Monday, September 10, 2007

காதல் கூடம் - 5





காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்
மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.

உன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ, காதல்? – உளறுகிறேன் நான்.
நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.

நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படி
கணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.

(தொடரும்…)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

(வாரநாட்களில் பணிச்சுமை அழுத்துகிறது + வரிசையாக வாரயிறுதிகளில் பயணங்களும் இருக்கின்றன. அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!)

32 comments:

  1. காதலை குழந்தையாக உருவகப்படுத்தி சொன்னது அழகு..

    "வந்து வந்து போகிறாய்
    போய்போய் வருகிறாய் " ரசித்தேன்.
    கண்ணாடி இடமாற்றமும் நல்ல கற்பனை.

    ReplyDelete
  2. //காதலும் முத்தம் தான்.
    காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
    காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
    காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
    கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!//

    இந்த மேட்டரு நமக்கு ரொம்ப பிடிச்ச மேட்டராச்சே.

    //‘நிற்கிறாய்’,
    ‘பார்க்கிறாய்’,
    ‘புன்னகைக்கிறாய்’,
    ‘பேசுகிறாய்’,
    என்பதையெல்லாம்…
    “அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
    கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.//

    செமை கலக்கல் இது.

    //உன்னிடம் ஒப்பிக்க
    காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
    நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.//

    பொளீர்னு அடிச்ச மாதிரி இருந்தது இந்தவரிகள். ரொம்ப ரசித்தேன்.


    //அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!) //

    இதைக் கண்டித்து நான் வலைப்பதிவை விட்டு வெளியேறிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியா குண்டைத் தூக்கிப் போடுவது

    ReplyDelete
  3. அருட்பெருங்கோ...!

    முற்றிலும் புதுமையான கவிதைத்தொடர்...

    புதுமைக்கு நன்றி...

    --தனி...

    ReplyDelete
  4. / காதலை குழந்தையாக உருவகப்படுத்தி சொன்னது அழகு../

    ம்ம்ம் இருவருக்கும் முதலில் பிறப்பது காதல் தானே? :)

    /"வந்து வந்து போகிறாய்
    போய்போய் வருகிறாய் " ரசித்தேன்.
    கண்ணாடி இடமாற்றமும் நல்ல கற்பனை. /

    ம்ம்ம் நன்றிங்க்கா!!!

    ReplyDelete
  5. /கலக்கிட்டீங்க அருட்பெருங்கோ! அதுவும் திங்கட்கிழமை காலையில்.... /
    :-)))) சரிங்க மேடம்… ம்ம்ம் ஞாயிற்றுக்கிழமை எழுதி திங்கட்கிழமை போடுகிறேன்!!!

    ReplyDelete
  6. ///காதலும் முத்தம் தான்.
    காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
    காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
    காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
    கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!//

    இந்த மேட்டரு நமக்கு ரொம்ப பிடிச்ச மேட்டராச்சே.//

    நந்தாதான் முத்த கவிதை வித்தகர்னு வலைப்பதிவுலகத்துக்கேத் தெரியுமே ;)

    //‘நிற்கிறாய்’,
    ‘பார்க்கிறாய்’,
    ‘புன்னகைக்கிறாய்’,
    ‘பேசுகிறாய்’,
    என்பதையெல்லாம்…
    “அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.
    கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.//

    செமை கலக்கல் இது./

    ம்ம்ம்… :)

    //உன்னிடம் ஒப்பிக்க
    காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
    நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.//

    பொளீர்னு அடிச்ச மாதிரி இருந்தது இந்தவரிகள். ரொம்ப ரசித்தேன். /

    என்ன இருந்தாலும் ஒரு ஆம்பள மனசு ஒரு ஆம்பளைக்குதான்யா புரியுது ;)


    //அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!) //

    இதைக் கண்டித்து நான் வலைப்பதிவை விட்டு வெளியேறிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியா குண்டைத் தூக்கிப் போடுவது /

    ஆகா, என்னங்க பண்றது. இந்த ஆணிப் புடுங்கற வேலை நம்மால முடியலங்க :)) அதான் எதாவது ஸ்க்ரூ கழட்ற வேலை கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கேன் :-)))))

    ReplyDelete
  7. /அருட்பெருங்கோ...!

    முற்றிலும் புதுமையான கவிதைத்தொடர்...

