மழையில் நனைந்து
ஒதுங்க இடம் தேடி அலையும் அவசரத்திலும்
உள்ளாடை தாண்டி ஊடுருவும் பார்வைகளில்லை…
பேருந்தின் நெரிசலில்
எட்டாதக் கம்பியை எக்கிப் பிடித்து தடுமாறி நிற்கையிலும்
உடலை உரசிப் பார்க்கும் வக்கிரக் கைகளில்லை…
அலுவலகத்தில் கூட
வீட்டு நினைப்போடு வேலையின் பளுவும் சேர்ந்தழுத்தும்போதும்
மேலதிகாரியின் சில்மிஷ , ஆபாசப் பேச்சுக்களில்லை…
குடும்பத்திலும்
உடலாலும் மனதாலும் சுமைகளைச் சுமந்து வருந்தும்போதும்
வாழ்க்கைத்துணையின் ஆதிக்க மனப்பான்மையில்லை…
ம்ம்ம்…பாரதிகூட பெண்ணாய்ப் பிறந்திருந்தால்...
.
.
.
.
.
.
“ஆடவராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமப்பா”
___________________________________________________________
இது மகளிர் நாளுக்காக ஒலிFM இல் ஒலியேறிய எனது கவிதை.
குரல் கொடுத்து உதவிய சிறில் அவர்களுக்கு நன்றிகள்!
_________________________________________________________________
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
கவிதை நல்லாயிருந்துச்சு. மிக்க நன்றி.
ReplyDeleteகேட்டிங்களா?
:))
அருட்பெருங்கோவிற்கு காதலைத் தவிர எதுவும் தெரியாதுன்ல நெனச்சேன்...
ReplyDeleteஉண்மையை அழகாக சொல்லியிருக்குறீர்கள்....
இதே மாதிரி காதலல்லாத கவிதைகளையும் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம் :)))))
//கவிதை நல்லாயிருந்துச்சு. மிக்க நன்றி.
ReplyDeleteகேட்டிங்களா?
:))//
நன்றி சிறில்…
இல்லை சிறில் கேட்க முடியவில்லை :-(((
தீச்சுவர் தடுக்கிறது!!!
அன்பு அருள்...
ReplyDeleteஉண்மையை கவிதையாக சொல்லியிருக்குறீர்கள்....இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது.
இதுபோல் பல கவிதைகளை படைக்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)))
//அருட்பெருங்கோவிற்கு காதலைத் தவிர எதுவும் தெரியாதுன்ல நெனச்சேன்...//
ReplyDelete:-)))) உண்மைதான்!!!
//உண்மையை அழகாக சொல்லியிருக்குறீர்கள்....//
நன்றி ஜி!!!
//இதே மாதிரி காதலல்லாத கவிதைகளையும் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம் :)))))//
கண்டிப்பாக தொடர்கிறேன்!!! இரண்டையும் ;-)
//அன்பு அருள்...
ReplyDeleteஉண்மையை கவிதையாக சொல்லியிருக்குறீர்கள்....இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்கு வியப்பாக இருந்தது.//
கோபி, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா காதலத் தவிர வேற எதுவும் எனக்கு எழுதத் தெரியாதுனு? ;)
//இதுபோல் பல கவிதைகளை படைக்குமாறு கேட்டு கொள்கிறேன் ;)))//
எழுதுறேங்க… கண்டிப்பா எழுதறேன்…
நான் கேட்டேன்.. நல்லாருந்தது! (என்னடா சிறில் அலெக்ஸ் குரல் மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்! :))
ReplyDelete/நான் கேட்டேன்.. நல்லாருந்தது! /
ReplyDeleteநன்றிங்க!!!
/(என்னடா சிறில் அலெக்ஸ் குரல் மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்! :)) /
என்னோடக் குரலையெல்லாம் கேட்க வச்சு உங்களக் கொடுமப்படுத்த வேண்டாம்னுதான் அவரோடக் குரலக் கடன் வாங்கிட்டேன் ;)
தாங்ஸ் சிறில்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteகருணா,
ReplyDeleteஉங்கள் கவிதைகள் வாசித்தேன்…நன்றாக இருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள்… (எனக்கும் எல்லாரும் இதையேதான் சொல்றாங்க :-) )
உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டமிடும் வசதி இல்லாமல் இருக்கிறதே…
சரி செய்யுங்க…
உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறென்
ReplyDeleteமிக்க நன்றி
அருட்பெருங்கோ
வலைப்பதிவில் பின்னூட்டமிடும் வசதியை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா...
