Wednesday, August 08, 2007

கைவிடப்பட்ட கவிதை

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்...
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்...
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன...
என் பல கவிதைகள்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

21 comments:

  1. என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு...... :(

    ReplyDelete
  2. / என்னய்யா ஒரே புலம்பலா இருக்கு...... :(/

    தல,

    நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய் மாதிரி இது புலம்பல் புதன் :)

    ReplyDelete
  3. புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்.

    நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்.

    ReplyDelete
  4. வாங்க ஜிரா,

    / புலம்பல் புதன் முடிந்து அலம்பல் அடுத்தநாள் வரட்டும்./

    அலம்பல் அடுத்த வாரம் ஆரம்பம்!!!

    /நன்றாக இருந்து இந்தக் கவிதை வடிவம்./

    நன்றி ராகவன்!!!

    ReplyDelete
  5. //இப்படித்தான்...
    முழுக்கவிதையும்
    வாசிக்க நேர்ந்தால்,
    என் துயர் தாங்க மாட்டாயென
    பாதியிலேயே கைவிடைப்படுகின்றன...
    என் பல கவிதைகள்!//

    சிலிர்க்குது பாஸ்...

    ReplyDelete
  6. வாங்க அகிலன்,

    / //இப்படித்தான்...
    முழுக்கவிதையும்
    வாசிக்க நேர்ந்தால்,
    என் துயர் தாங்க மாட்டாயென
    பாதியிலேயே கைவிடைப்படுகின்றன...
    என் பல கவிதைகள்!//

    சிலிர்க்குது பாஸ்.../

    முதன் முறையா வந்திருக்கீங்க ;)
    நீங்களே இப்படி சொல்லும்போது கொஞ்சம் நல்லா தான் எழுதியிருக்கேன் போல :)

    ReplyDelete
  7. ம்.. நன்றாக இருக்கிறது..

    இது பாதியா...சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்...ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..

    அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க :)

    ReplyDelete
  8. வாங்க முத்துலெட்சுமி,

    / ம்.. நன்றாக இருக்கிறது../

    நன்றிங்க!!!

    /இது பாதியா...சரியாக எண்ணுங்கள்..14முழு வரிகள் ஒரு அரை வரி எழுதி இருக்கிறீர்கள்...ஒன்பது வரிகள் புள்ளிகளாக விட்டிருக்கிறீர்கள்..

    அப்படின்னா பாதிக்கும் மேல எழுதிட்டீங்க :)/

    எழுதப்பட்டவை 9 வரிகள்... எழுதப்படாதவை 9 வரிகள்...

    ஈற்றில் உள்ள 6 வரிகளும் கைவிடப்பட்ட கவிதையில் சேராது.
    எனவே கைவிடப்பட்ட கவிதையில் பாதி தான் எழுதியிருக்கேன்!!!

    கணக்கு சரியா வருதுங்களா? ;)

    ReplyDelete
  9. அப்படியா அந்த கணக்கு

    சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்..சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க...

    அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை... :P

    ReplyDelete
  10. / அப்படியா அந்த கணக்கு

    சரி சரி அப்ப நீங்க பாதி என்ன பாதிக்கும் மேலயே எழுதாம விட்டுருக்கீங்க..விழித்திருப் ..ன்னு அந்த வரி பாதியிலயே முடிஞ்சிருச்சே..எழுதினது 8அரை வரிதான்../

    ஒத்துக்கறேன்...நீங்க கணக்குல புலிதான்னு ஒத்துக்கறேன்...நெக்ஸ்டு கவிதைல சரி பண்ணிட்டு மீட் பண்ணுவோம் :)))

    /சோ ..ரொம்பவே படிக்கறவங்களை பத்தி மனசுல கவலைப்பட்டிருக்கீங்க.../

    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை... :P/

    அக்கா, ஆள விடுங்க :)

    ReplyDelete
  11. \\ அருட்பெருங்கோ said...
    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை... :P/

    அக்கா, ஆள விடுங்க :)\\\


    அருள்
    கவிதையும் சூப்பர்
    பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))

    ReplyDelete
  12. ்வாங்க கோபி,

    / \\ அருட்பெருங்கோ said...
    அப்படியும் சொல்லலாம்..பாதிக்கு மேல கவிதை எழுதத்தெரியாம போனது கூட ஒரு காரணமா இருக்கலாம் ;)

    /அக்குவேறு ஆணிவேற அலசிட்டனோ கவிதையை... :P/

    அக்கா, ஆள விடுங்க :)\\\


    அருள்
    கவிதையும் சூப்பர்
    பின்னூட்ட காமெடியும் சூப்பர் ;-))/

    நன்றி கோபி!!!

    ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :)))

    ReplyDelete
  13. \\ஆனால் பின்னூட்டத்தில் நடந்த கவிதை திறனாய்வு, மீள் வாசிப்பு, இத்யாதி இத்யாதிகளை நீங்கள் காமெடி என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))) //

    ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
    :))

    ReplyDelete
  14. /
    ஆமாம் நான் இதை வழிமொழிகிறேன்..
    :))/

    அக்கா... மறுபடியுமாஆஆஆஆஆஆ???????

    ReplyDelete
  15. /சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ அருள்... புலம்பல் வேறு விதமா இருக்கும்..... நீங்க புலம்புவதை பார்த்த மன்சுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால் நல்லாத்தான் புலம்பியிருக்கிறீங்க../

    ்மேடம்,

    கல்யாணமா? நான் ரொம்ப சின்னப் பையன்ங்க :)

    கவிதைல காதலிக்கிறதே நல்லா இருக்கு...இப்படியே இருப்போம் ;)

    சரி விடுங்க புலம்பல் இல்லாம வழக்கம்போல ஒரு கவிதை(?) வெள்ளிக்கிழமை போட்டுட்லாம் :)

    ReplyDelete
  16. :)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))

    ReplyDelete
  17. Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up

    ReplyDelete
  18. / :)) அருள் வித்தியாசமான முயற்சி :)) ரசித்தேன் !! :))/

    ்நன்றி நவீன் :))

    ReplyDelete
  19. /Hai Arutperungo, sorry tamila ezhutha theriyala. I am Ms. Bala. Very nice. Keep it up/

    ்நன்றிங்க பாலா!!!

    தமிழில் எழுத இங்கு சென்று பார்க்கவும்

    ReplyDelete
  20. புலம்பல் நமக்கு தேவை இல்லை.....கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா.....அவ்வளவுதான்
    மக்கா.......

    ReplyDelete
  21. கவிதை ப்ரியன்,

    / புலம்பல் நமக்கு தேவை இல்லை.....கவிதை படிச்சோமா காதல ரசிச்சோமா.....அவ்வளவுதான்
    மக்கா......./

    அது!!!! :)

    ReplyDelete