓரளவுக்கு சொந்தகாரங்க பேரும் உறவு முறையும் தெரியும்கிறதால இதுவரை அந்த மாதிரி பிரச்சனை வந்தது இல்லை. ஒரே ஒரு திருமணத்தில் மட்டும்தான் மொய் எழுதி இருக்கேன். மத்த திருமணங்களில் எல்லாம் பந்தியிலதான் வேலை. 10வருசத்துக்கு முன்னாடி மாமா கல்யாணத்தில் பரிமாறியது இன்னும் நினைவு இருக்கு, பரிமாறூபவர்கள் கோவித்து கொள்ள பசங்களாக சேர்ந்து பரிமாறினோம். பற்றாக்குறை சமயங்களில் வாளிக்குள் கை வேகமாக போகும், பரிமாறும் போது மெதுவாக மாறீவிடும் :-)

    என்ன சில சமயம் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைக்கும்போது அவர்கள் பேசுவதை வைத்து உறவுமுறைகளை கணித்து சமாளிப்பது உண்டு. இதுவரை யாரையும் மாற்றி கூப்பிட்டது இல்லை :-)

    ReplyDelete
  21. /நல்ல அனுபவம்! சுவையா சொல்லி இருக்கீங்க. ஓரளவுக்கு சொந்தகாரங்க பேரும் உறவு முறையும் தெரியும்கிறதால இதுவரை அந்த மாதிரி பிரச்சனை வந்தது இல்லை. ஒரே ஒரு திருமணத்தில் மட்டும்தான் மொய் எழுதி இருக்கேன். மத்த திருமணங்களில் எல்லாம் பந்தியிலதான் வேலை. 10வருசத்துக்கு முன்னாடி மாமா கல்யாணத்தில் பரிமாறியது இன்னும் நினைவு இருக்கு, பரிமாறூபவர்கள் கோவித்து கொள்ள பசங்களாக சேர்ந்து பரிமாறினோம். பற்றாக்குறை சமயங்களில் வாளிக்குள் கை வேகமாக போகும், பரிமாறும் போது மெதுவாக மாறீவிடும் :-)/

    ஆமாம் முத்துகுமரன். கல்யாண வேலைகள் எல்லாமே இனிய அனுபவம் தான். பந்தியில் பரிமாறுவதும் ஒரு கலைதான் :)

    /என்ன சில சமயம் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைக்கும்போது அவர்கள் பேசுவதை வைத்து உறவுமுறைகளை கணித்து சமாளிப்பது உண்டு. இதுவரை யாரையும் மாற்றி கூப்பிட்டது இல்லை :-)/

    மொய்யெழுதும்போது எதை வைத்து அனுமானிப்பது என்று தெரியவில்லை. அதான் ஒரு குத்துமதிப்பாக அந்த பாட்டியை அம்மாச்சி என்று சொல்லிவிட்டேன் ;-)

    ReplyDelete
  22. ஹஹா ஹா .. நகைச்சுவையா இருந்தது. அருமையான நடை .

    ஆனா .. இந்த மொய் எழுதுறது இப்போ கொறஞ்சு போச்சு .. முந்தின நாள் ரிசப்ஷன் வந்த அப்புறம் எல்லோரும் பணத்துக்கு பதிலா கிப்ட் கொடுதுடுறாங்க .

    அப்படியே கவர் கொடுத்தாலும் மாப்பிள்ளை இல்லை பொண்ணு கையில கொடுதுடுறாங்க..

    40 பக்க நோட்டு போட்டு எழுதினது போய் இப்போ 3 , 4 பக்கம் தாண்ட மாட்டுது..

    கிராமங்களில் தெரியல.. ஆனால் நகரங்கள்ல இதான் நிலை..

    ReplyDelete
  23. /ஹஹா ஹா .. நகைச்சுவையா இருந்தது. அருமையான நடை ./
    நன்றிங்க ரினா.

