16 மே 2008 வெள்ளிக்கிழமை
சுந்தரா ட்ராவல்ஸ் பதிவுக்கு பிறகு நான் ஊருக்கு கிளம்பினாலே ‘என்ன சுந்தரா ட்ராவல்ஸ்லயா?’ என்று அலுவலகத்தில் நண்பர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.அதனால் இம்முறை முன்பதிவு செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஆனால் வழக்கம்போல் எனது பொறுமை, சோம்பேறித்தனமெனும் எல்லையைத் தொட்டுவிட்டதால் பயண நாள் வரை முன்பதிவு செய்யவில்லை.
மதியம் மணி 2:00 :
மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம் தள்ள, அலுவலகத்துக்குள்ளேயே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த நண்பனிடம் அறை சாவியை வாங்கிக்கொண்டு அவன் அறைக்கு சென்றுவிட்டேன். ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 3:00.
மதியம் மணி 3:00 :
அலறியடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்குப் பறந்தேன். 6 மணிக்கு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பெங்களூர் செல்லும் கர்நாடகா அரசுப்பேருந்தை பிடித்துவிட திட்டம். அதற்கு லிங்கம்பள்ளியில் 5 மணிக்கு மின்ரயிலைப் பிடிக்கவேண்டும். 4:30 மணிக்காவது வீட்டிலிருந்து கிளம்பவேண்டும். வீட்டிற்கு 4 மணிக்கு போய்விட்டால் போதும். இன்னும் நேரமிருக்கிறது என்ற கெத்தில் வீட்டிற்கு அருகில் வந்ததும் அழகியதமிழ்மகனில்(ATM) பணமெடுத்துக்கொண்டு கடையில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு கரும்புச்சாறு கடைக்கு வந்தேன். இரண்டு கப் குடித்துவிட்டு பையிலிருந்து பணத்தையெடுக்கும்போது கையோடு வந்த நண்பனின் விடுதியறை சாவி என்னைப்பார்த்து எகத்தாளமாக சிரித்தது.
மதியம் மணி 3:45 :
‘மச்சான், நாந்தாண்டா பேசறேன். உங்கிட்ட இன்னொரு ரூம் சாவி இருக்கா’
‘இல்லடா.. என் ரூம்மேட் ஊருக்கு போயிட்டான். ஒரு சாவிதான் இருக்கு. ஏண்டா?’
‘ஒன்னுமில்ல. நீ ஆஃபிஸ் கேட்டுக்கு வா. நான் சாவிய எடுத்துட்டு வர்றேன்’
வந்த வழியே திரும்பி போய் அவனிடம் சாவியைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மணி 5
மாலை மணி 5 :
இனிமேல் அந்த கர்நாடகா பேருந்தைப்பிடிக்க வாய்ப்பில்லாததால் 8 மணிக்கு கிளம்பும் ஆந்திரா பேருந்தை பிடிக்க பொறுமையாக கிளம்பலாமென்று பைக்குள் எல்லாவற்றையும் திணித்துவிட்டு ஒரு குளியலைப் போட்டேன். தலைக்கு குளித்ததும் தூக்கம் வருகிற மாதிரி இருந்தது. ‘தூங்கக்கூடாது, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருந்துவிட்டு எழுந்துவிடலாம்’ எனும் அதே தெளிவான முடிவோடு படுக்கையில் சாய்ந்துவிட்டு எழுந்தபோது மணி 6:30.
மாலை மணி 6:30 :
ஆட்டோவுக்கு காத்திருந்து சலித்து, நடந்து, பின் லிஃப்ட் கேட்டு ஒருவழியாக ரயில் நிலையம் சென்றபோது மணி 6:45. நாம்பள்ளி செல்லும் அடுத்த ரயில் 6:55 க்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்தது. கவுண்டரில் பயணச்சீட்டு வாங்க எனக்கு முன்னால் இன்னும் மூன்றே பேர் இருந்த போது அந்த ரியலும் ‘கூ’ என்று (எனக்கு சங்கு) ஊதியபடி கிளம்பிப் போய்விட்டது. அடுத்து செக்கந்தராபாத் செல்லும் ரயிலில் பேகம்பேட் வரை சென்றுவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போகலாமென்று அதி உன்னத முடிவெடுத்து பேகம்பேட்டுக்கே சீட்டு வாங்கினேன். 7:20 க்கு அந்த ரயில் கிளம்பியது.
இரவு மணி 8 :
பேகம்பேட் ரயில்நிலையத்துக்கு வெளியே வந்து ஆட்டோ பிடித்து பேரம் பேசி ஏறியமர்ந்தபோது பத்து நிமிடம் கழிந்திருந்தது.
