[caption id="attachment_412" align="alignright" width="300" caption="களவாடிய கவிதைகள்"][/caption]மொட்டுக்கள் பூக்கட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்களாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்க இயலாத இதயம்போல!
o0o
இருவரும் சேர்ந்து ஊதிய பலூனில்
காற்றுக்குப் பதில் முத்தங்களை நிரப்பிக்கொண்டிருந்தோம்.
கயிறறுந்து பறந்துகொண்டிருந்தது காதல்!
o0o
உறங்கிய பிறகு உன் நெற்றியிலிட்ட
ஒற்றை முத்தத்தில் இரட்டைச்சத்தம் எப்படி?
இரண்டாவது சத்தம் கனவில் நானிட்ட பதில் முத்தமடா!
o0o
முழுவாழ்வையும் ஒரு நாளுக்குள் அடக்கி
அதன் பகல்பொழுதை நிறைவுசெய்து
இரவுப்பொழுதை துவக்கி வைத்திருக்கிறது
உனது பிரிவு.
o0o
கூந்தல் கவிதை,
கடையொன்றில் பார்த்த சேலையணிந்த ஒரு ரோஜாச்செடியிலிருந்து பறித்தது.
அலை கவிதை,
நண்பனின் காதலையேற்க முடியாது புலம்பிய கல்லூரித்தோழியிடம் களவாடியது.
பலூன் கவிதை,
திருவான்மியூர் கடற்கரையில் பலூனுக்குள் காதலை நிரப்பிக்கொண்டிருந்த ஜோடியிடம் அள்ளியது.
முத்தக் கவிதை,
முகம் தெரியாத தேவதையொருத்தி கனவில் வந்து விட்டுப்போனது.
பிரிவு கவிதை,
டாஸ்மாக் பாரில் ஆறாவது சுற்றுக்குப் பிறகு தன்னிலை புலம்பிய நண்பனிடம் திருடியது.
களவு கொடுத்தவர்கள் கண்டுபிடிக்கும்வரை
துணிவுடன் சொல்லிக்கொள்ளலாம்...
எல்லாமே எனது கவிதைகளென!
அருமை ..........
ReplyDeleteகவிதை மழை உங்கள் வலை தளம் எங்கும் ....
நன்றிங்க ராஜா!
ReplyDeleteஉங்கள அடிச்சக ஆளே கிடையாது
ReplyDeleteநெஞ்சத்தை களவாடிய கவிதைகள்......எங்களை மறந்து விடாதீர்கள்....திரும்பத் திரும்ப உங்கள் கவிதை மழை மழை பொழியட்டும்....
ReplyDeleteகவிதைகள் எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்குங்க.
ReplyDelete//களவு கொடுத்தவர்கள் கண்டுபிடிக்கும்வரை
துணிவுடன் சொல்லிக்கொள்ளலாம்…
எல்லாமே எனது கவிதைகளென!//
இங்கு, கண்டு பிடித்தேன் உங்களை. :-)
கவிதைத்தூறல் தொடங்கிருச்சு!!!!
ReplyDeleteலோகேஷ், ஸ்ரீதரன், ராஜாராம், அண்ணாமலை அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteஅருமையான கவிதைகள் அருள்..
ReplyDeleteசெந்தில்..
நன்றிங்க செந்தில்!
ReplyDeleteதிரும்ப வந்ததே பெரிய விசய,. இருங்க, கவிதைய படிச்சுட்டு வாரன்
ReplyDeletevery nice
ReplyDeleteஅன்பரே.. சிவசாம்ராஜ்.. உங்கள் கவிதைத் திறமையை களவாடிட ஆசை எனக்கு.....
ReplyDeleteகவிதைக்கு கவிதையிலேயே டிஸ்கி? :)
ReplyDelete//இருவரும் சேர்ந்து ஊதிய பலூனில்
ReplyDeleteகாற்றுக்குப் பதில் முத்தங்களை நிரப்பிக்கொண்டிருந்தோம்.
கயிறறுந்து பறந்துகொண்டிருந்தது காதல்!//
அற்புதமான கவிதை!
இளா, வருகைக்கு நன்றி.
ReplyDeleteவெண்டி, நன்றி!
அருட்புதல்வன், கவிதைத்திறமையா? இருக்கட்டும் இருக்கட்டும் ;)
முத்துலெட்சுமி, ஆமா டிஸ்கி போட்டுட்றது நல்லது தான ;)
முகிலன், நன்றி!
hello
ReplyDeletethat is one prizeb
// கடலுக்கும் கரைக்குமான எல்லையை
ReplyDeleteவரைய முடியாமல் தத்தளிக்கிறது அலை…
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்க இயலாத இதயம்போல! //
நல்லாயிருக்கு.. தொடர்ந்து களவாடவும்..... :-)
//களவு கொடுத்தவர்கள் கண்டுபிடிக்கும்வரை
ReplyDeleteதுணிவுடன் சொல்லிக்கொள்ளலாம்…
எல்லாமே எனது கவிதைகளென!//
அருமை. வாழ்த்துக்கள்
எல்லாமே அருமை
ReplyDeleteகளவாடிய கவிதைகள் ரொம்ப அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteசுபெர்
ReplyDeleteநன்றிங்க ரெத்திகா!
ReplyDeleteநன்றிங்க தர்சன்!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க சரவணன்!
ReplyDeleteநன்றிங்க உழவன்!
ReplyDeleteநன்றிங்க சுடர்விழி.
ReplyDeleteநன்றிங்க குரு ப்ரசாத்.
ReplyDeleteசுட்டாலும் பால் வெண்மை தரும் என்பது
ReplyDeleteஇங்கே பொருந்தும் தலைவா
kavithai super. but pakkathula irukkura anjalithan sariilla
ReplyDelete