தீபாவளியை அதன் காரணங்களுக்காக என்றுமே கொண்டாடியதில்லை நான். எனினும் பட்டாசு, புத்தாடை இனிப்பு இவை மட்டுமே தீபாவளியைக் கொண்டாட போதுமான காரணிகளாய் இருந்த காலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே கரைந்து போய் விட்டது. இந்த முறை தீபாவளிக்கு வீட்டுக்கு சென்றிருந்த போது தீபாவளியை பின்னுக்குத் தள்ளி குடும்பத்தின் முழுக் கொண்டாட்டத்தையும் தனியொருத்தியாய் ஆக்கிரமித்துக் கொண்டாள் அக்காவின் மகள் ஜனனி.
அவளுக்குப் பிடித்த இனிப்பு, அவள் வெடிக்க பட்டாசு, அவள் கேட்ட சுடிதார், அவள் கேட்ட crayons என குடும்பத்தில எல்லோருக்கும், இந்த தீபாவளியின் முன் தயாரிப்புகள் எல்லாமே, அவளைச் சுற்றியேதான் இருந்தது. வீட்டுக்கு அவள் வந்ததில் இருந்து, கிளம்பி செல்லும் வரை எல்லோரையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முடிந்திருக்கிறது அவளால். மூன்று நாட்களின் எந்த நிமிடத்தையும் அவளோடு இல்லாத காலமாக கணக்கிட முடியவில்லை.
அவளோடு ஒளிந்து விளையாடும்போது, விளையாட்டின் விதி இரண்டே இரண்டு தான். ஒளிந்து கொள்வது நீங்கள் என்றால், அவள் சொல்கிற இடத்தில் தான் நீங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும். பத்து வரை எண்ணிவிட்டு அவள் சொன்ன இடத்தில் ஒளிந்திருக்கும்(?) உங்களைச் சரியாக வந்து கண்டுபிடித்து(!) விடுவாள். நீங்கள் தோற்றுப் போவீர்கள். கண்டுபிடிக்க வேண்டியது நீங்கள் என்றால், எத்தனை முறை விளையாடினாலும் அவள் ஒளிந்து கொள்ளப்போவது அதே கதவு சந்துதான் என்று தெரிந்தாலும் அதனைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் நீங்கள் தேட வேண்டும். கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் மீண்டும் தோற்றுப் போக “நான் இங்க இருக்கேன்” என கதவு சந்தில் இருந்து அவள் வெற்றிப் புன்னகையுடன் ஓடி வருவாள். அவளோடு விளையாடும் இந்த விளையாட்டில் இந்த இரண்டும்தான் திரும்ப திரும்ப நடைபெறுகிறதென்றாலும் அந்த சுவாரசியம் கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணமெனத் தெரியவில்லை.
சாப்பிடும்போதும், தூங்கும்போதும் அவளுக்கு தேவையானவை உணவும், மடியும் மட்டுமல்ல, கேட்டுக் கொண்டே சாப்பிடுவதற்கு/தூங்குவதற்கு சில கதைகளும். கதையைத் தவறாக சொன்னால் அதை திருத்துகிற அளவுக்கு, அவை ஏற்கனவே கேட்ட கதைகளாக இருந்தாலும், மீண்டும் கேட்பதில் அவளுக்கு அதே ஆர்வம் இருக்கதான் செய்கிறது. ஒருமுறை அவளை தூங்க வைக்க கதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போக என்னை எழுப்பி ‘மாமா அந்த நரிக்கத சொல்லு மாமா’ என்று விடாமல் கேட்கிறாள். அவளுக்காக அனிமேசனில் கதை சொல்லும் சிடிக்கள் வாங்கி வந்து தொலைக்காட்சியில் ஓடவிட்டபோது, கரடிக்கதை, விறகுவெட்டி கதை, முதலைக் கதை என ஏற்கனவே அக்கா சொன்ன அத்தனைக் கதைகளும் அங்கே காட்சிகளோடு வந்து கொண்டிருந்தன. முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம்.
