Wednesday, June 27, 2007

யாரோ!

சொற்களைத் தந்தாய்.
கவிதை செய்தேன்.
யாரோ வாசிக்கிறார்!

மொட்டுக்களைத் தந்தாய்.
மலரச் செய்தேன்.
யாரோ சூடிக் கொள்கிறார்!

பனித்துளித் தந்தாய்.
மழை செய்தேன்.
யாரோ நனைகிறார்!

கடைசியாக உன் கல்மனம் தந்தாய்.
காதல் சிலை செய்தேன்.
விலைபேசி யாரோ வாங்கிச் செல்கிறார்…

ம்ம்ம்…
ஆசையாக செதுக்கினாலும்
சிற்பிக்கு சொந்தமாகிடுமா சிலையும் ?

(கொஞ்ச நாள் முன்னாடி தமிழோவியத்தில் வந்த எனது கவிதை.)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

6 comments:

  1. //ஆசையாக செதுக்கினாலும்
    சிற்பிக்கு சொந்தமாகிடுமா சிலையும் ?//

    நல்லாருக்கு அருள்!

    ReplyDelete
  2. நன்றி காயத்ரி.

    சிற்பிக்கு சிலை கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் :)

    ReplyDelete
  3. //சிற்பிக்கு சிலை கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் :) //

    ம்ம்.. இப்படி ஒரு கவிதை கிடைச்சிருக்காதே? :))

    ReplyDelete
  4. ஏன் இவ்வளவு சோகம் அருட்பெருங்கோ. உங்கள் சோக மழையில எங்களையும் நனைய வெச்சுட்டீங்களே.

    ReplyDelete
  5. வாங்க காயத்ரி,

    /ம்ம்.. இப்படி ஒரு கவிதை கிடைச்சிருக்காதே? :))/

    சிலையும் கவிதையும் ஒன்னா? :)

    ReplyDelete
  6. வாங்க நந்தா,

    / ஏன் இவ்வளவு சோகம் அருட்பெருங்கோ. உங்கள் சோக மழையில எங்களையும் நனைய வெச்சுட்டீங்களே./

    என்னப்பா காதல் கவிதை எழுதுனா என்ன இவ்வளவு காதலா னு கேட்கறாங்க, சோகமா எழுதுனா என்ன இவ்வளவு சோகம்னு கேட்குறாங்க... :)
    என்ன பண்ணலாம்?

    ReplyDelete