Wednesday, February 21, 2007

இவர்களுக்காகவே...

தவமாய்த் தவமிருந்து
தான் பெற்ற மகளும்
தாயாகிவிட்டப் பரவசம்
அம்மாவின் முகத்தில்…

அள்ளிக் கொஞ்சிட
அழகாய் ஒரு பேத்தி
அம்சமாகப் பிறந்ததில்
அப்பாவுக்கும் ஆனந்தம்…

மடியில் கிடத்தி
பாசத்தோடு சீர் செய்ய
மருமகள் கிடைத்துவிட்ட
மனநிறைவில் அண்ணன்…

தன்னை சித்தியென்றழைக்க
புதியதோர் ஜீவன்
பூத்துவிட்ட களிப்பில்,
பூரித்திருக்கும் தங்கை…

இப்படி...
எனக்குப் பிறந்தக் குழந்தையின் சிரிப்பில்
மகிழ்ச்சியைக் கொண்டாடும் இவர்களுக்கு,
கேட்டுவிட வேண்டாம்…

இவர்களுக்காகவே
எனக்குள் நான் கொன்று போட்ட
என் காதலின் அழுகை!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

34 comments:

  1. யோவ் என்னய்யா இது ..என்னடா காதலலையே கானோம்னு பார்த்தேன் கடசில புகுத்திட்டீரே

    ReplyDelete
  2. கவிதை அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. / யோவ் என்னய்யா இது ..என்னடா காதலலையே கானோம்னு பார்த்தேன் கடசில புகுத்திட்டீரே /

    புகுத்துவதா காதல்? புகுவதுதானே காதல்?

    பின்னூட்டத்துலையும் காதல நான் புகுத்தல அதுவா தான் புகுந்துச்சு!!!

    ReplyDelete
  4. தினமலரில் உங்கள பத்தி வந்துருக்காமே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாங்க திருக்குமரன்,

    / கவிதை அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்./

    ஊக்கத்திற்கும், பாராட்டுக்கும் நன்றிகள் திரு!!

    ReplyDelete
  6. வாங்க முத்துலெட்சுமி,

    / தினமலரில் உங்கள பத்தி வந்துருக்காமே வாழ்த்துக்கள்./

    ஆமாங்க...மகிழ்ச்சியான செய்தி!!!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றீ!!!

    ReplyDelete
  7. மின் நூலாக்கி எப்போ தரப்போறீங்க

    சென்ஷி

    ReplyDelete
  8. வாங்க சென்ஷி,

    / மின் நூலாக்கி எப்போ தரப்போறீங்க
    /

    கூடிய விரைவில்...

    சிறந்த கவிதை(என்று நான் கருதும் கவிதை)களை பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

    கம்மியா தான் சேர்ந்திருக்கு அதான்!!! ;-)

    ReplyDelete
  9. இப்போத்தான் பார்த்தேன் செந்தழலாரின் பதிவினை.....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அருமை அருள்...

    எப்படி எல்லாம் யோசிக்கீறிங்க...

    வாழ்த்துக்கள்..தினமலர் விஷயத்துக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. ம்ம்... கவிதைக்கும் வாழ்த்துக்கள் அருள்!

    தினமலரில் வெளிவந்த உங்கள் செய்திக்கும் வாழ்த்துக்கள்!

    உங்கள் மின் நூலைக் காணும் ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  12. மதியம் கூட ப்ளாக பாத்துட்டு என்னடா புதுசா எதுவும் காணோமேன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போ பாத்தா புதுசா ஒரு பதிவு மற்றும் தித்திக்கும் ஒரு சேதி வேறு. வாழ்த்துக்கள் நண்பா. நிறைய சந்தோசம் சேதி கேட்டு

    ReplyDelete
  13. / ம்ம்... கவிதைக்கும் வாழ்த்துக்கள் அருள்!

    தினமலரில் வெளிவந்த உங்கள் செய்திக்கும் வாழ்த்துக்கள்!/

    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சத்தியா!!!