    /ஆனா .. இந்த மொய் எழுதுறது இப்போ கொறஞ்சு போச்சு .. முந்தின நாள் ரிசப்ஷன் வந்த அப்புறம் எல்லோரும் பணத்துக்கு பதிலா கிப்ட் கொடுதுடுறாங்க .

    அப்படியே கவர் கொடுத்தாலும் மாப்பிள்ளை இல்லை பொண்ணு கையில கொடுதுடுறாங்க..

    40 பக்க நோட்டு போட்டு எழுதினது போய் இப்போ 3 , 4 பக்கம் தாண்ட மாட்டுது..

    கிராமங்களில் தெரியல.. ஆனால் நகரங்கள்ல இதான் நிலை../

    என் தங்கச்சி கல்யாணத்துல கிஃப்டு, கவர், மொய் எல்லாமே கலந்துதான் வந்தது. ஆனா மொய்தான் அதிகம்!!! :-)

    ReplyDelete
  24. நல்ல அனுபவம் :) என் பழைய அனுபவங்களை நினைத்துப்பார்க்க வைத்தது ...

    எங்கள் வீட்டில் மொய் வைப்பதை குறைத்துவிட்ட்டோம் ... பெரும்பாலும் வைப்பது இல்லை ... பின்னே ஒரு முகூர்த்தத்திற்கு 15 ‍ ... 20 அழைப்பு வந்தால் .. எப்படி எல்லாத் திருமணத்தையும் பார்த்து முகூர்த்தம் முடியும் வரை இருந்து மொய் வைப்பது?:)

    அதனால் தான் மொய் வைப்பதும் இல்லை ... வாங்குவதும் இல்லை :)

    ஆனால் மொய் எழுதுவது ஒரு சந்தோசமான அனுபவம் ,, எல்லாரும் .. மாப்ள .. நம்ம பேர்ல இத எழுது .. .என கொடுத்துவிட்டுப் போக .. நமக்கு பேர் ஊர் தெரியாது என வெளியில் காட்டிக்கொள்ளாமல் பலரை விசாரித்து எழுதி ,,,, யப்பப்பா ... :)

    ReplyDelete
  25. /நல்ல அனுபவம் :) என் பழைய அனுபவங்களை நினைத்துப்பார்க்க வைத்தது ... /
    ம்ம்ம் நீங்களும் அதை ஒரு பதிவா போட்டுடுங்க தனசேகர்…

    /எங்கள் வீட்டில் மொய் வைப்பதை குறைத்துவிட்ட்டோம் ... பெரும்பாலும் வைப்பது இல்லை ... பின்னே ஒரு முகூர்த்தத்திற்கு 15 ... 20 அழைப்பு வந்தால் .. எப்படி எல்லாத் திருமணத்தையும் பார்த்து முகூர்த்தம் முடியும் வரை இருந்து மொய் வைப்பது?:)

    அதனால் தான் மொய் வைப்பதும் இல்லை ... வாங்குவதும் இல்லை :) /

    இது ரொம்ப நல்ல விசயம்தான். ஆனால் மொய் வாங்கிக் கொள்ளவில்லையென்றாலும் கோபித்துக்கொள்கிற சொந்தக்காரர்களும் இருக்கிறார்கள் :)

    /ஆனால் மொய் எழுதுவது ஒரு சந்தோசமான அனுபவம் ,, எல்லாரும் .. மாப்ள .. நம்ம பேர்ல இத எழுது .. .என கொடுத்துவிட்டுப் போக .. நமக்கு பேர் ஊர் தெரியாது என வெளியில் காட்டிக்கொள்ளாமல் பலரை விசாரித்து எழுதி ,,,, யப்பப்பா ... :)/

    அதுதாங்க நானும் கொஞ்சம் தெணறிட்டேன் ;)

    ReplyDelete
  26. //பேர ஏழுமலை னு சொன்னா எனக்கு ஏழுமலைனு எழுத வர மாட்டேங்குது. Ezumalai னு எழுதப் போறேன்.//