என் அம்மா அவளை எதற்கோ மிரட்டிவிட அழுது கொண்டே என்னிடம் வந்தவளை சமாதானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அம்மாவை பொய்யாக நான் ஒரு அடி வைக்க, நிஜமாகவே எனக்கு கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது அவளிடமிருந்து. எத்தனை மிரட்டினாலும் அவள் அம்மாச்சியை யாரும் அடிக்கக் கூடாதாம். ம்ம்ம்… இந்த தாத்தா- பாட்டிகளுக்கும், பேரன் – பேத்திகளுக்குமிடையே அப்படி என்னதான் பாசம் இருக்குமோ தெரியவில்லை. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். நாம் பொது எதிரியாகி விடுகிறோம்.
அவளுக்கு இணையாக போட்டி போட முடியா விட்டாலும் வீடே அதிர சத்தம் போட்டு தனது இருப்பை அவ்வப்போது உணர்த்தி விடுகிறாள், அண்ணன் மகள் மித்ரா. இவள் இன்னும் நடக்க/பேச ஆரம்பிக்கவில்லையென்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இவளும் வளர்ந்துவிட்டடல் அடுத்த தீபாவளி இரட்டை வெடியாகதான் இருக்கும் :-)
எல்லாக் குழந்தைகளையும் போலவே கேள்விகள் கேட்டு அதற்கு நம்மிடமிருந்து பதில் வாங்குவது அவளுக்குப் பிடித்தமான இன்னொன்று. அதிக சளியால் அவளை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற போது,
“எப்போம்மா டாக்டர் வருவாங்க?”
“டாக்டர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இப்போ வந்துடுவாங்க”
“என்னம்மா பேசிக்கிட்டு இருக்காங்க?”
“அவங்க பிரெண்ட் கூட பேசிட்டு இருக்காங்களாம். நீ இந்த மாதிரி சத்தம் போட்டா அப்புறம் உனக்கு ஊசி போட்டுடுவாங்க”
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவள் மறுபடியும்,
“எதுக்கும்மா இவங்கல்லாம் வந்திருக்காங்க?”
“எல்லாருக்கும் உன்ன மாதிரி சளி புடிச்சிருக்கு…அதான் டாக்டர்கிட்ட வந்திருக்காங்க”
“எப்படிம்மா இவங்களுக்குலாம் சளி புடிச்சிச்சு?”
“உன்ன மாதிரியே அவங்களும் தண்ணியில விளையாண்டாங்களாம் அதான் சளி புடிச்சிக்கிச்சு”
“ஏம்மா தண்ணியில விளையாண்டாங்க?”
“அதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாது பாப்பா… அவங்கள தான் கேட்கனும்”
அங்கிருப்பவர்களிடம் கேட்பதற்கு அவள் போக, அவளை இழுத்து அண்ணனிடம் விட்டு அக்கா எஸ்கேப் ஆகிவிட,
“ஏன் மாமா… அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”
பதில் சொல்ல ஆரம்பித்தால், இப்போதைக்கு இது முடியாது என்பதை உணர்ந்த அண்ணன், கேட்டான்…
“ஆமா கண்ணு… ஏன் அவங்க தண்ணியில வெளையாண்டாங்க?”
அதன்பிறகு அமைதியாகி விட்டாள் :-)
சொல்லிக்கொடுப்பதைத் திருப்பி சொல்லிவிட்டாலே அந்த குழந்தையைப் பாராட்டும் போது, யாரும் சொல்லித் தராமலே வெளியில் பார்த்துணர்ந்து அவள் பேசுகிற/ செய்கிறவை ஆச்சர்யமளிக்கின்றன. யாரும் சொல்லித் தராமலேயே சுடிதாரின் துப்பட்டாவை எல்லா விதமாகவும் அணிந்து கொள்கிறாள். குடும்பத்தில் எல்லோருக்குமிடையே இருக்கும் உறவுமுறையை அவளால் யாரும் சொல்லித் தராமலேயே தெரிந்து கொள்ள முடிகிறது.
