Wednesday, December 08, 2010

காதலின் இசை

[caption id="attachment_524" align="alignleft" width="279" caption="kaadhalin isai"]kaadhalin isai[/caption]

நீ பாடுகையில்
இசைக்கருவிகளின் சொற்களுக்கு
இசையமைக்கிறதுன் குரல்.

*

ஒரே நேரத்தில்
இரு கருவிகளை
இசைக்க முடியாதென
வீணை வாசிக்கையில்
வளையல் கழற்றுகிறாயா?

*

உன் விரல்களில் வழியும் இசையினை
மெய்மறந்து செவிமடுத்தவன்,
உன் பார்வையில் வழியும் இசையினை
செவிமறந்து விழிமடுக்கிறேன்.

*

நெடுநாட்களாய் நீ வாசிக்காத வீணையொன்று
இசை மறக்காமலிருக்க வாசித்துக்கொண்டே இருக்கிறது
உனது பெயரை.

*

அத்தனை அன்பிலும்
முழுமையடையாத நம் நட்பின் கவிதையை
நிறைவு செய்ய வருகிறது.. காதலின் இசை.

7 comments:

  1. காதலின் இசை... ரம்மியமாக இருக்கிறது...

    ReplyDelete
  2. எப்பவாவது எழுதுறீங்க.... ஆனா பின்னிடுறீங்க...கலக்கல் ரசித்தேன்... வ்
    ‘வளையலைக் கழற்றுவது’ டாப்பு :)

    ReplyDelete
  3. காதல் கவிதை தேன் பருகினேன்.

    ReplyDelete
  4. நன்றிங்க தமிழ்ப்பறவை. எப்பவாவது தான் நேரம் அமைகிறது. என்ன செய்ய?

    ReplyDelete