Wednesday, February 06, 2008

ஹலோ யார் பேசறது? - 1

‘டேய் எங்களுக்கும் தான் நாளைக்கு செம் இருக்கு. எதுக்கு இப்போ படிக்கிற மாதிரி சீன் போடற?’

‘அடப்பாவிகளா… கிளாஸ் புள்ளயோட மூனு இண்டர்னல் பேப்பர் மட்டும்தாண்டா ஜெராக்ஸ் எடுத்துப் பாத்துட்டு இருக்கேன். இதுவே உங்களுக்குப் பொறுக்கலையா?’

‘புக்க பாத்து மண்ட காயற நாங்கலாம் அப்ப கேணையனுகளா?’

‘மக்கா உனக்கு நாளைக்கு மதியம் தான் எக்ஸாம். எனக்கு காலையில இருக்கு. ச்சும்மா அலப்பறையக் கொடுக்காத’

‘டேய் இவன் ஓவரா பேசறாண்டா. புடுங்குடா அந்த ஜெராக்ச’

ஜெராக்ஸ் பேப்பர்கள் பிடுங்கப்பட்டு, கிழிக்கப்பட்டு ஜன்னலில் பறக்கின்றன.

‘நிம்மதியாடா? படிக்கிறதுக்கு ஒரு மெட்டிரியலும் எங்கிட்ட இல்ல. இப்போ என்னய என்ன பண்ண சொல்றீங்க?’

‘FMல இவரு ஒருத்தர் இனிய இர்ர்ர்ர்ரவில் னு எப்ப பாத்தாலும் அடித்தொண்டையிலேயே கத்திட்டு இருக்காரு. இவருதான் இப்படினா விளம்பரம் போட்றவனுங்க தொல்ல அதுக்கு மேல. ஒரு ரவை, மைதாவுக்கு எத்தன தடவதான் போன் நம்பர் கொடுப்பானுங்களோ… ஒரு பாட்டு ஒழுங்கா போட மாட்டேன்றானுங்கனு நாங்க கடுப்புல இருக்கோம். நீ மட்டும் படிக்கிற மாதிரி சீன் போட்டுட்டு இருந்தா எரிச்சல் வராதா?’

‘சரி விடு. ஒரு ரூபா காயின் இருக்கா?’

‘ம்ம்ம்’

‘எடுத்துட்டு வா’


.....

‘ஹலோ **** ரவா மைதா கம்பெனிங்களா?’

‘ஆமாங்க’

‘வணக்கமுங்க… நாங்க சின்னியம்பாளையத்துக்கு பக்கத்துல இருந்து பேசறமுங்க…நம்மூர்ல ரொம்ப வருசமா மழையே இல்லாமப் போயிருச்சுங்க’

‘சரி’

‘மழை பெய்யறதுக்காவ நம்மூரு சடங்கொன்னு பண்ணிறலாம்னு… அதாங்க கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணலாம்னு ஊர்ல கூட்டம்போட்டு முடிவு பண்ணிருக்கோமுங்க.. மொத்தம் ஒரு முன்னூறு, நானூறு பேரு கூடுவாங்க… கல்யாணம்னு சொல்லிட்டு சாப்பாடு போடாம இருக்க முடியுமுங்களா?’

‘சரி…உங்களுக்கு என்ன வேணும்?’

‘சாப்பாடு போட்டா கட்டுபடியாகாதுன்னு அதுக்குப் பதிலா டிபன் போட்டுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்… ஒரு நானூறு பேருக்கு உப்புமா கிண்டனும்னா எவ்வளவு ரவை வேனுங்க?’

‘ஒரு அம்பது கிலோ ஆகுங்க…ஆர்டர் கொடுக்கனும்ங்களா?’

‘ஆமாங்க ஆர்டர் கொடுக்கனும். ஆனா அம்பது கிலோ வேணாம். ஒரு அர கிலோ இருந்தா போதும்’

‘என்னது அர கிலோவா?’

‘ஆமாங்க எங்களுக்கெல்லாம் வேற கம்பெனில வாங்கிட்டோம். ஆனா பொண்ணும், மாப்பிள்ளையும் உங்க கம்பெனி ரவைல தான் உப்புமா சாப்பிடுவோம்னு ஒரே அடம் பண்றாங்கங்க…’

‘நீங்க மொதலாளிகிட்டவே நேரா பேசிக்குங்க… ’

‘ஹலோ… ஹலோ…’

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

22 comments:

  1. நல்லா இருந்தது..ஆனா இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. :-)

    ReplyDelete
  2. dear arul,

    ethu ana real storya, athukuna unga kadha mathera eruka


    ram

    ReplyDelete
  3. அது நீ தானா?