அவளுக்கு என்று வீட்டில் சில இடங்கள் இருக்கின்றன. கோபித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள ஒரு வெளிவாசல்படி, ஒளிந்துகொள்ள ஒரு கதவுசந்து, பொம்மையோடு விளையாட மாடிப்படி, நீரோடு விளையாட துணி துவைக்கிற இடம் இப்படி…தண்ணீரில் விளையாடினால் சளி பிடிக்கும் என்றும் தெரிகிறது. சளி பிடித்தால் ஊசிப் போடப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் தண்ணீரை விட்டுப் பிரிவதில்லை அவள்.அவளைப் போலவே கையில் அகப்படாமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் அவளுக்கு தண்ணீரையும் பிடித்துப் போனதோ என்னமோ. குழாயில் தண்ணீரை நிரப்பி விளையாடுவதற்காகவே துணி துவைக்கிற இடம் வாகாக அமைந்துவிடுகிறது அவளுக்கு. கடைக்குப் போகும்போது கூடவே வருவதில் அப்படியென்ன சுகமோ இந்த குழந்தைகளுக்கு. ஓவ்வொரு முறையும் கடையில் ஏதேனும் ஒன்று (எப்படியும் உடையப் போகிறது எனத் தெரிந்தாலும் ஒரு பலூனோ, கண்ணாடியோ வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்) வாங்கிக் கொள்கிறாள்.
பெரியவர்களைப் போல, அறிமுகமில்லாத புதியவர்களிடம் பேசுவதற்கு அவளுக்கு எவ்வித கூச்சமும் இல்லை. வாசலில் நின்று ஓடிக்கொண்டிருக்கிற கோழியையும், நாய்க்குட்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், தெருவில் போய்க்கொண்டிருந்த ஓர் அம்மாவை அழைத்தாள்.
“ஏங்க… இங்க வாங்க”
“என்ன பாப்பா? உம் பேரென்ன”
“என் பேரு ஜனனி. இது எங்க அம்மாச்சி வீடு தெரியுமா?”
“ஓ அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கியா?…உங்க வீடு எங்க இருக்கு?”
“எங்க வீடு திருப்பூர்ல இருக்கு. இது எங்க தாத்தா புதுசா கட்டின வீடு. நல்லா இருக்குதா?”
“ம்ம்ம் நல்லா இருக்கு கண்ணு”
“சரி போங்க”
சிரித்துக் கொண்டே போய் விட்டார் அவரும்.
ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் அவளிடம் சொன்னேன் - “ஜனனி இப்போ இங்க அம்மாச்சி வீட்ல இருக்கிற மாதிரியே திருப்பூர் போயும் இருக்க கூடாது. அடம் பண்ணாம ஸ்கூல் போய் நல்லாப் படிக்கனும் சரியா?”
அதற்கு அவள் சொன்ன பதில் -
“ஹையோ மாமா… உங்கக்காதான் காலைலயே என்ன குளிக்க வச்சு, யூனிஃபார்ம் போட்டு, லஞ்ச் எல்லாம் பாக்ஸ்ல போட்டு ஸ்கூல்ல கொண்டு வந்து விட்றாங்களே… சாயங்காலமும் ஸ்கூல் வந்து என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாங்க… எனக்கு A, B, C, D எழுத வைக்கிறாங்க… எல்லாம் பண்றாங்கல்ல? உங்கக்கா இருக்கும்போது எனக்கென்ன மாமா?”
அவளுக்கு மூன்று வயது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதுவரை யாரும் நம்பவில்லை.
குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
romba nalla irundadu adaesamayam yenoda pazhaya ninaivuagal anaithayum oru murai thirumbi paarka vaithadu inda anubava katturai.