    /உங்கள் மின் நூலைக் காணும் ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்./

    விரைவில் தருகிறேன்... இடையில் கொஞ்சம் இடமாற்ற வேலைகள் இருக்கின்றன!!!

    ReplyDelete
  14. வாங்க பிரேம்,

    /மதியம் கூட ப்ளாக பாத்துட்டு என்னடா புதுசா எதுவும் காணோமேன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போ பாத்தா புதுசா ஒரு பதிவு மற்றும் தித்திக்கும் ஒரு சேதி வேறு. வாழ்த்துக்கள் நண்பா. நிறைய சந்தோசம் சேதி கேட்டு/

    இது பழைய கவிதைதான்... நேற்று எழுத நேரமில்லாததால் பழையதை வைத்து ஒப்பேற்றி விட்டேன்!!!

    தினமலர் சேதி் மகிழ்ச்சியளித்தது...நண்பர்களின் வாழ்த்து அதனை இரட்டிப்பாக்குகிறது!!!

    ReplyDelete
  15. உங்களின் இந்தக் கவிதை பிரமாதம்.

    ஒரிரு கற்பனைத் துளிகள் இன்னும் சுவை
    கூட்டலாம்.

    வாழ்த்துக்கள்.

    யாழினி அத்தன்

    ReplyDelete
  16. வாங்க மதுரையம்பதி,

    /இப்போத்தான் பார்த்தேன் செந்தழலாரின் பதிவினை.....வாழ்த்துக்கள் /

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  17. /அருமை அருள்...

    எப்படி எல்லாம் யோசிக்கீறிங்க.../

    ம்ம்ம்... யோசிக்காமலே எழுதும் அளவுக்கு நான் பிறவிக் கவிஞன் இல்லையே!!

    /வாழ்த்துக்கள்..தினமலர் விஷயத்துக்கும் வாழ்த்துக்கள்... /

    வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி!!!

    ReplyDelete
  18. உங்கள் கவிதைகள் அனைதும் என் மனதைக் கொள்ளைக் கொண்டன..................
    மிகவும் அருமை.....

    இப்படிக்கு,
    புரியாத புதிர்

    ReplyDelete
  19. hi friend this is guna from iit delhi.. your words are reaching not only in south but also in north..
    now your blog has started occuping my permanent opened site list...
    dinamalar kandaen valthukal

    gunasekar.k(unga pakkuthu uru thnaga..erode)
    now @iitd

    ReplyDelete
  20. / உங்களின் இந்தக் கவிதை பிரமாதம்.

    ஒரிரு கற்பனைத் துளிகள் இன்னும் சுவை
    கூட்டலாம்.

    வாழ்த்துக்கள்.

    யாழினி அத்தன்/

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் இரமேஷ்!!!

    ReplyDelete
  21. / உங்கள் கவிதைகள் அனைதும் என் மனதைக் கொள்ளைக் கொண்டன..................
    மிகவும் அருமை.....

    இப்படிக்கு,
    புரியாத புதிர்/

    பாராட்டுக்கு நன்றி புரியாத(?) புதிர்!!!

    ReplyDelete
  22. வாங்க குணா,

    / hi friend this is guna from iit delhi.. your words are reaching not only in south but also in north..
    now your blog has started occuping my permanent opened site list...
    dinamalar kandaen valthukal/

    மிகவும் மகிழ்ச்சி!!! வாழ்த்துக்களுக்கும் நன்றீ நண்பா!!!

    /gunasekar.k(unga pakkuthu uru thnaga..erode)
    now @iitd/

    ஈரோட்டுக் காரரா? அப்ப பக்கம் தான் :-)

    ReplyDelete
  23. Hi Arul,

    First time i am seeing ur blog..Your lines really touching and superb.

    Surprised to see that dinamalar published about you.

