பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்.
உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.
வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது!
மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!
ஊரெல்லாம் நடக்கிறது
மஞ்சு விரட்டு.
எனக்குள் நடக்கிறது
மயில் விரட்டு!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
//வா நட்பை விட்டு
ReplyDeleteகாதலைத் தொடங்குவோம்.//
மன்னிக்கவும்! இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை....
//உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.
வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது!//
ரசித்த வரிகள்!!
// பழையனக் கழித்துப்
ReplyDeleteபுதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம். //
நல்லாயிருக்கு. இத வெட்டிப்பயலுக்கும் கண்ணபிரான் ரவிசங்கருக்கும் காட்டுங்களேன். :-)
// உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.//
அது என் பொங்கலானது
// வாசலில் இருப்பது
நீ போட்டக் கோலமா?
வாசனையோடு இருக்கிறது! //
இதென்ன கொங்குதேர் வாழ்க்கைக் கதை மாதிரியா
// மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு! //
கொஞ்சம் மாநிறம்னா...ஏண்டா என்னய கருப்புன்னு சொல்லிக் காட்டுறயான்னு கோவிச்சிக்கப்போறாங்க. ஆனா உன்னோட விஷயத்துல அப்படி நடக்காது. :-)
////உன் விரல் பட்டு
ReplyDeleteவெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது.//////
வாஆஆஆஆஆஅவ்வ்வ்வ்...
இனிய பொங்கல் வாழ்த்து.
ReplyDeletehttp://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html
வாங்க கார்த்தி,
ReplyDelete//வா நட்பை விட்டு காதலைத் தொடங்குவோம்.// மன்னிக்கவும்! இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை....//
ஏன்னு சொல்லுங்க...
//உன் விரல் பட்டு வெண்பொங்கலெல்லாம் பொன்பொங்கலானது. வாசலில் இருப்பது நீ போட்டக் கோலமா? வாசனையோடு இருக்கிறது!// ரசித்த வரிகள்!! //
வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி கார்த்தி!!
கவிதை நல்லயிருக்கு ....
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்
வாங்க ராகவன் அண்ணா
ReplyDelete/நல்லாயிருக்கு. இத வெட்டிப்பயலுக்கும் கண்ணபிரான் ரவிசங்கருக்கும் காட்டுங்களேன். :-)/
கண்டிப்பா!!!
/கொஞ்சம் மாநிறம்னா...ஏண்டா என்னய கருப்புன்னு சொல்லிக் காட்டுறயான்னு கோவிச்சிக்கப்போறாங்க. ஆனா உன்னோட விஷயத்துல அப்படி நடக்காது. :-)/
எனக்கேத் தெரியாத பல விசயங்கள சொல்றிங்க... ம்ம்ம்...
சரி அண்ணிங்க எல்லாம் எப்படி இருக்காங்க?
வாங்க எரிதழல் ரவி,
ReplyDelete/வாஆஆஆஆஆஅவ்வ்வ்வ்.../
பொன்பொங்கல்் னு சொன்னதுக்காக இப்படியா? ;)
வாங்க விஷ்வா,
ReplyDelete/ இனிய பொங்கல் வாழ்த்து./
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
////வா நட்பை விட்டு
ReplyDeleteகாதலைத் தொடங்குவோம்.////
//மன்னிக்கவும்! இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை....//(k4karthik)
எனக்கும் தான். நட்பிலிருந்து காதல் பிறப்பது மிகவும் சிறந்த ஒன்று தான். ஆனால் நட்பை விட்டு என்றால் அங்கே எஞ்சுவது காமம் மட்டுமே.
அருமை! அருமை !
ReplyDeleteஅருட்பெருங்கோ அருமை !
ஊரெல்லாம் புதுப்பொங்கல் அமராவதி ஆத்தங்கரையில் புதுக்கவிதை !
வாங்க கோபி,
ReplyDelete/ கவிதை நல்லயிருக்கு ....
பொங்கல் வாழ்த்துக்கள்/
நன்றி... உங்களுக்கும் இனியப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
அருமை. பல முறை படித்து இரசித்தேன்.
ReplyDeleteவாங்க சேதுக்கரசி,
ReplyDelete/எனக்கும் தான். நட்பிலிருந்து காதல் பிறப்பது மிகவும் சிறந்த ஒன்று தான். ஆனால் நட்பை விட்டு என்றால் அங்கே எஞ்சுவது காமம் மட்டுமே./
நட்பிலிருந்துதான் காதல் பிறக்க முடியும்!
“வா நட்பை விட்டு காதலைத் தொடங்குவோம்” என்று நான் சொன்னது “நண்பர்களாயிருக்கிறோம் வா காதலர்களாவோம்” என்கிற பொருளில்தான்…
மற்றபடி நட்பு , காதல் என்று என்ன பெயர் வைத்துக்கொண்டாலும் உணர்வு அதேதான்.
