நான் :
உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.
உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.
இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!
பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!
தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..
உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…
திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?
என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!
அவள் :
போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!
அவள் :
போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
//உன்
ReplyDeleteவிழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.// :))
தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : ))
விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!
/தங்கள் பக்கமெல்லாம் காதல் வாசம் ! அருள் எனக்கொரு சந்தேகம். நீங்க வாசம் செய்தது கரூரிலா இல்லை காதலூரிலா?? : )) /
ReplyDeleteஆஹா கேட்பது யார் காதல் கவி நவீன் தானே?
/விழிமொழியினை அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் !!/
மொழி பெயர்ப்பு மட்டுமே என்னுடையது.. அழகாய் இருந்தால் அதற்குக் காரணம் விழியும் விழியின் மொழியும்!!
அன்புடன்,
அருள்.
"போதும்…போதும்…
ReplyDeleteகவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!.....
அருமை!......
//திறந்தே இருப்பதால்தான்
ReplyDeleteஎன்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி//
அது எப்படி?
அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!!
/*பார்த்து பார்த்து
ReplyDeleteசெய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!*/
/*தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..*/
/*இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?*/
இவை அழகு அருள்!
/*உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!*/
இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்.
/*
போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!*/
பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்...
நன்றி சத்தியா...
ReplyDeleteவழமை போன்ற பாராட்டுக்கு!!
தேவ்,
ReplyDeleteவருகைக்கும் தருகைக்கும் நன்றி!
/அருள், காதலைச் சொல்லும் பதிவுகளுக்கு கருப்பு உடை ஏனோ? மாற்றலாமே!!! /
ம்ம்ம்....மாற்றுகிறேன் விரைவில்.... :))
ப்ரியன்,
ReplyDeleteவிரிவான ரசிப்புக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்!!
/இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்./
:))
/பெண்கள் போதும் போதும் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தமாம்... /
நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!!
/*நான் பெண்களுடன் அதிகம் பழகியதில்லை ப்ரியன்! உங்களைப் போலத் தெரிந்தவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!! */
ReplyDeleteநானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ...எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க :)
/நானே அர்த்தமாம் னு தான் சொல்லியிருக்கேன் அர்த்தம் னு சொல்லலே,சோ...எனக்கும் பெண்களுடன் அதிக பழக்கமில்லை எனக் கொள்க :)
ReplyDelete/
புரிகிறது ப்ரியன்...
பெண்ணிடம் னு சொல்லியிருக்கனுமோ?? மன்னிச்சுக்குங்க :))
// கருவூரிலா.....காதலூரிலா...//
ReplyDeleteஎன்ன கேள்வி இது?
காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
வர முடியும்!
சிவஞானம் ஐயா,
ReplyDelete//என்ன கேள்வி இது?
காதலூரில் இருந்துதானே கருவூருக்கு
வர முடியும்!//
காதல் இன்னும் "கரு"வூருக்கே வரவில்லை...அதற்குள் சிலேடையா??? ;)))
ஆனாலும் ரசித்தேன்!!!
yal ahathian,
ReplyDeleteவந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள்!!!
கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று
ReplyDelete/ கவிதை அருமை. எளிமையான சொற்கள் = எளிதாகப் புரிகிறது - நன்று/
ReplyDeleteநன்றிங்க சீனா