Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்து

[caption id="attachment_308" align="alignright" width="300" caption="பொங்கல் வாழ்த்து"][/caption]











வ‌ழக்க‍மாய் டைடல் பார்க் சிக்னலில்
கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்
துடைத்துவிட்டு காசுகேட்கும்
கால் ஊனமான சிறுமியொருத்தி
இன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே
காசு கேட்டுக்கொண்டிருந்தாள்.

காசு கிடைக்கிறதோ இல்லையோ
அழுக்குக் கண்ணாடிகளில்
விரல்களால் கிறுக்கிக்கொண்டே
போய்க்கொண்டிருந்தாள் - 'பொங்கல் வாழ்த்து'

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்!

13 comments:

  1. பொங்கல் வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ...

    அந்த பொண்ணுக்கு லீவா இருக்கும் அன்னிக்கு.. அவளுக்கு எழுதத்தெரிந்ததுன்னு சொல்றீங்களா. என்ன ?

    ReplyDelete
  2. Its good to have u back after long time... Happy pongal !!!

    ReplyDelete
  3. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    என்னங்க, ரொம்ப நாளா ஆளையே காணோம்?

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துக்கள் ராசா ;-))

    ReplyDelete
  5. உங்களுக்கும் உரித்தாகட்டும்..:D

    ReplyDelete
  6. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. Enga sir poneenga ivlo naalaa ? welcome back...

    ReplyDelete
  9. வாங்க அருட்பெருங்கோ,

    நீண்ட நாள் கழித்து வலை பூவில் கண்டது மகிழ்ச்சி. கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  10. மறுமொழியிட்ட‍ அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  11. தமிழன் போற்றிடும்
    தைத் திருநாளாம்
    பொங்கள் திருநாளை
    பொங்கும் பாலுடனும்
    புத்தாடைகளுடனும்
    புத்துணர்ச்சியுடனும்
    கொண்டாடி மகிழ்வோமாக!

    ReplyDelete
  12. > தமிழன் போற்றிடும்
    > தைத் திருநாளாம்
    > பொங்கள் திருநாளை
    > பொங்கும் பாலுடனும்
    > புத்தாடைகளுடனும்
    > புத்துணர்ச்சியுடனும்
    > கொண்டாடி மகிழ்வோமாக!

    ReplyDelete
  13. எத்தனை பண்டிகைகள்
    எங்களுக்கு வந்தாலும்
    இனிப்பான பொங்கலுக்கு
    இணையேதும் இல்லை...

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    என்றும் நட்புடன் m.arun

    ReplyDelete