என்னையும் இந்த ஆறு விளையாட்டுக்கு அழைத்த நவீன் பிரகாஷ் க்கு நன்றி! நான் இரசித்த, இரசிக்கும் கதை, கவிதை, இசை, திரைப்படம், மறக்க முடியாத நிகழ்வுகள், மனிதர்கள் என்று எவ்வளவோ எழுதத் தோன்றினாலும் இப்போதைக்கு இந்த ஆறு கவிதைகளை (வாக்கியங்களை மடக்கிப் போட்டு, வியப்புக் குறியெல்லாம் போட்டிருக்கிறேன் – நம்புங்க , கவிதைதான்! ) மட்டும் எழுதி விட்டுப் போகிறேன். பின்னொரு நாளில் தனித் தனிப் பதிவுகளாய் அவற்றைப் பதித்து விட எண்ணம்.
என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!
முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!
"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?
அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!
நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!
"ஆறு" பதிய யாரையும் நான் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இங்கு பின்னூட்டமிடுபவர்கள் யாரேனும் இன்னும் "ஆறு" பதிய வில்லையென்றால் தொடரலாம்.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
என்னுள் நீ
மெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!
முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!
"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?
அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!
நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!
நீ பிறந்த பிறகுதான்
உன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!
"ஆறு" பதிய யாரையும் நான் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இங்கு பின்னூட்டமிடுபவர்கள் யாரேனும் இன்னும் "ஆறு" பதிய வில்லையென்றால் தொடரலாம்.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
நீ பிறந்த பிறகுதான்
ReplyDeleteஉன் அப்பாவுக்கேப்
பெயர் வைத்தார்களா?
'அழகப்பன்' என்று!
ஐஸ்வரியா ராய் அப்பா பேரு அழகப்பனா ? :))))
அருள் அவர்சத்தில் தட்டச்சுகிறேன் கவிதைகள் ஆறும் அருமை!
ReplyDeleteநாளை வருகிறேன் முழு விமர்சனத்தோடு அதுவதை கழித்துத்திருப்பேன் உங்கள் கவிதையை அசைப்போட்டு!
//என்னுள் நீ
ReplyDeleteமெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!//
நல்ல இருக்கு கவிதை அருட்பெருங்கோ
வளமையான, இனிமையான கவிதைகள்!
ReplyDeleteமிகவும் ரசித்தேன்!
நன்றி!
கண்ணன், ஐய்வர்யா ராய் அப்பா பெரு அழகப்பனானு எனக்கு தெரியாது.
ReplyDeleteஇவர் கரெட்டு பண்ணுற பொண்ணு அப்பா பெயர் அழகப்பன்.
என்ன அருள், சும்மா பொழந்து கட்டுற. நல்லா அருமையா போட்டு இருக்கப்பு. எங்கள் மனதிலும் நல்ல அழமாக பதிந்து விட்டது.
கோவி,
ReplyDeleteஆத்தங்கரைக்கு வந்ததற்கு நன்றிகள்.
/ஐஸ்வரியா ராய் அப்பா பேரு அழகப்பனா ? :))))/
அவள் ஐஸ்வர்யாராயாகத் தெரிந்து விட்டால் அப்புறம் அவளப்பனை அழகப்பனாக ஆக்கி விட வேண்டியதுதான்! :)
ப்ரியன்,
ReplyDelete/அவர்சத்தில் தட்டச்சுகிறேன்/
தெரிகிறது :)
/நாளை வருகிறேன் முழு விமர்சனத்தோடு அதுவதை கழித்துத்திருப்பேன் உங்கள் கவிதையை அசைப்போட்டு!/
நானும் காத்திருக்கிறேன் உங்கள் விமரசனத்தை எதிர் நோக்கி!
ராம்,
ReplyDeleteவாங்க..வாங்க..
/நல்ல இருக்கு கவிதை அருட்பெருங்கோ/
நன்றி...உங்க புகைப்படம் கூட தான்...
எஸ்கே,
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி!
/வளமையான, இனிமையான கவிதைகள்!
மிகவும் ரசித்தேன்!/
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க!!
சிவா,
ReplyDelete/கண்ணன், ஐய்வர்யா ராய் அப்பா பெரு அழகப்பனானு எனக்கு தெரியாது.
இவர் கரெட்டு பண்ணுற பொண்ணு அப்பா பெயர் அழகப்பன்./
நமக்கு, மாமனாரா அழகப்பன் எல்லாம் வேண்டாம்ங்க ஒரு அன்பப்பன் வந்தால் போதும்!
/என்ன அருள், சும்மா பொழந்து கட்டுற. நல்லா அருமையா போட்டு இருக்கப்பு. எங்கள் மனதிலும் நல்ல அழமாக பதிந்து விட்டது. /
நன்றி சிவா..தொடர்ந்து உங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கும்...
//நன்றி சிவா..தொடர்ந்து உங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கும்... //
ReplyDeleteஅருள், நான் உன் பக்கத்துக்கு அடிக்கடி வருவது, நீ எழுதும் கவிதையை படிக்க தான், விக்ரமாக்கடு விமர்ச்சனத்தை படிக்க அல்ல.... அல்ல.... அல்லவே அல்ல.....
நன்றாக உள்ளது. காதல் மொழி உங்களுக்கு வசப்பட்டுள்ளது. நீங்க காதலில் வசப்பட்டிருக்கிறீர்களோ ?
