பால்யத்தின் காற்றுக் காலமொன்றில்
பட்டம் விட்டுக்கொண்டிருந்த மாலைப்பொழுதில்
ஆசையுடன் விளையாட அதுவும் வந்திருக்கிறது.
விபத்தில் அடிப்பட்ட கல்லூரி நண்பனை
மருத்துவமனை தூக்கிச்சென்ற பதற்றமான இரவில்
என்னுடன் சேர்ந்து அழுதிருக்கிறது.
அலுவலகத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த
ஒரு திங்கட்கிழமையின் பரபரப்பான காலையில்
என்வேகத்தில் என்னருகிலேயே பயணித்திருக்கிறது.
நெருங்கிய உறவின் மரணமொன்றில்
சுடுகாட்டிலிருந்து திரும்பும்வழியிலேயே
எங்களைக் குளிக்க வைத்திருக்கிறது.
அப்பொழுதெல்லாம் சபித்துவிட்டு
வீட்டின் அறைக்குள்
நாற்காலியில் சாய்ந்துகொண்டு,
சூடான தேநீரைப் பருகியபடி
ஜன்னல் வழியே வெட்கமின்றி ரசித்திருக்கிறேன்
அதன் பொழிவை!
arumai arumai...
ReplyDeletekaadhal ulagatha vittu konjam veliya vandhu irukeenga pola...
vaazhthukkal
dear arul,
ReplyDeleteunga kavithai etha week vegadan la vanthuruku ,valthukal, kalkunga,
ram
வெயில்தானா?
ReplyDeleteநான் என்னமோ நினைச்சேன்.
சகாதேவன்.
மழைதானே அருட்பெருங்கோ?
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு, உங்க மழை..
ReplyDeleteஉங்கள் கவிதை "மழை" எங்களை குளிரச்செய்தது.
ReplyDeleteஆனந்த விகடனில் உங்கள் கவிதையை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்த்துக்கள்....
இது இன்னும் தொடரட்டும்....
கருணா..
எனக்குப் பிடிச்சிருக்கு இந்தக் கவிதை.
ReplyDeleteநல்லாயிருக்கு ராசா ;))
ReplyDeleteவாழ்த்துக்கள் ;))
குளிக்கவைத்த அப்படிங்கற வரை என்னது அதுன்னு ஒரு கேள் வி இருந்தது.. அப்பறம் தான் மழைன்னு தெரிந்தது.. நல்லாருக்கு.. :))
ReplyDelete@அனானி,
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க அனானி!
@ராம்,
நன்றி ராம்!
@சகாதேவன்,
ReplyDeleteஇரவிலும் வந்திருக்கிறதுனு சொல்லியிருக்கேன். வெயில்னு சொல்லிட்டீங்களே :(
@கோபால்,
விடுகதைக்கு விடை சொல்ற மாதிரி சொல்றீங்களே ;-) மழையேதான்!!!
@வீரசுந்தர்,
ReplyDeleteரொம்ப நன்றிங்க சுந்தர்.
@கருணா,
குளிர வச்சுதா? நன்றிங்க வாழ்த்துகளுக்கும் ஊக்கங்களுக்கும்.
@ஜ்யோவ்ராம் சுந்தர்,
ReplyDeleteநீங்க இந்தமாதிரி லைட்டான கவிதைகளும் ரசிப்பீங்களா? உங்க பின்னூட்டங்கள் எல்லாம் பார்த்து உங்க ரசனை வேற மாதிரினு இல்ல நெனச்சேன் :-)
@கோபிநாத்,
நன்றி கோபி!!!
ஐயோ மழை!!!
ReplyDeleteமிகச் சந்தோஷமாக நனைந்தேன் உங்க மழையில்!!
அருமை!
அன்புடன் அருணா
@கயல்விழி முத்துலெட்சுமி,
ReplyDeleteநன்றிங்க்கா. வழக்கம்போல போரடிக்காம நல்லாருக்குனு சொல்ற மாதிரி எழுதிருக்கேன் போல :)
@அருணா,
நன்றிங்க அருணா மழை வாசிச்சதுக்கும் வாழ்த்துக்கும்!!!
mazhaiya pathiya azhagaana kavidhai. kalakunga :)
ReplyDeleteநல்லாயிருக்குய்யா.... :)
ReplyDelete@ட்ரீம்ஸ்,
ReplyDeleteநன்றிங்க ட்ரீம்ஸ்.
@இராம்,
நன்றி தல!!!
தல, பின்னிடீங்க போங்க............
ReplyDeleteநன்றிகளுடன்
ஈசுவரன். மணி
கருத்துக்கு நன்றிங்க மணி!!!
ReplyDeleteNandraga irunthathu tholare,
ReplyDeleteum veetin jannalil ,,
thangal partha malaiai,
en veettu kanippori jannalil..
indru naan parkail...
ennavendru solvathu..
mana magilchi adainthen,,
illatha KADAVUL
ungalul Irukkirar,
/Nandraga irunthathu tholare,
ReplyDeleteum veetin jannalil ,,
thangal partha malaiai,
en veettu kanippori jannalil..
indru naan parkail...
ennavendru solvathu..
mana magilchi adainthen,,/
எனக்கும் மகிழ்ச்சி நண்பரே! நன்றிகள்.
/illatha KADAVUL
ungalul Irukkirar,/
:-)))
அது சரிங்க. ஏன் எல்லாரும் பெயர் சொல்லாமலே வந்து கருத்து சொல்றீங்க.