வாங்க கோவி,
ReplyDelete/ அருமை! அருமை !
அருட்பெருங்கோ அருமை !
ஊரெல்லாம் புதுப்பொங்கல் அமராவதி ஆத்தங்கரையில் புதுக்கவிதை !/
ஊருக்குதான் போகமுடியலையே... அதான் கவிதைல பொங்கல் வச்சாச்சு :))
அடப்பாவிகளா, அடப்பாவிகளா.... பொங்கலும் கரும்பும் சாப்பிட்டு விட்டு டி.விய பாக்காம இப்படி காதல் கவிதைகள் சொல்லிக்கிட்டு திரியறவங்கள என்ன செய்யலாம்?
ReplyDelete//உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது//
நல்லா இருக்குங்கோ.......
வாங்க வெற்றி,
ReplyDelete/அருமை. பல முறை படித்து இரசித்தேன். /
நன்றி நன்றி நன்றி :)))
எப்படி பொங்கலிலும் காதலை புகுத்திறீங்க....
ReplyDeleteநீவீர் ஒரு காதல் கிறுக்கன் என்று பட்டமளித்து இந்தப் பேரவை சிறப்பிக்கிறது....
வாங்க பிரேம்,
ReplyDelete/அடப்பாவிகளா, அடப்பாவிகளா.... பொங்கலும் கரும்பும் சாப்பிட்டு விட்டு டி.விய பாக்காம இப்படி காதல் கவிதைகள் சொல்லிக்கிட்டு திரியறவங்கள என்ன செய்யலாம்?/
என்னப் பண்றது? எனக்கும் லீவ் கிடைச்சிருந்தா ஊர்ல போய்க் கொண்டாடியிருக்கலாம்தான்… ம்ஹும்…
///உன் விரல் பட்டு
வெண்பொங்கலெல்லாம்
பொன்பொங்கலானது//
நல்லா இருக்குங்கோ......./
நன்றிங்கோ!!!
வாங்க ஜி,
ReplyDelete//எப்படி பொங்கலிலும் காதலை புகுத்திறீங்க....//
காதல்ல கொஞ்சம் பொங்கலப் புகுத்திப் பார்த்தேன் :))
//நீவீர் ஒரு காதல் கிறுக்கன் என்று பட்டமளித்து இந்தப் பேரவை சிறப்பிக்கிறது....//
பட்டத்தில் பாதி உண்மைதான் ஜி :)))
//“வா நட்பை விட்டு காதலைத் தொடங்குவோம்” என்று நான் சொன்னது “நண்பர்களாயிருக்கிறோம் வா காதலர்களாவோம்” என்கிற பொருளில்தான்…//
ReplyDeleteஅப்பட்டின்னா சரி :-)
//நட்பிலிருந்துதான் காதல் பிறக்க முடியும்!//
இதுல தெளிவா இருக்கீங்களே.. அதுக்கே உங்களுக்கு ஒரு ஓ போடணும். சிலபேர் இருக்காங்களே.. அதெப்படி நட்பு காதலா மாறும்னு சண்டைக்கு வந்துடுவாங்க :-)
"பழையனக் கழித்துப்
ReplyDeleteபுதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்."...
ம்... காதல் பொங்கல் பொங்கி வழிகின்றன. கவிதைகள் நன்று.
"புதியனத் தொடங்குதல் போகியாம்."
அருள்!... இதில் வரும் "போகியாம்"
என்பது சரியா? ஓர் தடவை பாருங்களேன்.
/அப்பட்டின்னா சரி :-)/
ReplyDeleteஅப்பட்டி? :-(
/
//நட்பிலிருந்துதான் காதல் பிறக்க முடியும்!//
இதுல தெளிவா இருக்கீங்களே.. அதுக்கே உங்களுக்கு ஒரு ஓ போடணும். சிலபேர் இருக்காங்களே.. அதெப்படி நட்பு காதலா மாறும்னு சண்டைக்கு வந்துடுவாங்க :-)/
பின்ன என்னங்க... பார்த்தவுடனேவா காதலிக்க முடியும்... நண்பர்களா இருக்கிற யாரோ ஒருத்தர் மேல தான் காதல் வரும்!!!
(அப்படிங்கறது என்னோட கருத்து - யாராவது சண்டைக்கு வந்துடப் போறாங்க :-) )
/சத்தியா said...
ReplyDelete"பழையனக் கழித்துப்
புதியனத் தொடங்குதல் போகியாம்.
வா நட்பை விட்டு
காதலைத் தொடங்குவோம்."...
ம்... காதல் பொங்கல் பொங்கி வழிகின்றன. கவிதைகள் நன்று./
நன்றி சத்தியா!