‘அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்க. பஸ்ச புடிக்கனும்’
‘பஸ் எத்தன மணிக்கு?’
‘8 மணிக்கு’
‘மணி என்ன இப்போ?’
‘8:10’
என்னை முறைத்துவிட்டு முறுக்கினார் ஒரு இருட்டு சந்துக்குள். ஒரு கிலோ மீட்டர் போனதும் அங்கு ஒரு கடமை தவறாத கண்ணியமான காவல்துறை அகராதி ‘இது ஒன் வே. திரும்பிப் போ…போஓஓஓஓஓ’ என்று ஜெயம் சதா மாதிரி (ஆனால் தொப்பை இருந்தது) கை நீட்ட, வந்த வழியே ஆட்டோ திரும்பியது. நான் எங்காவது தனியாக கிளம்பினால் எனக்கு கம்பெனி கொடுக்க சனியனும் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடும்போல! உருண்டு புரண்டு ஆட்டோ பேருந்து நிலையம் வந்தபோது மணி 8:45.
இரவு மணி 9 :
பெங்களூர் செல்லும் கடைசி அரசுப்பேருந்து கிளம்பிக்கொண்டிருந்தது. சீட்டிருக்கிறதா என்று நடத்துனரைக்கேட்டால் ஒன்றே ஒன்றுதான் இருப்பதாக பாவமாக சொன்னார். எனக்கு அரை டிக்கட் இருந்தாலே போதுமென்று சொல்லி ஏறிக்கொண்டேன். இருக்கையில் சாய்ந்து, ‘தூங்கலாமா? கண்ணை மட்டும் மூடிப் படுத்திருக்கலாமா?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கி விட்டேன்
17 மே 2008 சனிக்கிழமை
காலை மணி 9:00 :
மெஜஸ்டிக்கில் இறங்கியதும் நண்பனுக்கு தொலைபேசி, அலுவலகம் செல்ல இருந்தவனை வீட்டிலிருக்க சொல்லி, 171 பிடித்து கோரமங்களா போய் அவன் வீட்டைக்கண்டுபிடித்தபோது மணி 10 ஆகியிருந்தது. இரண்டு சமையலறை அளவுக்கு இருந்த அந்த வீட்டின் வாடகை 7500 ரூபாய்! குளித்து முடித்து சமைத்து வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, வெண்டைக்காயையும், நண்பன் சூடாக்கிக்கொடுத்த தேநீரையும் பருகிய பிறகு உலகம் அழகாக தெரிந்தது.(எரிக் , நீ நல்லாருப்படா!) அப்பொழுதே கிளம்பி இரவுக்குள் நாமக்கல் செல்லலாமா அல்லது இரவு கிளம்பி காலை நேராக திருமணத்துக்கு போய்விடலாமா என்று குழப்பமாக இருந்ததால், இம்சையரசிக்கே தொலைபேசினேன். நள்ளிரவு 3:30 மணிக்கு (காலையில் என்று பொய் சொன்னார்) திருமணமென்பதால் இரவு தங்கிக்கொள்ள வசதி செய்திருப்பதாக சொல்லவும், உடனே கிளம்ப முடிவெடுத்தேன்.
காலை மணி 11 :
கோரமங்களா வாட்டர் டேங்க் அருகே ஓசூருக்கு பேருந்தேறினேன். ஊர்ந்து ஊர்ந்து சென்றது. மடிவாலா – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பல இடங்களில் மரங்களை வெட்டிப்போட்டிருந்தார்கள். ஆனாலும் பெங்களூருக்கே உரிய அந்த ‘பசுமை’ மாற வில்லை ;) 12:30 மணிக்கு ஒசூரை அடைந்தேன்.
மதியம் மணி 1 :
சேலம் செல்லும் அரசு விரைவுப்பேருந்திலேறி படுத்ததுதான் தெரியும். எப்பொழுது சேலம் வந்ததென்றே தெரியவில்லை. 6 மணிக்கு சேலத்திலிறங்கி கடைவீதிக்கு சென்று பரிசுப்பொருள் வாங்கிக்கொண்டு திரும்பினேன். அன்று/அடுத்தநாள் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்திக்கு திருமணமென்பதால் சேலமே ஒளிமயமாக இருந்தது. அடுத்த பேருந்தைப்பிடித்து நாமக்கல்லை அடைந்தபோது மணி 8.
இரவு மணி 8 :
‘ஹலோ’
‘சொல்லுங்க’
‘sam பேசறேன்’
‘யாரு?’