கருணா
Latest news!
ReplyDeleteமறு ஒலிபரப்பு ஆகப்போகிறதாம் :-)
அமெரிக்க / கனடிய கிழக்கு நேரம் (EST)
சனிக்கிழமை மார்ச் 10:
- இரவு 9:00
- நள்ளிரவு 12:00
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
- அதிகாலை 3:00
- காலை 6:00
- காலை 9:30
- மதியம் 1:00
- மாலை 4:30
*
இந்திய நேரம் (IST)
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 11:
- காலை 7:30
- காலை 10:30
- மதியம் 1:30
- மாலை 4:30
- மாலை 8:00
- இரவு 11:30
- நள்ளிரவு 3:00
http://www.olifm.com/liveradio.php
கேட்டு மகிழுங்கள்:
* ஆர்.எஸ். மணியின் பேச்சு
* ஆர்.எஸ். மணியின் குரல் மற்றும் இசையில் கவிஞர் புகாரியின் கவிதை
(இவையிரண்டும் மேற்கண்ட ஒலிபரப்பு நேரத்துக்கு 1/4 மணி அல்லது 1/2 மணிநேரம் முன்பே வந்துவிடும்!)
* நா.கண்ணனின் கவிதை
* நிலவு நண்பன் ரசிகவ் ஞானியாரின் கவிதை
* அருட்பெருங்கோவின் கவிதை
* சிறில் அலெக்ஸுடன் உரையாடல்
Romba nalla kavithai... But apdi oru ulagam unda enna pengaluku...?!!!... :)
ReplyDeleteநெஞ்சில் முள்ளாய் குத்துகிறது இந்தப் பதிவு. மகளிர் தினத்திற்கு சரியான கவிதை தான். பாராட்டுகள் தோழா
ReplyDelete//உங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறென்
ReplyDeleteமிக்க நன்றி
அருட்பெருங்கோ //
நன்றி கருணா!!!
//வலைப்பதிவில் பின்னூட்டமிடும் வசதியை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா...
கருணா//
மடல் அனுப்பியிருக்கிறேன்.
வாங்க சுபா…
ReplyDelete//Romba nalla kavithai... But apdi oru ulagam unda enna pengaluku...?!!!... :)//
நன்றி… உருவாகட்டுமே என்றெண்ணி எழுதியது தான் இது!!!
வாங்க பிரேம்,
ReplyDelete//நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது இந்தப் பதிவு. மகளிர் தினத்திற்கு சரியான கவிதை தான். பாராட்டுகள் தோழா//
ம்ம்ம்… பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே…
நல்லாயிருக்கு..
ReplyDeleteகவித்துவமும் உண்மையும்..
சூப்பர்..
சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com
Hi Arutperungo..
ReplyDeleteHappened to read ur poetries by chance... Really marvellous. A big salute to ur imagination...
/நல்லாயிருக்கு..
ReplyDeleteகவித்துவமும் உண்மையும்..
சூப்பர்..
சூர்யா
துபாய்.
புட்டெர்fல்ய்சுர்ய@க்மைல்.cஒம் /
வாங்க சூர்யா,
மிக்க நன்றி....
/Hi Arutperungo..
Happened to read ur poetries by chance... Really marvellous. A big salute to ur imagination.../
ரொம்ப நன்றிங்க...
உங்க வாழ்த்துக்களோடு தொடர்ந்து எழுதறேன்
மகளிர் தினக் கவிதையில் ஆணாக பிறக்காததற்கு வருந்தும் கவிதையை நீங்கள் வெளியிட்ட மைக்கு வருந்துகிறேன்.
ReplyDeleteபெண் உடலை ஊடுருவும் கீழ் பார்வை கொண்ட ஆணாக பிறக்காமல் நல்ல பெண்ணாக பிறந்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு
/ மகளிர் தினக் கவிதையில் ஆணாக பிறக்காததற்கு வருந்தும் கவிதையை நீங்கள் வெளியிட்ட மைக்கு வருந்துகிறேன்./
ReplyDeleteஆணாக பிறக்காததற்கு வருந்தும் தொனியில் கவிதை இருந்தால் மன்னிக்கவும்.