    But i couldn't find anything in dinamalar.com edition.

    vaazhthukkal
    shankar

    ReplyDelete
  24. Halo sir,

    jus saw ur website in dinamlar n came here..

    wishes!!
    Karthik
    Chennai

    ReplyDelete
  25. / Hi Arul,

    First time i am seeing ur blog..Your lines really touching and superb.

    Surprised to see that dinamalar published about you.

    But i couldn't find anything in dinamalar.com edition.

    vaazhthukkal
    shankar/

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர்!!!

    தினமலர் ஈ பேப்பரில் நேற்று முன்தினம் வந்திருக்குங்க...

    ReplyDelete
  26. / Halo sir,

    jus saw ur website in dinamlar n came here..

    wishes!!
    Karthik
    Chennai/

    வாங்க கார்த்திக்,

    தினமலருக்கும், வாசித்து வாழ்த்திய உங்களுக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  27. காதலில்லாத அருட்பெருங்கோ கவிதையா? அப்டீனு ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்...

    அப்புறம்தான் தெரிஞ்சுது....

    தினமலர் மட்டுமில்லை... கவிதை தொகுப்பு நூலாகவும் வர வாழ்த்துக்கள்.. :)))

    ReplyDelete
  28. காதல் அமுதென்று
    யார் சொன்னது?
    மூழ்கிக் குடிக்கும் வண்டு
    இன்னும் வெளியில் வரவில்லை
    உயிரோடுதான் இருக்கிறதா?
    அடடே! அமுதம் தீர்ந்து விட்டது
    குவளையில் நிரம்பியிருப்பது கண்ணீர்

    ReplyDelete
  29. Kavithai arumai...thodarnthu ithu pondra kavithaigalai ungalidam yethir paarkiren..

    Sankar Ganesh S
    New Delhi.

    ReplyDelete
  30. வாங்க ஜி.ரா,

    /காதல் அமுதென்று
    யார் சொன்னது?
    மூழ்கிக் குடிக்கும் வண்டு
    இன்னும் வெளியில் வரவில்லை
    உயிரோடுதான் இருக்கிறதா?
    அடடே! அமுதம் தீர்ந்து விட்டது
    குவளையில் நிரம்பியிருப்பது கண்ணீர் /

    கவிதையே சோகமாத்தான இருக்கு... நீங்க வேற ஏன் கண்ணீர ஊத்துறீங்க? ;-)

    ReplyDelete
  31. / காதலில்லாத அருட்பெருங்கோ கவிதையா? அப்டீனு ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்...

    அப்புறம்தான் தெரிஞ்சுது..../

    என்ன பண்றது ஜி, நம்ம அறிவுக்கு எட்டுறது மட்டும்தான எழுத முடியுது!!!

    /தினமலர் மட்டுமில்லை... கவிதை தொகுப்பு நூலாகவும் வர வாழ்த்துக்கள்.. :)))/

    வாழ்த்துக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  32. "அழியாத அன்புடன்" என்று ஏன் எழுதுகிறீர்கள் என்று விளங்கிற்று எனக்கு இக்கவிதை படித்து. வாழ்க்கை தரும் பாடம்தான் காதல்! என்றும் அன்புடன், இன்புற்று இருக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வாங்க சங்கர் கனேஷ்,

    / Kavithai arumai...thodarnthu ithu pondra kavithaigalai ungalidam yethir paarkiren..

    Sankar Ganesh S
    New Delhi./

    நன்றிங்க!!!
    என்னால் முடிந்த வரை எழுதுகிறேன்!!!
    வாசித்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும்!!!

    ReplyDelete
  34. /"அழியாத அன்புடன்" என்று ஏன் எழுதுகிறீர்கள் என்று விளங்கிற்று எனக்கு இக்கவிதை படித்து. வாழ்க்கை தரும் பாடம்தான் காதல்! என்றும் அன்புடன், இன்புற்று இருக்க என் வாழ்த்துக்கள்./

    நன்றிகள் தீக்ஷன்யா!!!

    ReplyDelete