ReplyDelete2 photovum ungaludaya "kaadal payanam" kavidai poolavae irundadu.
kutti paappakkalukku yennudaya vazhtukkal.
veetla solli thirushdi suthi pooda sollunga sir, kannu pada poogudu.
khanba.
appadiye enga veetu kutties nyabagam vanthuruchi :(
ReplyDeleteமனசு லேசான மாதிரி இருக்குங்க. நல்ல பதிவு..
ReplyDeleteஆஹா அருட்பெருங்கோ ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க படிக்க படிக்க எனக்கு என் வீட்டில் இருக்கும் குட்டீஸ் தான் ஞாபகம் வந்திச்சு அதுவும் ரெண்டு விஷயங்கள்
ReplyDelete1/அந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்னவோ தெரில எங்க வீட்டிலேயும் நடக்கும். அவங்க எங்க ஒழிச்சு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சாலும் அந்த குட்டி சந்தோஷத்துக்காக நடிக்கிறது வழமையாப் போச்சு
2/அந்த கேள்வி கேக்குறத நிறுத்திறத்துக்கு ஒரே வழி நாம கேள்வி கேக்குறது தான்.
எல்லாக் குழந்தைகளும் இப்படித்தானா?
வாழ்த்துக்கள்
மீண்டும் நான் இங்கு....நின்று, நிதானமாக, அனுபவித்து வாசித்த பதிவு...வாழ்த்துக்கள் ...நன்றி..
ReplyDeleteமுகவைத்தமிழன்
www.tmpolitics.net
என்னத்தைய்யா சொல்றது கொடுத்து வைச்சவன்யா நீ ;)
ReplyDeleteஅப்புறம் ஒரு விஷயம் கேள்வி எல்லாம் மனப்பாடம் பண்ணிக்க அடுத்த வருஷம் உனக்கு தேவைப்படும் ராசா ;))
நம்மவுட்டு அம்மணி போன்ல மாமான்னு சொல்ல சொன்ன போதும் ஒரு சவுண்டு வரும் பாரு...யப்பா அப்படி ஒரு அடி செல்லை தள்ளி வச்சுட்டுதான் பேசுவேன் ;)
ReplyDeleteஅனைத்து குழந்தைகளும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் :)
குழந்தைகளோடு செலவிடும் மகிழ்ச்சியை .. எவ்வளவு காசு கொடுத்தும் வாங்க முடியாது :)
ReplyDeleteமிக சுவாரசியமான பதிவு அருட்பெருங்கோ !!
நீங்க சொல்லச் சொல்ல ஜனனியின் லூட்டிகளை கேட்டதுண்டு. மித்ராவின் சிரிப்பை நேரிலேயே பார்த்திருக்கிறேன். இன்னும் கண்ணிலேயே இருக்கிறாள்.
ReplyDelete(தூரத்தில் இருந்து நான் மித்ராவை அழைக்க, நீயும் அண்ணியுமாய் இப்படியெல்லாம் கூப்பிட்டா வந்துடுவாளா? மரியாதையாய் பக்கத்தில் வந்து கூப்பிடுங்க என்று டேமேஜ் செய்ததும் இன்னும் மறக்கல)
இந்தப் பதிவு படிக்கும்போது அவர்களை நேரிலேயே கண்டு அவர்களோடு விளையாடியது போன்ற அனுபவம் கிடைத்தது :)
உங்களுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
/romba nalla irundadu adaesamayam yenoda pazhaya ninaivuagal anaithayum oru murai thirumbi paarka vaithadu inda anubava katturai. /
ReplyDeleteம்ம்ம் நன்றிங்க கான்பா !!
/2 photovum ungaludaya "kaadal payanam" kavidai poolavae irundadu./
அழகா இருக்குன்னுதான் சொல்றீங்கன்னு எடுத்துக்கறேன் :-)
/kutti paappakkalukku yennudaya vazhtukkal. /
மீண்டும் நன்றி கான்பா.