    புதுமைக்கு நன்றி...

    --தனி... /

    புதிய வார்த்தைகளில் ஒரே காதல்!!!
    அது என்னங்க தனி னு ஒரு பேரு… வித்தியாசமா இருக்கு!!!

    ReplyDelete
  8. அருள் நல்லா இருக்கு....

    \\(வாரநாட்களில் பணிச்சுமை அழுத்துகிறது + வரிசையாக வாரயிறுதிகளில் பயணங்களும் இருக்கின்றன. அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!) \\

    வேலைகளை முடிச்சிட்டு இன்னும் அழகான காதலுடன் வாங்க :)

    ReplyDelete
  9. கலக்கிட்டீங்க அருள்!!!!!!

    வரிகள் ரொம்ப அழகா இருக்கு!!!!!

    ReplyDelete
  10. "காதலுக்கு குழப்பம்.
    விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
    காதல் தெளிகிறது.

    காதலுக்கு பயம்.
    எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
    காதல் துணிகிறது."

    really i like these lines ...u hav said what excatly love means...

    ReplyDelete
  11. /அருள் நல்லா இருக்கு....

    \\(வாரநாட்களில் பணிச்சுமை அழுத்துகிறது + வரிசையாக வாரயிறுதிகளில் பயணங்களும் இருக்கின்றன. அதனால் ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறேன் – கண்டிப்பாக!) \\

    வேலைகளை முடிச்சிட்டு இன்னும் அழகான காதலுடன் வாங்க :)/

    நன்றி கோபி.
    பணிகள் முடிந்ததும் உற்சாகத்துடன் மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  12. /கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
    எந்த இயல் நடந்தாலும்
    எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
    நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்./

    என்னை
    கவர்ந்த இயல் மட்டுமல்ல
    கவிதையும் இயல்பாக இருக்கிறது.

    ReplyDelete
  13. என்னாச்சு அருள் காதல் கூடம் 6 தாமதம்... ... ஆணி நிறையவோ?

    காதலிக்காக மட்டுமல்ல
    காதல் கூடத்திற்காகவும்
    காத்திருத்தல் சோகம் தான் sorry சுகம்தான்.

    ReplyDelete
  14. வணக்கம் நண்பரே

    வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் போய் கொண்டிருந்த காதல் கூடம் ஏன் நின்று விட்டது?. மீண்டும் துவங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம் ஆவலாய்.

    சுமி

    ReplyDelete
  15. //நிற்கிறாய்’,
    ‘பார்க்கிறாய்’,
    ‘புன்னகைக்கிறாய்’,
    ‘பேசுகிறாய்’,
    என்பதையெல்லாம்…
    “அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.//

    மிகவும் அழகான வார்ததைகள்!


    //கல்விக்கூடமே நம் காதல்கூடமானதென நகைக்கிறேன்.
    கல்வி போல காதலும் கைகூடுமென நம்பிக்கை நல்குகிறாய்.//

    நல்ல choice of words!


    ஆவலோடு காத்திருக்கிறோம் அடுத்த பகுதியை வாசிக்க!

    ReplyDelete
  16. யோவ்,

    இப்பிடி உருகி உருகி எழுதிட்டு எதாவது கேட்டா... இல்லவே இல்லையேன்னு சாதிக்கிறது...??? :)

    நல்லாயிருக்கு ராசா....

    ReplyDelete
  17. நல்ல ரசனை

    'அழகுகிறாய்'

    ///மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
    காதல் பூரணமாகிறது.

    காதல் பூரணமாகையில்
    மூளை தூங்கிவிடுகிறது.
    மனம் விழித்துக் கொள்கிறது.
    விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது///

    ரசித்தேன்

    ReplyDelete
  18. நெடுந்தொடராக எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  19. kadalai kulandhai aakiyathai vidavum malalaiyin aasaikalai niraivetrum taayai pola endru sonna edathil kavithai kadhalai vendru nirkirathu.
    tamilil marumoli tara aasai padukiren.
    tamili eppadi taruvathu endru enakku sonneergal endraal adutha murai tamilil nichayam marumoli taruven

    eppadiku
    guhan

    ReplyDelete
  20. அழகுகிறாய்‍‍‍-- நிஜமாகவே அழகு

    ரசித்தேன்

    ReplyDelete
  21. /கலக்கிட்டீங்க அருள்!!!!!!

    வரிகள் ரொம்ப அழகா இருக்கு!!!!!/

    நன்றிகள் எழில் :)

    //really i like these lines ...u hav said what excatly love means...//

    ரொம்ப நன்றிங்க கோபால்… ஆனா நான் சொன்னதெல்லாம் காதலப் பத்தி என்னோட எண்ணங்கள மட்டும் தான். அது ஆளாளுக்கு மாறுபடலாம்.

    ReplyDelete
  22. :) – ராகவன் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

    ----

    /"Azhagu giraai"

    Arumaiyana vaarthai :-)/
    ஆமாம் கோபி, அழகான வார்த்தை :-)

    ReplyDelete
  23. /என்னை
    கவர்ந்த இயல் மட்டுமல்ல
    கவிதையும் இயல்பாக இருக்கிறது./
    நன்றிங்க திகழ்மிளிர்!!!
    /என்னாச்சு அருள் காதல் கூடம் 6 தாமதம்... ... ஆணி நிறையவோ?/
    ஆமாம் துரி!!! கொஞ்சம் அலைச்சல் + பணி!!!

    /காதலிக்காக மட்டுமல்ல
    காதல் கூடத்திற்காகவும்
    காத்திருத்தல் சோகம் தான் sorry சுகம்தான்./
    :-)))

    ReplyDelete
  24. /வணக்கம் நண்பரே

    வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் போய் கொண்டிருந்த காதல் கூடம் ஏன் நின்று விட்டது?. மீண்டும் துவங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம் ஆவலாய்.

    சுமி
    /

    சுமி,

    காதல் கூடம் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் துவங்கும். பொறுத்துக்கோங்க :-)
    ---

    /மிகவும் அழகான வார்ததைகள்!

    நல்ல choice of words!

    ஆவலோடு காத்திருக்கிறோம் அடுத்த பகுதியை வாசிக்க!/

    நன்றிகள் தீக்ஷண்யா. முடிந்தவரை விரைவாக தொடருகிறேன்!!!

    ReplyDelete
  25. /யோவ்,

    இப்பிடி உருகி உருகி எழுதிட்டு எதாவது கேட்டா... இல்லவே இல்லையேன்னு சாதிக்கிறது...??? :)

    நல்லாயிருக்கு ராசா..../

    இராம்… இல்லன்னா இல்லன்னு தான சொல்லமுடியும்??? :-)

    --

    /நல்ல ரசனை

    'அழகுகிறாய்'

    ரசித்தேன் /

    நன்றிகள் மதுமிதா!!1

    ReplyDelete
  26. /நெடுந்தொடராக எதிர்பார்க்கிறோம்./

    ராதா செந்தில் ,
    மொத்தம் 12 பகுதிகள் தான் :-)

    ReplyDelete
  27. /kadalai kulandhai aakiyathai vidavum malalaiyin aasaikalai niraivetrum taayai pola endru sonna edathil kavithai kadhalai vendru nirkirathu./
    நன்றிகள் குகன்!!!

    /tamilil marumoli tara aasai padukiren.
    tamili eppadi taruvathu endru enakku sonneergal endraal adutha murai tamilil nichayam marumoli taruven

    eppadiku
    guhan/

    இங்கே சென்று பாருங்கள் – மேலும் உதவி தேவைப்பட்டால் மடலிடுங்கள்.

    ReplyDelete
  28. /அழகுகிறாய்-- நிஜமாகவே அழகு

    ரசித்தேன்/

    மிக்க நன்றி ஆஷிக் காதலன்!!!

    ReplyDelete
  29. உங்கள் கவிதை தொடரை பாராட்ட வார்த்தைகளில்லை என்னிடம்.....
    மிகவும் அருமை !!!
    வாழ்த்துக்கள்!

    \நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.\\

    நான் ரசித்த வரிகள்....

    ReplyDelete
  30. /உங்கள் கவிதை தொடரை பாராட்ட வார்த்தைகளில்லை என்னிடம்.....
    மிகவும் அருமை !!!
    வாழ்த்துக்கள்!/

    மிக்க நன்றி திவ்யா :)

    \நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என
    முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.
    வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.\

    நான் ரசித்த வரிகள்..../

    :-)

    ReplyDelete