/ "புதியனத் தொடங்குதல் போகியாம்."
அருள்!... இதில் வரும் "போகியாம்"
என்பது சரியா? ஓர் தடவை பாருங்களேன்./
எனக்கு சரியென்றுதான் படுகிறது... தவறிருந்தால் சொல்லுங்கள்... திருத்திவிடுகிறேன்!!!
//ஏன்னு சொல்லுங்க...//
ReplyDeleteகாதலுக்கு அடிபடை நட்பே..
ஒரு காதலின் உள்ளே நட்பு அடங்கும்.. நட்பின் மற்றொரு பரிமாணமே காதல்.. ஆகையால்., நட்பை பிரித்து காதல் செய்யமுடியாது...
இது என்னுடய தனிப்பட்ட கருத்து...
தங்களுக்கு ஒத்துபோகும் என்று நம்புகிறென்...!!??
புதியனத் தொடங்குதல் போகியாம்."
ReplyDeleteஅருள்!... இதில் வரும் "போகியாம்"
என்பது சரியா? ஓர் தடவை பாருங்களேன்./
எனக்கு சரியென்றுதான் படுகிறது... தவறிருந்தால் சொல்லுங்கள்... திருத்திவிடுகிறேன்!!! "...
தவறு என்று சொல்லவில்லை அருள்.
"போகியாம்" " என்ற சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நான் நினைத்தேன் "போகிறாயாம்" என்பதுதான் "போகியாம்" என்று எழுதப்பட்டு விட்டதோ என்று.
தவறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் அருள். "போகியாம்" என்பதன் அர்த்தம் என்ன அருள்?
//அப்பட்டி? :-(//
ReplyDeleteதீப்பெட்டி கருப்பட்டி எல்லாம் இல்ல, வெறும் தட்டச்சுப்பிழை தான் :-) ஒரு "ட்" கூடிப்போச்சு.
அருமை அருட்பெருங்கோ...பொங்கல் வந்தாலும் காதல் , தீபாவளி வந்தாலும் காதல்..ம் எல்லாம் காதல் படுத்தும்பாடு
ReplyDeleteகாதல் கவிஞரே! கலக்கறீங்க...
ReplyDeleteஇந்த பக்கம் வந்தாலே காதல் காத்து... இல்லல்ல... காதல் புயல் பலமா அடிக்குது. அல்லாரும் பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.
//சரி அண்ணிங்க எல்லாம் எப்படி இருக்காங்க?
//
ஜி.ரா சொல்லவே இல்ல பாத்திங்களா... உங்களோட டூக்கா.
சரி எத்தனை அண்ணிங்கன்னு மட்டும் சொல்லிடுங்க...
///ஏன்னு சொல்லுங்க...// காதலுக்கு அடிபடை நட்பே.. ஒரு காதலின் உள்ளே நட்பு அடங்கும்.. நட்பின் மற்றொரு பரிமாணமே காதல்.. ஆகையால்., நட்பை பிரித்து காதல் செய்யமுடியாது... இது என்னுடய தனிப்பட்ட கருத்து... தங்களுக்கு ஒத்துபோகும் என்று நம்புகிறென்...!!?? /
ReplyDeleteகார்த்திக், சேதுக்கரசிக்கு சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்கிறேன்…
“நட்பிலிருந்துதான் காதல் பிறக்க முடியும்!
“வா நட்பை விட்டு காதலைத் தொடங்குவோம்” என்று நான் சொன்னது “நண்பர்களாயிருக்கிறோம் வா காதலர்களாவோம்” என்கிற பொருளில்தான்…
மற்றபடி நட்பு , காதல் என்று என்ன பெயர் வைத்துக்கொண்டாலும் உணர்வு அதேதான்.”
வாங்க சத்தியா...
ReplyDelete/தவறு என்று சொல்லவில்லை அருள். "போகியாம்" " என்ற சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நான் நினைத்தேன் "போகிறாயாம்" என்பதுதான் "போகியாம்" என்று எழுதப்பட்டு விட்டதோ என்று. தவறுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் அருள். "போகியாம்" என்பதன் அர்த்தம் என்ன அருள்?/
பொங்கலுக்கு முந்தையநாள், பழையனவற்றைக் கழிக்கும் “போகி”த்திருநாள்தானே?
“இயற்கைக்கு நன்றி சொல்வது பொங்கலாம்்ம்ம்்ம்ம்ம்ம்ம்்” என்று சொல்வதுபோல் “பழையனக் கழித்தல் போகியாம்்” என்று சொல்லியிருக்கிறேன்…
வாங்க சேதுக்கரசி,
ReplyDelete/ //அப்பட்டி? :-(//
தீப்பெட்டி கருப்பட்டி எல்லாம் இல்ல, வெறும் தட்டச்சுப்பிழை தான் :-) ஒரு "ட்" கூடிப்போச்சு./
சரிங்க..சரிங்க..
