Monday, July 26, 2010

போடா கருவாயா

அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

[caption id="attachment_421" align="alignright" width="300" caption="போடா கருவாயா"]போடா கருவாயா[/caption]



பத்து வயதிலேயே நான் ‘பல்பு’ வாங்கியது யாருக்கும் தெரியாது.
நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது பதினோராம் வகுப்பில் சேர்ந்த ஆர்த்தியைத் தவிர.
அவ்வளவு நெருக்கம்.
பாவாடை தாவணியில் அவள் சைக்கிளோட்டி பள்ளிவரும்பொழுது
பசுபதிபாளையம் பழையப்பாலம் போல உள்ளம் தடதடக்கும்.
அவள் சிரிப்பது அலமு சிரிப்பது மாதிரியே இருந்தபொழுதொன்றில் சொன்னேன்
‘எனக்கு உன்ன பிடிச்சிருக்கு’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

பள்ளியில் நான் ஆர்த்தியைக் காதலித்தது யாருக்கும் தெரியாது.
கல்லூரியில் எனக்கு ஜூனியராக சேர்ந்த ப்ரியாவைத் தவிர.
அவ்வளவு நெருக்கம்.
நூலகத்தில் அவள் கூந்தல்கோதியபடி புத்தகம்படிக்கும் பாவனையில்
ஆறு செமஸ்டர் அரியரும் க்ளியரானது போல மனம் சிறகடிக்கும்.
அவள் சிரிப்பது ஆர்த்தி சிரிப்பது மாதிரியே இருந்தபொழுதொன்றில் சொன்னேன்
‘ஐ லவ் யூ’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

கல்லூரியில் நான் ப்ரியாவைக் காதலித்தது யாருக்கும் தெரியாது.
வேலைசெய்யும் நிறுவனத்தில் என் டீமில் சேர்ந்த தர்ஷிணியைத்தவிர.
அவ்வளவு நெருக்கம்.
கண்கள் கணினித்திரைக்கு ஒளியூட்டியபடி அவளின் மருதாணிவிரல்கள் கீபோர்டு வாசிக்கையில்
பிறந்தநாளன்று திருமணம்போல இதயம் இசையமைக்கும்.
அவள் சிரிப்பது ப்ரியா சிரிப்பது மாதிரியே இருந்தபொழுதொன்றில் கேட்டேன்.
‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

நான் தர்ஷிணியைக் காதலித்தது யாருக்கும் தெரியாது.
பெற்றோரின் ஏற்பாட்டில் என்னைத் திருமணம் செய்து கொண்ட என் மனைவியைத் தவிர.
அலமு என்கிற ஆர்த்தி ப்ரியதர்ஷிணியாகிய என் மனைவியைத் தவிர.

14 comments:

  1. சூப்பர்.. :)

    ReplyDelete
  2. சூப்பரோ சூப்பர். :)

    ReplyDelete
  3. செம்ம ..:)) ஐ லைக் இட் வெரி மச்
    :))))))))))))))))))))))))

    ReplyDelete
  4. இது கதயா இல்ல?

    ReplyDelete
  5. have you got married?

    ReplyDelete
  6. மதன், சென்ஷி, ஷ்ரெக், நன்றிகள்.

    ராம்பிரசாத், இன்னும் அந்த விபத்து நடக்கல. இதுவும் கற்பனைதான்!

    ReplyDelete
  7. hmmmm very nice...d girl who going 2 marry U s very lucky...:)

    ReplyDelete
  8. @கூல்,

    நன்றிங்க•.. ஆனா அப்ப‍டியெல்லாம் பொசுக்குனு சொல்லிட முடியாதுங்க :)

    ReplyDelete
  9. போடா கருவாயான்னா நான் இத்தன நாளா ஐ லவ் யூ ன்னு நெனச்சிட்டு இருந்தேனே.. அப்போ அப்டியில்லையா!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. @விந்தை மனிதன் :)))

    ReplyDelete
  11. ஹ்ம்ம்ம்ம்....அருட்பெருஙொ உஙலுக்கு காதல் ...கவிதை ...இதைத் தவிர வெர எதுவும் தெரியாத...?!?!

    ReplyDelete
  12. உங்க வைப் பேரு ஆர்த்தியா? நீளமான பேரை வெச்சு ஒரு கதை எழுதலாமுன்னு இப்போ தாங்க தெரியுது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. arut suuuper yeppdi epdi yellam yeluthiringa by kalai & chitu

    ReplyDelete