Thursday, March 08, 2007

கவித்துவமானவள்

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!

வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான்
அனுப்ப வேண்டும்…
சிறியதாக இருக்கிறதென்று
ஒதுக்கி விட்டால்?

காதலியைப் பற்றிய
கவிதை வேண்டுமாம்…
சிலையைப் பற்றியென்றால்
சில நொடியில் எழுதுவேன்…
ஓவியம் பற்றியென்றால்
ஒரு நொடி போதும்…
கவிதையைப் பற்றியே
கவிதை வேண்டுமென்றால் எப்படி?

சரி எழுதுவோம்
என்று உட்கார்ந்தால்
கவிதை வளர்கிறதோ இல்லையோ
உன் மேல் காதல் தான் வளர்கிறது!

உன் அழகைச் சொல்ல ஆரம்பித்தால்
பூக்களின் குறிப்பாகி விடுகிறது…
உன் குரலை வருணித்தால்
இசைக் குறிப்பாகி விடுகிறது…
பின் எப்படிதான்
உன்னைப் பற்றி கவிதை எழுதுவதாம்?

என்ன எழுதினாலும், உன்னுடைய

“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”

…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள் தோற்று விடுகின்றன!

இன்னும் போராடி கவிதையாக,
ஒரு கவிதையெழுதினாலும்
அதை விட கவித்துவமாக நீயே இருக்கிறாய்!

பேசாமல் இந்தக் கவிதைப் போட்டிக்கு
நானனுப்பும் கவிதையாக நீயே போகிறாயா?

வேண்டாம்… வேண்டாம்…
நீ போனால் அப்புறம் அழகிப் போட்டியென்று
நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்!

கவிதைப் போட்டியோ
அழகிப் போட்டியோ
நீ போனால் பரிசு நிச்சயம்…
கொஞ்சம் யோசித்து சொல்!

____________________________________________________

இது, நம்பிக்கைக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை.
போட்டியை நடத்திய நம்பிக்கை குழுமத்திற்கும், கவிதைகளைத் தரப்படுத்திய நடுவர்களுக்கும் நன்றி!!!
____________________________________________________
இந்தப் பதிவு என்னுடைய நூறாவது பதிவு :)

41 comments:

  1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...!!!

    பலநூறு பதிவு படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!!

    கவிதை போட்டியில் கெலிச்சதுக்கும் வாழ்த்துக்கள் !!!!

    இதே ஒரு வாழ்த்து கவிதைன்னு வச்சிக்கோயேன்...:))))

    ReplyDelete
  2. hi frnd,
    evalov azhaga eluthiringale..nenge yaraiyavathu kadhalikuringala?
    unge kavidhaiyellam nan copy panni en kadhalanuku anupugirein..thanks a lot...

    ReplyDelete
  3. //செந்தழல் ரவி said...
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...!!!

    பலநூறு பதிவு படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!!

    கவிதை போட்டியில் கெலிச்சதுக்கும் வாழ்த்துக்கள் !!!!

    இதே ஒரு வாழ்த்து கவிதைன்னு வச்சிக்கோயேன்...:))))//


    ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்டே

    சென்ஷி

    ReplyDelete
  4. ரவி,

    /நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...!!!

    பலநூறு பதிவு படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!!

    கவிதை போட்டியில் கெலிச்சதுக்கும் வாழ்த்துக்கள் !!!!

    இதே ஒரு வாழ்த்து கவிதைன்னு வச்சிக்கோயேன்...:))))

    வாழ்த்துக்கள்கள்களுக்கு நன்றிகள்கள்கள்!!!!! :-))))

    நீரும் கவிஞர்னு எனக்குத் தெரியாமப் போச்சே :(

    ReplyDelete
  5. //hi frnd,
    evalov azhaga eluthiringale..nenge yaraiyavathu kadhalikuringala?
    unge kavidhaiyellam nan copy panni en kadhalanuku anupugirein..thanks a lot...//

    ஆமாங்க … நான் கவிதையக் காதலிக்கிறேன்!!!
    (உடனே யார் அந்தக் கவிதைனு கேட்காதீங்க ;) )

    காதலனுக்கு அனுப்பறீங்களா? என்னோட கவிதையெல்லாமே காதலன் காதலியப் பத்தி எழுதின மாதிரியில்ல இருக்கும்?

    ReplyDelete
  6. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    இப்படி கவிதை எழுத யோசித்தே
    நூறு என்றால் கவிதை எழுத வந்து விட்டதுன்னு ஆயிரம் எழுதுவீங்களா நீங்க.

    ReplyDelete
  7. //ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்டே//

    உங்களுக்கும் நன்றீஈஈஈஈஈ சென்ஷி :)

    ReplyDelete
  8. 100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்!!

