Monday, November 14, 2005

சமையல்!

தமிழ்மணத்துல பதியணும்னா மூணு பதிவு போட்டிருக்கனுமாமே!!

என்ன எழுதலாம்னு (மர)மண்டையக் குடைஞ்சு யோசிச்சதுல சரி நம்மள பல பேர் பல சமயத்துலப் பாராட்டின சமையல் குறிப்பையே எழுதிடுவோம்னு முடிவு பண்ணி இத எழுதியிருக்கேன்! படிக்கிறதோட நிறுத்திடாம உடனே இந்த சமையலப் பண்ணிப் பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க!

1.அடுப்பைப் பற்ற வைத்துக்கொள்ளவும்.
2.அகலமானப் பாத்திரத்தில் தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விடவும்.
3.சரியாக 26 நிமிடம் 17 நொடியில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
4.மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது சூடான வெந்நீர் தயார்!

பயன்கள் :

1. சரியான அளவுத் தண்ணீரோடு கலந்து கொண்டால் அதிகாலையில் குளிப்பதற்கேற்ற வெதுவெதுப்பான வெந்நீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. 47 நிமிடம் 35 வினாடி ஆறவைத்து விட்டால் நோயாளிகளுக்கேற்ற குடிநீராகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3. அதே சூட்டில் ஒரு துணிமுடிச்சை முக்கி எடுத்துக் கொண்டால் உதைபட்ட நண்பனுக்கு ஒத்தடம் கொடுக்க உதவும்.

செய்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ/விளக்கம் தேவைப்பட்டாலோ கேட்பதற்குத் தயங்க வேண்டாம்!

சந்திப்போம்!

4 comments:

  1. பயனுல்ல தகவல்!
    பகிந்து கொண்டதுக்கு நன்றி!!

    ReplyDelete
  2. சீக்கிரமே
    முட்டை வேக வைப்பது எப்படி
    என்று ஒரு பதிவு போடலாம் என்று
    இருக்கிறேன்...
    அதற்கும் உங்கள் ஆதரவு தேவை...

    பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. ஆகா! அருட்பெருங்கோ.......வெந்நிக்கு செய்முறை விளக்கமா....முட்டைய வேக வக்குற திட்டம் வேற இருக்கா? நான் ஏதோ சமையல் குறிப்போன்னு...அடிச்சுப் பிடிச்சு வந்தேன். உண்மையிலே நல்ல ரெசிப்பி குடுங்களேன் (சைவ அசைவ வகைகள்)

    ReplyDelete
  4. கவலைப் படாதீர்கள் இராகவன்...
    கைவசம் நிறைய அசைவக் குறிப்புகள் ( சமையலில் தான்! ) உள்ளன...
    என்னுடையப் பதிவுகளை இன்னும் சிலர்
    படிக்க ஆரம்பிக்கட்டும் எனக்
    காத்திருக்கிறேன்...

    ReplyDelete