Wednesday, August 22, 2007

அப்படியே இருக்கின்றன

ஒரு தேவ கணத்தில்,
காதலிக்கலாமா என்றேன்.
யோசித்தாய்.
காதலித்தேன்.
காதலித்தாய்.

ஒரு பாவப் பொழுதில்,
விலகிடுவோம் என்றாய்.
யோசித்தேன்.
விலகினாய்.

விலக முடியாமல்
இறந்து போன என் இதயம் மீதேறி
காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
புதுப் புது மாற்றங்களோடு.

ஆனாலும் அப்படியே இருக்கின்றன
நம் அன்பிற்கு சாட்சியாக…
சொற்களிருந்தும் பேச முடியாத பல கடிதங்களும்,
நம் பிரிவுக்கு சாட்சியாக…என் மனமுறிவும்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

15 comments:

  1. /விலக முடியாமல்
    இறந்து போன என் இதயம் மீதேறி
    காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
    புதுப் புது மாற்றங்களோடு./

    அருமை

    ReplyDelete
  2. பிரதர்,
    இந்த வார புலம்பல் அருமை. ஆனால் வாரத்துக்கு ஒரு புலம்பல் போதும். முடியலை.... :(

    ReplyDelete
  3. / /விலக முடியாமல்
    இறந்து போன என் இதயம் மீதேறி
    காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
    புதுப் புது மாற்றங்களோடு./

    அருமை/

    நன்றிங்க திகழ்மிளிர்!!!

    (திகழ்மிளிர் னா என்னங்க?)

    ReplyDelete
  4. / பிரதர்,
    இந்த வார புலம்பல் அருமை. ஆனால் வாரத்துக்கு ஒரு புலம்பல் போதும். முடியலை.... :(/

    ரொம்ப நன்றிப்பா ஸ்ரீ!!!

    நானும் புதன் கிழமை மட்டும்தான புலம்புறேன்??? ;)

    ReplyDelete
  5. /என்னவோ உதைக்குதே அருட்பெருங்கோ!காதலிக்கலாமா என்று கேட்டுவிட்டு காதல் ??? சரியா வருமா...
    காதல்...தானா வரும்னு தோணுது.. புரியல../

    மேடம்,
    ஒருத்தர் மனசுல காதல் தானா வந்துடுதுனு வச்சுக்குவோம். இன்னொருத்தர் மனசுல காதல் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம 'நான் உன்ன காதலிக்கிறேன்'னு சொல்றது சரியானு எனக்குத் தெரியல.

    இன்னொருத்தர் மனசுலையும் காதல் இருக்குனு தெரிஞ்சுகிட்ட பின்னாடி 'நாம் காதலிக்கலாமா?' அப்படினு கேட்கிறது சரியா இருக்கும்ங்கறது என்னோட எண்ணம்!!

    ReplyDelete
  6. //இன்னொருத்தர் மனசுலையும் காதல் இருக்குனு தெரிஞ்சுகிட்ட பின்னாடி 'நாம் காதலிக்கலாமா?' அப்படினு கேட்கிறது சரியா இருக்கும்ங்கறது என்னோட எண்ணம்!!//

    புலம்பலை விட இந்த பதில் கலக்கல்!!!

    ReplyDelete
  7. /புலம்பலை விட இந்த பதில் கலக்கல்!!!/

    :))) நன்றி நாடோடி இலக்கியன்!!!!

    ReplyDelete
  8. அருட்பெருங்கோ !

    புலம்பல் புதன் ... ???

    கடைசி வரிகளில் கவர்ந்துவிட்டீர் ;)

    ReplyDelete
  9. //விலக முடியாமல்
    இறந்து போன என் இதயம் மீதேறி
    காலம் பயணித்துக் கொண்டே இருக்கிறது
    புதுப் புது மாற்றங்களோடு.//

    Simply superb! hatsoff!! esp.. //இறந்து போன என் இதயம் மீதேறி//

    Chancey Illa, Kalakal words.

    ReplyDelete
  10. என்ன தலைவரே அவனவன் பொன்னு கெடச்சாலும் புதன் கிடைக்காதுன்னுட்டு இருங்கானுக நீங்க என்னடான்ன பொண்ணு கிடைக்கலன்னு புதன்கிழமை உட்கார்ந்து புலம்புறீங்களாக்கும். நல்லா இருக்கு உங்க கத ஆமா. வலிக்குதுப்பா அப்புறம் அழுதுறுவேன்.

    // இன்னொருத்தர் மனசுல காதல் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம 'நான் உன்ன காதலிக்கிறேன்'னு சொல்றது சரியானு எனக்குத் தெரியல. //

    பதில் கலக்கல்

    ReplyDelete
  11. /இன்னொருத்தர் மனசுலையும் காதல் இருக்குனு தெரிஞ்சுகிட்ட பின்னாடி 'நாம் காதலிக்கலாமா?' அப்படினு கேட்கிறது சரியா இருக்கும்ங்கறது என்னோட எண்ணம்!!///
    I dont get the Logic..?/

    rejecting the person is more painful than being rejected by the person in love. so its better not to give that pain to the one who we love.

    so confirming first, proposing next will give the result best :)

    ReplyDelete
  12. // rejecting the person is more painful than being rejected by the person in love. so its better not to give that pain to the one who we love.

    so confirming first, proposing next will give the result best :) //


    இப்படி குடுங்க தோழா கையை மறுபடியும் ஒரு நச்

    ReplyDelete
  13. / அருட்பெருங்கோ !

    புலம்பல் புதன் ... ???

    கடைசி வரிகளில் கவர்ந்துவிட்டீர் ;)/

    ஆமாங்க புலம்பல் புதன் தான் :)))

    நன்றிங்க தனசேகர்!!!

    ReplyDelete
  14. /
    Simply superb! hatsoff!! esp.. //இறந்து போன என் இதயம் மீதேறி//

    Chancey Illa, Kalakal words./

    நன்றிங்க தீக்ஷண்யா!!!

    ReplyDelete
  15. /பதில் கலக்கல்/

    /இப்படி குடுங்க தோழா கையை மறுபடியும் ஒரு நச்/

    என்னங்க அன்வர் காதலப் பத்தி என்ன சொன்னாலும் பாராட்றீங்க ;)

    ReplyDelete