Wednesday, August 11, 2010

குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

*
அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.

*
முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
ஒலியளவு அதிகமாயிருந்ததால்
தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!

31 comments:

  1. Nice....Ithuvum namma janani kutty thana?

    ReplyDelete
  2. கவிதைகள் அருமை

    ReplyDelete
  3. *
    //அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை.//

    - அற்புதம்.... பொம்மையாகிவிட்டேன் நானும்....

    *
    //முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
    ஒலியளவு அதிகமாயிருந்ததால்
    தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
    ‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!//

    - குழந்தைகளுக்கே உண்டான குறும்பு + வித்தியாசமான சிந்தனை.... நன்கு ரசித்தேன்....

    அருமையான கவிதைகள் நண்பரே.... நன்று....

    ReplyDelete
  4. அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை

    ReplyDelete
  5. /அன்புடன் உணவூட்டி
    அழகாய் உடையுடுத்தி
    செல்லமாய் அதட்டி
    பக்கத்தில் படுக்கவைத்து
    குழந்தை காட்டுகிற அன்பில்
    உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
    பொம்மை/

    Attakasam..
    arumai

    ReplyDelete
  6. Maragathavalli ArunachalamOctober 03, 2010 10:18 PM

    Pulavare Vanakkam

    Epdiirukeenga..
    Arumai
    Janani kutti ku vaazhthukkal.

    ReplyDelete
  7. நன்றி ஜான்.
    ஜனனியேதான் ;)

    ReplyDelete
  8. பாராட்டுக்கு நன்றிங்க கவினா!

    ReplyDelete
  9. வணக்கம் மரகதவள்ளி.
    நான் நலம்.
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் :)

    ReplyDelete
  10. அருமையான...புதுமையான...காட்சிப்பதிவு...நல்ல வித்தியாசமான காலம் சொல்லும் வாழ்த்தோசை...ஜனனி வளர்ந்து..பெரியவளாகி
    தன் பேரப்பிள்ளைகளுக்கு போட்டுக்காட்டி...மீண்டும் குழந்தையாகிச் சிரிக்கட்டும்...அதை கால எந்திரம் கொண்டு காண்போம்..வாருங்கள்....ரெடி 1 ...2...3...தொடருங்கள்...

    ReplyDelete
  11. முதல் முறையாகப் படிக்கிறேன்.நன்றாக இருந்தது. அதுவும் ரிமோட் கவிதையைப் படித்தவுடன் சிரித்து விட்டேன் .

    ReplyDelete
  12. முதல் முறை படிக்கிறேன்

    //முதன்முறை திரையரங்கிற்கு
    வந்திருந்த குழந்தை
    ஒலியளவு அதிகமாயிருந்ததால்
    தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
    ‘ரிமோட்’ கொண்டுவராததற்கு!//

    இது கலக்கல்.

    ReplyDelete
  13. Really Super,,,, I wish you to write more poetry lik this...

    ReplyDelete
  14. தொலைநோக்கு வாழ்த்துக்கு நன்றி கார்த்திகேயன்!

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி சுரேஷ். அது நடந்த நிகழ்வுதான்!

    ReplyDelete
  16. தீபா, பால்ராஜ், நாகா, ரமேஷ்குமார்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  17. wowwwwwww amazing kavithai if u rite more like this i will like it and i will also read it

    ReplyDelete
  18. மோகனரங்கம்May 07, 2011 9:28 PM

    அரச கவி என யார்யாரோ இருக்க.... கவிக்கு அரசனான நீயேன் அரச கவியாக கூடாது?

    ReplyDelete
  19. ApsbhagyalakshmiMarch 27, 2012 6:26 PM

    superana kavithai!!!!!!!!!!!!!!!!!!!!! first class!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

    ReplyDelete
  20. Sema Cute................ I Have No Words To Say......

    ReplyDelete
  21. I LOVE THIS KAVITHAI

    ReplyDelete
  22. https://www.facebook.com/photo.php?fbid=548097358607390&set=a.451739824909811.1073741829.449606475123146&type=1&theater

    ReplyDelete