அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.
என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.
அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.
ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிறது.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.
இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிறபோது
நான் மரணிக்கிறேன்.
கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது...
மரணம்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
:))
ReplyDeleteகனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??
/கனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??
ReplyDelete/
நல்ல கேள்விதான். கனவு காண்கையிலேயே மரணிக்கும்போது, கனவு கலைவதை உணரவேண்டிய வலியிருக்காது. சரியா ஜி?
ஆனால் கனவு கலைவதை விரும்பாத எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதில்லை.
//கனவுக்கே உண்டான இயல்போடு
ReplyDeleteஅது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.//
ம்ம்.. நல்லாருக்கு! எல்லாருக்கும் வர்ற ஆசைதான். ஆமா ஏம்ப்பா இவ்ளோ சோகம்?
//கனவுக்கே உண்டான இயல்போடு
ReplyDeleteஅது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.//
ம்ம்.. நல்லாருக்கு! எல்லாருக்கும் வர்ற ஆசைதான். ஆமா ஏம்ப்பா இவ்ளோ சோகம்? //
ம்ம் நன்றிங்க காயத்ரி...
என்ன செய்றது... சிலருக்கு சந்தோசம் நாலுகால் பாய்ச்சலில் வந்தால் சோகம் பின்னாடியே எட்டுகால் பாய்ச்சலில் வருகிறது.
ஒரு கனவு போயின்
ReplyDeleteமறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம்
/ஒரு கனவு போயின்
ReplyDeleteமறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம் /
ராகவன்,
ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு தான்...
ஆனால் கண்கள்???
கலைகிற கனவின் பின்னே
அலைகிற கண்கள்...
கனவு கலைவதை காண்ச் சகியாமல்
இயக்கம் நிறுத்தும் மூளை...
கனவைப் போலவே
கலைந்து போகிற மனசு...
சவமாகிறது...உடல்!
அருட்பெருங்கோ,
ReplyDeleteரொம்பவே அழகான, ஆழமான கருத்துக்கொண்ட படைப்பு இது.
வாழ்த்துக்கள்
// G.Ragavan said...
ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம்
//
ரிப்பீட்டு
feelingsum oru sugamthaan thalaivaa
ReplyDeleteanubavikkiRavanukkuthaan athoota sugamtheRiyum
maraNaththiRkuppin kalayaatha kanavuthaan.....
azakaa irukku... ;-) thodarungkaL
appatiyee tracka maathungka thalaa... kadalleeyum konjam comedy pannungka....
athukkaaha kadala kai vittutaatheengka :))
natputan
mIRAn anwar
What a lovely blog...unga karpanai/kavidhai romba azhaga irukke :) reallllly fantastic!
ReplyDeletei got to real all of them.
- Yazhini
கனவுகள் சோகம் விதைக்கிறதா அருள் ?? :)))
ReplyDelete//அருட்பெருங்கோ,
ReplyDeleteரொம்பவே அழகான, ஆழமான கருத்துக்கொண்ட படைப்பு இது.
வாழ்த்துக்கள்//
ஆமாம் பிரேம் அழகான, ஆழமானதுதான் கனவு!!!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...
// G.Ragavan said...
ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம்
//
ரிப்பீட்டு //
அவருக்கு சொன்னதே உமக்கும் ரிப்பீட்டு!!!
//feelingsum oru sugamthaan thalaivaa
ReplyDeleteanubavikkiRavanukkuthaan athoota sugamtheRiyum
maraNaththiRkuppin kalayaatha kanavuthaan.....
azakaa irukku... ;-) thodarungkaL
appatiyee tracka maathungka thalaa... kadalleeyum konjam comedy pannungka....
athukkaaha kadala kai vittutaatheengka :))
natputan
mIRAn anநர் //
சோகமும் சுகம்தான்.
நானும் கனவைத் தொடரத்தான் பார்க்கிறேன்...
காதல் கவிதை பண்றதா? காமெடி பண்றதா?
ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றீங்களா?
//What a lovely blog...unga karpanai/kavidhai romba azhaga irukke :) reallllly fantastic!
ReplyDeletei got to real all of them.
- Yazhinஇ //
நன்றி யாழினி.
படித்துவிட்டு சொல்லுங்கள்.