    -மாவு கம்பெனி முதலாளி.

    ReplyDelete
  4. மொக்கையா?

    ReplyDelete
  5. மாப்பி என்ன ஆச்சு...திடிரென்னு உப்புமா ஞாபகம்!?

    ReplyDelete
  6. பாலமுருகன்,
    கோயம்புத்தூர்ல படிக்கும்போது நக்கல் இல்லாம இருந்திருக்க முடியுமா? ;-)

    ராம்,
    ரியல்னு சொன்னா மாவு கம்பெனிகாரங்க வந்து கும்மிட மாட்டாங்களே? :-)

    ReplyDelete
  7. பரதன்,

    ஆகா வந்துட்டீங்களா? நான் அவன் இல்லை ;-)

    ட்ரீம்ஸ்,

    :-)

    ReplyDelete
  8. இனியவன்,

    மொக்கையானு நீங்கதான் சொல்லனும்!

    கோபிநாத்,

    உப்புமா ஞாபகம் இல்ல கல்லூரி ஞாபகம் :-)

    ReplyDelete
  9. அடப்பாவீங்களா? ஒரு கூட்டமாத்தான் கெளம்பியிருக்கீங்களா?

    இது பாகம்-1 தானா? அடுத்த பாகங்களுக்காக கொலவெறியோட காத்திருக்கிறோம் :)

    ReplyDelete
  10. நல்லா இருந்ததுங்க,இப்படியே நல்லா சிரிக்கிர மாதிரி நிறைய எழுதுங்க

    ReplyDelete
  11. ஆமா மக்கா ஒரு ரூபா காயின்லயாப்பூ இவ்வளவும் பேசுனீக(எங்களுக்கெல்லாம் இப்படித்தான்பா யோசிக்கத்தோனுது ) நாரப்பயலுக எங்க ஊர்லயும் காயின் பாக்ஸ் வச்சிருக்கானுக நாட் ரீச்சபுள்ன்னு சொல்றதுக்குள்ள அடுத்த காயின கேக்குது.

    ReplyDelete
  12. ஹா..ஹா..

    லொள்ளு ஒவர்தான்.. எனக்கு

    அந்த லாடுலபக்குதாஸ் காமெடி ஞாபகத்துக்கு வருது..:))))))

    ReplyDelete
  13. தாங்க முடிய‌லிங்க...
    ரணகளமா இருக்குது...

    ReplyDelete
  14. ஓ. இது பாகம் 1 ஆ???

    பாவம்யா அந்த ரவை கம்பெனிக்காரன்.

    ReplyDelete
  15. @பிரேம்குமார்,

    ஆமாப்பா, தனியா இருக்கும்போது இதெல்லாம் செய்யத் தோணுமா? கல்லூரியில கூட்டமா இருக்கும்போது வர்ற ஒரு மெதப்புதான்…

    அடுத்த பாகங்கள் விரைவில்…

    @சாமான்யன்,

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  16. @நித்யானந்தம்,

    சிரிக்கிற மாதிரி இருக்கா? அப்போ கண்டிப்பா தொடரலாம்!!!

    @மீறான் அன்வர்,

    ஒரு ரூபா நாணயம்னு சொன்னேன். ஒரு ‘ஒரு ரூபா நாணயம்’னு சொன்னேனா? ;-) நாட் ரீச்சபல்னு சொன்னா போட்ட காயினே வெளிய வந்துடுமே!!!

    ReplyDelete
  17. @ரசிகன்,

    நாங்கலாம் நல்லப் பசங்கங்க. ப்ரபசருக்கெல்லாம் இப்படி பண்ண மாட்டோம் ;-)

    @கோபால்,

    அப்போ அன்னைக்கு போன்ல பேசினது நீங்க தானா?

    @மங்களூர் சிவா,

    இது பாகம் ஒன்னுதான். ஆனா ரவை கம்பெனிக்கு இவ்வளவுதான். அடுத்த பாகம் வேற ஒரு கம்பெனி!

    ReplyDelete
  18. பசங்க அரியர் ஏன் கிலோ கணக்குல இருக்குனு இப்பதான புரியுது ;-)

    -குறிஞ்சி

    ReplyDelete
  19. குறிஞ்சி,
    அரியருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கலாம் நல்லாப் படிச்ச பசங்கதான் :)

    ReplyDelete