/veetla solli thirushdi suthi pooda sollunga sir, kannu pada poogudu.
khanba./
எனக்கதில் நம்பிக்கையில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னதாக வீட்டில் சொல்லிவிடுகிறேன் ;-)
/appadiye enga veetu kutties nyabagam vanthuruchi :(/
ReplyDeleteதுர்கா, ஃபீல் பண்ணாம சீக்கிரமே நேர்ல போய் பாத்துட்டு வாங்க... :-)
/மனசு லேசான மாதிரி இருக்குங்க. நல்ல பதிவு../
ReplyDeleteஆமா இளா... மனசு லேசாக இருக்க, ஒன்று குழந்தையாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைகளுடன் இருக்க வேண்டும்!!!
/ஆஹா அருட்பெருங்கோ ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க படிக்க படிக்க எனக்கு என் வீட்டில் இருக்கும் குட்டீஸ் தான் ஞாபகம் வந்திச்சு/
ReplyDeleteநன்றீ தயா.
/அதுவும் ரெண்டு விஷயங்கள்
1/அந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்னவோ தெரில எங்க வீட்டிலேயும் நடக்கும். அவங்க எங்க ஒழிச்சு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சாலும் அந்த குட்டி சந்தோஷத்துக்காக நடிக்கிறது வழமையாப் போச்சு
2/அந்த கேள்வி கேக்குறத நிறுத்திறத்துக்கு ஒரே வழி நாம கேள்வி கேக்குறது தான்.
எல்லாக் குழந்தைகளும் இப்படித்தானா?
வாழ்த்துக்கள்/
எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான விசயங்கள் இவை :-)
வாழ்த்துக்கு மீண்டும் நன்றிங்க
/மீண்டும் நான் இங்கு....நின்று, நிதானமாக, அனுபவித்து வாசித்த பதிவு...வாழ்த்துக்கள் ...நன்றி..
ReplyDeleteமுகவைத்தமிழன்/
வாசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி முகவைத் தமிழன்.
/என்னத்தைய்யா சொல்றது கொடுத்து வைச்சவன்யா நீ ;)/
ReplyDeleteஎல்லா தாய்மாமனும் கொடுத்து வச்சவன்தான் கோபி ;-)
/அப்புறம் ஒரு விஷயம் கேள்வி எல்லாம் மனப்பாடம் பண்ணிக்க அடுத்த வருஷம் உனக்கு தேவைப்படும் ராசா ;))//
யப்பா ராசா... எனக்கெல்லாம் இன்னும் கல்யாண வயசு வரல... சரியா??? என்னப் பார்த்தா +2 படிக்கிற பையன் மாதிரி இருக்குனு நெறைய பேர் சொல்றாங்களாம் ;-)
/நம்மவுட்டு அம்மணி போன்ல மாமான்னு சொல்ல சொன்ன போதும் ஒரு சவுண்டு வரும் பாரு...யப்பா அப்படி ஒரு அடி செல்லை தள்ளி வச்சுட்டுதான் பேசுவேன் ;)/
ReplyDeleteஆமாப்பா நம்ம சத்தமெல்லாம் அங்க செல்லாது. நாம அடக்கிதான் வாசிச்சாகனும் ;-)
/அனைத்து குழந்தைகளும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் :)/
நன்றி குழந்தாய் :-)
/குழந்தைகளோடு செலவிடும் மகிழ்ச்சியை .. எவ்வளவு காசு கொடுத்தும் வாங்க முடியாது :) /
ReplyDelete:-) உண்மைதான் தனசேகர்.
/மிக சுவாரசியமான பதிவு அருட்பெருங்கோ !!/
நன்றிங்க!!!
/நீங்க சொல்லச் சொல்ல ஜனனியின் லூட்டிகளை கேட்டதுண்டு. மித்ராவின் சிரிப்பை நேரிலேயே பார்த்திருக்கிறேன். இன்னும் கண்ணிலேயே இருக்கிறாள்./
ReplyDeleteஅவ்ளோ பெரிய கண்ணா உங்களுக்கு? ;-) சரி திட்டாதீங்க...
