Thursday, July 29, 2010

கிளி ஜோதிடம்

மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
[caption id="attachment_440" align="alignright" width="300" caption="கிளி ஜோதிடம்"]கிளி ஜோதிடம்[/caption]எனக்கு நாகதோஷம் இருக்கிறது.
திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கும்.
மணவாழ்க்கையும் மனம்போல அமையாது.
கோபுரம் இடிந்த காளஹஸ்தியில் தோஷ நிவர்த்தி பூஜை செய்யவேண்டும்.
ஒன்பது வெள்ளிக்கிழமை பாம்புக்கு பால் வைக்க வேண்டும்.
தகவல்களைக் கொட்டிவிட்டு பத்து ரூபாயைக் கொத்திக்கொண்டார் சரவணன் B.A
எனக்கு பிடிக்கவேயில்லை.
இன்னொரு பத்து ரூபாயைக் கொடுத்து மீண்டுமெடுக்க சொன்னேன்.
இம்முறை மன்மதன் படம் வந்திருந்தது.
எனக்கு காதல் திருமணம் தான் நடக்குமாம்.
ரதி போல மனைவியாம்.
மகிழ்ச்சியான மணவாழ்க்கையாம்.
சரவணன் சொல்லிக்கொண்டேப் போக எனக்கு குழப்பமாயிருந்தது.
கிளியைப் பார்த்தேன்.
ரதி முகமும் பாம்பு உடலுமாய்க் கூண்டுக்குள் இருந்தது…
கண்காட்சியில் பார்த்த நாகக்கன்னியைப் போல!

7 comments:

  1. அட.. :) அதாங்க கொஞ்சம் காதலும் கொஞ்சம் கோபமுமா இருப்பாங்கன்னு வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லி இருக்கார்.. :)

    ReplyDelete
  2. குழப்பமே இல்லாம எவ்ளோ தைரியமா ஜோசியம் படிக்கிறாரு அது போலவே இருங்க :)

    போட்டோவும் சூப்பர் !

    ReplyDelete
  3. அநுபவம் அழகாக உல்லது

    ReplyDelete
  4. @ முத்துக்கா,

    ஓ இதான் யதார்த்த‍மா? அனுபவசாலிகள் சொன்னா சரியாதான் இருக்கும்

    @ ஆயில்யன்,

    படிக்கிறவருக்கு ஏதுங்க குழப்ப‍ம்? கேட்கிறவங்களுக்குதான•..

    @ அமரன்,

    அனுபவம் இல்ல‍ங்க•.. கற்பனைதான்!

    ReplyDelete
  5. பணம்
    ஒரு முறை பிறந்து பல முறை சாகும் வாழ்க்கை - பணதிர்க்காக.

    ஒரு முறை தோற்றவனுக்கு பல முறை தோல்வியை பரிசாய் தரும் – பணம்.

    விலைக்கு போகும் அறிவு பணம் பண்ணும் பணம்...

    கட்ரோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு எவன் சொன்னது பணம் இருந்தால் இருக்கும் இடம் கூட சிறப்பு...

    பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபாய் கிடைக்கும் கையில் திருஓடு ஏந்தினால் ஆனால் பல வருடம் படித்து பட்டம் என்னும் காகிதம் ஏந்தினால் தெருஓடுதான்...

    வயிற்று பிழைப்புக்காக வேசியாக கூட ஆகியிருக்கலாம் ஆனால் ஆணாய் பிறந்து படித்து வீனாய் நிர்கின்றனர் பலர் – பணத்திர்காக...

    ReplyDelete
  6. கருத்துக்கு நன்றிங்க ராஜகோபால்!

    ReplyDelete
  7. எதுக்கு இந்த வேன்டாத வேலை? பொ இ புல்ல குட்டிகலை படிக்க வைங்கபா!

    ReplyDelete