Wednesday, August 11, 2010

குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!

Tuesday, August 03, 2010

இறைவன் அமைவதெல்லாம் காதலி கொடுத்த வரம்

கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
[caption id="attachment_451" align="alignright" width="225" caption="சிவ சக்திசிவ சக்தி"]சிவ சக்தி[/caption]

Monday, August 02, 2010

ஜனனி - தேங்காயா? தென்னமரமா?

அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…