    இதுக்குத் தான் தமிங்கில விசைப்பலகை தவிருங்க, தமிழ்99 விசைப்பலகைல எழுதுங்கன்னு தலை கீழாய் கிடந்து பதிவர்களைக் கேட்க வேண்டி இருக்கிறது :(

    நானும் ஊரில் மொய் எழுதி இருக்கிறேன்..ஆனால், அது அப்பச்சி இறப்புக்கு எழுதியது. நான் வளர்ந்த ஊர் அது தான் என்பதால் பெரிதாக சிரமம் இல்லை..ஆனால், சுத்துப்பட்டு பதினாறு பட்டியும் தெரிந்த பெரியவர்கள் துணைக்கு இருந்ததால் இலகுவாய் இருந்தது..

    ReplyDelete
  27. நல்ல பதிவு. மண் மணம் மாறாமல் எழுதுகிறீர்கள்

    ReplyDelete
  28. மொய் எழுதுறதும் கிட்டத் தட்டப் பின்னூட்டம் போடுற மாதிரிதான்னு சொல்லுப்பா:-)))

    ReplyDelete
  29. ath 17 koli mater SUPER

    ReplyDelete
  30. /இதுக்குத் தான் தமிங்கில விசைப்பலகை தவிருங்க, தமிழ்99 விசைப்பலகைல எழுதுங்கன்னு தலை கீழாய் கிடந்து பதிவர்களைக் கேட்க வேண்டி இருக்கிறது :(/

    ரவிசங்கர்,

    என்னிடம் சொந்த கணினி இல்லை. அலுவலகக் கணினியில் தமிழ்99 க்கான இ கலப்பை வேலை செய்வதில்லை :( அதானாலேயே இன்னமும் தமிங்கில தட்டச்சு…

    /நானும் ஊரில் மொய் எழுதி இருக்கிறேன்..ஆனால், அது அப்பச்சி இறப்புக்கு எழுதியது. நான் வளர்ந்த ஊர் அது தான் என்பதால் பெரிதாக சிரமம் இல்லை..ஆனால், சுத்துப்பட்டு பதினாறு பட்டியும் தெரிந்த பெரியவர்கள் துணைக்கு இருந்ததால் இலகுவாய் இருந்தது../

    ம்ம்ம் உங்களுக்குப் பரவாயில்லை.
    எனக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது!!!

    ReplyDelete
  31. /நல்ல பதிவு. மண் மணம் மாறாமல் எழுதுகிறீர்கள்/

    நன்றிங்க புதுகைத் தென்றல்!!!

    ReplyDelete
  32. /மொய் எழுதுறதும் கிட்டத் தட்டப் பின்னூட்டம் போடுற மாதிரிதான்னு சொல்லுப்பா:-)))/

    தல,
    க.க.க.போ :)

    ReplyDelete
  33. /ath 17 koli mater SUPER/
    நெசமாவே என்னோட கையெழுத்து அப்படிதாம்ப்பா இருக்கும்!!

    ReplyDelete
  34. பொய்யின்றி கையோடு மொய் கொண்டு போனால் நல்லதுன்னு சொல்றீங்க. :)

    நானும் எழுதீருக்கேன். ஒருவாட்டி. போதும்டா சாமீன்னு ஓடி வந்துட்டேன். யார் யாரோ மாப்ளேய், தம்பி, மருமகனே, மகனேன்னு கூப்ட்டு நமக்கு ஒன்னு எழுதுன்னு சொல்றாங்கப்பா. யார் யாரு எவருன்னே தெரியலை. தாங்க மாட்டாம கைமாத்தி விட்டுட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
  35. அருட்பெருங்கோ,

    http://www.nhm.in/software/

    தளத்தில் கிடைக்கும் NHM writer கொண்டு தமிழ்99, தமிங்கிலம் என்று மாற்றி மாற்றி எழுத இயலும். இது உங்களுக்குத் தமிழ்99 பழக உதவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete