Friday, December 22, 2006

நா செஞ்ச குத்தமென்ன?

கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
கண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…
நாங்கண்ணொறங்கும் நேரத்துல இமையாலப் போத்திவிட்டு
ஒன்னையுந்தான் தூங்கவச்சேன், ஒன்னாவேக் கனாக்காண!
காணும்போதே கலஞ்சுபோச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

ஒன்னுமில்லாத என்னெஞ்சும் ஒன்னப்பத்தி நெனச்சதால
பூத்துத்தான் குலுங்குச்சே பூக்காடா மணந்துச்சே
பூவாசம் அத்தனையிலும் உன்வாசம் தேடித்தான
அலையா நானும் அலஞ்சுதான் திரியயில
காடெல்லாம் கருகிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன?

யெ(ன்)உசுருக்கொரு உருவமிருந்தா ஒன்னப்போல இருக்குமின்னு
மங்காத ஒ(ன்) உருவத்த மனசுக்குள்ள மடிச்சுவச்சேன்
நீயே போனபின்ன மனசெதுக்கு? உசுரெதுக்கு?
மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

( கண்ணீரில் குளித்தக் கவிதை இது!
காதலில் குளித்த கவிதைகள் -> இங்கே! )

18 comments:

  1. "நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
    கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…
    நாங்கண்ணொறங்கும் நேரத்துல இமையாலப் போத்திவிட்டு
    ஒன்னையுந்தான் தூங்கவச்சேன், ஒன்னாவேக் கனாக்காண!
    காணும்போதே கலஞ்சுபோச்சே, நா செஞ்ச குத்தமென்ன?"...

    அன்பின் ஆழமும்...
    அதனால் வந்த சோகமும்
    அழகான வரிகளில்!

    வாழ்த்துக்கள் அருள்!

    ReplyDelete
  2. செஞ்ச குத்தம் ஏதுமில்ல
    செதுக்கும் உளி தேவயில்ல
    செல எனக்குத்தேவயில்ல!
    நா ஒருத்தி இல்லயின்னா
    நானிலமே இருண்டிடுமா?
    இருள விட்டு
    வெளிய வாங்க!
    இருக்குதுங்க பலபணிகள்!
    மனச மாத்திக்கிட்டு
    மறுபடியும் பொறந்திடுங்க
    கண்ணீரில் கவியெழுதி
    காதலுக்குள் பொதஞ்டாம
    பன்னீரில் கவியெழுதி
    பாமரன முன்னேத்த
    புது முயற்சி செய்யலாமே?

    ReplyDelete
  3. kavidhaiyil sogathai pizhinjirukeenga.

    idha padicha piriju pona endha kadhalium kandipa thannoda kadhalanidam serndhu viduval ;-)

    by,
    priyanka.

    ReplyDelete
  4. கிராமத்து நடை நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. ஏனிந்தச் சோகம்?
    முட்டிடலாமோ
    வேதனையின் வேகம்?
    அணைத்த பின்னும்
    தொடர்வதுதானே
    காதலின் யாகம்! ;-)

    உயிருக்கு உருவமிருந்தால் காதலியைப் போல இருக்கும்னு சொல்ற கற்பனை மிக அழகு. ரசித்தேன்.

    ReplyDelete
  6. அன்பு அருட்பெருங்கோ...

    காதலின் வலியை வலிமை மிக்க வரிகளின் முலம் கவிதையாக படைத்திருக்கிறிர்கள்

    \\சுரெதுக்கு?
    மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
    உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன? \\

    இது கற்பனையாக இருக்க வேண்டுக்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. /
    அன்பின் ஆழமும்...
    அதனால் வந்த சோகமும்
    அழகான வரிகளில்!

    வாழ்த்துக்கள் அருள்!/
    நன்றி சத்தியா... ஆழம் அதிகமானாலே ஆபத்துதானோ?

    ReplyDelete
  8. / செஞ்ச குத்தம் ஏதுமில்ல
    செதுக்கும் உளி தேவயில்ல
    செல எனக்குத்தேவயில்ல!
    நா ஒருத்தி இல்லயின்னா
    நானிலமே இருண்டிடுமா?
    இருள விட்டு
    வெளிய வாங்க!
    இருக்குதுங்க பலபணிகள்!
    மனச மாத்திக்கிட்டு
    மறுபடியும் பொறந்திடுங்க
    கண்ணீரில் கவியெழுதி
    காதலுக்குள் பொதஞ்டாம
    பன்னீரில் கவியெழுதி
    பாமரன முன்னேத்த
    புது முயற்சி செய்யலாமே?/

    இராம.வயிரவன்,
    கவிதையாகவே மறுமொழிந்ததற்கு நன்றி!!

