Wednesday, October 03, 2007

எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

31 comments:

  1. //
    என் பிறந்தநாளுக்கு,
    கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
    உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
    உன் கைக்குட்டையை
    //
    ஏன்யா உன் ரசனை இவ்ளோ கேவலமா இருக்கு?

    சும்மா ஜோக்கு

    ReplyDelete
  2. நண்பரே,
    இடைவெளிக்குப்பின் புலம்பல், வழமை போல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்....

    என்றும் பசுமையான நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்

    ReplyDelete
  3. அருமை :) கடைசிவரியில் touch panniteenga (as usual)

    ReplyDelete
  4. சோகம் எதுக்குய்யா? மாத்துய்யா... நல்லாயிருக்கீரா? இப்போ எங்கே இருக்கீர்?

    ReplyDelete
  5. பிரதர் அட்டகாசம் ரொம்ப நல்லா இருக்குது இந்த புலம்பல் :(

    ReplyDelete
  6. O.Henry கதை மாதிரி கடைசியில் ஒரு twist! நல்ல கவிதை,ஆனால் உங்கள் கவித்திறனை எண்ணும் போது இன்னும் எதிர்பார்க்கிறேன். all the best!

    ReplyDelete
  7. சிவா,

    கைகுட்டையப் பத்தி சாதாரணமா நெனைக்காதீங்க :-) இதப் படிங்க

    ReplyDelete
  8. /நண்பரே,
    இடைவெளிக்குப்பின் புலம்பல், வழமை போல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்....

    என்றும் பசுமையான நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்/

    நன்றிகள் தமிழ்க்கடவுள். (உங்க பேரென்ன முருகனா???)

    ReplyDelete
  9. /அருமை :) கடைசிவரியில் touch panniteenga (as usual)/

    நன்றி மகேஷ்!!!

    ReplyDelete
  10. / சோகம் எதுக்குய்யா? மாத்துய்யா... நல்லாயிருக்கீரா? இப்போ எங்கே இருக்கீர்?/

    தல… சோகமெல்லாம் கவிதைக்குதான் :-) அடுத்து மாத்திடுவோம்.
    நலம் தான். ஊரெல்லாம் சுத்திட்டு நாளைக்கு மறுபடி ஐதராபாத் போறேன்.

    ReplyDelete
  11. /பிரதர் அட்டகாசம் ரொம்ப நல்லா இருக்குது இந்த புலம்பல் :(/

    அடப்பாவி… புலம்பல அட்டகாசமா இருக்குனு வேற சொல்றீங்களா??? ம்ம்ம் நடத்துங்க!!!

    ReplyDelete
  12. /O.Henry கதை மாதிரி கடைசியில் ஒரு twist! நல்ல கவிதை,ஆனால் உங்கள் கவித்திறனை எண்ணும் போது இன்னும் எதிர்பார்க்கிறேன். all the best!/

    ஆகா என்னோட கவித்திறனா :-))) காமெடி கீமெடி பண்ணலையே???
    நன்றிங்க தீம்ஷண்யா!!!

    ReplyDelete
  13. \\நான்’ எனும் தலைப்போடு
    என்னறைச் சுவரில்
    தொங்கும் உன் நிழல் (படம்)…//இது நல்லா இருக்கே...
    ஆனாலும் காதல் கிறுக்கு ரொம்பத்தான்..

    ReplyDelete
  14. இருபத்திமூன்று நாட்கள் இடைவெளியை 26 வரி கவிதையில் நிரப்பிவிட்டீர். அருமை.

    ReplyDelete
  15. சூப்பர் சூப்பர். :-)

    ReplyDelete
  16. //
    சிவா,

    கைகுட்டையப் பத்தி சாதாரணமா நெனைக்காதீங்க :-) இதப் படிங்க
    //

    அந்த லிங்க் வேலை செய்ய மாட்டிங்குது கொஞ்சம் ரிப்பேர் பண்ணிதரீங்களா??

