Wednesday, April 23, 2008

என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

*

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

*

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

*

நம் பிரிவுக்குப் பிறகு
128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை.
*

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

*

40 comments:

  1. //கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்.///

    கண்டிப்பா எங்க மனதை
    கிழிக்கிறீங்க....
    I like this... very nice kavithai...

    Senthil,
    Bangalore

    ReplyDelete
  2. //நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை.//

    :-) super.....!!

    ReplyDelete
  3. @ஸ்ரீ,

    நன்றிங்க. நன்றிங்க. (கணக்கு சரியா போச்சா? ;) )

    ReplyDelete
  4. /கண்டிப்பா எங்க மனதை
    கிழிக்கிறீங்க./

    அவ்ளோ கொலவெறியோட இருக்கா கவுஜ?

    /I like this very nice kavithai/

    நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  5. அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை . அருமையான கவிதைகள். ஆத்தா இவரு மறுபடியும் பொலம்ப ஆரம்பிச்சுட்டாரு :'(

    ReplyDelete
  6. ஓ இன்றைக்கு புதன் கிழமையா? உன் பொலம்பல பாத்தவுடனே தான்யா நினைவுக்கு வருது

    //நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை.
    //

    :-(((

    ReplyDelete
  7. kavidhaikal.....
    vasanangalai matdithu madithu....
    pala varigalil eludhvadhu.....

    ReplyDelete
  8. ஸ்ரீ,

    நன்றி மச்சி. ஆத்தாகிட்ட சொல்லாதப்பா பயமா இருக்கு!

    ReplyDelete
  9. பிரேம்,

    புதன்தான் புலம்பலுக்கு சிறந்த நாள்னு பிபிசி ல சொன்னாங்களே நீங்க பாக்கலயா? அப்பறம் எதுக்கு அவ்ளோ பெரிய சோகம்?

    ReplyDelete
  10. கோவிந்தராஜ்,

    இது உங்களுக்கு இப்போதான் தெரியுமா? :)

    ReplyDelete
  11. கவிதை அருமை..!

    என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா? அப்படின்னு கேட்டிருந்தால் ஒரு அற்புத முரண்தொடை ரெடி..

    ReplyDelete
  12. /கவிதை அருமை..!/

    நன்றிங்க சுரேகா!

    /என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்? இறைவா?/

    இது நல்லாருக்கே :)

    ReplyDelete
  13. சேர்ம ராஜாApril 24, 2008 12:18 AM

    Super...

    ReplyDelete
  14. subash - srilankaApril 24, 2008 12:34 AM

    automatically i cry when i read ur pains

    ReplyDelete
  15. subash - srilankaApril 24, 2008 12:52 AM

    கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்

    even in last my heart expects u only..... when will u understand?????????? ask that girl........

    ReplyDelete
  16. நன்றி சேர்மராஜா!

    சுபாஷ், நீங்க ஏன் இவ்வளோ சீரியஸ் ஆகறீங்க? புலம்பல் கவுஜையெல்லாம் படிச்சா அனுபவிக்கவும் கூடாது; ஆராயவும் கூடாது. ரசிச்சுட்டு விட்டுடுங்க.

    (ஆனாலும் உங்களோட அக்கறைக்கு நன்றி :) )

    ReplyDelete
  17. புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ..
    எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்..

    .

    ReplyDelete
  18. /புலம்பல் கவிதையை படிச்சுட்டு ரசிக்கனுமா.. அது எப்படி ..? புலம்பலை கேட்டா நாங்களும் கொஞ்சம் வருத்தப்படனும் இல்லலயா அடுத்தவங்க கஷ்டத்த ரசிக்கலாமான்னு ../

    ஆகா... இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா நான் நெஜமாலுமே அழுதுறுவேன்.

    /எல்லாபுலம்பலையும் படித்தேன்..ஹ்ம்..வழக்க்ம் போல ந்ல்ல புலம்பல் ..உண்மையான புலம்பல்.. /

    அக்கா...அது என்ன உண்மையான புலம்பல்? உண்மையாலுமே என்ன புலம்ப வச்சிடுவீங்க போல இருக்கே...

