Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, July 28, 2011

எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்

*

எனது முத்தங்கள்
ஆடைகளற்று நாணுகின்றன.
உனது முத்தங்களை அணிவித்தாலென்ன?

*

இறுதி அத்தியாயத்தை முதலில் வாசித்துவிட்டு
பிறகு நாவலைத் துவங்கும் வாசகனைப்போல
இறுதிவரியில் பொதிந்திருக்கும்
உனது முத்தங்களை அள்ளிய பிறகே
உனது கடிதங்களை வாசிக்கத் துவங்குகிறேன்.

*

நான்
நனைந்தபடி ரசிக்கும் பெருமழை
நீ.

*

செடிக்கு உரமாகட்டுமென
காலையில் சூடியப் பூக்களை
செடிக்கருகிலேயே உதிர்க்கிறாய்.
வாடிய பூக்களில் வீசும் உனது கூந்தல்மணத்தால்
அந்தியிலேயே மலர்கின்றன புதிய மொட்டுகள்.

*

உலகின் பேரழகான கவிதை
உலகின் பேரழகான வாசகிக்கென
எழுதப்படாமல் இருக்கிறது.
எப்பொழுது கவிதை வாசிக்கத் துவங்குகிறாய்?

*

Friday, November 05, 2010

தீபாவளி வாழ்த்து

தீபாவளி வாழ்த்து



[caption id="attachment_510" align="aligncenter" width="566" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_511" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_512" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_513" align="aligncenter" width="506" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_514" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_515" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]

Sunday, October 10, 2010

தேவதைகளின் தேவதை

[caption id="attachment_501" align="aligncenter" width="600" caption="தேவதைகளின் தேவதை"]தேவதைகளின் தேவதை[/caption]
வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!

Wednesday, August 11, 2010

குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

Tuesday, August 03, 2010

இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்

கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
[caption id="attachment_451" align="alignright" width="225" caption="சிவ சக்திசிவ சக்தி"]சிவ சக்தி[/caption]

Thursday, July 29, 2010

கிளி ஜோதிடம்

மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
[caption id="attachment_440" align="alignright" width="300" caption="கிளி ஜோதிடம்"]கிளி ஜோதிடம்[/caption]

Wednesday, July 28, 2010

இந்தியாவில் இரண்டு நிலா

வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல![caption id="attachment_434" align="alignright" width="300" caption="மித்ரா-ஜனனி"]மித்ரா-ஜனனி[/caption]

Tuesday, July 27, 2010

பழைய பேருந்து நிலையம்

ஊருக்கு புதிய பேருந்துநிலையம் வந்ததிலிருந்து நிறைய மாற்றங்கள்.
பிரபலமான உணவகங்களும் விடுதிகளும் புதிய பேருந்துநிலையமருகே இடம்பிடித்தன.
மிகப்பெரிய விளம்பரப் பலகைகளும், கட்டவுட்டுகளும் கூட இடம்பெயரத் துவங்கின.
ஊருக்குள் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டிருந்தது. [caption id="attachment_430" align="alignright" width="300" caption="பேருந்து நிலையம்"]பேருந்து நிலையம்[/caption]

Monday, July 26, 2010

போடா கருவாயா

அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

[caption id="attachment_421" align="alignright" width="300" caption="போடா கருவாயா"]போடா கருவாயா[/caption]

Thursday, July 22, 2010

கவிதைகள்

கவிதைகள் கண்டெடுத்து வாசிப்பதென்பது
கனவுகளை மீட்டெடுப்பதைப் போல‌
மிக நுட்பமான செயலாகிவிட்ட‍து.

எல்லாக்கவிதைகளும் முதன்முறை வாசிக்கும்பொழுதே ஈர்த்துவிடுவதில்லை.
ஈர்த்த எல்லாக்கவிதைகளும் மறுவாசிப்பில் நிலைப்ப‌தில்லை.

[caption id="attachment_416" align="alignright" width="300" caption="கவிதைகள்"]கவிதைகள்[/caption]

Monday, July 19, 2010

க‌ளவாடிய கவிதைகள்

[caption id="attachment_412" align="alignright" width="300" caption="க‌ளவாடிய கவிதைகள்"]க‌ளவாடிய கவிதைகள்[/caption]மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்க‍ இயலாத இதயம்போல!

Tuesday, June 01, 2010

அவளால் சுமாரான கவிதைகள்



எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்ப‍டி?

***

உனக்கான உடைகளை

Monday, May 31, 2010

போகோ புகுந்த வீடு

hanuman



விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த‌
அக்கா மகள் ஜனனியும்
அண்ண‍ன் மகள் மித்ராவும்
அறிமுகப்ப‍டுத்தினார்கள்
ஹ‌னுமானையும், ச்சோட்டா பீமையும்.

ஹனுமானைப் பார்த்துக்கொண்டு

Friday, May 21, 2010

பேரலையும் மாமழையும்

[caption id="attachment_315" align="alignright" width="300" caption="பேரலையும் மாமழையும்"][/caption]

மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.

“கடல் நிறைந்து அலைகளாய் உன்னிடம்

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்து

[caption id="attachment_308" align="alignright" width="300" caption="பொங்கல் வாழ்த்து"][/caption]











வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே

Wednesday, October 01, 2008

கவிதை பிரசவம்

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

Tuesday, July 29, 2008

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*


 


இரண்டு முத்தங்கள் கொடுத்து


இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.


இயலாத செயலென


இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


 


*


 


யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்


எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள


என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.


எப்பொழுதும் அளந்தே பேசுபவன்


உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே


அளவின்றி பேசுகிறேன்.


 


*


 


உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்


எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட


சிறகடித்து தவிக்கும் இமைகள்!


 


*


 


தனியேநீமுணுமுணுக்கும்


இனியபாடல்கள்


இசைத்தட்டில்ஒலிக்கையில்


இனிமைஇழப்பதேன்?



*



மேலும் சில காதல் கவிதைகள் :

மார்கழிப்பாவை

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதைகள்

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

Tuesday, June 10, 2008

துவக்கி வைத்த குழந்தை

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது...
ஆனை சவாரிப் போக!

Monday, June 09, 2008

என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
நாவல் வடிவம் அதற்கு நீளம்.
சிறுகதையில் மிகவும் சுருங்கும்.
கவிதையென்றால் பொய் சேரும்.

எழுதினாலே இயல்பு மாறக்கூடும்.

உங்களுக்கு இலக்கியமாக்கித் தர
என்னிடமும் ஒரு காதல் இருக்கிறது.
எழுத்தில் சிதைக்காமல்
நினைவிலிருந்தே வாசித்துக்கொள்ள வழியிருக்கிறதா?

*
பாதிக்கனவுடன்
கலைந்துவிட்ட உறக்கத்தை
மீதிக்கனவுக்காக இழுத்துப்போனேன்.
விழித்தபோது கிடைத்திருந்தது
புதிதாய் இன்னொரு பாதிக்கனவு.

Friday, June 06, 2008

கயிற்றின் மீது நடத்தல்

பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை மறைத்துக்கொண்டே வருவதை விடவா
பெரிய சாகசம்?