ReplyDeleteசிவா,
ReplyDelete/அருள், நான் உன் பக்கத்துக்கு அடிக்கடி வருவது, நீ எழுதும் கவிதையை படிக்க தான், விக்ரமாக்கடு விமர்ச்சனத்தை படிக்க அல்ல.... அல்ல.... அல்லவே அல்ல..... /
நானும் விக்ரமாக்கடு விமர்சனம் எழுதும் நிலையில் இல்லை..இல்லை...இல்லவே இல்லை... :)
ஏம்ப்பா மறுபடி மறுபடி அதை ஞாபகப்படுத்தறீங்க??? :(
அன்புடன்,
அருள்.
"என்னைத்
ReplyDeleteதொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?"...
அருள்!...ஆறு கவிதைகளும் அருமை
/*
ReplyDeleteமண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!
*/
அழகான உவமை!
/*முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!*/
இப்படியாவது சீக்கிரம் எழுந்துவிடுகிறீர்களே நல்லது!
/*"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?*/
பெண்கள் எப்பவுமே இப்படிதாங்க அருள்!
/*அதிக நேரம்
கண்ணாடி முன் நிற்காதே!
நீ அதைத்தான் ரசிக்கிறாய்
என நினைத்துக்
கொள்ளப் போகிறது!*/
இது அழகிய காதல்
/*நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!*/
கோலம் என்றாலே அழகு என்றுதான் பொருள் அருள் :)
ரசிக்க வந்தேன்...இன்ப ஆறு இங்கே ஓடக் கண்டேன்... மெய் மறந்து நின்றேன்:
ReplyDeleteமணியன்,
ReplyDelete/நன்றாக உள்ளது. காதல் மொழி உங்களுக்கு வசப்பட்டுள்ளது./
அப்படியா? காதலுக்கு நன்றிகள்!!
/நீங்க காதலில் வசப்பட்டிருக்கிறீர்களோ ?/
ம்ம்ம்...காதலிடம்...காதலியிடம் இல்லை..
சத்தியா,
ReplyDelete/அருள்!...ஆறு கவிதைகளும் அருமை/
நன்றி சத்தியா!!!
தொடர்ந்த வாசிப்புக்கும், உங்கள் கருத்துக்களுக்கும்...
//என்னுள் நீ
ReplyDeleteமெதுவாய்த் தான்
நுழைந்தாய்.
மண்ணுள் நுழையும்
வேரைப் போல,
ஆழமாய்!//
உள்நுழைந்த வேர் யாரோ?? :)
//முதலில் யார் உனக்கு
வணக்கம் சொல்வதென
தினமும் காலையில் சண்டை
எனக்கும், சூரியனுக்கும்!//
சுவாரசியாமன சண்டை !!!
//"என்னைத்
தொட்டுப் பேசாதே!"
என்று சொல்லிவிட்டு
நீ மட்டும்
என் உள்ளங்கையைக்
கிள்ளுகிறாயே
இது என்னடி நியாயம்?//
தொடாதே என்றால் தொடேன் எனக் கொள்க !
//நீ வரைந்த கோலம்
அழகு என்கிறார்கள்!
நீ கோலம் வரைவது
அழகு என்கிறேன்!//
அழகு அழகு :))
ஆறாக ஓடுகிறது கவிதைகளின் ஊடே காதல்! அத்தனையும் அருமை
ப்ரியன்,
ReplyDeleteமுதலில் ஒவ்வொருக் கவிதைக்கும் தனித்தனியே கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க!!
/இப்படியாவது சீக்கிரம் எழுந்துவிடுகிறீர்களே நல்லது!/
:)) நான் கொஞ்சம் சோம்பேறி! காலை வணக்கத்தை முன்னிரவே சொல்லி விடுவேன்!!
/பெண்கள் எப்பவுமே இப்படிதாங்க அருள்!/
அப்படியா? பெண்கள் பாஷை கொஞ்சம் கற்றுக் கொடுங்களேன்!
/கோலம் என்றாலே அழகு என்றுதான் பொருள் அருள் :)/
கோலம் வரைந்த கோலத்தை விட, கோலம், கோலம் வரைவது அழகு(கோலம்?) என்று சொல்லியிருக்க வேண்டுமோ?
தேவ்,
ReplyDelete/ரசிக்க வந்தேன்...இன்ப ஆறு இங்கே ஓடக் கண்டேன்... மெய் மறந்து நின்றேன்:/
ரசித்தீர்கள் தானே??
( சரி, மெய் மறந்து அப்படி யாரை நினைத்தீர்கள்? :) )
நவீன்...
ReplyDeleteவாருங்கள்...வாருங்கள்...
/உள்நுழைந்த வேர் யாரோ?? :)/
அட அப்படி யாரும் இல்லீங்க நவீன்! சொன்னா நம்புங்க!
/தொடாதே என்றால் தொடேன் எனக் கொள்க !/
ம்ம்ம்...இப்படி யாராவது சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை!!! :)
/அழகு அழகு :))/
இரண்டுமே அழகு என்று சொல்லி விட்டீர்களா?
/ஆறாக ஓடுகிறது கவிதைகளின் ஊடே காதல்! அத்தனையும் அருமை/
நன்றிகள் நவீன்!
நாகையன்,
ReplyDeleteநானாக் கொட்டுறேன்? காதல்தான் தானாக் கொட்டுது! :)
ரொம்ப நன்றிங்க...
தம்பி ஜெயந்தன்,
நன்றி!!! தபு ஷங்கர் கவிதைகள் அதிகம் வாசித்ததால் இருக்குமோ? தெரியவில்லை..