Tuesday, June 10, 2008

துவக்கி வைத்த குழந்தை

ஓவியம் வரைய
நீர் வண்ணங்களைக்
கலக்கி வைத்திருந்தேன்.
தரையில் கொட்டி
துவக்கி வைத்தது
ஒரு குழந்தை.

*

ஊரிலிருந்து வந்த மாமன்
தான் புதிதாய் வாங்கி வந்த
ஏரோப்ளேன்,
கண்டெயினர் லாரி,
இரண்டடுக்கு பஸ்,
சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
எல்லா வண்டிகளையும்
ஓட்டி சலித்தக் குழந்தை
பழையபடி
அவனை மண்டியிட சொன்னது...
ஆனை சவாரிப் போக!

25 comments:

  1. me the firstu...

    ReplyDelete
  2. இரண்டு கவிதையும் நல்லா இருக்குங்க..

    //ஓவியம் வரைய
    நீர் வண்ணங்களைக்
    கலக்கி வைத்திருந்தேன்.
    தரையில் கொட்டி
    துவக்கி வைத்தது
    ஒரு குழந்தை.//

    குழந்தைகள் எதை செய்தாலும் அதில் ஒரு குறும்புத்தனமும், கவிதைத்தனமும் இருக்கின்றன..

    ReplyDelete
  3. அசத்தல் அருள்,

    இரண்டு கவிதைகளும் அருமை..!

    முதல்கவிதை அருமையோ அருமை...!

    படிக்கும்பொதே "அட" அப்படின்னு தோணிச்சுங்க...!

    ReplyDelete
  4. ... குழந்தை செய்யும் எல்லா சேட்டையுமே ரசிக்கும்படி இருக்கும் பொழுது உங்கள் வரிகள் ரசனை நிறைந்தவயாய் இருக்கின்றன.. வாழ்த்துக்கள்!!

    ....ஆனா உங்க மாமா பட்ட பாட யூகிச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு அருள்!!!

    ReplyDelete
  5. //தரையில் கொட்டி
    துவக்கி வைத்தது
    ஒரு குழந்தை.//

    யாரந்த குழந்தைன்னு கும்மிய ஆரம்பிக்க மாட்டேன் தல. நல்லா இருந்தது இந்த கவிதை :)

    ReplyDelete
  6. @ செந்தில்,

    நீங்க தான் பர்ஸ்ட்டு... ஆனா அதுக்கெல்லாம் பரிசு கிடையாது ;)

    ம்ம்ம் அதான் குழந்தைகளப் பத்தி என்ன எழுதினாலும் நல்லாருக்குன்னு சொல்லிட்றாங்க போல!

    ReplyDelete
  7. /அசத்தல் அருள்,

    இரண்டு கவிதைகளும் அருமை..!

    முதல்கவிதை அருமையோ அருமை!/

    ரொம்ப ரொம்ப நன்றிங்க இலக்கியரே ;)

    /படிக்கும்பொதே “அட” அப்படின்னு தோணிச்சுங்க!/

    அப்படியா? 'அட' க்கும் ஒரு நன்றி!

    ReplyDelete
  8. /குழந்தை செய்யும் எல்லா சேட்டையுமே ரசிக்கும்படி இருக்கும் பொழுது உங்கள் வரிகள் ரசனை நிறைந்தவயாய் இருக்கின்றன.. வாழ்த்துக்கள்!! /

    அப்படின்னா வாழ்த்துகள் அனைத்தும் குழந்தைகளுக்கே உரியவை இல்லையா? ;) நன்றிங்க ஆல்பர்ட்!

    /ஆனா உங்க மாமா பட்ட பாட யூகிச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு அருள்!!!/

    எங்க மாமா எல்லாம் எதுவும் அனுபவிக்கலங்க. ஆனா ஜனனிகிட்ட நாங்கதான்... ( வளந்த பின்னாடி படிச்சா திட்டுவாளோ? நான் சொன்னத நீங்க மறந்துடுங்க ஆல்பர்ட் :) )

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா.. !!!
    அக்கா நம்பர் குடுத்தீங்கனா, இப்பவே ஜனனிய கூப்பிட்டு உங்க அடுத்த ட்ரிப்லயே உங்கள கவனிக்க சொல்லிடுவேன்!!! என்ஜாய் அருள்!!!