‘சாம்ராஜ் பேசறேன்’
‘ ’
‘அருட்பெருங்கோ பேசறேங்க’
‘அவ தூங்கறா. நான் அவ ஃப்ரெண்ட் பேசறேன். ஒரு நிமிசம் இருங்க அவ தம்பிக்கிட்ட கொடுக்கறேன்’
‘சரிங்க’
‘அண்ணா நீங்க இப்போ எங்க இருக்கீங்க?’
‘பஸ்டாண்ட்லதான்ப்பா’
‘பஸ் எல்லாம் வெளிய வர்ற இடத்துல வெயிட் பண்ணுங்க. நான் வந்துடறேன்’
‘ஓக்கே’
‘ஹலோ…அண்ணா எங்க நிக்கறீங்க?’
‘நீ சொன்ன எடத்துலதாம்ப்பா’
‘நானும் பஸ் வெளிய வர்ற இடத்துலதான் நிக்கறேன்’
‘பக்கத்துல ஒரு டைட்டன் வாட்ச் கடை இருக்கு’
‘நானும் அங்கதான் நிக்கறேன்’
‘தம்பி கொஞ்சம் பின்னாடி திரும்பு’
‘ஹை’
‘ஹை’
இரவு மணி 9 :
விடுதிக்கு சென்று மீண்டுமொரு குளியலைப்போட்டேன். அறையில் கட்டில் ஒரு மூலையிலும் தொ.கா.பெட்டி இன்னொரு மூலையிலும் இருந்தது. அதில் நமீதாவே த்ரிஷா மாதிரிதான் தெரிந்தார். சின்னத்திரையை விட்டு பெரிய திரைக்கு போக முடிவெடுத்து வெளியே வந்தேன். நடக்கும் தூரத்தில் இருந்த KS திரையரங்கில் யாரடி நீ மோகினி ஓடிக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. பக்கத்திலேயே ஒரு பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு (வெகுநாட்களுக்கு பிறகு நிறைவாக சாப்பிட்ட திருப்தி) திரையரங்கிற்குள் நுழைந்தேன். வலைப்பதிவில் வேண்டிய அளவுக்கு இதன் விமர்சனங்களைப் படித்துவிட்டதால் சில காட்சிகள் தவிர மீதிப்படம் சப்பென்று இருந்தது.
நயன் அழகாக இருந்தார். அவர் தங்கையாக வந்த மலையாளக் கவிதை அழ்ழகாக இருந்தார்.
இரவு மணி 1:30 :
விடுதியறைக்கு திரும்பி ‘தூங்கலாமா, கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கலாமா’ என்று யோசித்ததில், இரண்டில் எதைச் செய்தாலும் திருமணத்துக்கு போக முடியாதென்று அனுபவ அறிவு சொல்லவும் விழித்தபடியே ஒரு லோக்கல் சேனலில் இளையராஜாவை ரசித்துக்கொண்டிருந்தேன்.
இரவு மணி 2:30 :
‘ஹலோ..ஜெயந்தி பேசறேன்’
‘சொல்லுங்க முழிச்சுட்டுதான் இருக்கேன்’
‘3 மணிக்கு அங்க பஸ் வரும். கிளம்பி ரெடியா இருங்க’
‘நான் கிளம்பிக்கறேன். நீங்கதான் கல்யாணப்பொண்ணு நீங்க மொதல்ல கெளம்புங்க’
‘நானும் கிளம்பி ரெடியா இருக்கேன். சும்மாதான உட்காந்திருக்கேன்னு எல்லாரையும் எழுப்பி விட்ற வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க’
‘சரி நீங்க அடுத்த ஆள எழுப்புங்க. நான் போய் கெளம்புறேன்’
இரவு மணி 3:00 :
குளித்து முடித்து கிளம்பி பேருந்துக்காக காத்திருந்தபோது அறைக்குள் புயல் மாதிரி ஒருவர் நுழைந்தார்.
‘ஹாய்.. ஐ யாம் பாலா’
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கேட்டேன், ‘ஜெயந்தி ஃப்ரெண்டா?’
‘ம்ம்ம் ப்ளாக் மூலமா தெரியும்’
‘ஓ.. நீங்களும் ப்ளாக் எழுதுவீங்களா?’
‘இல்ல இல்ல படிக்கறதோட சரி. உங்களுக்கு எப்படி ஜெயந்திய தெரியும்?’
‘எனக்கும் ப்ளாக் மூலமாதான். அப்பறம் ஒரே கம்பனிலதான வேலை செய்யறோம்’
‘நீங்களும் ப்ளாக் எழுதறீங்களா?’
