Thursday, April 24, 2008

அம்மா வாழ்ந்த மச்சுவீடு

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடு அது.
மச்சு வீடென்றால் எல்லோருக்கும் தெரியும்.

அத்தைப்பெண், மாமன்மகனான
அம்மாவும் அப்பாவும்
சிறுவயது முதல் விளையாண்ட வீடு.
அவர்களின் திருமணமே அந்த வீட்டில்தான் நடந்ததாம்.

அப்புறம் அப்பா காலத்தில்
தொழில் நலிவடைய, வீடு அடமானத்திற்குப் போனது.
கடைசியாக அப்பாவும் நலிவடைய
அவரைக்காப்பாற்ற வீட்டை விற்றோம்.
வீடும்போனது.
கொஞ்ச நாளில் அப்பாவும் போனார்.

நாங்கள் இந்த வாடகை வீட்டுக்கு வந்து
இருபது ஆண்டுகள் முடியப்போகிறது.
இத்தனை நாள் சேமிப்புடன், வங்கிக்கடனையும் சேர்த்து
நேற்றுதான் பழைய மச்சு வீட்டையே விலைபேசி முடித்தேன்.
மீண்டும் தான் வாழ்ந்த வீட்டுக்கே போகிற மகிழ்ச்சி அம்மாவுக்கு.

இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
என் பன்னிரண்டு வயது மகள்.
பி.கு : இது 101% கற்பனை.

22 comments:

  1. :-)m nalla irukku......!!

    //இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
    தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
    என் பன்னிரண்டு வயது மகள்.//

    :-)ithu than life......!!

    ReplyDelete
  2. //பி.கு : இது 101% கற்பனை//

    :-)ungalukku 12 vayasula ponnu irukkanu kettuduvanganu thane...ithu karpanainu solreenga.......?!?

    ReplyDelete
  3. ராசா, தலைப்ப பாத்துட்டு கதையோ கட்டுரையோ இருக்கும்னு பாத்தா, கவித போட்டுருக்கே. பதிவின் எதார்த்தம் ரசிக்க வைத்தது. ஆனால் இத 'கவிதை'ன்னு வகைப்படுத்தியிருப்பது உன் கொலவெறிய காட்டுது ;-)

    ReplyDelete
  4. @ஸ்ரீ,

    வாழ்க்கையை விளக்கியதற்கு நன்றிகள்.

    /:-)ungalukku 12 vayasula ponnu irukkanu kettuduvanganu thane ithu karpanainu solreenga.?!?/

    அதுக்கு (மட்டும்) இல்லங்க. எங்கப்பாவே எப்பவாவது இத படிச்சார்னா வருத்தப்பட கூடாதில்ல. அதுக்காக தான்.

    ReplyDelete
  5. @ பிரேம்

    ரசிச்சதுக்கு நன்றி தல.
    கொலவெறியா? என்னோட பதிவுல கவிதை, சிறுகதை னு இருக்கிற வகைகள 'நான் கவிதை னு நெனைக்கிறது', 'நான் சிறுகதை னு நெனைக்கிறது' - இப்படி புரிஞ்சுக்குங்க. பிரச்சனையிருக்காது :)

    ReplyDelete
  6. இத ‘கவிதை’ன்னு வகைப்படுத்தியிருப்பது உன் கொலவெறிய காட்டுது ;-) நானும் வழிமொழிகின்றேன்.

    நிதர்சனம் தான் பதிவு முழுதும் தெரிகின்றது அதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து. அருமை :)

    ReplyDelete
  7. /இத ‘கவிதை’ன்னு வகைப்படுத்தியிருப்பது உன் கொலவெறிய காட்டுது நானும் வழிமொழிகின்றேன். /

    செட்டு சேந்துட்டாய்ங்கய்யா... செட்டு சேந்துட்டாங்க!

    /நிதர்சனம் தான் பதிவு முழுதும் தெரிகின்றது அதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து. அருமை /

    நன்றி ஸ்ரீ. நிதர்சனம்னு ஒரு வகை உருவாக்கிடலாமா? ;)

    ReplyDelete
  8. அருமை அருமை.
    கதையின் தொடர்ச்சியாக 12 வயது மகலளுக்கும் அந்த வாடகை வீட்டை வாங்கி கொடுத்துடலாம்....( சும்மா...).உண்மைலயே நல்ல கர்ப்பனை.

    ReplyDelete
  9. நல்ல கனமான விஷயம். மொழியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல கவிதை கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  10. @சந்தோஷ்,

    வாங்கிட்டாப்போச்சு! நன்றிங்க சந்தோஷ்.

    ReplyDelete
  11. @சுந்தர்,

    நன்றிங்க சுந்தர். இன்னும் நம்ம பதிவ வாசிக்கிறீங்களா? அந்த காதல் கவிதைக்கு அப்பறம் இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டீங்கன்னு நெனச்சேன்!

    ReplyDelete
  12. அருமை, அருட்பெருங்கோ!!

    ReplyDelete
  13. அருமை மாப்பி...;)

    ReplyDelete
  14. வீரசுந்தர், கோபி,

    இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  15. 200 % அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மிக்க நன்றிங்க அபூ!!!

    ReplyDelete
  17. இந்த வீடு கவிதை என்னுடைய "என் வீட்டுக் கதை" பதிவை மீண்டும் படிக்கத் தூண்டியது....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  18. நானும் படித்தேன் அருணா.ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நினைவ கொடுக்கும். சிலது பசுமையான நினைவுகள். சிலது துயரமான நிகழ்வுகள். இழப்பைத் தந்த வீட்டை கொஞ்சம் வெறுப்போடுதான் பார்க்கிறோம் இல்லையா?

    ReplyDelete
  19. சொல்ல மறந்தே போனேன். ‘இற்று விழப் பார்க்கிறது..' எனத் துவங்கும் விக்ரமாதித்யன் கவிதை படிச்சிருக்கீங்களா.? வீட்டைப் பற்றிய அற்புதமான கவிதை அது.!

    ReplyDelete
  20. படிச்சதில்லைங்க சுந்தர்.
    உங்க மறுமொழி பாத்துட்டு இணையத்துல தேடினேன். ஒன்னும் கிடைக்கல :(

    ReplyDelete
  21. Romba Nalla irukku Arul.........Cute one......

    ReplyDelete
  22. 101 % Karpanaiyaai irrundhalum...

    இன்று வாடகை வீட்டை காலி செய்து கிளம்பும்போது
    தான் வாழ்ந்த வீட்டையே திரும்பி பார்த்தபடி வருகிறாள்
    என் பன்னிரண்டு வயது மகள்.

    ...engira varikal manasai thoduthunga...

    Really superb...

    ReplyDelete