    இனி கவிதைப்பற்றி...
    //என்ன எழுதினாலும், உன்னுடைய
    “அச்சச்சோ!”,“ஊஹூம்…”,“ம்க்கும்!”,
    “ப்ச்..ப்ச்..”,“ஹேய்…”
    …க்களுக்கு முன்னால்
    என் கவிதைகள் தோற்று விடுகின்றன!//

    நல்ல வரிகள்!
    காதல் அழகானது. அதை நீங்கள் வெளிப்படுத்த எழுதும் விதமும் அருமை!

    ReplyDelete
  9. நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வளர்க.

    வெற்றிக்கு வாழ்த்துகள். இன்னும் பலகவிதை எழுதி முதற்பரிசுகள் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    சுடுகின்ற ஊரில் சுடாத கவிதைகளைச் சுடச்சுட கொடுக்கும் அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மாப்ஸ்...

    கூடிய சீக்கிரம் புத்தகம் ஒன்னை அனுப்பி வைக்கவும்...

    என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு உபயோகமா இருக்கும்...

    :-))

    ReplyDelete
  11. வாங்க முத்துலட்சுமி,

    //நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    இப்படி கவிதை எழுத யோசித்தே
    நூறு என்றால் கவிதை எழுத வந்து விட்டதுன்னு ஆயிரம் எழுதுவீங்களா நீங்க.//

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க…
    உண்மைய சொன்னா பயிற்சிக்காக இங்க எழுதி எழுதி உங்கள சோதிச்சுட்டு இருக்கேன்!!! :)

    ReplyDelete
  12. / 100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்!!//
    வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் தீக்ஷண்யா!!
    ஊக்கத்திற்கும் நன்றி!!

    //இனி கவிதைப்பற்றி...
    //என்ன எழுதினாலும், உன்னுடைய
    “அச்சச்சோ!”,“ஊஹூம்…”,“ம்க்கும்!”,
    “ப்ச்..ப்ச்..”,“ஹேய்…”
    …க்களுக்கு முன்னால்
    என் கவிதைகள் தோற்று விடுகின்றன!//

    நல்ல வரிகள்!
    காதல் அழகானது. அதை நீங்கள் வெளிப்படுத்த எழுதும் விதமும் அருமை! /
    காதலைப் பற்றி எழுதினாலே கவிதையும் காதலைப் போலவே அழகாகி விடுகிறது!!!

    ReplyDelete
  13. வாங்க ஜிரா ( ஹைதராபாத்திலும் என்னவிடாம தொரத்திட்டே வர்றீங்க…ம்ம்ம்…)

    //நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடியில்லாமல் வளர்க.//
    எனக்கு வாழ்த்து சொல்லிட்டு நீங்க உடம்ப பாத்துக்காம விட்டுட்டீங்களே… இது வெயில் பூமிங்க… நெறைய மோர் சாப்பிடுங்க!!!

    //வெற்றிக்கு வாழ்த்துகள். இன்னும் பலகவிதை எழுதி முதற்பரிசுகள் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    சுடுகின்ற ஊரில் சுடாத கவிதைகளைச் சுடச்சுட கொடுக்கும் அருட்பெருங்கோவிற்கு வாழ்த்துகள்.//

    வாழ்த்துகளுக்கும், வேண்டுதலுக்கும், நன்றி ஜிரா…
    சூடான ஊர்ல உங்க வாழ்த்தெல்லாம் ஜில்லுனு இருக்கு!!! :-)))

    ReplyDelete
  14. //வாழ்த்துக்கள் மாப்ஸ்...//
    நன்றிங்க மாம்ஸ் :-)

    //கூடிய சீக்கிரம் புத்தகம் ஒன்னை அனுப்பி வைக்கவும்...//
    தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்… கூடிய விரைவில் அனுப்புகிறேன்…

    //என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு உபயோகமா இருக்கும்...

    :-))//

    இதெல்லாம் டூ மச் சத்யா… நீங்க எல்லாம் சின்ன பசங்கன்னா அப்போ நான் என்ன குழந்தையா? ;-)

    ReplyDelete
  15. சென்ஷுரி அடிச்ச அருட்பெருங்கோ எப்போதும் அழகாக கவிதை வடித்து, அழியாத அன்புடன் வாழ வாழ்த்துக்கள்....

    இந்தக் கவிதைக்கு ஆறுதல் பரிசுதானா??

    ReplyDelete
  16. சதம் அடிச்சுட்டீங்களா. வாழ்த்துக்கள்.

    உங்க கவிதைகளை எல்லாம் புத்தகமா போட்டிங்கனா காதலிக்கறவங்களுக்கு எல்லாம் ஒரு டிக்ஷனரி கிடைச்ச மாதிரி இருக்கும்.

    மிக அருமையான கவிதை. அருமையான வரிகள்.

