Friday, March 09, 2007

இது காதல் பூக்கும் மாதம் – 210

இது காதல் பூக்கும் மாதம் – முதல் பகுதி

21. நெஞ்சொடு புலத்தல்


உனக்குத் துணையாக உன்மனம்…
உன்மனதுக்குத் துணையாக என்மனம்…
எனக்குத் துணையாக…
நான் மட்டும்!

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது.

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?


உயிரோடு இருப்பதா?
உன்னோடு இருப்பதா? என்றால்…
உன்னோடு வருகிறது என் இதயம்!

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.


என் கண்ணும் உன் கண்ணையேத் தேடுகிறது…
என் இதயமும் உன் இதயத்தையே நாடுகிறது…
என் அங்கங்களையெல்லாம் இழுத்துக் கொண்ட பின்
உயிரை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்?


கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?


நம் காதலைப் பற்றி
உன் மனம் என் மனதிடம் என்ன பேச்சு பேசுகிறது?
நீ தான் எதுவுமே பேசுவதில்லை.


இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.



உன் மௌனத்தில் இருந்துதான் பெறப்பட்டன
என் காதலுக்கானத் தாலாட்டும்…
ஒப்பாரியும்!

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.


உன்னோடு பேசாத நாட்களை
என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
அவை நான் வாழாத நாட்கள்!


தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.


என் காதலை உதறினாய்
நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
என் உயிர்.


நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.



நீ பிரிந்தபிறகும் கூட
உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!


எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.


உன்னைப் பிரிந்த நாட்களில்
எனக்குத் துணையாயிருக்கிறது
தனிமை!


துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?



உள்ளமே உன்பின்னால் போனபின்
உலகமே என் பின்னாலிருந்து
என்ன பயன்?


தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

18 comments:

  1. சூப்பருங்கோ...

    ReplyDelete
  2. நன்றிங்கோ சில்வண்டு

    ReplyDelete
  3. wow super ah irruku...and more thing en kadhalar ippadi oru angel kedachu koode oru kavidhai sonathu kidayathu...aana unge kaviyellam anupina "cha nan solle vanthethe evare solitaru da chellam" nu soliduvaru...

    ReplyDelete
  4. அருட்பெருங்கோ

    உங்களால் ஈர்க்கப்பட்டு இதோ இன்று நானும் எழுத தொடங்கிவிட்டேன்....
    என் blog ஐ பார்க்கவும்....
    http://nkaruna.blogspot.com/
    உங்கள் வடிவத்தையே பின்பற்றிவிட்டேன்....

    உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
    அன்புடன்
    கருணா

    ReplyDelete
  5. //wow super ah irruku...and more thing en kadhalar ippadi oru angel kedachu koode oru kavidhai sonathu kidayathu...aana unge kaviyellam anupina "cha nan solle vanthethe evare solitaru da chellam" nu soliduvaru... //

    ரசித்துப் படிப்பதற்கு மிக்க நன்றிங்க!!!

    (ஆனா எனக்கு ஒன்னு மட்டும் நல்லாத் தெரியுது… வலைப்பதியற பல பேரோட வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறீங்க :-)))))))) என்னையும் சேர்த்துதான் சொல்றேன் ;-) )

    ReplyDelete
  6. /அருட்பெருங்கோ

    உங்களால் ஈர்க்கப்பட்டு இதோ இன்று நானும் எழுத தொடங்கிவிட்டேன்....
    என் blog ஐ பார்க்கவும்....
    http://nkaruna.blogspot.com/
    உங்கள் வடிவத்தையே பின்பற்றிவிட்டேன்..../

    என்னால் ஈர்க்கப் பட்டு எழுத ஆரம்பிச்சுட்டீங்களா?
    சந்தோசமா தான் இருக்கு அதே சமயம் அந்த தகுதி இருக்கான்னு சந்தேகமாகவும் இருக்கு!!!