‘ம்ம்ம் ஆமாங்க’
‘என்ன பேர்ல?’
‘அருட்பெருங்கோ ங்கற பேர்ல எழுதறேன்’
‘நீங்க தான் அருட்பெருங்கோவா?’ நம்பிக்கையே இல்லாமல் கேட்டார். இது எப்பொழுதும் நடப்பதுதான். என்னை நேரில் பார்க்கும் யாருமே நான்தான் அருட்பெருங்கோ என்று சொன்னால் நம்ப தயங்குகிறார்கள் :)
18 மே 2008 ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை மணி 4:00 :
நாமக்கல் அருகே இருக்கும் வள்ளிபுரம் சிவன் கோவில் களை கட்டியிருந்தது.உறவினர், நண்பர்கள் புடை சூழ சரியாக 4:42 மணிக்கு மோகன் பிரபு கைது செய்யப்பட்டார். கைது செய்த ஜெயந்திக்கு பரிசு கொடுத்து வாழ்த்தலாமென்றால் அம்மணியை பிடிக்க முடியவில்லை. மாப்பிள்ளை வீட்டு அழைப்பு என்று மாயமாக மறைந்துவிட்டார். ஒருவழியாக காத்திருந்து அவர்களிருவரும் சாப்பிடப்போன நேரம் தட்டைப்பிடுங்கிவிட்டு பரிசைக்கொடுத்துவிட்டு கிளம்பினோம்.
காலை மணி 8 :
நானும் பாலாவும் அறைக்குத் திரும்பி பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். கோவையிலிருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயிலை சேலத்தில் 10 மணிக்கு பிடித்துவிட திட்டம். எந்த பேருந்தும் அந்த இடத்தில் நிறுத்தாததால் ஆட்டோ பிடித்து பேருந்துநிலையம் சென்று, காத்திருந்து, பேருந்து வந்ததும் அடித்து பிடித்து ஏறி நிற்பதற்கு இடம் பிடித்தபோது மணி 8:45. ஒரு மணி நேரத்தில் சேலத்துக்கு சென்று ரயிலை பிடிப்போமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் அந்த ரயிலில்தான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமென்றுதான் அடுத்தநாள் வரவேற்புக்கு செல்லாமல் முதல்நாள் திருமணத்துக்கு சென்றிருந்தேன். 9:55 க்கு பைபாஸ் சாலையில் இறங்கியதுமே, ‘ரயில், சேலம் சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக’ அக்கா தொலைபேசினார். அவசரமாக ஆட்டோ பிடித்து ஜங்சனை அடைந்து வரிசையில் நின்று டிக்கட் வாங்கி முதலாம் பிளாட்பாரத்திற்கு நாங்கள் போவதற்குள்…. ரயில் போய்விடவில்லை :) நிதானமாக ஏறி, ஜனனியோடு விளையாடி, பின் நன்றாக தூங்கிக்கொண்டே சென்னை சென்று சேர்ந்தேன்.
கவிதைப் பிரியர்களுக்காக அந்த மலையாளக் கவிதை :
[slideshow id=1 w=320 h=400]
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, May 28, 2008
Wednesday, April 30, 2008
தண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக)
இரண்டு வாரப் பணிக்காக மும்பைக்கு வந்த எனக்கு வேலை செய்யும் நிறுவனமே 'கார்ரோட்' அருகே தங்குமிடம் கொடுத்திருந்தது. காலையிலும் மாலையிலும் மும்பையின் மின்தொடருந்தில் திருவிழாக்கூட்டமிருக்கும் என்று நண்பன் சொன்னது சரிதான். அதுவும் அன்று திங்கட்கிழமைவேறு. எனது அலுவலகம் இருக்கும் லோயர் பரேலுக்கு ஒரு சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு வந்து நின்றுகொண்டேன். 'கார் ரோட்' டுக்கும் 'லோயர் பரேலு'க்கும் இடையில் தான் இனி தினசரி பயணம். என் நிறத்தைப் பார்த்தோ என்னவோ 'தம்பி தமிழா?' என்று கேட்டு அறிமுகமானார் அவர். நாற்பது வயதிருக்கும். பேச்சில் இன்னும் கிராமம் இனித்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரைப் பற்றி தெரிந்துகொண்டது – 'பெயர்- பழனிச்சாமி. ஊரை விட்டு வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன; மனைவி + இரண்டு பிள்ளைகளுடன் மும்பையில் வசிக்கிறார்; இங்கு வேறு யாரும் உறவினர்கள் இல்லை. மும்பைக்கு வந்தபிறகு இன்னும் ஊருக்கே சென்றதில்லை'. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக ஊர்ப்பக்கமே போகாமல் இருந்திருக்கிறார். நான் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, ஊரிலிருந்து வந்தபிறகு எல்லாத் தொடர்புகளும் விட்டுப் போய்விட்டதாக, தனக்கோ/எனக்கோ சொன்னார்.அவரிடம் செல்பேசிகூட இருந்ததாகப் படவில்லை.அதன்பிறகு நானாக எதுவும் கேட்டுக்கொள்ளாமலிருந்தேன். வண்டி மாதுங்காவைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.கேட்க வேண்டாம் என்று நாகரிகம் தடுத்தும் ஒரு சந்தேகத்தில் அவருடையது காதல் திருமணமா என்று மட்டும் கேட்டேன்.ஆமாம் என்று சொல்லி, வெளியே பிற கட்டடங்களுடன் ஒட்டாமல் தனித்து நின்ற ஒரு கட்டடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறருடைய காதல் கதைகளை விளக்கமாக கேட்பதில் எனக்கு விருப்பமில்லாததால் ( வேறென்ன பொறாமைதான் ), அத்துடன் அமைதியானேன். லோயர் பரேலில் இறங்கும்போது அவரைப் பார்த்தால், கண்களில் ஒரு சோகம் வந்திருந்தது. கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டேனோ? ஒருவேளை ஊரைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டிருப்பார்களாயிருக்கும். பிறிதொருநாள் சந்தித்தால் பேச்சுவாக்கில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்றபடி அலுவலகம் நோக்கி நடக்கத் துவங்கினேன்.
நாந்தாங்க பழனிச்சாமி. பம்பாய்க்கு வந்த இந்த பாஞ்சு வருசத்துல பழசெல்லாம் மறந்துட்டுதான் பொழப்பு ஓடிட்டிருக்கு. அன்னைக்கு ரயில்ல மொத தடவ பாத்தப்பவே காதல் கல்யாணமானு பட்டுனு அருளு கேட்டுட்டாப்ல. எனக்கு பழசெல்லாம் நாவத்துக்கு வந்து கண்ணெல்லாங்கூட கொஞ்சம் கலங்கிப் போயிருச்சு. அதுக்கப்புறம் ஒருநா சாயங்காலம் மறுநடைல பாத்துகிட்டப்ப, அத நெனப்பு வச்சிகிட்டு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டாப்ல. எனக்கு ரொம்ப சங்கடமாப் போயிருச்சுங்க. என்ன கேட்கக் கூடாதத கேட்டுட்டாப்ல? ஊர்லையே இருந்திருந்தா என்னென்னப் பேச்செல்லாம் எங்க காதுல விழுந்திருக்கும்? தங்கத்தையும் சேர்த்துதான் சொல்றேன். என்னயவிட அவளுக்குதான் ரெண்டுபங்கு பேச்சும்,ஏச்சும். 'மொத தடவ நா அவளப் பாத்தது ஒரு தைப் பொங்க சமயத்துலதான். அப்ப எங்கூரு வயசுப்பயலுங்க ஒரு பத்து பேருக்கு மேல புலவர் வகுப்புக்குப் பக்கத்ல இருக்ற பிள்ளாபாளையத்துக்கு போயிகிட்டு இருந்தோம். கருப்பத்தூர்ல இருந்து வந்து சொல்லி கொடுத்துட்டு இருந்தாரு ஒரு புலவரு. தைப்பொங்கலன்னைக்கு அவுரு தோட்டத்துக்கு எங்களயெல்லாம் கூப்ட்ருந்தாரு. அவுரு வூட்டுக்குப் பக்கத்துலையே சால போட்டுக் குடியிருந்தாங்க அவுரோட பங்காளி வீட்டுப் பொறந்தவளும் அவுங்க மவ தங்கமும். தங்கத்தோட அப்பாரு சிறுவயசுலயே தவறிட்டாப்ல. கண்ணாலங்காச்சியெல்லாம் மாமம் மொறைல அந்த புலவரு பாத்து செய்றதுதான். நாங்க போனப்ப, வாசல்ல இருந்த மரத்துல காப்புக்கட்டுக்கு வேப்பந்தள ஒடிச்சிகிட்டு இருந்தா தங்கம். அவளுக்கு தங்கம்னு பேரு வெச்சது பொருத்தந்தான். ஒரு நா பொழுது அங்கிட்டு இருந்துட்டு வந்ததுலயே தெரிஞ்சுபோச்சு, அவ கொணமும், வேல செய்யற பாங்கும். சிரிச்ச மொவமா கலையா இருந்தா. எனக்கு அவளப் பாத்துட்டு வந்ததுல இருந்து கிறுக்குப் பிடிச்சாப்ல ஆயிருச்சு.' என்னோடக் கதைய சொல்லிகிட்டே வந்ததுல கார் ரோட் டேசன் வந்ததையே நாங்கவனிக்காம விட்டுட்டனே… 'மீதிக்கதைய நாளைக்கு வந்து கேட்டுக்கறேன்'னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாப்ல அருளு. ஹும்….இனிமே பாக்கறோமோ இல்லையா. யாரு கண்டா?
அன்று மாலை அவராக அவருடையக் கதையை சொல்லத் துவங்கியதும் வேண்டாமென்று சொல்ல மனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேனா இல்லை அடுத்தவர் அந்தரங்கத்தை அறிந்துகொள்ளும் ஆழ்மன எண்ணமா என்று புரியவில்லை. ஆனால் கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது. அவர் மனைவி தங்கத்தை முதல் தடவை பார்த்ததும் காதல் வந்ததைச் சொன்னவர், யார் முதலில் காதலைச் சொன்னது என்பதை சொல்வதற்குள் நான் இறங்கிவிட்டேன். அடுத்து மீண்டும் ஒரு திங்கட்கிழமை காலை எதிர்பாராதவிதமாக பழனிச்சாமியை சந்தித்தபோது, பேச்சினூடாக அவர் கதையை நினைவூட்டினேன்.நான் எதிர்பார்த்த படியே இவர்தான் காதலை முதலில் சொல்லியிருக்கிறார். இருவரும் ஒரே சாதி என்பதும், திருமணம் செய்துகொள்ளும் முறையிலான உட்பிரிவுதான் என்பதும் அவருக்கு தைரியம் கொடுத்திருந்தாலும், தங்கம் என்ன சொல்லுவாரோ என்கிற தயக்கம் இருந்திருக்கிறது. அவருடன் பழகுவதற்காகவே புலவர் வீட்டில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் போய்வந்திருக்கிறார். தங்கத்திடம் கொஞ்சம் பேசிப்பழகியதும் நேரடியாக விருப்பத்தைச் சொல்லிவிட, அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்புக் கொண்டிருக்கிறார். தங்கத்தின் அம்மாவிடமும், அந்த புலவரிடமும் உடனே பேசி அவர்களும் இவருடையக் குடும்பத்தினரிடம் பேச வருவதாக சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடப்பதாக தெரிந்தாலும் அப்புறம்தான் பிரச்சினை துவங்கியதாக சொன்னார். அவருடனேயே கதை கேட்டுக்கொண்டே போய்விட்டு இன்னொரு வண்டியில் திரும்பிவிடலாமா என்று யோசிக்கும்போது லோயர்பரேல் வந்து விட்டதாக அவரே நினைவுபடுத்தவும் மனமில்லாமல் இறங்கவேண்டியதாகப் போய்விட்டது.
இன்னோரு நா கால வண்டியில போவும்போது கார் ரோட் டேசன்ல அருளு நின்னுகிட்டிருந்தாப்ல. வெளிய கையாட்டுனேன். பாத்துட்டு என்னோட பெட்டியிலயே ஓடி வந்து ஏறிகிட்டாப்ல. சௌக்கியமா இருக்கீங்களான்னு கேக்றதுக்கும் புதுசா ஒரு ஆளு கெடச்சா சந்தோசமாத்தான் இருக்கு.'ஒங்க கதைய நீங்க முடிக்கவே இல்லையே'ன்னு உரிமையோட கேட்டுகிட்டு, 'இன்னைக்காவது எறங்கறதுக்குள்ள எல்லாக் கதையும் சொல்லிடுங்க'ன்னு சிரிச்சாப்ல. 'ஹும்…சொல்றேன்'னு நானுஞ்சிரிச்சேன். “தங்கத்த எனக்குப் புடிச்சிருக்குன்னு அவங்கம்மாகிட்ட நாம்பேசுன மக்யாநாளு, தங்கத்தோட அம்மாவும், அந்த புலவரும் எங்க தோட்டத்துக்கு வந்து எங்க வூட்ல பேசுன அன்னைக்குதான் எங்களுக்கு சனி புடிச்சுது. எப்பவோ செத்துப் போன எங்கப் பாட்டனுக்கு ரெண்டு சம்சாரமாம். கலியாணமான கொஞ்ச நாள்ளையே மொத சம்சாரம் தவறிப் போயிருக்கு. அப்புறம் கட்ன ரெண்டாவது சம்சாரத்துக்குக்குப் பொறந்ததுதான் எங்க அம்மாவெல்லாம். செத்துப் போன அந்த மொதக் கெழவியோட கெளைல வந்தவருதான் தங்கத்தோட அப்பா. மொறையெல்லாம் கணக்குப் பாத்தா தங்கத்தோட அப்பாவும், நானும் பங்காளி மொறையாவுது. அதாவது தங்கத்துக்கு நாஞ் சித்தப்பா மொற! பெரியவங்க வுடுவாங்களா? ரெண்டு தலமொறைக்கு முன்னாடி இருந்ததெல்லாம் கணக்குப் பண்ணவேணாம்னு அந்த புலவரு பேசறாரு. ஆனா தங்கத்தோட அம்மா அதுக்கு ஒத்துக்கவே இல்ல. அன்னைக்கு நடந்ததெல்லாம் ஒரே சண்டையா முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் ஒருநா என்னையும் தங்கத்தையும் தனியா கூப்ட்டு பேசினாரு அந்த புலவரு. ரெண்டு பேரும் வலுசா கட்டிக்கனும்னு எங்க ஆசய சொன்னோம். 'சரி ஊரு ஒத்துக்காது. வெள்ளிக்கெழம விடியக்காலைல அய்யருமலைல வச்சி தாலிய கட்டிட்டு வந்துருவோம். நானும் வர்றேன். தாலி கட்டிட்டு வந்தபிற்பாடு ஊரெதுவும் பேசாது'னு சொல்லி எங்களுக்கு தெகிரியம் சொன்னாரு. அதே மாதிரி வெள்ளிக்கெழம அய்யருமலைக்குப் போனோம்.” கதைய சொல்லிகிட்டே வந்தேன், ஆனா அன்னிக்கும் கதைய முடிக்கிறதுக்குள்ள லோயர் பரேல் டேசன் வந்துருச்சு. “அண்ணே சாயங்காலம் வந்து அந்த படிக்கட்டு பக்கத்துலயே நிக்கிறேன் . நீங்க கையாட்டுங்க உங்க வண்டியிலேயே ஏறிக்கிறேன்”னு கத்திகிட்டே ஓடிட்டாப்ல.
ஒரே சாதியில் காதலித்தும் கூட ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை முளைத்துவிடுகிறது. ஊருக்குத் தெரியாமல் திருமணம் என்றாரே… இறுதியில் என்னதான் நடந்திருக்கும்? போகிற வண்டியிலேயே நின்றிருந்தது என் பார்வை.மாலையில் தெரிந்துவிடப் போகிறது என்று நினைத்தபடி அலுவலகம் செல்லத் தொடங்கினேன். இங்குள்ள வங்கி அலுவலகத்துக்கு நான் வந்திருந்தது என் நிறுவனம் செய்யும் திட்டப்பணியின் தகவல்நுட்ப உதவிக்காக. முதலில் ஒரு மாதத்துக்கும்,தேவைப்பட்டால் இன்னொரு மாதம் நீட்டித்துக் கொள்ளலாம் என்ற அளவிலும் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாகவே வங்கியின் தகவல்நுட்பப் பிரிவின் பிரச்சினைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் என்னை திரும்ப அழைத்துக் கொள்வதாக சனிக்கிழமை இரவே மடல் வந்திருந்தது. அடுத்த நாள் காலை டெல்லியில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் மற்றொரு திட்டப்பணி தொடர்பான சந்திப்புக்காக நானும் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அன்று மதியமே டெல்லிக்கான விமான பயணச்சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. மதியம் 1 மணிக்கு விமானம். வங்கியில் இருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அறைக்குத் திரும்பினேன். மாலையில் பழனிச்சாமி என்னைத் தேடக்கூடும். நான் மும்பையைவிட்டுப் போய்விட்டேன் என்பதை அவருக்குத் தெரிவிக்காமல் வந்த குற்றவுனர்ச்சியைவிட அவர் கதையின் முடிவு என்ன என்ற குழப்பம் அதிகமாக இருந்தது. விமானத்தில் ஏறியபின்னரும் மனம் பழனிச்சாமி திருமணத்திலேயே நின்றுகொண்டிருந்தது. ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருப்பார்களா? இவர்களாக ஓடி வந்திருப்பார்களா? குழந்தைகளுடன் திரும்பிப் போயிருந்தால் அவர்களுடையப் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்களா? மீண்டுமொருமுறை மும்பை வந்தால் பழனிச்சாமியை தேடிப் பிடித்து கேட்டுவிடலாம் என்ற சமாதானத்துடன் ஜன்னலில் பார்த்தேன். விமானம் மும்பையை விட்டு விலகிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மும்பைக்கு வராமலாப் போய் விடுவேன்?