    ReplyDelete
  17. அன்பு அருள்...

    நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...

    மேலும் பல நூறு கவிதைகளையும்,
    பல நூறு வெற்றிகளையும் பெற என் வாழ்த்துக்கள்...

    கவிதையும் அருமை....ஜியின் கேள்வி தான் எனக்கும்!!!!

    ReplyDelete
  18. hi frnd,
    actually en kadhalanudaiye officele except few sites all other sites are blocked so naan unge kavidai yellam copy panni mail le anupuvein.athe padichutu he will tell "i think this person who wrote this also has an angel like u"

    ReplyDelete
  19. /சென்ஷுரி அடிச்ச அருட்பெருங்கோ எப்போதும் அழகாக கவிதை வடித்து, அழியாத அன்புடன் வாழ வாழ்த்துக்கள்..../
    ஜி, அழகான, அன்பான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
    /இந்தக் கவிதைக்கு ஆறுதல் பரிசுதானா??/
    50 கவிதைகளில் ஐந்தாவது இடம் என்று வைத்துக்கொள்ளுங்கள்!!!

    ReplyDelete
  20. //சதம் அடிச்சுட்டீங்களா. வாழ்த்துக்கள்.//
    ஆமாங்க தட்டுத் தடுமாறி நானும் 100 வந்துட்டேன் :-) வாழ்த்துக்களுக்கு நன்றிங்க நந்தா…

    //உங்க கவிதைகளை எல்லாம் புத்தகமா போட்டிங்கனா காதலிக்கறவங்களுக்கு எல்லாம் ஒரு டிக்ஷனரி கிடைச்ச மாதிரி இருக்கும்.//
    ஆகா, உங்க கவிதைகளே ஒரு காதல் ஊற்று மாதிரி சுரக்க ஆரம்பிச்சுடுச்சே… என்னதெல்லாம் எதுக்கு? :-)

    //மிக அருமையான கவிதை. அருமையான வரிகள்.//
    நன்றிங்க!!!

    ReplyDelete
  21. 100க்கு வாழ்த்துக்கள் காதல் முரசு கவிஞனே...!!!!

    ReplyDelete
  22. நல்லா எழுதறீங்க அருள்.உங்களுக்கு "காதல் கவிஞன்" அப்படின்னு பட்டம் குடுக்கலாம் ("கா"னாவுக்கு "க" கரெக்டா இருக்கு)

    ReplyDelete
  23. //hi frnd,
    actually en kadhalanudaiye officele except few sites all other sites are blocked so naan unge kavidai yellam copy panni mail le anupuvein.athe padichutu he will tell "i think this person who wrote this also has an angel like u"//

    என்னங்க ஏஞ்சல் கிடைச்சாதான் கவிதை எழுதனும்னு எதாவது இருக்கா? ;)

    ReplyDelete
  24. வாங்க தல…

    /100க்கு வாழ்த்துக்கள் காதல் முரசு கவிஞனே...!!!! /

    வாழ்த்துக்களோடு சேர்த்து எதுக்கு இப்படி ஓட்றீங்க? :-)
    எல்லாத்துக்கும் நன்றி தல!!!

    ReplyDelete
  25. / அன்பு அருள்...

    நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...

    மேலும் பல நூறு கவிதைகளையும்,
    பல நூறு வெற்றிகளையும் பெற என் வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோபி!!!

    //கவிதையும் அருமை....ஜியின் கேள்வி தான் எனக்கும்!!!!/
    நன்றி!!! பதில் சொல்லிட்டேனே :-)

    ReplyDelete
  26. வாங்க வ. வா ,

    /நல்லா எழுதறீங்க அருள்.உங்களுக்கு "காதல் கவிஞன்" அப்படின்னு பட்டம் குடுக்கலாம் ("கா"னாவுக்கு "க" கரெக்டா இருக்கு) /

    ஏற்கனவே தேவ் வந்து வழக்கம்போல ஓட்டிட்டுப் போயிட்டாரு அடுத்து நீங்களா? ;-) என்னமோப் போங்க… வந்ததுக்கும் கலாய்ச்சதுக்கும் ஒரு நன்றிய சொல்லிக்கிறேன் :)

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்!

    அன்புடன் குழுமத்தின் ஐவகைக் கவிதைப் போட்டி அறிவிப்பு பார்த்தீங்களா?
    http://priyan4u.blogspot.com/2007/03/2.html

    ReplyDelete
  28. //வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்களுக்கு நன்றி சேதுக்கரசி!!!

    //அன்புடன் குழுமத்தின் ஐவகைக் கவிதைப் போட்டி அறிவிப்பு பார்த்தீங்களா?
    http://priyan4u.blogspot.com/2007/03/2.html//
    ம்ம்ம்… மடலும் வந்ததுங்க… இன்னும் கால அவகாசம் இருக்கே நிதானமா யோசிச்சு எழுதறேன் :)))

    ReplyDelete
  29. 'காதல் நூறு'
    அடித்ததற்கு வாழ்த்துக்கள் அருள். கவித்துவமானவள் வழமை வழக்கம்போல !! :)))

    ReplyDelete
  30. சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் நிறைய புகழும் பரிசுகளும் குவிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. என்ன எழுதினாலும், உன்னுடைய

    “அச்சச்சோ!”
    “ஊஹூம்…”
    “ம்க்கும்!”
    “ப்ச்..ப்ச்..”
    “ஹேய்…”

    …க்களுக்கு முன்னால்
    என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
    very nice.... U r great b'coz ur words r great.... Congratulations...

    ReplyDelete
  32. வாங்க நவீன்,

    /'காதல் நூறு'
    அடித்ததற்கு வாழ்த்துக்கள் அருள். கவித்துவமானவள் வழமை வழக்கம்போல !! :)))/

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!!

    வழக்கம்போல என்று சொல்லிவிட்டு சிரிப்பான் போட்டிருக்கீங்களே என்ன உள்ளர்த்தம் ;-)

    ReplyDelete
  33. வாங்க பிரேம்
    //சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே. இன்னும் நிறைய புகழும் பரிசுகளும் குவிய வாழ்த்துக்கள்//
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா…

    ReplyDelete
  34. வாங்க சுபா,

    //என்ன எழுதினாலும், உன்னுடைய

    “அச்சச்சோ!”
    “ஊஹூம்…”
    “ம்க்கும்!”
    “ப்ச்..ப்ச்..”
    “ஹேய்…”

    …க்களுக்கு முன்னால்
    என் கவிதைகள் தோற்று விடுகின்றன!
    very nice.... U r great b'coz ur words r great.... Congratulations...//

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  35. it is very nice. congrats!
    subbu said

    ReplyDelete
  36. ரொம்ப அருமை உங்கள் கவிதைகள் அனைத்தும்

    சில நேரம் சிரிக்க வைக்கிறது.
    சில நேரம் சிந்திக்க வைக்கிறது.
    சில நேரம் சிலவற்றை நினைக்க வைக்கிறது.
    சில நேரம் பாதிக்கச் செய்கிறது.
    சில நேரம் அழவும் வைக்கிறது.

    கவிதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  37. /it is very nice. congrats!
    subbu said/

    ரொம்ப நன்றிங்க அஸ்வின்!!!

    ReplyDelete
  38. வாங்க சூர்யா,

    /ரொம்ப அருமை உங்கள் கவிதைகள் அனைத்தும்

    சில நேரம் சிரிக்க வைக்கிறது.
    சில நேரம் சிந்திக்க வைக்கிறது.
    சில நேரம் சிலவற்றை நினைக்க வைக்கிறது.
    சில நேரம் பாதிக்கச் செய்கிறது.
    சில நேரம் அழவும் வைக்கிறது./

    மிக்க நன்றி!!!

    /கவிதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்./
    இதுதான் எதுக்கு சொல்லியிருக்கீங்கன்னு எனக்குப் புரியல :-?

    ReplyDelete
  39. கவிதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்./

    இதுதான் எதுக்கு சொல்லியிருக்கீங்கன்னு எனக்குப் புரியல :-?

    நீங்கள் எழுதும் காதல் கவிதைகளை
    படிக்கும்போது
    வெறும் கற்பனைக் காதலாகத் தெரியவில்லை

    அதான் சொன்னேன்
    காதல் வலையில் விழுந்துவிடாதீர்கK
    கவிதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று

    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

    ReplyDelete
  40. //காதல் வலையில் விழுந்துவிடாதீர்கள்//

    என்ன அருட்பெருங்கோ.. நீங்க இன்னும் காதல் வலைல விழுகாத மாதிரில்ல மக்கள் நெனச்சிட்டிருக்காங்க? இது கொஞ்சம் ஓவராயிருக்கே ;-) (ஹாஹா)

    ReplyDelete
  41. ஏம்பா "லூசு"? (இப்படீன்னு நான் சொல்லல)உங்களை எல்லாம் யாருபா இப்படி சுதந்திரமா வெளிய திரியவிட்டது? கண்ணாபின்னான்னு கிறிக்கிட்டு கவிதைன்னு சொல்றீங்க! இது கொஞ்சம் கூட கவிதை மாதிரியே தெரியல. ஏமாந்தே போய்ட்டேன். இதுக்கு போய் பரிசு வேறையா? சிரிப்புதான் வருது!!!

    சுறுக்கமா நச்சுன்னு எழுதுவீங்களே, அத மாதிரி எழுதுங்க.

    நன்றி.

    ReplyDelete