Monday, February 21, 2011

புகைப்படம்

மழையில் நனைந்த உனது படத்திலிருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.

*

பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.

*

உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.

*

நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.

*

விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.

17 comments:

  1. புன்னகைக் குவியலாய் ஒரு புகைப்படக் கவிதை !!!
    கவிதை உபயம் செய்த புகைப்படத்திற்கு வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  2. வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? நலமா?

    ReplyDelete
  3. புன்னகை வாழ்த்துக்கு நன்றிங்க கவிதை ரசிகை!!

    ReplyDelete
  4. முதல் கவிதையில் இருந்து காதல் சொட்டுகிறது :)

    ReplyDelete
  5. iniye kavithaigal thantha ungalukku nantrigal

    ReplyDelete
  6. poo kadaiil yaro oun pugai padam virkerargal. excellant. simply superb

    ReplyDelete
  7. இவ்வலைதளம் மழையில் நனைந்த ஆலமரம்!! இலைகளிலிரிந்து சொட்டுபவை அனைத்தும் மழைத்துளிகளல்ல... கவிதைத்துளிகள்!!

    ReplyDelete
  8. seriously an lovely poets i love it.............

    ReplyDelete
  9. Honey malayil nanaintha Mathiri erunthathu unga Kavithaigal. /Thank for ur parents.

    ReplyDelete
  10. உங்கள் கவிதைகளை இன்றுதான் முதன் முதலாகப் படிக்கிறேன்.... படித்தவுடன் தான் தெரிகிறது எத்தனை காலங்கள் வீணாக்கி விட்டேன் என்று! மிக அருமையான கவிதைகள்... உங்கள் கவிதைகள் தொடரட்டும்...

    ReplyDelete
  11. hi/.............. ungaludaiya kalavadiya kavithaigal nanraga irukkinradhu,,,,,,,,
    by ungal nanban

    ReplyDelete
  12. superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    ReplyDelete
  13. NANPA KALKITINNGA VERY AND SUPERPPPPPPPPPPPPPPPPPPPPPP NANPA

    ReplyDelete
  14. நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதைகளை படிகிறேன், <<>>! இது காதல் கவிதை, படத்தை எடுத்துவிட்டு "முகம்" என்று போட்டால் அது ரொமான்ஸ் கவிதை!

    ReplyDelete