    ReplyDelete
  17. ‘நான்’ எனும் தலைப்போடு
    என்னறைச் சுவரில்
    தொங்கும் உன் நிழல் (படம்)…

    என் கவிதைகளில்
    உனக்கு மிகப் பிடித்ததொன்றை
    பூத்தையலில் இழைத்து வைத்த
    அந்த வெள்ளை கைக்குட்டை…

    பரிசு கொடுக்க நினைத்த பொருள்களை
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்



    இவற்றில் எதனை பரிசென தருவது?
    நாளைய உன் திருமணத்திற்கு.


    அழகிய காதல் எல்லாம்
    சோகத்தில் தான் முடிய வேண்டுமா?

    ReplyDelete
  18. //என் பிறந்தநாளுக்கு,
    கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
    உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
    உன் கைக்குட்டையை//
    கைக்குட்டைய பரிசா வாங்கினா பிரிஞ்சுருவோம்னு ஒரு ஐதீகம் இருக்கே.

    நல்லா இருக்கு. அதுவும் அந்த கடைசி வரி முத்தாய்ப்பு

    ReplyDelete
  19. unnmayana kavithai manathai thoduvathil viyappethum illaye Arul... nallayirukku...
    (pathil eluthungal-nan ungal rasigan)

    ReplyDelete
  20. / இது நல்லா இருக்கே...
    ஆனாலும் காதல் கிறுக்கு ரொம்பத்தான்../

    கிறுக்குத்தனமில்லாம காதல் ஏதுங்க்கா??? :-)

    ReplyDelete
  21. /இருபத்திமூன்று நாட்கள் இடைவெளியை 26 வரி கவிதையில் நிரப்பிவிட்டீர். அருமை./

    இன்னும் ஒரு 3 நாள் இடைவெளி விட்டிருக்கலாமோ? ;-)
    நன்றி ராதா செந்தில்!!!

    ReplyDelete
  22. /வாழ்க்கையே ஒரு நிழல்தான்.... ஆனாலும் இவ்வளவு சோகம் வேண்டாமே.!/

    இரவு வந்ததும் நிழலும் மறைய வேண்டியதுதான்!!!
    சோகம் வேண்டாமா மேடம்??? ஓக்கே :-)

    ReplyDelete
  23. /சூப்பர் சூப்பர். :-)/
    நன்றி நன்றி!!! :)

    ReplyDelete
  24. /பரிசு கொடுக்க நினைத்த பொருள்களை
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்/

    நன்றிங்க!!!

    //அழகிய காதல் எல்லாம்
    சோகத்தில் தான் முடிய வேண்டுமா?/

    “அழ”கிய காதலாச்சே… :-)

    /It's me....NAAN.....Nanae thaan /
    :-)))

    ReplyDelete
  25. /கைக்குட்டைய பரிசா வாங்கினா பிரிஞ்சுருவோம்னு ஒரு ஐதீகம் இருக்கே./
    அப்படியா??? எனக்கு தெரியலைங்க இளா!!!

    /நல்லா இருக்கு. அதுவும் அந்த கடைசி வரி முத்தாய்ப்பு/
    :-) நன்றி!!!

    ReplyDelete
  26. /unnmayana kavithai manathai thoduvathil viyappethum illaye Arul... nallayirukku.../
    ம்ம்ம்….நன்றிங்க சஞ்சய்!!!

    /(pathil eluthungal-nan ungal rasigan)/
    ரசிகனா???? அதெல்லாம் எதுக்குங்க??? நண்பன்னே சொல்லுங்க!!!

    ReplyDelete
  27. Thanksss Arul...
    sogamthan niraya eluthukireerkal.
    irunthalum athu sugamanathuthane...
    ..mmmm...
    *nam kadasi santhippil
    ne kasakkiyathu ennavo
    un kaikkuddaithan...
    kasangipponathu
    en manathum....*

    ReplyDelete
  28. dear thala,

    ane nala mudeala,

    ReplyDelete
  29. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

    ReplyDelete
  30. என்னய்யா கூத்து... இது கூடவாத் தெரியாது...

    வந்த காதலைப் பரிசாக் குடுத்துட்டு...அடுத்த காதலுக்குப் போம்யா....

    ReplyDelete