Thursday, January 04, 2007

5..4..3..2..1..0


‘எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
உன் ஒரு விழிநீரை நானும்,
மறு விழிநீரை என் காதலும்,
துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு!



நொடிகளெங்கும் உன் நினைவுப்பூக்கள்.
சுற்றி சுற்றி வருகிறதென் இதயமுள்.
என் வாழ்க்கைக் கடிகாரமும்
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது!



உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்…
திசையெங்கும் நீ!



பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!



நான், நீயிலி*!



“ “

( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

*நீயிலி – நீ இல்லாதவன்.
(பெயரிலி – பெயர் இல்லாதவர் போல!)

23 comments:

  1. "எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
    என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.
    உன் ஒரு விழிநீரை நானும்,
    மறு விழிநீரை என் காதலும்,
    துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு! "...

    அன்பு, பாசம், காதல், நேசம் இவைகளின் முடிவுரை எப்போதும் சோகம் தானா?

    "பழகப் பழக பாலும் புளிக்குமாம்…
    விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!"...

    காதலுக்கு மட்டும் இது விதிவிலக்கு இல்லையா அருள்?

    ReplyDelete
  2. //" "
    ( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )//

    அட்றா... அட்றா...

    ReplyDelete
  3. / அன்பு, பாசம், காதல், நேசம் இவைகளின் முடிவுரை எப்போதும் சோகம் தானா?/
    அது அவரவர் அனுபவத்தையும் பொறுத்ததுதானே? பொதுவாய் நாம் எப்படி சொல்லிட முடியும்?
    ஆனால் சோகமாய் முடிப்பதா சுகமாய் முடிப்பதா என்பது நம் கையிலும் இருக்கிறது என்று நம்புபவன் நான்!
    / காதலுக்கு மட்டும் இது விதிவிலக்கு இல்லையா அருள்?/
    நிஜமாகவே தெரியவில்லை சத்தியா!!!
    கணம் தோறும் மாறுமோ?

    வருகைக்கு மிக்க நன்றி சத்தியா...

    ReplyDelete
  4. சோகம் சங்கீதமாய் கவிதையில்...

    ReplyDelete
  5. வணக்கம் அருட்பெருங்கோ..

    நண்பர் தேவின் பதிவில் எதேச்சையாக உங்களை பர்த்ததும், உங்கள் வலையையும் சுற்றி பார்க்கலாம்ன்னு வந்தேன். எத்தனை கட்டுரைகள்.. எத்தனை கதைகள். அதிலும் உங்கள் ப்லஸ் 2 கதை அருமை. வாழ்த்துக்கள். நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நீயிலி...

    அருமையான சிந்தனை... நானும் பலதடவை காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது...

    ReplyDelete
  7. பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங்க அருள்! அதுவும் கவிதைக்கு அழகு சேர்க்கும் அந்த ஜெனி டாப்!

    கலக்குங்க!

    ReplyDelete
  8. //காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது... //

    இதெல்லாம் வராம இரூக்கறதே எவ்ளோ பெரிய வரம் தெரியுமா ஜி!

    ReplyDelete
  9. கார்த்திக்,

    /அட்றா... அட்றா.../

    இது எதுக்குனு புரியலையே!!!

    ReplyDelete
  10. வாங்க தேவ்,

    / சோகம் சங்கீதமாய் கவிதையில்... /

    அழுகையும் ஓர் இசை தானே?

    ReplyDelete
  11. வாங்க மை ஃப்ரெண்ட்,

    /வணக்கம் அருட்பெருங்கோ..

    நண்பர் தேவின் பதிவில் எதேச்சையாக உங்களை பர்த்ததும், உங்கள் வலையையும் சுற்றி பார்க்கலாம்ன்னு வந்தேன். எத்தனை கட்டுரைகள்.. எத்தனை கதைகள். அதிலும் உங்கள் ப்லஸ் 2 கதை அருமை. வாழ்த்துக்கள். நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்./

    தேவுக்கு நன்றீ :)

    கட்டுரைகளா? நான் கட்டுரை மாதிரி எதுவும் எழுதலையே!!!

    வாழ்த்துக்களுக்கு நன்றீ!!!

    ReplyDelete
  12. டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்குத்து எதுவுமில்லை.

