Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்து

சக்தி வாய்ந்த என் முத்த‍மொன்று
உனது கன்ன‍த்தில் விழுந்து வெடிக்கிறது.
க‌லவரம் பிற இடங்களுக்கு பரவாமலிருக்க‍
செவ்வ‍ரி இதழ்களை அனுப்புகிறாய்...நிகழ்விடத்துக்கு!

*

பிறந்தநாள் பரிசாக‌
எப்பொழுதும் முத்த‍ம்தானா?
ம‌லர மறுக்கும் மொட்டு போல முகம் சுருங்குகிறாய்.
உனது வயதுக்கொன்றென இருபத்துநான்கு வகை மலர்களை நீட்டுகிறேன்.
என்னை வாரிக்கொண்டவள், எனது வயதுக்கொன்றென இருப்ப‍த்தேழு வகை முத்..

*

மாலையில் நீ கொடுத்த‍ தாய்முத்த‍ம்,
ஓர் இரவு முழுவதும் ஈன்று கொண்டேயிருக்கிறது...
அனிச்சம் போன்ற குட்டிமுத்த‍ங்களை!

*

ஏன்?
எப்படி?
எவ‌ரது கோபம்? எனக் காரணம் தெரியாத ஊடலைத் தீர்க்க‍..
அருகில் அமர்ந்து சமாதானம் பேசாமல்,
கட்டிப்புரண்டு சண்டையிடுகின்றன நம் இதழ்கள்!

*

மேற்கில் மறையும் முன்ன‍ர்
சூரியன் வீசிய பறக்கும் முத்த‍ம்
நீ வாங்க மறுத்த‍தால் இரவில் காய்கிறது நிலவென!

*

சூடும் முன் முத்த‍மிட்டுச் சூடிக்கொள்.
உன் முத்த‍ம் பெற்று
வாடாமலிருக்கும்... ரோஜா!

*

சூடாகிற‌தென‌ கோபிக்காதே!
அலைபேசிக்குத் தெரியுமா..
உன் முத்தங்க‌ளின் வெப்ப‌ம் தாங்கும் வித்தை?

*

ஆழ‌ப் பார்வையில் விழியும்
முக‌ம் வ‌ருடும் விர‌லும்
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளில் உயிரும் பேசுகையில்
வாய் ம‌ட்டும் பேசாம‌ல் செயல்ப‌டுவ‌து...மௌன‌விர‌த‌மா? முத்த‌விர‌த‌மா?

*

செல்ல‍த்தேர்தலில் முதலிரு சுற்றிலும்
முப்ப‍து முத்த‍ங்கள் அதிகம் பெற்று
எட்ட முடிகிற வித்தியாத்தில்தான் முன்ன‍ணியில் இருந்தாய்.
மூன்றாம் சுற்றின் முடிவில்
உனைவிட பலமடங்கு அதிகம் பெற்றும்...தோற்கிறேன்.
இதழில் யார் பெற்றாலும் செல்லாமுத்த‍ம் என்பது என்ன‍ நியாயம்?

*

அணிவிளக்காய் கண்கள் மலர...
யாக்கை, விழாக்கோலம் பூண...
விட்டோடும் நாணம், தோரணம் கட்ட‍...
இதழ், பல்ல‍க்கு தூக்க‍...
காதல் ஊர்வலம் புறப்ப‍டுகிறது...முத்த‍ச்சாமி!

*

நன்றாகத்தான் இருக்கின்றன‌...
நீ வரைந்து பழகுகிற‌ ஓவியங்கள்!
தின‌ம் தோறும் நூற்றுக்க‌ண‌க்கில்
ப‌ழ‌க‌ ப‌ழ‌க‌ ஓவிய‌ம் இனிப்ப‌தெல்லாம் ச‌ரிதான்...ஆனால்,
நீ ஓவியர் ஆகும்முன், இத‌ழ்க‌ளுக்குப் ப‌தில் தூரிகையும், காகித‌மும் எடுப்பாயா?

*

திசுக்க‌ள் எங்கும் காத‌ல் குளிர்.
வாச‌ம் வீசும் கூந்த‌ல் மேக‌ம்.
ம‌ன‌ம் எங்கும் ல‌ப்ட‌ப் இடியோசை.
பார்வை ப‌றிக்கும் விழியில் மின்ன‌ல்.
ந‌ம் உயிர் ந‌னைத்துப் பொழிகிற‌து முத்த‌ம‌ழை.

*

இந்த மொக்கைகளுக்கும் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்னு தான கேட்கறீங்க?
ஒவ்வொரு மொக்கையிலும் முதல் வரியின் முதல் எழுத்து, இரண்டாம் வரியின் இரண்டாம் எழுத்து, மூன்றான் வரியின் மூன்றாம் எழுத்து... இப்ப‍டிச் சேர்க்கவும் :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

14 comments:

  1. //மாலையில் நீ கொடுத்த‍ தாய்முத்த‍ம்,
    ஓர் இரவு முழுவதும் ஈன்று கொண்டேயிருக்கிறது…
    அனிச்சம் போன்ற குட்டிமுத்த‍ங்களை!//

    முத்தப் பிரசவங்கள் மொத்தமும் அருமை அருட்பெருங்கோ....

    ReplyDelete
  2. //இந்த மொக்கைகளுக்கும் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்னு தான கேட்கறீங்க?
    ஒவ்வொரு மொக்கையிலும் முதல் வரியின் முதல் எழுத்து, இரண்டாம் வரியின் இரண்டாம் எழுத்து, மூன்றான் வரியின் மூன்றாம் எழுத்து… இப்ப‍டிச் சேர்க்கவும்//

    அட... இப்படியும் கொடுக்கலாமா லிங்க்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்...

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துகள்!!!
    உலகக் கருவறையின் கதவை எட்டிப் பார்க்கும் 2011-இன் நெற்றியில் 2010- இடும் குட்டி முத்தத்தின் சத்தம் போல் ஒலிக்கிறது இந்த கவிதை ...

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. Sisu, Kavidhairasigai, Sri,

    Thanks for your wishes and wish you all a very happy new year!

    ReplyDelete
  6. [...] 2011 புத்தாண்டு காதல் கவிதைகள் [...]

    ReplyDelete
  7. very very very........ sweety

    ReplyDelete
  8. Chellame .....! Yaruda Unga Appavum... Amma-vum .....!
    Karuvileye Kaadahal Katravan Nee.......!
    Muttha Kavithaigal ......! Silirka vaikinrana....!
    (Now Only Am Seeing This Blog ....So Belated New Year Wishes To U.................!)

    ReplyDelete
  9. unka kavithaikal super... en mailku anupunka

    ReplyDelete
  10. "Kavithai rasika yethachayaai amara,
    kidaithathu umathu 'Mutha kavidhaigal'
    'Mutha kavithaigalil ungalai oru "Mootha kavigan" enru azhaikalam,
    Arumai... keep up the nice work. Pls forward the same(if u can) to my mail.

    Thanks

    ReplyDelete
  11. [...] 2011 புத்தாண்டு காதல் கவிதைகள் [...]

    ReplyDelete
  12. super nalla irukku

    ReplyDelete