    ReplyDelete
  19. subash - srilankaApril 24, 2008 4:01 AM

    நம் பிரிவுக்குப் பிறகு
    128 முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
    நீ பரிசளித்த பொருட்களை./

    i am sure that, u also have love failture

    ReplyDelete
  20. subash - srilankaApril 24, 2008 4:06 AM

    i am so effected by ur poems becoz it may be true in my life also

    ReplyDelete
  21. சுபாஷ், உங்களுக்கு என் மேல ஏன் இப்படியொரு கொலவெறி? இந்த விசயத்த இதோட நிறுத்திடுவோம். சிரிச்சுப்படிக்கிற மாதிரி வேற எதாவது எழுதறேன் விடுங்க!

    இளா, நன்றிங்க!

    ReplyDelete
  22. தினேஷ்April 24, 2008 8:09 PM

    அருமை...

    ReplyDelete
  23. உங்க கவிதைய பாத்து உங்க ஆலு உங்கள ஆத்திகனா மாத்திடுவாங்க.கவலபடாதீங்க‌ அருமையான‌ புலம்பல்.....

    ReplyDelete
  24. அருள்April 25, 2008 1:04 AM

    நல்ல கவிதை.......
    ஏதோ நாத்திகம், பெரியாரியம் அப்படின்னி பேசுவிங்கன்னு ஆவலோட வந்தா......கவிதை எழுதி ஏமாத்திபுட்டிங்களே.........

    ReplyDelete
  25. சந்தோஷ்,

    மறுபடியும் மொதல்ல இருந்தா? என்னால முடியல! :) நன்றி.

    அருள்,

    அதயெல்லாம் என்ன விட அழகா, தெளிவா பேசற பெருந்தலைகள் பதிவுலகத்துல இருக்காங்க. அதனால நாம கவுஜயெழுதி கவுஜயாக வாழ்வோம்.

    ReplyDelete
  26. கிழிக்க மனமின்றி
    பத்திரப்படுத்திய உன் கடிதங்களை
    வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
    மனம்

    Unmaya apadiye soilliteingale siva.... :(
    really superb

    ReplyDelete
  27. kavithai ellam nallathan irukku ... aana indha ezhuthu irukku parunga adhudhan kanna romba kashta paduthudhu. kombu ezhuthuku munna pinna varudhu, kaalum apadiye... vera edhachum font use panna koodadha thozhare?

    ReplyDelete
  28. @ சோஃபியா,

    உண்மையா? அட ஏங்க நீங்க வேற...

    @ராதா,

    நன்றிங்க. எழுத்து பிரச்சினைக்கு காரணம் உலாவி(browser)யாதான் இருக்கனும். ஏன்னா எனக்கு Internet explorer, Firefox ரெண்டலயும் சரியாவே தெரியுது. நீங்க என்ன browser, என்ன version பயன்படுத்துறீங்கனு சொல்லுங்க.

    ReplyDelete
  29. Ohhhh I was not knowing that still I have to run 121 times of my gifts by her,,

    Thanks for the lines,

    ReplyDelete
  30. Aiyyyyaaa....

    unga kaala kaattunga.......

    ReplyDelete
  31. naan latest (thamizhla epdi solradhu??)... firefox than ubayoga padutharen aanalum.. unga kavidhaigalai en thoazha(i) galuku anupanumna ezhuthu prechna perum prechnaya irukku.. yenna ellarukum enayathalam ulava mudiyadhu. kattupadu adhigam. natpu pathi kavidhai ketrundhen pirithoru pakkathula... innum varaliye saga.....

    ReplyDelete
  32. hi friend,

    instead of 128 it will be nice if it is 143,

    with love,
    sivakumar bangalore

    ReplyDelete
  33. azhagesan.sundaramOctober 21, 2009 2:38 AM

    நீயும் தேவதைதான்.
    நம் காதலும் தெய்வீகமானதுதான்.
    என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?

    //Excellent arul..

    ReplyDelete
  34. Kilintha manathai melum kilikindrathu ungal KAVITHAI-gal(KAL)...

    Really nice...

    ReplyDelete
  35. ஒப்பனீங் நல்லா இருக்கு ஃபினிசிங் சரியில்லையப்பா!

    ReplyDelete
  36. unnai parththa poothu annil undana matram @@@@@@@@@@@@@@@@@

    ReplyDelete