நான் - வானம்…
நீ - நிலம்…
என் காதல் - மழை!
குடை விரித்தது யார்?
--------------------------------------------------------
முன்பு
உன்னையேத் தாங்கியபோது
காற்றைப் போல லேசாக…
பிரிந்த பின்னோ
உன் நினைவைத் தாங்கவே
பூமியைப் போல பாரமாக…
என் இதயம்!
--------------------------------------------------------
ஒரு விழி நான்
மறு விழி நீ
சேர்ந்தே கனவு கண்டாலும்
சேரத்தான் முடியவில்லை.
சேர்ந்தே நனைகிறோம்!
--------------------------------------------------------
பிரிந்து விடு என்றாய்.
பிரிய முடியும்.
விட?
--------------------------------------------------------
உனக்கு எழுதி அனுப்பியக் கவிதையெல்லாம்
என்னைப் பார்த்து அழுகிறது.
எழுதியும் உனக்கு அனுப்பாதக் கவிதையோ
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
--------------------------------------------------------
எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறாய்.
காதலிக்கும்போது மற்றவரிடமிருந்து
பிரியும்போது என்னிடமிருந்து!
--------------------------------------------------------
காதலியின் சுகம்
காதல் கவிதையில்…
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!
--------------------------------------------------------
அழுதுவழியும் இந்தக் கவிதைகளை
நீ ஒதுக்கிவிடுவாய் என்றெனக்குத் தெரியும்.
அழுகிற போது மட்டும் என் கவிதைகள்
அழகாயிருப்பதில்லை.
நீயும்தான்…!
"முன்பு
ReplyDeleteஉன்னையேத் தாங்கியபோது
காற்றைப் போல லேசாக…
பிரிந்த பின்னோ
உன் நினைவைத் தாங்கவே
பூமியைப் போல பாரமாக…
என் இதயம்!"...
ம்... பிரிவு என்பது ரொம்ப கனமானதுதான்.
ஏன் என்ன ஆச்சு? காதல் கவிதைகள் எல்லாம் மாறி இன்று அழுது வழியும் கவிதைகள் ஆனது ஏன்?
/ம்... பிரிவு என்பது ரொம்ப கனமானதுதான்./
ReplyDeleteம்ம்.. பிரிவில் ஒவ்வொரு நொடியும் கனமான கணங்கள்!!!
/ஏன் என்ன ஆச்சு? காதல் கவிதைகள் எல்லாம் மாறி இன்று அழுது வழியும் கவிதைகள் ஆனது ஏன்? /
என் கவிதைகளும் கொஞ்சம் சோகத்தை விரும்புகின்றன போலும்!!!
அட்றாசக்கை அட்றாசக்கை !!!!!!!!
ReplyDelete//பிரிந்து விடு என்றாய்.
ReplyDeleteபிரிய முடியும்.
விட?//
இது அருமை!
வேணாம் அருட்பெருங்கோ....நாங்கள் உங்கள் மூலமாய் காதல் ரயிலில் பிரயாணம் செய்யவே விரும்புகிறோம் இந்த அழுகைக்கவிதை பிரிவு சோகமெல்லாம் வேணாமே ப்ளீஸ்?
ReplyDeleteஷைலஜா
//எப்போதும் என்னைத் தனிமைப் படுத்துகிறாய்.
ReplyDeleteகாதலிக்கும்போது மற்றவரிடமிருந்து
பிரியும்போது என்னிடமிருந்து!//
பிரிதலின் வலியும் சுகம்தான்!! இல்லை அருள் ? சோகம் கவிதைகளில் மட்டுமா ? ;))
//அட்றாசக்கை அட்றாசக்கை !!!!!!!! //
ReplyDeleteரவி,
இதென்னப் பாராட்டா இல்லை எதுவும் உள்குத்தா?
/ இது அருமை! /
ReplyDeleteசேதுக்கரசி,
கவிதையைத்தானே சொல்றீங்க?
ஏன்னா அந்த சூழல் ரொம்ப கொடுமையானது(ன்னு சொல்வாங்க)!
/ NICE /
ReplyDeleteகாண்டீபன்,
The Memory - Never It Comes to End
//கவிதையைத்தானே சொல்றீங்க?//
ReplyDeleteஆமாங்க (சந்தேகம் தீர்ந்ததா?)
Short & sweet ;)
ReplyDeleteவாங்க ஷைலஜா,
ReplyDelete/வேணாம் அருட்பெருங்கோ....நாங்கள் உங்கள் மூலமாய் காதல் ரயிலில் பிரயாணம் செய்யவே விரும்புகிறோம் இந்த அழுகைக்கவிதை பிரிவு சோகமெல்லாம் வேணாமே ப்ளீஸ்?
ஷைலஜா
/
எனக்கும் காதல் ரயிலில் பயணம் செய்யவே ஆசை. இடையில் கொஞ்சம் சோகமும் இருந்துவிட்டுப் போகட்டுமே...
வாங்க நவீன்,
ReplyDelete/பிரிதலின் வலியும் சுகம்தான்!! இல்லை அருள் ?/
இல்லை நவீன் ;)
/ சோகம் கவிதைகளில் மட்டுமா ? ;))/
கவிதைகளிலும் :))
/ஆமாங்க (சந்தேகம் தீர்ந்ததா?)/
ReplyDeleteதீர்ந்தது தீர்ந்தது :)