Saturday, April 12, 2008

நட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு!

மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாள் காதலி.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறாள் தோழி!

*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!

*

நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!

*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!

***

கடந்த சில நாட்களாக எனது வலைப்பதிவினைத் திறப்பதில் பிரச்சினைகள் இருந்திருக்கும். இதுவரை, தளம் (domain) மட்டும் சொந்தமாக வைத்துக்கொண்டு, ப்ளாகர் சேவை மூலம் பதிவெழுதிக் கொண்டிருந்தேன். அதில் இருந்து மாறி, தனி வலையிடம் (self hosting) வாங்கி வேர்ட்ப்ரஸ் மூலம் வலைப்பதியும் முயற்சியில் இருப்பதே அதற்கு காரணம்.

http://blog.arutperungo.com மற்றும் http://songs.arutperungo.com ஆகிய URLகளில் எந்த மாற்றமுமிருக்காது. ஆனால் திங்கட்கிழமை (14-04-2008) முதல் குறைந்தது ஒரு வார காலத்துக்கு இந்த URLகள் வேலை செய்யாது. புதிய இடுகைகள் எதுவும் எழுத முடியாத இந்த ஒரு வார காலத்தில் (மட்டும்) பழைய இடுகைகளை வாசிக்க விரும்பினால் http://arutperungo.blogspot.com மற்றும் http://samsongs.blogspot.com ஆகிய URL களைப் பயன்படுத்தலாம்!

கூகிள் ரீடர் அல்லது பிற RSS reader பயன்படுத்தி செய்தியோடை மூலமாக வாசித்து வருபவர்களுக்கு :
நீங்கள் http://feeds.feedburner.com/arutperungo மற்றும் http://feeds.feedburner.com/arutperungosongs செய்தியோடைகளைப் பயன்படுத்தினால், எந்த மாற்றமும் செய்ய வேண்டியிருக்காது.
ஒருவேளை
http://arutperungo.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://blog.arutperungo.com/feeds/posts/default )

மற்றும்

http://samsongs.blogspot.com/feeds/posts/default ( அல்லது http://songs.arutperungo.com/feeds/posts/default ) பயன்படுத்தினால், முன்னாலிருக்கும் feedburner செய்தியோடைகளுக்கு மாறிக்கொள்ளவும்.

மின்னஞ்சல் மூலமாக வாசிப்பவர்கள், எந்த மாற்றமுமில்லாமல் தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக பதிவுகளை வாசிக்கலாம்.

வேர்ட்பிரஸிற்கு மாறிய பிறகு வாசிப்பதில் ஏதேனும் பிரச்சனைகளிருந்தால் மடலிடவும் – arutperungo@arutperungo.com

16 comments:

  1. //ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.//
    Possisiveness.
    //யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!//
    Unconditional love

    ReplyDelete
  2. \\ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.
    யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!\\

    உண்மை..;))

    தகவலுக்கு நன்றி ராசா ;))

    ReplyDelete
  3. //தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
    பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!//

    ithai alaga solli irukeenga. so true! so true!

    ReplyDelete
  4. நல்ல கவிதைகள்.

    **

    அப்பாஆஆ..நம்ம வேர்ட்பிரெஸ் பரப்பு முயற்சிகள் வீண் போகவில்லை :)

    ReplyDelete
  5. ///மூன்று நெருங்கிய தோழிகளின் பெயர்களைக் கேட்டார்கள்.
    உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.///
    நல்லா இருக்கு :))

    ReplyDelete
  6. மிக மிக அருமையான கவிதைகள்....:-)

    ReplyDelete
  7. கவிதைகள்
    எல்லாமே நல்லா இருக்கு....




    Senthil,
    Bangalore

    ReplyDelete
  8. காதல், நட்பு ரெண்டுலயும் ஒன்ன விட இன்னொன்னு தான் சிறந்ததுனு நான் சொல்ல வரலங்க… காதலோட இயல்பு அது, நட்போட இயல்பு இது னு மட்டும்தான் சொல்ல வந்தேன்!

    நன்றி வினோ!

    ReplyDelete
  9. / உண்மை..;))/
    பார்த்த உண்மையா? கேட்ட உண்மையா?அனுபவித்த உண்மையா? ;)

    /தகவலுக்கு நன்றி ராசா ;))/

    :)

    ReplyDelete
  10. /ithai alaga solli irukeenga. so true! so true!/

    கோபி தமிழ்ல சொன்னத நீங்க ஆங்கிலத்துல சொல்றீங்க! ;)

    ReplyDelete
  11. /நல்ல கவிதைகள்./
    நன்றி ரவி!

    **

    /அப்பாஆஆ..நம்ம வேர்ட்பிரெஸ் பரப்பு முயற்சிகள் வீண் போகவில்லை :)/
    மாறினதுக்கப்பறம் வரப்போற பிரச்சினைக்கெல்லாம் உங்களதான் புடிக்கப்போறேன்! ;)

    ReplyDelete
  12. /நல்லா இருக்கு :))/

    நன்றிங்க தமிழ் ப்ரியன்!

    ReplyDelete
  13. /மிக மிக அருமையான கவிதைகள்....:-)/

    நன்றிங்க ஸ்ரீ!!

    ReplyDelete
  14. /கவிதைகள்
    எல்லாமே நல்லா இருக்கு..../

    நன்றிங்க செந்தில்!!

    ReplyDelete
  15. கடைசி பதிவுனு போட்டு பயமுறுத்திட்டீங்க முழுவதும் படித்த பிறகு தான் நிம்மதி ஆச்சு............

    ReplyDelete
  16. கவிதைகள் வழக்கம் போல அருமை:)

    வாழ்த்துக்கள் மாறுதல்களுக்கு:)

    ReplyDelete