/(தூரத்தில் இருந்து நான் மித்ராவை அழைக்க, நீயும் அண்ணியுமாய் இப்படியெல்லாம் கூப்பிட்டா வந்துடுவாளா? மரியாதையாய் பக்கத்தில் வந்து கூப்பிடுங்க என்று டேமேஜ் செய்ததும் இன்னும் மறக்கல)/
பக்கத்தில வந்து நீங்க கூப்பிட்டதும் அவ பயந்தத நானும் இன்னும் மறக்கல ;-)
/இந்தப் பதிவு படிக்கும்போது அவர்களை நேரிலேயே கண்டு அவர்களோடு விளையாடியது போன்ற அனுபவம் கிடைத்தது :)/
கவலப்படேதீங்க தல... பொங்கலுக்கு மாமனார் வீட்டுக்கு வரும்போது வாங்க நேர்லையே விளையாடலாம்!!!
/உங்களுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்/
நான் குழந்த மாதிரினு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???
azhagu kuzhandhaigal...
ReplyDeletekandippa dhrusti suttha sollunga...
vaazhthukkal kutties ku...
மழலைகளின் உலகம் சொல்லும் அழகானப் பதிவு இது,
ReplyDelete/azhagu kuzhandhaigal...
ReplyDeletekandippa dhrusti suttha sollunga...
vaazhthukkal kutties ku.../
பேர் சொல்லாத பெருந்தகையே, :)
வாழ்த்துகளுக்கும், நேசத்திற்கும் நன்றிகள்!!!
/மழலைகளின் உலகம் சொல்லும் அழகானப் பதிவு இது,/
ReplyDeleteஆமாம் தல… அவங்க உலகமே ரொம்ப மகிழ்ச்சியானது. மறுபடியும் குழந்தையாவே ஆகிடலாம்னு தோணிடுது அப்பப்போ :-)
நண்பருக்கு
ReplyDeleteஉண்மைதான் நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை தன் கண்ணசைவில். கைவீச்சில் காட்டி விடும் இந்த குட்டி தேவதைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் வாழ்வதற்கு தகுதியற்றதாகி விட்டிருக்கும்
மிகவும் அழகான பதிப்பு. வாழ்த்துக்கள்
சுமி
இந்த குட்டி தேவதைகள் செய்வது அத்தனையும் திகட்டாதவைகள்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கப்பா.. எல்லார் வீட்டுலயும் குழந்தைங்க தனி உலகம் வச்சிக்கிட்டு இருப்பாங்க நாம் சும்மா இரு வேலை இரூக்குன்னு சொல்லாம அவங்க உலகத்துல புகுந்து புறப்பட்டா டென்சனே இருக்காது..
ReplyDelete/ நண்பருக்கு
ReplyDeleteஉண்மைதான் நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை தன் கண்ணசைவில். கைவீச்சில் காட்டி விடும் இந்த குட்டி தேவதைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் வாழ்வதற்கு தகுதியற்றதாகி விட்டிருக்கும்/
நன்றாக சொன்னீர்கள் சுமி. குழந்தைகளிடம் நம்மை முழுவதுமாக ஒப்புக் கொடுத்துவிடும் கணங்கள் அதியழகானவை!!!
/மிகவும் அழகான பதிப்பு. வாழ்த்துக்கள்
சுமி/
நன்றிங்க சுமி.
/இந்த குட்டி தேவதைகள் செய்வது அத்தனையும் திகட்டாதவைகள்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கப்பா.. எல்லார் வீட்டுலயும் குழந்தைங்க தனி உலகம் வச்சிக்கிட்டு இருப்பாங்க நாம் சும்மா இரு வேலை இரூக்குன்னு சொல்லாம அவங்க உலகத்துல புகுந்து புறப்பட்டா டென்சனே இருக்காது../
ReplyDeleteம்ம்ம் உண்மைதாங்க்கா… ஆனா இதெல்லாம் எங்கக்காகிட்ட சொன்னா வீட்ல அவள வச்சி அடக்கமுடியலன்னு சொல்றாங்க ;-)
குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நம் வாழ்க்கையின் பொற்காலம்.
