Wednesday, August 29, 2007

சத்தமிடும் மௌனம்

நம் பிரிவை விட
ஒரு வயது குறைவான சிறுவனுக்குத்
தாயெனும் தகுதியில் நீயும்,

நம் காதலைப் போல
புறக்கணிக்கப்பட்ட
அகதியெனும் நிலையில் நானும்,

எதிர்பாராமல்
எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
சலனமின்றி விலகிச் செல்கையில்,

பெரும் சத்தமிட்டு சொல்கின்றன
நம் மௌனங்கள்.

உன் மனம் மறந்துபோனதையும்,
என் மனம் மரத்துப் போனதையும்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

16 comments:

  1. அப்பா!!!!!! புதன்கிழமை ஆனா போதும்யா இவருக்கு எப்போ டா புலம்பலாம்னு காத்துகிட்டு இருப்பார் போல. ஆனா அருமையான புலம்பல் அருள்! :(

    ReplyDelete
  2. ரொம்ப சின்னப் புலம்பலா போச்சே!!!

    சட்டுன்னு முடிஞ்சிடுச்சு.. மரத்து போனதால மனம் புலம்பலை குறைச்சுடுச்சு போல..

    ReplyDelete
  3. மக்கா,
    புலம்பல் புதன்......கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா...

    ரசித்த வரிகள்

    /
    எதிர்பாராமல்
    எதிரெதிர் பார்க்க நேர்ந்தும்,
    சலனமின்றி விலகிச் செல்கையில்,

    பெரும் சத்தமிட்டு சொல்கின்றன
    நம் மௌனங்கள்
    /
    இது எல்லா புலம்பல்களுக்கும் பொருந்தும்..
    உங்க PM ஏஎதும் கேட்க மாட்டாரா.......

    ReplyDelete
  4. //நம் காதலைப் போல
    புறக்கணிக்கப்பட்ட
    அகதியெனும் நிலையில் நானும்,//



    //உன் மனம் மறந்துபோனதையும்,
    என் மனம் மரத்துப் போனதையும்!//

    நச் வரிகள்!!!!

    நல்லாயிருங்க :)

    என்னையும் புதன் கிழமையதுவுமா புலம்பவிட்டதுக்கு!!!!




    கவிதை கவிதையாய் நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. / அப்பா!!!!!! புதன்கிழமை ஆனா போதும்யா இவருக்கு எப்போ டா புலம்பலாம்னு காத்துகிட்டு இருப்பார் போல. ஆனா அருமையான புலம்பல் அருள்! :(/

    ஆமாப்பா ஸ்ரீ, புலம்பறதுக்கு புதன்கிழமைதான் ஏத்த நாளாம்!!! புளிய மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கார் :)

    அருமையான புலம்பலா? ;)

    ReplyDelete
  6. / ரொம்ப சின்னப் புலம்பலா போச்சே!!!

    சட்டுன்னு முடிஞ்சிடுச்சு.. மரத்து போனதால மனம் புலம்பலை குறைச்சுடுச்சு போல../

    ஆமாங்க்கா சின்னப் புலம்பல்தான். பெருசா புலம்பி உங்களையெல்லாம் கஷ்டப்படுத்த வேணாம்னுதான் :)

    ReplyDelete
  7. / என் மனம் மரத்துப் போனதையும்!///

    என்ன அருட் பெருங்கோ... காதல் சரிப்பட்டு வரலையா?
    கரூர்ல ஏதாச்சும் ப்ராப்ளமா? எதுவானாலும் நல்ல கவிதைதான்./

    மேடம், ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல :)))

    நான் கரூர் போறேன்னு சொன்னாலும் சொன்னேன் என்னென்னமோ கதை உண்டாகிடுச்சு :)

    ReplyDelete
  8. கவிதை ப்ரியன்,

    /இது எல்லா புலம்பல்களுக்கும் பொருந்தும்..
    உங்க PM ஏஎதும் கேட்க மாட்டாரா......./

    ம்ம்ம் உண்மைதான். என்னோட PM ஆ? அவர் எதாவது கேட்டுட்டு தான் இருக்காரு...நாந்தான் அத கேட்டுக்கறதே இல்ல ;)

    ReplyDelete
  9. /
    நச் வரிகள்!!!!

    நல்லாயிருங்க :)

    என்னையும் புதன் கிழமையதுவுமா புலம்பவிட்டதுக்கு!!!!/

    :))) என்னது ஒரே அலம்பலா இருக்கு!!!


    /கவிதை கவிதையாய் நல்லாயிருக்கு/

    இத கவிதைனும் சொல்லிட்டீங்களா? ரெம்ப நன்றிங்க ;)

    ReplyDelete
  10. கவிதைன்னும் சொல்லிட்டீங்களா வா
    இதை படிச்சிட்டு தானே நான் நிகழ்தகவு கவிதையே எழுதினேன்.
    அருட் பெருங்கோ புள்ளி வச்சாலே அது கவிதைங்கற லெவலுக்கு நினைக்க ஆரம்பிச்சாச்சுப்பா...

    ReplyDelete
  11. / கவிதைன்னும் சொல்லிட்டீங்களா வா
    இதை படிச்சிட்டு தானே நான் நிகழ்தகவு கவிதையே எழுதினேன்./

    ம்ம்ம் அதையும் வாசித்தேனே!!!

    /அருட் பெருங்கோ புள்ளி வச்சாலே அது கவிதைங்கற லெவலுக்கு நினைக்க ஆரம்பிச்சாச்சுப்பா.../

    அக்கா, உங்களுக்கு என் மேல இவ்வளவு அன்பா? ;)

    ReplyDelete
  12. Superb! No more to say. But it could have been a little longer.. I want to hear more on this topic and incident..

    ReplyDelete
  13. /Superb! No more to say. But it could have been a little longer.. I want to hear more on this topic and incident../
    நன்றிகள் தீக்ஷண்யா!!! இனிவரும் புலம்பல்களில் பெரிதாக புலம்பி விடுகிறேன் :-)

    ReplyDelete
  14. இந்த வயதுக்குள் இப்படி சிந்திக்க முடியுமா? தங்கள் சிந்தனைக்கண்டு வியக்கிறேன் கவிதைகளை கண்டு மகிழ்க்கிறேன்.. சமுதாய சிர்த்திருத்த கவிதைகளை இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். உங்களைப் போன்றோரின் கவிதைகளைப் படித்து நானும் சில காவிதைகளை எழிதி இருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படித்து கருத்து கூற வேண்டுக்கிறேன்.

    தினேஷ்

    ReplyDelete
  15. nalla irunthathu

    //பெரும் சத்தமிட்டு சொல்கின்றன
    நம் மௌனங்கள்.

    உன் மனம் மறந்துபோனதையும்,
    என் மனம் மரத்துப் போனதையும்!

    //

    esp last lines were simply superb

    ReplyDelete
  16. \\உன் மனம் மறந்துபோனதையும்,
    என் மனம் மரத்துப் போனதையும்!\\

    நெகிழவைத்தன இவ்வரிகள்!!

    ரொம்ப நல்லாயிருக்குங்க உங்க கற்பனை/அனுபவ கவிதை!!!

    ReplyDelete