    //உன்னிடமிருந்து என் மனதை
    திசை திருப்பினேன்…
    திசையெங்கும் நீ!//

    எனக்கும் இந்த வரிகள் பிடிச்சுது அருட்பெருங்கோ.

    ReplyDelete
  13. வாங்க சேதுக்கரசி,

    / டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்குத்து எதுவுமில்லை.

    //உன்னிடமிருந்து என் மனதை
    திசை திருப்பினேன்…
    திசையெங்கும் நீ!//

    எனக்கும் இந்த வரிகள் பிடிச்சுது அருட்பெருங்கோ./

    ம்ம்ம்... உங்களுக்கும் பிடிச்சதுல மகிழ்ச்சிதான்...

    பை தி வே, உள்குத்து இருந்தாதான் டிஸ்கி போடனும் அப்படிங்கறது பதிவுலகத்துல எழுதப்படாத சட்டம்!!!

    ReplyDelete
  14. அகத்தியன்,

    / உன்னிடமிருந்து என் மனதை
    திசை திருப்பினேன்…
    திசையெங்கும் நீ!

    ம்..வாழ்த்துக்கள்/

    நன்றிப்பா ரசிச்சு ரசிச்சுப் படிக்கிறதுக்கு!!!

    ReplyDelete
  15. வாங்க ஜி,

    / நீயிலி...

    அருமையான சிந்தனை... நானும் பலதடவை காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது.../

    நன்றி...

    கற்பனைல ஒரு காதலிய உருவாக்குங்க அப்புறம் தன்னால வரும்!!!

    ReplyDelete
  16. //பை தி வே, உள்குத்து இருந்தாதான் டிஸ்கி போடனும் அப்படிங்கறது பதிவுலகத்துல எழுதப்படாத சட்டம்!!!//

    ஆகா! இப்ப இறுதியா, என்னான்றீங்க? :-D

    ReplyDelete
  17. வாங்க தம்பி,

    / பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங்க அருள்! அதுவும் கவிதைக்கு அழகு சேர்க்கும் அந்த ஜெனி டாப்!

    கலக்குங்க!/

    இப்ப பனிப்போர் மாத்திட்டு அடுத்தது போட்டாச்சு பாத்தீங்களா? இதுலையும் ஜெனிதான் :)))

    ReplyDelete
  18. /
    இதெல்லாம் வராம இரூக்கறதே எவ்ளோ பெரிய வரம் தெரியுமா ஜி!/

    என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க?
    காதல ரசிக்க்காதவங்க கூட இருப்பாங்க... காதல் கவிதைய ரசிக்காதவங்க கூட இருப்பாங்களா என்ன?

    தெரியாமதான் கேட்கறேன் :-?

    ReplyDelete
  19. /ஆகா! இப்ப இறுதியா, என்னான்றீங்க? :-D/

    இறுதியா ... " "

    ReplyDelete
  20. என்ன அருள், இப்படி சோகமான கவிதைகளா கொடுத்துருக்கீங்க? இருப்பினும் எல்லாமே நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாங்க பிரேம்,

    / என்ன அருள், இப்படி சோகமான கவிதைகளா கொடுத்துருக்கீங்க? இருப்பினும் எல்லாமே நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்/

    ஏன் சோகமும் வாழ்க்கையோட ஒரு பகுதிதான? அதையும் சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன் அவ்வளவுதான்....

    ReplyDelete
  22. //இப்ப பனிப்போர் மாத்திட்டு அடுத்தது போட்டாச்சு பாத்தீங்களா? இதுலையும் ஜெனிதான் :)))//

    ஒரு படத்தை வச்சிகிட்டே அந்த படத்தை விட அழகா கவிதை எழுதறிங்களே எப்படிங்க அருள்?

    இதைதான் கை வந்த கலை னு சொல்றாங்களோ!

    ReplyDelete
  23. வாங்க தம்பி,

    /ஒரு படத்தை வச்சிகிட்டே அந்த படத்தை விட அழகா கவிதை எழுதறிங்களே எப்படிங்க அருள்?/

    ஜெனி அவ்வளவு மோசமாவா இருக்காங்க? :)

    /இதைதான் கை வந்த கலை னு சொல்றாங்களோ!/

    MS Paint ்வவந்த கலை. :))

    ReplyDelete