ReplyDelete//குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)//
நன்றி. வாழ்த்துக்கள்.
//குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நம் வாழ்க்கையின் பொற்காலம்.//
ReplyDeleteசரியாச் சொன்னீங்க ராதா செந்தில்!!!
//குழந்தை (உள்ள(ம் கொண்ட)) வலைப்பதிவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் :-)//
நன்றி. வாழ்த்துக்கள்.//
எனக்கும் கொழந்த மனசுதாங்க ;-)
நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது, ஜனனியை நேரில் சென்று பார்த்து பேச வேண்டும் போல் இருக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு! அருட்பெருங்கோ
/நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது, ஜனனியை நேரில் சென்று பார்த்து பேச வேண்டும் போல் இருக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு! அருட்பெருங்கோ/
நன்றி வெயிலான். எனக்கும்தான். ஆனால் என்னாலும் அடுத்துப் பொங்கலுக்குதான் போக முடியும்!!!
ival pesuvathai paditha piraku ennaku en annan magal kausalya thaan ninaivukku vanthal. Avallukku
ReplyDelete3 vayathaga irrukkum poluthu peryappavidam appa neengga feelingsoda pesungga endral. perumpallana neranggal periyappa veettille varthal.Athnaal periyamma periyappavidam pasaipol ottikkondal suttrillum periyavargal vallum soollalil valarnthathall periyavarggalaipole pesinal.Avallukku piditha padal, "Karupputhaan ennakku pidicha kalaru" orumurai en annanin nanbar paralumandra urruppinar oruvar annaudan vanthirrunthar vettirku. kausalya avaraipparthu sirithal 'yar intha kulanthai endru avar kettatharkku
annan kkurinar 'en thambiyin magal peyar kausalya , vayathu moondru anallum nandraga paduval endrrar. Appadiya paduma endar annain nanbar. kausalyavo "karrupputhaan ennakku pidithha kalarru " endra padalai megavum arumaiyaga padinal.
Padi 5 rinnggit parissum parattum petrall. Avalludaiya ammavo ML vasantha kumariyin ayal nattu manavi" The only foreign student of ML vasantha Kumari, I mean The Late Sri vidya's Mother's student.
Endrru varai aval kurumbugal kuraiya villai. sila Neranggalil sirithu sirithu vayere vallikum.
Ippolluthu aval thanggai "Aiswariya letchumi' Akkavayum minji vittal. aval vayai thiranthalo "LUSUPENNA LUSUPENNA
lusupenna, lusupaiya unmelathan lusa kedakkiran"" endru paduval... niruthave mattal. piragu than pakkathu vittu tholiyudan aggilathil uraiyaduval. Anerica kudumban pakkathuvittil kudiyeriyavudam vayil thamile varuvathillai. Annal Periyamma aval vittu pakkam ponal pothum pal bottle, sattai towel ellam muttayai kaiyil eduthukkondu ammavidam sollamal periyammavudan nadayai kattividall intha kutti aisu.Kuttti aissukku piditha dance frog Dance. Thavalaiyaipol thavi thavi aduvall. Piragu Tharayal utkarnthukkondu sutruwal "swing dance" aval vaitha peyar.Ivallin mallalaikurrumbukku alave illai.
Athai
mina.
மீனா,
ReplyDelete:-)))))
குழந்தைகளிம் சேட்டைகளைச் சொல்ல ஒரு பின்னூட்டம் மட்டுமல்ல, ஒரு இடுகை கூட போதாது. தனியே ஒரு வலைப்பதிவுதான் துவங்க வேண்டும்.
உங்கள் வீட்டு கௌசல்யா, ஐஸ்வர்ய லட்சுமிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல!!!