ஜன்னலுக்கு வெளியே பசுமையான வயல்வெளி
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்
தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் சிறுவர்கள்
கையில் மனதுக்குப் பிடித்தக் கவிதைப் புத்தகம்
தாலாட்டும் ஓசையோடு ரயில் பயணம்
கவலை மறந்த கல்லூரிக் காலம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்
கேலி கிண்டல் நிறைந்த அரட்டை
ஆனந்தத்தில் பாடியபடி ஆட்டம்
நட்போடு போன சுற்றுலாப் பேருந்து பயணம்
அழகாய் வளைந்து செல்லும் மலைப்பாதை
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்
பார்வையின் தூரம் வரை தேயிலைத் தோட்டங்கள்
குளிரைக் கூட்டும் சாரல் மழை
நனைந்த படி போன மிதிவண்டி பயணம்
தூரத்து ஊரின் கோவில் திருவிழா
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்
கூடிய சொந்தங்களின் பாசப்பேச்சு
தொடர்ந்து கேட்கும் வேட்டு சத்தம்
நிலவொளியில் மாட்டுவண்டி பயணம்
என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!
அழியாக் காதலுடன்,
அருட்பெருங்கோ
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!
அழியாக் காதலுடன்,
அருட்பெருங்கோ
ஹூம்....ஓக்கே...ஓக்கே...
ReplyDeleteஒரு "+" போட்டாச்சேய்...
//ஹூம்....ஓக்கே...ஓக்கே...//
ReplyDeleteஒரு நக்கல் தொனி தெரியுதே :)
//ஒரு "+" போட்டாச்சேய்...//
நன்றி நன்றி..
அப்புறம் , நான் மறுபடி ஹைதராபாத்தே வந்தாச்சுங்கோ!!
அன்புடன்,
அருள்.
அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ....
ReplyDelete//அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ.... //
ReplyDeleteமுதல் நான்கும் அனுபவம்..
கடைசியில் சொன்னது கற்பனை!!
அன்புடன்,
அருள்.
//முதன் முறையாய்
ReplyDeleteஉன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!//
:) என்ன அருள் கை கோர்த்துவிட்டீர்கள் போல ?! மேலும் நடக்க வாழ்த்துக்கள் :))
// என்ன அருள் கை கோர்த்துவிட்டீர்கள் போல ?! மேலும் நடக்க வாழ்த்துக்கள் :)) //
ReplyDeleteஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதாங்க மனசு ரணகளமா இருக்கு..:)
ஆனா அதுவும் சொகமாத்தான் இருக்கு :))
அன்புடன்,
அருள்.
ஆ....ஆ.... இது தானே வேணாங்ககுறது.......
ReplyDelete//ஒரு நக்கல் தொனி தெரியுதே :)//
ReplyDeleteஅட ராமா.பாராட்டி சொன்னதுல நக்கல் தொனி தெரியுதா??? மன்னிச்சுக்கோங்க....
//நான் மறுபடி ஹைதராபாத்தே வந்தாச்சுங்கோ!!//
ஓ!!! உலகம் ஆச்சரியக்குறிகளால் ஆனது.
சிவா,
ReplyDeleteநிஜமாதாங்க...சொன்னா நம்புங்க...
சுதர்சன்,
ReplyDelete/அட ராமா.பாராட்டி சொன்னதுல நக்கல் தொனி தெரியுதா??? மன்னிச்சுக்கோங்க..../
மன்னிப்பா? என்னங்க நீங்க..நாந்தான் சிரிப்பான் போட்டிருந்தேனே நீங்க கவனிக்கலையோ?
/ஓ!!! உலகம் ஆச்சரியக்குறிகளால் ஆனது./
பெங்களூர்ல இருந்தவரைக்கும் என்னோட முதுகும் அப்படித்தான் இருந்துச்சு :))
அன்புடன்,
அருள்
"என் வாழ்நாளின்
ReplyDeleteசுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!".....
அத்தனையும் சுகமான பயணங்கள்தான்.
அழகாக, ரசித்துச் சொல்லி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள் அருள்!
சத்தியா,
ReplyDeleteபயணங்கள் எப்போதுமே சுகமானவை..
அன்புக்குரியவர்கள் துணைக்கிருந்தால் இன்னும் சுகம்...
உங்கள் பாராட்டுக்கு நன்றி சத்தியா...
அன்புடன்,
அருள்.
yal ahathian (யாழ் அகதியன்?),
ReplyDeleteவந்து வாசித்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க...
சீக்கிரமே தமிழில் தட்டச்ச ஆரம்பியுங்கள்...தமிங்கிலத்தில படிக்கக் கடினமா இருக்குங்க ;)))