Monday, February 11, 2008

காதல் வா(வ)ரம் - 1

என் எழுத்தில்
அடங்க மறுக்கும்
திமிரான கவிதை நீ!

*

என் காதலுக்கு
சிறப்பென்று சொல்லிக்கொள்ள
எதுவுமேயில்லை.
அது வெகு இயல்பானது,
என் சுவாசத்தைப் போல!

*

நீ பேசிய மொழியனைத்தும்
காதலின் தேசியமொழிதான்.

*

நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
அடர்ந்து கிடந்தது காதல்!

*

நாம் நடந்த பாதையில்
நான் மட்டும் நடக்கையில்
பிஞ்சுக்காற்று தோள்தொட
உன் விரலென்று திரும்பி
ஏமாந்திருக்கிறேன்!

*

16 comments:

  1. எல்லாக் கவிதைகளுமே அருமை. சரி காதல் வாரத்தை கொஞ்சம் முன்னமே காதல் மாதம் என ஆரம்பித்திருக்கலாமே மாப்பு :)

    ReplyDelete
  2. //நாம் நடந்த பாதையில்
    நான் மட்டும் நடக்கையில்
    பிஞ்சுக்காற்று தோள்தொட
    உன் விரலென்று திரும்பி
    ஏமாந்திருக்கிறேன்!//

    Wow! Surely, This one is a Blast!

    ReplyDelete
  3. ஸ்ரீ,

    நன்றிப்பா! காதல் வாரத்தை காதல் மாதமென்று ஆரம்பித்திருந்தால், ஆணிகளுக்கு பேய் பிடித்து ஆடியிருக்கும்!

    ReplyDelete
  4. ஹாரி,

    நன்றிங்க! முடிஞ்ச வரைக்கும் தமிழ்லயே சொல்லலாமே :-)

    ReplyDelete
  5. திமிரினா தான் காதல், கவிதை எல்லாமே.
    நல்லா இருக்கு காதற் கவிஞரே

    ReplyDelete
  6. திமிர் காதலுக்கு அழகுனு சொல்றீங்களா? கருத்துக்கு நன்றிங்க தங்கம்!

    ReplyDelete
  7. //முடிஞ்ச வரைக்கும் தமிழ்லயே சொல்லலாமே//

    ஒரு எழுத்துக்கு மூணு எழுத்து டைப் பண்ண வேண்டியிருக்குன்னுதாங்க.

    இந்த நிலைமைல, நான் கவிதைமாதிரி ஏதோ எழுதியிருந்தேனே பார்த்தீங்களா? அத மட்டும் படிச்சீங்க, நீங்களே "Oh,My God"னு ஆங்கிலத்தில்தான் அலறுவீங்க!

    ReplyDelete
  8. //
    என் காதலுக்கு
    சிறப்பென்று சொல்லிக்கொள்ள
    எதுவுமேயில்லை.
    அது வெகு இயல்பானது,
    என் சுவாசத்தைப் போல!

    நீண்ட பிரிவுக்குத் தயாராகும்போது
    உன் விழி திரட்டிய நீர்ச்சொட்டில்
    அடர்ந்து கிடந்தது காதல்//

    படித்து ரசித்தேன்.அருமை.கலக்குங்க அருள்!!

    ReplyDelete
  9. \\ஸ்ரீ said...
    எல்லாக் கவிதைகளுமே அருமை. சரி காதல் வாரத்தை கொஞ்சம் முன்னமே காதல் மாதம் என ஆரம்பித்திருக்கலாமே மாப்பு :)\\

    ரீப்பிட்டேய்ய்ய்யய்

    ReplyDelete
  10. கவிதைகள் அனைத்தும் அருமை!!!!!!!

    ReplyDelete
  11. //நாம் நடந்த பாதையில்
    நான் மட்டும் நடக்கையில்
    பிஞ்சுக்காற்று தோள்தொட
    உன் விரலென்று திரும்பி
    ஏமாந்திருக்கிறேன்//

    அட!!!!!!!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  12. ஹாரி,

    Phonetic layout மூலமா தட்டச்சிப் பழகினா இப்படி ஆகிடுது. தமிழ்99 பயன்படுத்திப் பாருங்க, உயிரெழுத்து குறிலா இருந்தாலும் நெடிலா இருந்தாலும் ஒரே கீஸ்ட்ரோக் போதும், உயிர்மெய்யெழுத்தா இருந்தா குறில், நெடில் ரெண்டுக்கும் அதிகபட்சம் ரெண்டு கீஸ்ட்ரோக்தான் வரும்… முயற்சி பண்ணிப் பாருங்க! நானும் இப்போதான் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன்! கணினியில தரவிறக்கிக்கொள்ள – http://software.nhm.in/writer.html ஆன்லைனில் பயன்படுத்த – http://wk.w3tamil.com/

    ReplyDelete
  13. @நாடோடி இலக்கியன்,
    படித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றிகள்!!! தொடர்கிறேன்…

    @கோபி,
    இன்னும் ஆணிகள் ஆவி பறக்க வந்து கொண்டே இருக்கின்றன :(

    ReplyDelete
  14. @எழில்,
    நன்றி எழில்!!!

    @அருணா,
    அட! போட வைத்துவிட்டதில் மகிழ்ச்சி அந்த கவிதைக்கு! நன்றி.

    ReplyDelete
  15. வாழ்த்த வார்த்தையில்லை அதனால் அருமை, அருமை, அருமை....'


    தினேஷ்

    ReplyDelete
  16. நல்ல கவிதைகள்.....அருமை,

    ReplyDelete