    /நா ஒருத்தி இல்லயின்னா
    நானிலமே இருண்டிடுமா?
    இருள விட்டு
    வெளிய வாங்க!/

    கண்ணே நீ போன பின்னே
    காட்சியெல்லாம் இருள்தானே?

    /மனச மாத்திக்கிட்டு
    மறுபடியும் பொறந்திடுங்க
    கண்ணீரில் கவியெழுதி
    காதலுக்குள் பொதஞ்டாம/

    ஒன்ன மறக்க மனசதான் மாத்தனும்
    இன்னொரு மனசு எங்க போயி வாங்க?

    ReplyDelete
  9. / kavidhaiyil sogathai pizhinjirukeenga.

    idha padicha piriju pona endha kadhalium kandipa thannoda kadhalanidam serndhu viduval ;-)/

    கவிதை, காதலுக்கு மட்டும் சொந்தமில்லையே? சோகமும் கொஞ்சம் சொந்தம் கொண்டாடட்டும்!!!

    அப்படியா சொல்றீங்க? காதலியைப் பிரிந்தவர்கள் நிம்மதியடைவார்களாக!!!

    ReplyDelete
  10. //கிராமத்து நடை நல்லா இருக்கு.//

    நன்றி சேதுக்கரசி... தொடர்ந்து வாசித்து கருத்து சொல்கிறீர்கள்!!!! மிகவும் நன்றி...

    ReplyDelete
  11. //தொடர்ந்து வாசித்து கருத்து சொல்கிறீர்கள்!!!!//

    ப்ரியனுக்கு நன்றி! அவர் தானே அறிமுகம் செய்துவைத்தார்! :)

    ReplyDelete
  12. //நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
    கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…//

    அருட்பெருங்கோ... அருமையாக இருக்குய்யா இந்தக் கவிதை

    ReplyDelete
  13. /ஏனிந்தச் சோகம்?
    முட்டிடலாமோ
    வேதனையின் வேகம்?
    அணைத்த பின்னும்
    தொடர்வதுதானே
    காதலின் யாகம்! ;-)/

    கவி(தமிழ்)ப்பேரரசே என்னை மன்னியும்!
    காதல் பாடம் கற்றுக் கொள்ள உம்மிடமே சேர்ந்து விடுகிறேன் :)

    /உயிருக்கு உருவமிருந்தால் காதலியைப் போல இருக்கும்னு சொல்ற கற்பனை மிக அழகு. ரசித்தேன்.//

    நன்றி ராகவன்...

    ReplyDelete
  14. அன்பு கோபிநாத்

    /காதலின் வலியை வலிமை மிக்க வரிகளின் முலம் கவிதையாக படைத்திருக்கிறிர்கள்/

    காதலும் "வலி"மையானதுதான்... என்ன வலிமைக்குள்ளேதானே வலியும் இருக்கிறது!!!

    \\சுரெதுக்கு?
    மூச்சையும் நிறுத்திப் பாத்தா மூச்சுக்குள்ளும் நீயிருக்க,
    உசுருந்தான் போகலையே, நா செஞ்ச குத்தமென்ன? \\

    /இது கற்பனையாக இருக்க வேண்டுக்கிறேன்./

    நன்றி கோபி!!!

    உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாப்பா கா.பி,

    / eppaadiyya ippadilam..kalakunga./

    பொழுது போகலன்னா/தனியா இருந்தா இப்படித்தான்... கிறுக்குவேன்!!!

    ReplyDelete
  16. சேதுக்கரசி,

    ///தொடர்ந்து வாசித்து கருத்து சொல்கிறீர்கள்!!!!//

    ப்ரியனுக்கு நன்றி! அவர் தானே அறிமுகம் செய்துவைத்தார்! :)/

    ப்ரியனுக்கு என்னுடைய நன்றிகளும்!!!

    ReplyDelete
  17. வாங்க தேவ்,

    ///நெஞ்சுக்குள்ள ஒன்னவச்சா பாக்கவு முடியாதுன்னு
    கண்ணுக்குள்ள ஒன்னவச்சி கண்ணாடிலப் பாத்துக்கிட்டேன்…//

    அருட்பெருங்கோ... அருமையாக இருக்குய்யா இந்தக் கவிதை/

    அப்படியா? மகிழ்ச்சி தலைவா!!!
    உங்க பதிவுல பழைய கதையெல்லாம் எடுத்து விட்றீங்க போல?

    ReplyDelete