Friday, June 23, 2006

கவிதைகள் ஏமாற்றுவதில்லை

என் காதலை
உன்னிடம் சொல்ல
நான் யாரைத் தூதனுப்ப?

உன் தோழியை…
உன் மேலுள்ளப் பொறாமையில்
அவள் மறுத்து விட்டால்?

அந்த மேகத்தை…
உன்னைச் சேருமுன்னே அது
மழையாய்க் கரைந்து விட்டால்?

இந்தப் பூக்களை…
உன்னை வந்தடையுமுன்னே
அவை வாடி விட்டால்?

அதனால்தான்
என் கவிதைகளை
அனுப்பி வைக்கிறேன்!
அவை கண்டிப்பாய்
உனக்குப் புரிய வைக்கும்…
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பதை!!

ஏனென்றால்
கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
அவை - உன்னைப் போல!!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

10 comments:

  1. நல்ல கவிதை

    கவிதைகள் மட்டுமல்ல ..
    கவிஞனும் ஏமாற்றுவதில்லை

    ReplyDelete
  2. நீங்களும் ஏமாற்றவில்லை.
    நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. வினையூக்கி,

    தங்கள் முதல் வருகைக்கு நன்றி!!

    கவிஞர்கள் ஏமாற்றுவதில்லை - சில சமயம் ஏமாற்றப்படுகிறார்கள்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  4. சிவா,

    /நீங்களும் ஏமாற்றவில்லை.
    நன்றாக உள்ளது. /

    நன்றி சிவா..

    அப்படியே நமக்கும் கொஞ்சம் கண்ணி வெடி அனுப்பி வைங்க...தேவைப்படுது :))

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  5. "அதனால்தான்
    என் கவிதைகளை
    அனுப்பி வைக்கிறேன்!
    அவை கண்டிப்பாய்
    உனக்குப் புரிய வைக்கும்…
    நான் உன்னைத்தான்
    காதலிக்கிறேன் என்பதை!!s

    ஏனென்றால்
    கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
    அவை - உன்னைப் போல!!".....

    ஆஹா... என்ன அருமையான கவிதை.
    ஓ... ஓ... உங்கள் காதலுக்கு கவிதை விடு தூதோ? ம்... நல்லது நல்லது.

    வாழ்த்துக்கள் அருள்!

    ReplyDelete
  6. சத்தியா,

    ஆம்..கவிதை விடு தூதேதான்.. :))

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  7. நல்லதொரு கவிதை அருட்பெருங்கோ,

    அதிலும்

    /*என் கவிதைகளை
    அனுப்பி வைக்கிறேன்!
    அவை கண்டிப்பாய்
    உனக்குப் புரிய வைக்கும்…
    நான் உன்னைத்தான்
    காதலிக்கிறேன் என்பதை!!

    ஏனென்றால்
    கவிதைகள் ஏமாற்றுவதில்லை!
    அவை - உன்னைப் போல!!*/

    இவை மிகவும் அருமை...வாழ்த்துக்கள் 'அவள்' கவிதைகள் சொல்லுவதை புரிந்துக் கொள்ள ;)

    ம்ம்ம்...முன்னமே Orkut Communities ல் பதித்துவிட்டீர்களோ?

    ReplyDelete
  8. கவிதை விடு தூது அருமை!

    ReplyDelete
  9. ப்ரியன்,

    தங்கள் வருகைக்கு முதலில் நன்றி.

    /இவை மிகவும் அருமை...வாழ்த்துக்கள் 'அவள்' கவிதைகள் சொல்லுவதை புரிந்துக் கொள்ள ;)/

    நன்றி நன்றி...

    /ம்ம்ம்...முன்னமே Orkut Communities ல் பதித்துவிட்டீர்களோ? /

    இருக்கலாம் சரியாக நினைவில்லை இந்தக் கவிதையையும் பதித்து விட்டேனா என்று...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  10. சேதுக்கரசி,

    /கவிதை விடு தூது அருமை!/

    பாராட்டுக்கு மிக்க நன்றி...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete