அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…
முதன் முறையாக அக்காவை விட்டு ஜனனியை மட்டும் தனியாக கரூருக்கு கூட்டிவந்திருந்தேன். பகல் முழுவதும் விளையாடிக்கொண்டிருந்தவள் இரவானதும் ‘மாமா எங்கம்மாவுக்கு போன் போடுங்க எனக்கு பேசனும்போல இருக்கு’ என்றாள். அக்காவிடம் பேசி முடித்ததும் என்னிடம் மெதுவாக சொன்னாள் – ‘நைட்டானா அம்மா ஞாபகம் வந்திடுது மாமா’. எங்கே இரவு நேரத்தில் திருப்பூருக்கு போகலாமென அழப்போகிறாளோ என நான் முறைக்க, அவள் சொன்னது – ‘ஞாபகம் வந்துச்சு மாமா. ஆனா போன்ல பேசினவுடனே போயிடுச்சு’
ஜனனி : அம்மா இன்னைக்கு எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் காம்ப்பெட்டிஷன்ல நான்தான் ஜெயிச்சேன்.
அக்கா : (ஓட்டப்பந்தயத்திலோ எனும் ஆர்வத்தோடு) என்ன காம்ப்பெட்டிஷன் பாப்பா வச்சாங்க?
ஜனனி : தேங்காயா? தென்னமரமா? காம்ப்பெட்டிஷன்மா
அக்கா : (கடுப்போடு) உளறாத பாப்பா
ஜனனி : மிஸ் வரலம்மா. பெரிய க்ளாஸ் அக்காங்க தான் வச்சாங்க. தேங்கான்னு சொன்னா உக்காங்கதுக்கனும். தென்னமரம்னு சொன்னா நிக்கனும். எல்லாரும் அவுட்டாகிட்டாங்க.. நாந்தான் கடசில ஜெயிச்சேன்.
அக்கா : ???
ஜனனி : அம்மா, மாமா ஃபாரின் போறாங்கன்னு இன்னைக்கு எங்க மிஸ்சுகிட்ட சொல்லலாம்னு பாத்தேன்மா..
அக்கா : (அப்டியே ஷாக்காகி..) சொல்லிட்டியா?
ஜனனி : இல்லமா… மிஸ்சையே பாத்துகிட்டிருந்தேன். அவங்க கோபமாவே இருந்தாங்க. யாராவது எதாவது கேட்டா ‘Go and sit in your place’ சொல்லிட்டிருந்தாங்க… அதனால நானும் சொல்லல..
அக்கா : இப்ப எதுக்கு உங்க மிஸ்சுக்கிட்ட சொல்லனுங்கற?
ஜனனி : சும்மா ஒரு பந்தாவுக்குதான்…
கான்ஃபரன்ஸ் காலில்…
நான் : மித்ரா, நீயும் சித்தப்பாகிட்ட வர்றியா?
மித்ரா : அய்யோ சித்தப்பா நான் ஃபோன்குள்ள வரமுடியாது. ஃபோன் ஒடஞ்சிடும்.
ஜனனி : மித்ரா, ஃபோன்குள்ள போயிடாதா… போனீன்னா அப்பறம் சித்தப்பா காதுக்குள்ள போய் விழுந்துடுவ…
[nggallery id=2]
ஆகா பாத்து பாத்து இப்பயெ இந்த பந் தா ந்னா.. வந் ததும் மாமாவோட சேந்து செம பந்தா விடுவா போலயே..
ReplyDeleteம்ம்ம் பெண்குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கனுமாங்க்கா? ;)
ReplyDeletebeautiful and brilliant girl, try to upload video with her voice, i love children especially girl child, they bring beauty to the place where they are, convey my kind regards to her
ReplyDeleteஅன்புக்கு நன்றி சுகுமார். வீடியோ பதிவும் போடுகிறேன்!
ReplyDelete