வாங்க ப்ரியன்...
ReplyDelete// அருமை அருட்பெருங்கோ...பொங்கல் வந்தாலும் காதல் , தீபாவளி வந்தாலும் காதல்..ம் எல்லாம் காதல் படுத்தும்பாடு//
Find காதல்Replace கவிதை! :))
கவிதை அருமையாக இருக்கிறது அருட்பெருங்கோ!
ReplyDeleteபொங்கல் வாழ்த்து அனுப்பும்போது கூடவே காதல் கடிதமாகவும் அனுப்பலாம். ஒரே கவிதையில் இரண்டு மாங்காய்!
//மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!
//
நச்சென்ற வரிகள்.
"வானவில்லுக்கு
வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க"
என்று நானெழுதிய கவிதையை நினைவு கூர்ந்தேன். இவ்வரிகளில்!
வாங்க இம்சையரசி,
ReplyDelete/காதல் கவிஞரே! கலக்கறீங்க...
இந்த பக்கம் வந்தாலே காதல் காத்து... இல்லல்ல... காதல் புயல் பலமா அடிக்குது. அல்லாரும் பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க./
வானிலை அறிக்கைக்கு நன்றிங்க!!!
//சரி அண்ணிங்க எல்லாம் எப்படி இருக்காங்க?
//
ஜி.ரா சொல்லவே இல்ல பாத்திங்களா... உங்களோட டூக்கா.
சரி எத்தனை அண்ணிங்கன்னு மட்டும் சொல்லிடுங்க.../
அவர் எண்ணிக்கிட்டு இருக்கார் எண்ணி முடிச்சதும் சொல்லிடுவார் :-))
/நாமக்கல் சிபி said...
ReplyDeleteகவிதை அருமையாக இருக்கிறது அருட்பெருங்கோ!
பொங்கல் வாழ்த்து அனுப்பும்போது கூடவே காதல் கடிதமாகவும் அனுப்பலாம். ஒரே கவிதையில் இரண்டு மாங்காய்!/
நன்றி சிபி,
இதக் காதல் கடிதம்னு சொன்னா யாராவது அடிக்க வந்துடப் போறாங்க :-)
//மாட்டுக் கொம்புக்கெல்லாம்
வண்ணம் தீட்ட வேண்டும்.
கொஞ்சம் கன்னத்தைக் காட்டு!
//
நச்சென்ற வரிகள்.
"வானவில்லுக்கு
வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க"
என்று நானெழுதிய கவிதையை நினைவு கூர்ந்தேன். இவ்வரிகளில்! /
ம்ம்ம்... நானும்கூட பழைய பதிவொன்றில் வானவில்லுக்கு ஒரு விளக்கம் கொடுத்துப் பார்த்தேன்...
இருங்க உங்க பழையக் கவிதையெல்லாம் வாசிச்சுட்டு வர்றேன்!!
//நல்லாயிருக்கு. இத வெட்டிப்பயலுக்கும் கண்ணபிரான் ரவிசங்கருக்கும் காட்டுங்களேன். :-)//
ReplyDeleteஅப்படி நாங்க மட்டும் என்ன ஸ்பெஷல்...
நட்பு காதல் ஆகலாம்... ஆனால் எல்லா நட்பும் காதல் ஆக வேண்டிய அவசியமில்லை...
//ஆனா உன்னோட விஷயத்துல அப்படி நடக்காது. :-)//
ஆஹா... அதனாலதான் கவிதையா கொட்டுதா??? ;)
//சரி அண்ணிங்க எல்லாம் எப்படி இருக்காங்க?//
சொல்லவே இல்லை ;)
/வெட்டிப்பயல் said...
ReplyDelete//நல்லாயிருக்கு. இத வெட்டிப்பயலுக்கும் கண்ணபிரான் ரவிசங்கருக்கும் காட்டுங்களேன். :-)//
அப்படி நாங்க மட்டும் என்ன ஸ்பெஷல்...
நட்பு காதல் ஆகலாம்... ஆனால் எல்லா நட்பும் காதல் ஆக வேண்டிய அவசியமில்லை...//
நட்புதான் காதலாக முடியும்!!! எல்லா நட்புமே காதலாக வேண்டுமென்று நான் சொல்லவில்லையே!
//ஆனா உன்னோட விஷயத்துல அப்படி நடக்காது. :-)//
ஆஹா... அதனாலதான் கவிதையா கொட்டுதா??? ;)//
காதல் வந்தா மட்டும்தான் கவிதை வரணும்னு எதாவது சட்டம் இருக்கா?
//சரி அண்ணிங்க எல்லாம் எப்படி இருக்காங்க?//
சொல்லவே இல்லை ;) //
ஓவர் டூ ஜிரா...