Friday, February 15, 2008

காதல் வாரம் - 5

இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*

17 comments:

  1. காதல் வாரத்தின் ஐந்தாவது பகுதியும் அருமை!

    ReplyDelete
  2. நொடிக்கு ஒரு முறை நினைக்குறீங்களா :O. "Exception" வருவதற்கு அது தான் காரணம் மாமே :)

    ReplyDelete
  3. Ko !! Ungaloda 2 KAVITHAI ANANTHAVIKATAN la vanthirukku... Vazhthukkal...

    Nambi (ursnambi@rediffmail.com)

    ReplyDelete
  4. "இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
    எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு"

    "நீ பிரியாமல் இருந்தால்…"

    "முட்களை மட்டும்..."

    நெஞ்சைத் தொட்டது...

    "கோ" வின் கோலங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  5. //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    என்ன சொல்வது?முட்கள் பூக்குமா என்று கேட்பதைத் தவிர? அருமை!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    ஏனப்பா ஜோகம் திடீர்னு :(

    ReplyDelete
  7. கடைசி கவிதை... டச் செய்துடீங்க ! என்னத்த சொல்ல!

    ReplyDelete
  8. //நீ பிரிந்தபிறகும் கூட
    ‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
    ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
    //
    //முட்களை மட்டும்
    பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
    என் காதல்!//

    கலக்கல் மாமே...:)

    ReplyDelete
  9. //*
    உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
    பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!//

    இது டாப்பு:)

    ReplyDelete
  10. இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
    எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
    *
    எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
    பொய் சொல்லவில்லை. ஆனால்…
    ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
    உன்னைதான் நினைக்கிறேன்.

    Unga kavithai ellame arumai ..eppadithaan ippadi yosikiringa ..matravarkal manasilum irukkum unmayin velippadu ungal kavithai ...vazhthukkal....

    ReplyDelete
  11. //நீ பிரிந்தபிறகும் கூட
    ‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
    ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
    //
    அழகான கவிதைக்கு இந்தாங்க ஒரு பூ.
    என்ன கடைசியில் முள் குத்திடுச்சு...
    --------------குந்தவை-----------

    ReplyDelete
  12. @பிரேம்,
    நன்றிங்க பிரேம்.

    @ஸ்ரீ,
    கவுஜைக்கும் ஜாவாவுக்கும் என்ன சம்பந்தம் மாப்ள?

    ReplyDelete
  13. @நம்பி,
    தகவல் சொன்னதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க நம்பி.

    @கருணா,
    நன்றிங்க கருணா. தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. @அருணா,
    என்ன சொல்வது? ரோஜாவுக்கு பதிலாக முட்கள் மட்டுமே இருக்கின்றன அல்லது பூத்த ரோஜாவும் முள்ளாய்க் குத்துகிறது என்பதில் எதையாவது ஒன்றை சொல்லி சமாளிப்பதைத் தவிர?
    நன்றிங்க அருணா.

    @சிவா,
    ஜொகமா ஆரம்பிச்சு ஜோகமா முடிக்கனும்ங்கறது காதல் கவிதை/கதைகளுக்கு எழுதப்படாத விதி :)

    ReplyDelete
  15. @ட்ரீம்ஸ்,
    அது நெறைய பேருக்கு பிடிச்சிருக்கே :-)

    @ரசிகன்,
    டாப்பான ரசனைக்கு நன்றிங்க ரசிகன்!

    ReplyDelete
  16. @ப்ரேமா,
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ப்ரேமா.

    @குந்தவை,
    வாழ்த்துப்பூவுக்கு நன்றிங்க குந்தவை.

    ReplyDelete
  17. என்னங்க அருட்பெருங்கோ பிப் 15 க்கு சோகக் காதல் கவிதை, பிப் 14 யாராவது முடியாதுனு சொல்லிட்டாங்களா? எப்போதும் போல் கவிதை அருமை வாழ்த்துக்கள். அப்படியே என்னோட பிளாக்குக்கும் வருகை தந்து உங்க கருத்த தெரிவிங்க‌.

    ReplyDelete