அஞ்சாப்பு படிக்கும்போது
பென்சில் இல்லாதவங்கள
திலகா டீச்சர் முட்டிப் போட சொல்ல…
என்னோட பெரிய பென்சில
பாதியா ஒடச்சு ஒனக்கு கொடுத்ததுல
எம்பென்சில் சிறுசாப்போச்சு…
இங்கிலீசு பரிட்சையில
உனக்கும் காமிச்சக் குத்தத்துக்கு
என்னோட மார்க்கதான் பாதியாக்கிட்டாரு
காளிமுத்து வாத்தியாரு…
காலேஜ்ல தம்மடிக்கும்போதும்
ஆளுக்கொரு “பஃப்” னு
நீயும் சேர்ந்து இழுத்ததுல
ஒவ்வொரு தடவையும் பாதி ‘தம்மு’தான்…
நீ வராதப்ப உனக்கு ப்ராக்ஸி போட்டு மாட்டினதுல
HOD க்ளாஸ்ல என்னோட attendance தான் 50% ஆச்சு…
ஆம்லேட்டோ, ஆஃப் பாயிலோ
‘ருசி’ பார்க்கிறேன்னு
எந்தட்டுல நீ கைய வச்சா
எனக்கு மிஞ்சறது பாதிதான்…
Hostel TV Hall - ல்ல
Star movies க்கு நீயும் KTV க்கு நானும் சேனல மாத்தி மாத்தி
நாம பாத்த படமெல்லாம் பாதிபாதிதான்…
இப்படி TASMAC சரக்குல இருந்து சொந்த கத சோகம் வரைக்கும்
உன்னோட பகுந்துக்கிட்டா எல்லாத்தையும் பாதியாக்குற…
சந்தோசத்த மட்டும் எப்பட்றா மச்சான் ரெண்டு மடங்காக்கற?
( இது கவிதையெல்லாம் அல்ல... என்னுடைய பள்ளி, கல்லூரி கால நண்பர்களுக்கு நான் அனுப்பிய மொக்கை மெசேஜ்… ஒரு காதல் பாட்டு வேணும்னா இங்க கிடைக்கும்)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
இது மொக்கை இல்ல ...
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
/ good mokkai...no doubt!/
ReplyDeleteநன்றிங்க மேடம் :)))
வாங்க சுந்தர்,
ReplyDelete/ இது மொக்கை இல்ல ... /
சும்மாவா சொன்னாங்க... ஒரு ஆணோட மனசு இன்னொரு ஆணுக்குதான் புரியும்னு ;)
/நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ./
வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பா!!!
//இது மொக்கை இல்ல ... //
ReplyDeleterepeatuu.. :-D
Happy Friendship Day. :-)
ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஉணர்வு பூர்வமானது.
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி அருட்பெருங்கோ ஐயா.
friendship day wishes...அருமையான செய்தி அனுப்பி இருக்கீங்க நண்பர்களுக்கு
ReplyDeleteஉங்கள் நண்பர்கள் குடுத்துவைத்தவர்கள்.
அருள் சூப்பர் மொக்கை ;-)))
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்
/ //இது மொக்கை இல்ல ... //
ReplyDeleterepeatuu.. :-D
Happy Friendship Day. :-)/
dhaang u my brend :)
வாங்க மாசிலா,
ReplyDelete/ ரொம்ப நல்லாவே எழுதியிருக்கீங்க.
உணர்வு பூர்வமானது.
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி அருட்பெருங்கோ ஐயா./
உங்களுக்கும் நட்புநாள் வாழ்த்துக்கள்...
ஐயாவா? முன்னாடி 'ப்' விட்டுப்போயிடுச்சா? ;)
வாங்க முத்துலெட்சுமி,
ReplyDelete/ friendship day wishes...அருமையான செய்தி அனுப்பி இருக்கீங்க நண்பர்களுக்கு
உங்கள் நண்பர்கள் குடுத்துவைத்தவர்கள்./
ஹி ஹி அப்படி சொல்றீங்களா? சரிதான்!!!
கோபி,
ReplyDelete/ அருள் சூப்பர் மொக்கை ;-)))/
ஐயையோ நான் வெறும் மொக்கைனு இல்ல நெனச்சேன்... இது சூப்பர் வகையா? ;)
/நண்பர்கள் தின வாழ்த்துக்கள்/
நன்றிப்பா... உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்!!!