//கனவுகள் சோகம் விதைக்கிறதா அருள் ?? :))) //
ReplyDeleteநவீன்,
கனவுகள் கலையும்போது , நினைவாக சோகத்தை விதைத்து விட்டே செல்கின்றன!!!
ரொம்ப நாளாக இந்த பக்கம் வரவில்லை.வந்த பொழுது இனிய கவிதை விருந்து:)
ReplyDelete///கனவு கண்டுக் கொண்டிருக்கும்போதே மரணித்தால் கனவு அப்படியே கண்டினியூ ஆகுமா??
///
அடஅடா ஜி அண்ணா...நீங்க இம்புட்டு பெரிய அறிவாளியா?என்னமா கேள்வி கேட்குறீங்க!ஒரு தடவை try பண்ணி பாருங்க.அப்போ கனவு கண்டினியூ ஆகுமா இல்லையா என்று தெரியும்.
dream is a celluloid movie developed and screened only once.
ReplyDeleteவந்தார் காதல் இளவரசன்..
ReplyDeleteஅழகிய கவிதையோடு. :-D
என்ன மனோ? வந்து வந்து பாக்கறேன்..புதுசா ஒன்னும் எழுதலயா? :(
ReplyDelete//ரொம்ப நாளாக இந்த பக்கம் வரவில்லை.வந்த பொழுது இனிய கவிதை விருந்து:)//
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி துர்கா.
/dream is a celluloid movie developed and screened only once./
ReplyDeleteஅருண்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
சில சமயம் ஒருமுறை மட்டுமே வருகிற கனவுகள், கண்களையேக் களவாடிக்கொண்டு போய்விடுகின்றன.
// அருட்பெருங்கோ said...
ReplyDelete/ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு
கலையும் கனவுக்கு
காவு கொடுப்பதா
ஏற்கோம் ஏற்கோம் /
ராகவன்,
ஒரு கனவு போயின்
மறு கனவு
காண்பதற்கு
இரவும் உண்டு
உறக்கமும் உண்டு தான்...
ஆனால் கண்கள்???
கலைகிற கனவின் பின்னே
அலைகிற கண்கள்...
கனவு கலைவதை காண்ச் சகியாமல்
இயக்கம் நிறுத்தும் மூளை...
கனவைப் போலவே
கலைந்து போகிற மனசு...
சவமாகிறது...உடல்! //
எந்தக் கண்களும்
கண்டதில்லை கனவை
கண்டவைகள் கனவல்ல
எந்தக் கண்களும்
கண்டதில்லை மனதை
காணாத கூட்டணிக்குக்
காணும் கண்களையும்
வாழும் வாழ்க்கையையும்
படையல் போட
மடையலாக வேண்டுமோ!
கசப்பென்றாலும்
களிம்பைத் தின்பவன்
நலம் பெறுவான்
நஞ்சென்று புரிந்தும்
கசப்பைத் தின்பவன்?
//வந்தார் காதல் இளவரசன்..
ReplyDeleteஅழகிய கவிதையோடு. :-D //
நன்றி மை ஃப்ரெண்ட்...
//என்ன மனோ? வந்து வந்து பாக்கறேன்..புதுசா ஒன்னும் எழுதலயா? :( //
ReplyDeleteதினமும் எழுதுகிற அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை காயத்ரி.
/எந்தக் கண்களும்
ReplyDeleteகண்டதில்லை கனவை
கண்டவைகள் கனவல்ல
எந்தக் கண்களும்
கண்டதில்லை மனதை
காணாத கூட்டணிக்குக்
காணும் கண்களையும்
வாழும் வாழ்க்கையையும்
படையல் போட
மடையலாக வேண்டுமோ!
கசப்பென்றாலும்
களிம்பைத் தின்பவன்
நலம் பெறுவான்
நஞ்சென்று புரிந்தும்
கசப்பைத் தின்பவன்?
/
நன்றி ராகவன்.
பலியிடப்பட்டதை
இனியெங்கே படையல் போட?
எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.
ReplyDeletehttp://theyn.blogspot.com/2007/06/7-9.html
வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு.
ReplyDelete/ எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க./
ReplyDeleteசிறில்
பதிவு போட்டாச்சு :)
/ வித்தியாசமான கவிதை. ஆனாலும் மனசு பாரமாச்சு./
ReplyDeleteநன்றிங்க நளாயினி...
கொஞ்சம் சோகக்கவிதை முயற்சி பண்ணினேன்...அதான்...