பெண்ணாக பிறந்ததால் அனுபவிக்கும் சில இடர்ப்பாடுகளைத்தான் சொல்ல முனைந்தேன்.
/ பெண் உடலை ஊடுருவும் கீழ் பார்வை கொண்ட ஆணாக பிறக்காமல் நல்ல பெண்ணாக பிறந்தமைக்கு நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு /
எல்லா ஆண்களுக்கும் இப்படியான கீழ் பார்வைதான் என்று நீங்கள் முடிவு செய்துகொண்டால் அது உங்களுடைய கருத்து. நான் எதுவும் சொல்வதற்கில்லை.
கீழ் பார்வை கொண்டவராக பிறக்காமல், நல்லவராக பிறந்ததற்கு நன்றி சொல்வோமென்றால் அது சரி. இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
நான் சொல்ல வந்தது, எல்லாப் பெண்களும் எதிர்நோக்குகிற இந்தப் பிரச்சினைகள் ஆண்களுக்கு இல்லை என்பதைத்தான். ( ரெண்டு வரியில எழுதினா ஆண் வசதியா இருக்கறான், பெண் கஷ்டப் படறா இப்படித்தான் எழுதியிருப்பேன் )
பெண்ணைப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று ஆணாக இருந்துகொண்டு தான் பாரதி பாடினான். ஒருவேளை பெண்ணாக பிறந்து பெண்வலிகளை உணர்ந்திருந்தானால் ஆணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று பாடியிருப்பானோ என்று யோசித்தேன். நான் இப்படி யோசித்தது கூட ஆணாய் இருந்துகொண்டுதான். உண்மையாக ஒரு பெண் எப்படி யோசிப்பார் என்பது எனக்கும் தெரியாது. எப்படி யோசிப்பார் என்பது கூட பெண் என்கிற ஒரே காரணிக்குள் அடங்குகிற விசயம் மாதிரியும் எனக்குத் தோன்றவில்லை.
உங்கள் கவிதையில் கடைசி இரு வரிகள் தவிர மற்ற அனைத்து வரிகளும் அருமை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஉங்கள் கவிததையை பெண் எழிடியது என்ற கோணத்தில் பார்த்தால் இது போன்ற காரணங்களுக்காக பெண்ணாய் பிறந்ததற்கு வருத்ப்படுவதாகக் கொள்ளலாம்.
ஆண் எழுதியது என்ற கோணத்தில் பார்த்தால் ஒரு ஆணாக இருப்பது வசதி. இது போல் தொல்லைகள் இல்லை என்பதாகக் கொள்ளலாம்.
ஆண்களின் வக்கிரம் அறியாதவனல்ல பாரதி. இது போன்ற தடைகளும் பெண் மேல் திணிக்கப்பட்ட சமுதாய க் கட்டுப்பாடுகளும் நன்கு அறிந்தததாலேயே அவன் பெண்ணே! தடை க் கற்களை தாண்டி சாதனை செய் என்று உற்சாகப் படுத்தி பெண்ணின் அருமைகள் புரிந்து
பெண்ணைப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாடினான்.
நீங்கள் சொல்லுவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது பெண்கள் சோர்ந்து போய் முடங்கிக் கொள்ளக் கூடாது என்பதே பாரதியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு இரக்கம் கொள்வதைவிட சிறிது தோழமையும் கண்ணிய ப் பார்வையுமே நன்மை தரும்.
ஆண்களின் வக்கிரப் பார்வைகளை சாடும் நீங்கள் கூடவே பெண்களை அதனை உதாசீி ன் ப்படுத்தி முன்னெறுங்கள் என்ற கூறுததை முன் வைத்தால் நன்றி.
Please forgive for the mistakes in my tamil. I am using english keyboard and firefox browser. So I could not do it better than this. I appreciate any suggestion to type better tamil using english keyboard and firefox browser.