அன்னைக்கு சாயங்காலம் திரும்பி வந்தப்ப லோயர் பரேல் டேசன்ல படிக்கட்டுக்குப் பக்கத்துல எட்டிப் பாத்தா அருளக் காணோம். அப்புறம் நெதம் காலைல வர்றப்ப கார் ரோட்லையும் , சாயங்காலம் போறப்ப லோயர் பரேல்லயும் எட்டிப் பாத்துகிட்டேதான் போறேன். ஒரு மாசத்துக்கு மேல ஆயிப் போச்சு. பம்பாய்ல ரெண்டு மாசம்தான் வேலன்னு சொல்லிகிட்டு இருந்தாப்ல. வேல முடிஞ்சு போயிருக்கும். போன் நெம்பரு கூட வாங்கி வச்சுக்காமப் போயிட்டேன். பம்பாய்க்கு வந்தபொறவு எங்க கதைய சொல்லியழுவக் கூட ஒரு நாதியத்துப் போனோம். தாலி கட்டிகிட்டு வந்தா ஏத்துக்குவாங்கன்னு கட்ன தாலியோட அவங்கம்மா கால்ல விழுந்துடலாம்னுதான் அய்யருமலைல தாலிகட்னகழுத்தோட ஊருக்குப் போனோம். வெளிய வந்து பாத்துட்டு வூட்டுகுள்ளப் போயிட்டாங்க அவங்கம்மா. சுத்திப்போடதாஞ் செந்தண்ணி கரச்சுட்டு வர்றதுக்கு போறாங்கன்னு நின்னுகிட்டு இருந்தோம். நடு வூட்ல தூக்குலத் தொங்குவாங்கன்னு யாரும் நெனைக்கவேயில்லியே. அன்னைக்கு ஊர்சனமெல்லாம் எங்களப் பேசாத பேச்சில்ல. அழுதழுது ஓஞ்சு போனா தங்கம். எங்கூட்டுக்கும் போகப் புடிக்காம பம்பாய்க்கு ரயிலேறி வந்து பதனஞ்சு வருசம் ஆகிப்போச்சு. சாதி சனம்னு யாருமில்லாம தனியாவே வளருதுங்க புள்ளைங்க ரெண்டும். பொறந்த ஊரு, சாதி சனம்னு இப்பதான் மனசு அல்லாடுது. இன்னொரு தடவ அருளு பம்பாய்க்கு வந்தா, வூட்டுக்குக் கூட்டிட்டுப் போய் புள்ளைங்ககிட்ட மாமான்னு சொல்லிக் காட்டனும். அருளு இன்னொருதரம் பம்பாய்க்கு வராமலாப் போயிடுவாப்ல?
பின்குறிப்புகள் :
1. இதனை வ.வா.சங்கத்தின் சங்கம்னா ரெண்டு போட்டிக்கு இணைக்கிறேன்.
2. இது தமிழ்மண நட்சத்திர வாரத்தின்போது பதிவிடுவதற்காக எழுதப்பட்டது. ஆனால் முழுமையாகாமல் இருந்தது, வவாசங்கத்தின் போட்டிக்காக முழுமையாக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

Wednesday, April 09, 2008
சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?
சுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா? போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப "கேபின் சீட்டா? அப்படின்னா கடைசில ஏறு"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு?’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.
கொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் "நீங்க மைக்ரோசாஃப்டா?" னு கேட்கிற தோரணைல "நீங்க கேபின் சீட்டா"னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.
வண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா பொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது!
தில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு "என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது"னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம்! அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு "நீ கிளட்ச அழுத்திப் பிடி"னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல "படக்"னு ஒரு சத்தம் கேட்டுச்சு. "ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு"னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்... கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.
கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் "அண்ணே..."னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே! கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். "சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ?"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், "வண்டி கால்(?) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல "போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். "தலைவா என்ன சொல்றீங்க?"னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். "ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்"னு அவர் அசால்ட்டா சொன்னார். "தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க"னு கேட்டா "எல்லாம் என் தலையெழுத்து"னு சொல்லி வருத்தப்பட்டார். "சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்"னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.
இப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு "எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க? இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்"னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.
கண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai - 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நிக்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.
பத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30!
திரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா? கேபின் சீட் இருக்கு ஓக்கே வா? னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அது ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு!
பின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)
பின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(

Subscribe to:
Posts (Atom)