    //உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
    அன்புடன்
    கருணா//
    இதோ வாசிக்கப் போகிறேன் வாசிச்சுட்டு சொல்றேன்…

    ReplyDelete
  7. கருணா,
    உங்கல் கவிதைகள் வாசித்தேன்…நன்றாக இருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள்… (எனக்கும் எல்லாரும் இதையேதான் சொல்றாங்க :-) )
    உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டமிடும் வசதி இல்லாமல் இருக்கிறதே…
    சரி செய்யுங்க…

    ReplyDelete
  8. //என் காதலை உதறினாய்
    நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
    என் உயிர்//

    நச்!

    ReplyDelete
  9. yenne naan unge vayathu yerichale kotikirene...yeppadi??? puriyele nanba..

    ReplyDelete
  10. //உன்னோடு பேசாத நாட்களை
    என் நாட்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்
    அவை நான் வாழாத நாட்கள்!

    உன் மௌனத்தில் இருந்துதான் பெறப்பட்டன
    என் காதலுக்கானத் தாலாட்டும்…
    ஒப்பாரியும்!

    உள்ளமே உன்பின்னால் போனபின்
    உலகமே என் பின்னாலிருந்து
    என்ன பயன்?//

    அருமை நண்பரே :-)

    ReplyDelete
  11. கருணா, நீங்க நம்ம கல்லூரியா? வாங்க நாமளும் கூட்டம் சேர்ப்போம் ;-)

    ReplyDelete
  12. //என் காதலை உதறினாய்
    நீ உதறிய வேகத்தில் உதிர்ந்தது
    என் உயிர்//

    நச்!//

    என்னங்க நெறைய பின்னூட்டமிட்டு கை வலியெடுத்துடுச்சா? ;-)

    ReplyDelete
  13. //yenne naan unge vayathu yerichale kotikirene...yeppadi??? puriyele nanba..//

    அட நான் சும்மா தாங்க சொன்னேன்… சீரியசா எடுத்துக்காதீங்க…

    (எங்களுக்கெல்லாம் காதல் கவிதை எழுத மட்டும்தான தெரியுது காதலிக்கத் தெரியலையேனு சொன்னேன் :-) எனிவே.. உங்கக் காதலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!)

    ReplyDelete
  14. @பிரேம்

    வந்தமைக்கும், கூட்டம் சேர்க்க ஆள் பிடித்ததற்கும் வாழ்த்துக்கள் நண்பா… :-)))

    ReplyDelete
  15. romba nandiri nanba...yen thirumanathuku neege kandipa varanum.kandipa iru vetarin samathathode matum than yenge kalyanam nadakum.aana athuku innum natkal irruku..

    ReplyDelete
  16. "நீ பிரிந்தபிறகும் கூட
    உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
    என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
    என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!
    "

    நேசனையின் ஆழம் சொல்லும் கவிதை அழகுதான்!

    வாழ்த்துக்கள் அருள்.

    ReplyDelete
  17. //romba nandiri nanba...yen thirumanathuku neege kandipa varanum.kandipa iru vetarin samathathode matum than yenge kalyanam nadakum.aana athuku innum natkal irruku..//

    நம்பிக்கையோடு காத்திருங்கள்!!! நல்லதே நடக்கும்!!!

    ReplyDelete
  18. வாங்க சத்தியா,

    /"நீ பிரிந்தபிறகும் கூட
    உன்னை வெறுக்கத் தோன்றவில்லை என் இதயத்துக்கு…
    என் இதயம் நேசித்தவளென்பதால் மட்டுமல்ல
    என் இதயத்தை நேசித்தவளென்பதாலும்!
    "

    நேசனையின் ஆழம் சொல்லும் கவிதை அழகுதான்!

    வாழ்த்துக்கள் அருள். /

    ம்ம்ம் நேசிப்பதும் நேசிக்கப் படுவதும் எவ்வளவு இனிமையோ அதைவிட பலமடங்கு கொடுமையானதில்லையா அதை இழப்பது?
    வாழ்த்துக்களுக்கு நன்றி சத்தியா!!!

    ReplyDelete