/உங்கள் கவிதையில் கடைசி இரு வரிகள் தவிர மற்ற அனைத்து வரிகளும் அருமை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்./
ReplyDeleteநன்றிங்க :-)
/உங்கள் கவிததையை பெண் எழிடியது என்ற கோணத்தில் பார்த்தால் இது போன்ற காரணங்களுக்காக பெண்ணாய் பிறந்ததற்கு வருத்ப்படுவதாகக் கொள்ளலாம்.
ஆண் எழுதியது என்ற கோணத்தில் பார்த்தால் ஒரு ஆணாக இருப்பது வசதி. இது போல் தொல்லைகள் இல்லை என்பதாகக் கொள்ளலாம்./
ஆகா நான் ஆணாகப் பிறந்து விட்டேன். பெண்களைப் போல எனக்கு எந்த தொல்லைகளும் இல்லை என்று மகிழ்வதாகத்தான் இந்த கவிதையை உங்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்றால் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
/ஆண்களின் வக்கிரம் அறியாதவனல்ல பாரதி. இது போன்ற தடைகளும் பெண் மேல் திணிக்கப்பட்ட சமுதாய க் கட்டுப்பாடுகளும் நன்கு அறிந்தததாலேயே அவன் பெண்ணே! தடை க் கற்களை தாண்டி சாதனை செய் என்று உற்சாகப் படுத்தி பெண்ணின் அருமைகள் புரிந்து
பெண்ணைப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாடினான். /
பெண்ணாய்ப் பிறந்ததாலேயே பெண்ணை தாழ்த்துவது அல்லது உயர்த்துவது – இரண்டுமே தெவையில்லை. ஆணைப் போலவே அவளும் சக மனுசி என்று புரிந்துகொண்டால் போதும்.
/நீங்கள் சொல்லுவது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது பெண்கள் சோர்ந்து போய் முடங்கிக் கொள்ளக் கூடாது என்பதே பாரதியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு இரக்கம் கொள்வதைவிட சிறிது தோழமையும் கண்ணிய ப் பார்வையுமே நன்மை தரும்./
ஆண்களின் வக்கிரப் பார்வைகளை சாடும் நீங்கள் கூடவே பெண்களை அதனை உதாசீி ன் ப்படுத்தி முன்னெறுங்கள் என்ற கூறுததை முன் வைத்தால் நன்றி./
பெண்கள் முடங்கிப் போகக்கூடாது, வக்கிரப் பார்வைகளை உதாசீனப்படுத்தி முன்னேற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட ஆண்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதே தேவையெனக் கருதுகிறேன். பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை பெண்களேத் தீர்மானித்துக் கொள்வார்கள்.
/Please forgive for the mistakes in my tamil. I am using english keyboard and firefox browser. So I could not do it better than this. I appreciate any suggestion to type better tamil using english keyboard and firefox browser. /
உங்கள் தமிழில் எதுவும் பிழையிருக்கிற மாதிரி தெரியவில்லையே. நானும் English keyboard தான் பயன்படுத்துகிறேன். - தமிழ் தட்டச்சைப் பற்றி இங்கு பாருங்கள்
உங்களோடு இது குறித்து விவாதிக்கும் எண்ணம் இல்லாததலும், எனது வலைப்பதிவில் எழுத வேண்டிய விஷயங்கள் இருந்ததாலும் நான் பதில் எழுதவில்லை.
ReplyDeleteஉங்கள்கவிதையின் முடிவில்எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உங்கள் எண்ணம் நல்லதாக இருப்பதால் மேற்கொண்டு விவாதம் வேண்டாம்.
உங்களுக்கு நேரம் இருப்பின் எனது வலைப்பதிவு க்கு வருகை தரலாம் : http://mangaiival.blogspot.com/
/உங்களோடு இது குறித்து விவாதிக்கும் எண்ணம் இல்லாததலும், எனது வலைப்பதிவில் எழுத வேண்டிய விஷயங்கள் இருந்ததாலும் நான் பதில் எழுதவில்லை.
ReplyDeleteஉங்கள்கவிதையின் முடிவில்எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் உங்கள் எண்ணம் நல்லதாக இருப்பதால் மேற்கொண்டு விவாதம் வேண்டாம்./
.
/உங்களுக்கு நேரம் இருப்பின் எனது வலைப்பதிவு க்கு வருகை தரலாம் : http://mangaiival.blogspot.com//
கண்டிப்பாக வாசிக்கிறேன் மங்கை!