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா இருக்கு :) குழ்ந்தைங்களுக்கு செயற்கை பொம்மை விளையாட்டை விட அன்பானவங்களோட நேர்ல விளையாடவே ரொம்ப பிடிக்கும். உங்க பாப்பாக்கு அடுத்த கதை கூட தயாராகுது:) வருங்காலத்துல பாப்பா அத படிச்சுட்டு இதெல்லாம் ஒரு கதையானு கேக்காம இருந்தா சரி :)

    ReplyDelete
  11. ஊரிலிருந்து வந்த மாமன்
    தான் புதிதாய் வாங்கி வந்த
    ஏரோப்ளேன்,
    கண்டெயினர் லாரி,
    இரண்டடுக்கு பஸ்,
    சுற்றிக்கொண்டே இருக்கும் ரயில்…
    எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினான்.
    எல்லா வண்டிகளையும்
    ஓட்டி சலித்தக் குழந்தை
    பழையபடி
    அவனை மண்டியிட சொன்னது…
    ஆனை சவாரிப் போக!



    cute exprasion ARUTPERUNGO sir... nice kavithai ..
    VaLtHuKkAl...

    ReplyDelete
  12. "ஓவியம் வரைய
    நீர் வண்ணங்களைக்
    கலக்கி வைத்திருந்தேன்.
    தரையில் கொட்டி
    துவக்கி வைத்தது
    ஒரு குழந்தை."

    பின்னீட்டீங்க.. :)

    ReplyDelete
  13. ஆல்பர்ட்,

    கி கி கி ஜனனியப்பத்தி உங்களுக்கு தெரியல. மொதல்ல தொலைபேச்சுல இருந்து நீங்க தப்பிக்கனும் ;)

    ReplyDelete
  14. கவிதைகள் சூப்பர்!!!

    ReplyDelete
  15. @சுபா,

    விளையாட்டா? ரணகளமே நடத்திடுவா. :)

    நீங்க கதையெல்லாம் எழுதி வையுங்க. ரெண்டு வருசத்துக்குள்ள அவள கமெண்ட் போட வச்சிட்றேன். :)

    ReplyDelete
  16. நன்றிங்க மலர்ப்ரியன். அடுத்த தடவையும் நீங்க சார்னு கூப்பிட்டீங்கன்னா..... :(

    ReplyDelete
  17. நன்றிங்க சரவணக்குமார்!

    ReplyDelete
  18. நன்றிங்க சின்னப்பையன்!

    ReplyDelete
  19. காதல்கவிதை வகை போல இது பாசக்கவிதை வகை..

    ஜனனி நல்ல மாமா கிடைச்சாரும்மா உனக்கு.. :)

    ReplyDelete
  20. //ஓவியம் வரைய
    நீர் வண்ணங்களைக்
    கலக்கி வைத்திருந்தேன்.
    தரையில் கொட்டி
    துவக்கி வைத்தது
    ஒரு குழந்தை.//

    எதையுமே பத்திரமாவெக்க தெரியாதா அண்ணா உங்களுக்கு.....?? ;-)

    அந்த ஆனை நீங்க தானே...?? ;-)

    நல்லா இருந்தது அண்ணா கவிதை.....!!

    ReplyDelete
  21. /காதல்கவிதை வகை போல இது பாசக்கவிதை வகை../

    எல்லாம் ஒரு சிறுமுயற்சிதாங்க்கா :)

    /ஜனனி நல்ல மாமா கிடைச்சாரும்மா உனக்கு../

    இத எந்த அர்த்தத்துல சொல்றீங்கன்னு தெரியலையே

    ReplyDelete
  22. /எதையுமே பத்திரமாவெக்க தெரியாதா அண்ணா உங்களுக்கு..??/

    இனிமே உங்ககிட்ட கொடுத்துடறேன்!

    /அந்த ஆனை நீங்க தானே??/

    நானே பூனை சைஸ்ல இருக்கேன் :(

    /நல்லா இருந்தது அண்ணா கவிதை..!!/

    நன்றிங்க ஸ்ரீ!!!

    ReplyDelete
  23. Attakasam arul....very nice abt the second kavithai...the end was a fantastic one..really a childish one

    ReplyDelete
  24. சேர்ம ராஜாJune 27, 2008 12:10 AM

    Rompa Super Annachi..

    ReplyDelete
  25. ரகு, சேர்மராஜா இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete